World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Spain faces bank run

வங்கிகளிடம் இருந்து அதிகமான வாடிக்கையாளர்கள் தமது பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளும் நிலையை ஸ்பெயின் எதிர்நோக்குகின்றது

By Alejandro López 
21 May 2012

Back to screen version

வங்கிச் சேமிப்புக்கள் குறித்து அண்மையில் கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் 50 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய வங்கிச் சேமிப்புக்கள் கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஸ்பெயினை விட்டுச் சென்றுவிட்டன என்பதைக் காட்டுகின்றன. ஜேர்மன் செய்தி நிறுவனமான DPA இதை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 900 மில்லியன் யூரோக்கள் கிரேக்கச் சேமிப்பாளர்களால் மே14 ம் திகதியன்று மட்டும் திரும்பப் பெறப்பட்டன என்று அது தகவல் கொடுத்துள்ளது.

தாம்சன் ராய்ட்டர்ஸ் தொகுத்துள்ள தகவல்கள்படி, கிரேக்க வங்கிகள் கிட்டத்தட்ட 72 பில்லியன் யூரோக்கள் (30%) சேமிப்புக்களை 2010ல் இருந்து இழந்துவிட்டன. பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகியவற்றிலும், சேமிப்பாளர்கள் வங்கிகளில் இருந்து நிதியை திரும்பஎடுத்துக் கொண்டு விட்டனர்.

50 பில்லியன் யூரோக்கள் திரும்பப் பெறப்பட்டமை (ஸ்பெயினின் மொத்தச் சேமிப்புக்களில் 2.9%) வங்கிப் பணத்தை முழுதாக எடுத்துக்கொள்ளும் நிலைமையே ஏற்படுத்தும் என்னும் அச்சம் ஸ்பெயினில் பெருகியுள்ளது. அங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளில் நம்பிக்கையை இழந்து வங்கிகளில் இருக்கும் சேமிப்புக்களை எடுத்துக் கொள்ள விரைகின்றனர். பணம் எந்த அளவிற்கு வெளியேறியுள்ளது என்பதின் பரிமாணம் இன்னும் தெரியவில்லை. ஏனெனில் தகவல்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் சேமிப்புக்களில் மாற்றம் பற்றித்தான் உள்ளன. அம்மாதம்தான் புள்ளிவிவரங்கள் கடைசியாக வெளியிடப்பட்டன.

கடந்த வாரம் மூடிஸ் நிறுவனம் 16 ஸ்பெயினின் வங்கிகள் குறித்து தன் தரங்களை குறைத்துவிட்டது. மூன்று முக்கிய ஸ்பெயினின் கடன்கொடுக்கும் நிறுவனங்களான Santander, CaixaBank, BBVA ஆகியவற்றின் தரங்களை மூன்று மட்டங்கள் குறைத்துவிட்டது. இதற்குக் காரணம் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதார நிலைமையும், அரசாங்கத்தின் குறைந்துவிட்ட கடன்திரும்பகொடுக்கும் மதிப்பும் ஆகும். Bankia தேசியமயமாக்கப்பட்டு இரு வாரங்களுக்குப் பின் இந்நிலைமை வந்துள்ளது. அப்பொழுது ஸ்பெயினின் அரசாங்கம் அதில் இருந்த தன் இருப்புகளை பங்குகளாக மாற்றியது. இதனால் தன் நிலையை உயர்த்திக்கொள்ளலாம் என அது கருதியது.

7 காஜாக்கள் (cajas) எனப்படும் சேமிப்பு வங்கிகள் அல்லது கடன்தரும் சங்கங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு இந்த வங்கி 2010ல் தோற்றுவிக்கப்பட்டது. இவற்றுள் அதிக விற்கமுடியாத சொத்துக்கள் கணக்கில் இருந்தன. அதற்குக் காரணம் 2008ல் ஏற்பட்ட சொத்துச் சந்தைச் சரிவின் விளைவு ஆகும்.

கடன் வாங்கி மோசமான நிலையில் இருப்பவர்களிடம் Bankia 30 பில்லியன் யூரோக்களைக் கொடுத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடன் வாங்கியவர்களின் நிலங்கள் மீணடும் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன.

இதற்கு முந்தைய வாரம் தேசியமயமாக்கப்பட்டதில் இருந்து கடந்த வாரம் வாடிக்கையாளர்கள் 1 பில்லியன் யூரோக்களை அதற்கு திரும்ப எடுத்துக் கொண்டுவிட்டனர் என்று ஸ்பெயினின் செய்தித்தாள் El Mundo கூறியது. இதற்கு மறுநாள் Bankia அதன் சந்தை மதிப்பில் 28% ஐ இழந்தது. இது பொருளாதார மந்திரி பெர்னான்டஸ் ஜிமெநெஸ் லாடோரை சேமிப்புக்கள் வெளியேறிவிட்டன என்று கூறுவது உண்மையல்ல என்று கூறவைத்தது.

