சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

European economic crisis, military tensions overshadow G8 summit

உச்சிமாநாட்டினை ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடியும், இராணுவ அழுத்தங்களின் நிழல் படர்கின்றது

By Alex Lantier
19 May 2012
use this version to print | Send feedback

அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய மற்றும் கனேடிய நாட்டுத் தலைவர்கள் நேற்று இரண்டு நாள் G8  உச்சிமாநாட்டிற்காக மேரிலாந்தில் இருக்கும் காம்ப் டேவிட்டில் கூடினர். இதைத் தொடர்ந்து இன்று இரவு சிக்காகோவில் நேட்டோ உச்சிமாநாடு ஒன்று நடக்க உள்ளது. இதன் நிகழ்ச்சிநிரல் சமூகச் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பெருகும் மக்கள் எதிர்ப்பிற்கு இடையேயும் மற்றும் சர்வதேச அளவில் போர்கள், இராணுவ அழுத்தங்கள் விரிவாகும் சூழ்நிலையில் ஐரோப்பாவில் பொருளாதார சரிவு பற்றிய அச்சங்கள் மீது கவனம் செலுத்துகிறது.

ஜனாதிபதி பாரக் ஒபாமா நேற்று காலை பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டை சந்தித்தார். ஹாலண்ட் ஜனாதிபதி பதவியில் இருந்த நிக்கோலோ சார்க்கோசியை மே 6 தேர்தலில் தோற்கடித்தார். அத்தேர்தல் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலே மேர்க்கெல் நிர்ணயித்திருந்த சிக்கனக் கொள்கைகளுக்கு சார்க்கோசியின் ஆதரவு தொடர்புபட்டதாக இருந்தது. அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டனும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரென்ட் பாபியுஸை சந்தித்தார்.

இரு ஜனாதிபதிகளும் ஐரோப்பிய பொருளாதாரம், ஆப்கானிய, சிரிய போர்கள், ஈரானுடனான அழுத்தங்கள் ஆகியவை குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

ஹாலண்டுடன் பேச்சுக்கள் நடத்தியபின் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா, மற