Bankia வின் தலைவர் ஜோஸே இக்னாசியோ கோரிகொல்ஸாரி உம் வங்கிக்கு ஆதரவான கருத்துக்களைக்கூறி, அதன் வாடிக்கையாளர்கள் சேர்த்துவைத்துள்ள சேமிப்புக்களின் பாதுகாப்புக் குறித்து கவலையின்றி இருக்கலாம் என்றார்.

இந்த அறிக்கைகள் வங்கியின் பங்குகள் மதிப்பை அதிகரிக்கச் செய்து, கடந்த வெள்ளியன்று 23.49% இனை அண்மித்து இறுதியில் 1.756 யூரோவை அடைந்தது. ஆனால் இன்னமும் இது 53% பட்டியலிடப்பட்ட விலையான 3.75 யூரோக்களில் இருந்து குறைவு என்பதைத்தான் பிரதிபலிக்கிறது. வங்கியை விட்டுச் சேமிப்புக்கள் அகல்கின்றன என்ற அறிக்கைகள் குறித்து Bankia கருத்துக் கூறவில்லை. 1 பில்லியன் யூரோக்கள் என்பது வங்கியின் மொத்த சேமிப்புத்தளத்தில் 1%க்கும் குறைவானது. ஆனால் அப்படியும் அது நிறுவனத்தின் கடன்தீர்வுத்திறன் குறித்த கவலையைப் பிரதிபலிக்கும்.

Bankia வில் இருந்து 1 பில்லியன்  யூரோக்கள் வெளியேற்றம், மூடிஸ் அதன் தரத்தைக் குறைத்தது மற்றும் 1994க்குப் பின்னர் ஸ்பெயினின் மோசமான கடன்கள் உயர்ந்த அளவான 147.968 பில்லியன் யூரோக்களை அடைந்துவிட்டது ஆகிய தகவல்கள் ஏற்கனவே Santander வங்கியை பாதித்துள்ளன. பிரித்தானியாவில், Santander 25 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு, 1,400 கிளைகளையும் கொண்டு, அடைமானங்கள், கடன்கள், அதிகப்பற்று ஆகியவற்றைக் கொடுக்கிறது. எனவே Santander UK அதன் ஸ்பெயினில் உள்ள தாய் நிறுவனமான Banco Santander ரை முட்டுக்கொடுத்து நிறுத்த முடியும் என்ற பெருகிய கவலை உள்ளது. வங்கிகளுக்கு இடையேயான சந்தையில் Santander UK  இற்கு கடன் கொடுத்துள்ள நிதிய நிறுவனங்களையும் இது பாதிக்கும்.

Santander தன் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் 2.9 பில்லியன் யூரோக்களை செலுத்தமுடியாத கடன்களுக்காக ஒதுக்கி வைத்துள்ளது. ஆனால் இந்த உத்தரவாதங்கள் போதுமானவையாக இல்லை. வாடிக்கையாளர்கள் Northern Rock’s UK கிளைகளுக்கு முன்னே வரிசைகளில் நின்று 2007ம் ஆண்டு பணத்தைத் திரும்பப் பெற்றதை நினைவில் கொண்டுள்ளனர்.

ஸ்பெயினிலும் பாங்க் ஆப் ஸ்பெயினினால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள், மார்ச் இறுதி வரை வங்கிச் சேமிப்புக்கள் முந்தைய மாதம் இருந்த 1.16 டிரில்லியன் யூரோக்களை விட 0.7 சதவிகிதம் அதிகம் என்பதைக் காட்டுகின்றன. ஆனால் இப்புள்ளிவரம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 சதவிகிதப்புள்ளி குறைவாகும்.

சமீப காலம் வரை பண வெளிப்பாய்ச்சல் செல்வம் படைத்த சேமிப்பாளர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுடன் நின்றிருந்தது. ஆனால் சாதாரண சேமிப்பாளர்களும் வழக்கத்தைவிட அதிக பணத்தை திரும்ப எடுக்கின்றனர் என்பதற்கான அடையாளங்கள் உள்ளன. இது ஒரு வழமையாக மாறினால், உண்மையில் உள்நாட்டு வங்கியிடம் இருந்து முழுப் பணத்தையும் திரும்பஎடுத்துக் கொள்ளும் நடவடிக்கையாக மாறும்.

YouTube இல் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோக்காட்சி ஸ்பெயினில் என்ன நடக்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. டஜன்கணக்கான செய்தியாளர்களுடன் ஒரு பெண்மணி நிதித்துறை பொது நிர்வாகத்துறை மந்திரி கிறிஸ்டபல் மோன்டோரோ அவருடைய உத்தியோகபூர்வக் காரில் அமைச்சரகக் கட்டிடத்திற்கு வருவதை எதிர்நோக்கி நிற்கிறார். காரை விட்டு மந்திரி, சில உதவியாளர்கள், மெய்காப்பாளர்களுடன் நீங்கியதும், பெண்மணி மந்திரியிடம் சென்று கைகுலுக்கி, நான் ஒரு குடிமகள், இவ்வழியால் பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் பணம் Bankia வில் உள்ளது, அது குறித்துக் கவலைப்படுகிறேன். நான் வங்கிக்குச் சென்று முழுப்பணத்தையும் எடுத்துவிட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனக் கேட்கிறார்.

வேண்டாம் என்று மோன்டோரோ விடையிறுக்கிறார்.

நீங்கள் உறுதியாகக் கூறுகிறீர்களா என விளக்கமாகப் பெண்மணி கேட்கிறார். ஆம், ஆம். என விடையிறுக்கிறார் மோன்டோரோ.

என் வாழ்நாள் முழுவதும் நான் உழைத்துள்ளேன்; என் பணத்தை எவரேனும் எடுத்தால், அவரைக் கொன்றுவிடுவேன் என்று அனாமதேயப் பெண்மணி கூறுகிறார்.

ஐரோப்பாவில் இப்பொழுது மிகப் பெரிய அச்சம் கிரேக்க வங்கிமுறை பற்றியது ஆகும். ஒரு வங்கியில் இருந்து மக்கள் அனைத்துப் பணத்தையும் பெறத் தொடங்கினால், பார்த்தால் சிறந்தவை எனத் தோன்றும் உலகெங்கிலும் இருக்கும் வங்கிகள் பாதிப்பிற்கு உட்படும். கிரேக்கத்தின் திவால்தன்மை பற்றிய கவலைகளால் முதலில் பாதிப்பிற்கு உட்பட்டவை சுற்றுவட்டத்திலுள்ள எனப்படும் ஸ்பெயின் போன்ற நாடுகள் ஆகும். Expansion செய்தித்தாள் கருத்துப்படி அமெரிக்க முதலீட்டு வங்கியான கோல்ட்மன் சாஷ்ஸிடம் வங்கிகளில் நிதியப் பிரச்சினைகள் குறித்து சுயாதீன மதிப்பீட்டை வழங்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது.

Fidelity Worldwide Investment இல் அரசாங்கக் கடன் பகுப்பாய்வாளராக இருக்கும் டிரிஸ்டன் கூப்பரும் ஐரோப்பிய மத்திய வங்கி விரைவாகத் தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார். Dow Jones இடம் அவர் கூறினார்: வங்கியிடம் இருந்து முழுப் பணத்தையும் எடுத்துக் கொள்ளும் முயற்சி தொடங்கிவிட்டால், நம்பகத்தன்மை உடைய சேமிப்பு உத்தரவாதம் இல்லாமல் அதை நிறுத்துவது முடியாது.... ஸ்பெயினில் உள்ள பலவீனமான நிதிய நிலைமையைக் காணும்போது, ஐரோப்பிய மத்திய வங்கி சேமிப்பாளர்களின் கவலைகளைச் சமாதானப்படுத்துவதற்கு பெருகிய அழுத்தங்களைக் கொண்டுள்ளது.Der Spiegel இதழிடம் போல் க்ருக்மனும் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் இருந்து கூடுதலான நீர்மை நிதி உட்செலுத்தப்படுவது தேவை என்றார். ஐரோப்பிய மத்திய வங்கி, வட்டி விகிதங்களைக் குறைந்து, வரம்பிலா நிதியை வங்கிகளுக்கும் அரசாங்கங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய மத்திய வங்கி ஸ்பெயினையும் இத்தாலியையும் காப்பாற்றுவதற்கு எல்லையற்று தலையிட வேண்டும் என்றும் க்ருக்மான் நம்புகிறார். கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து வெளியேறுதல் என்பது சுற்றுவட்டத்தில் உள்ள நாடுகளில் முதலீடு வெளிப்பாய்வதற்கு வகை செய்யும், வங்கிகளிடம் இருந்து மக்கள் முழுப்பணத்தையும் பெற முயல்வர் என்றும் அவர் கூறினார்.

நெருக்கடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் இப்பொழுது உடனடிப் பிரச்சினை வாங்கும் கடன்களுக்கு உத்தரவாதமாக ஐரோப்பிய மத்திய வங்கிக்குக் கொடுப்பதற்கு அங்கு அதிக சொத்துக்கள் இல்லை.

ஆனால் மில்லியன் கணக்கில் வங்கிகளுக்குக் கொடுக்கும் கொள்கை என வரும்போது, டிசம்பர் மற்றும் பெப்ருவரியில் ஐரோப்பிய மத்திய வங்கி 1 டிரில்லியன் யூரோக்களைக் கொடுத்ததுபோல், அவை பெரிய வங்கிகளில் பங்கு வைத்திருப்போருக்கும், தனியார் முதலீட்டு நிதி மேலாளர்களுக்கும், நிதிய ஊக வணிகர்களுக்கும்தான் நலன்களை கொடுக்கும். இது இப்பொழுது ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகள் கடுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கோரும் இதே உயரடுக்கின் கரங்களைத்தான் அது வலுவடையச் செய்யும்.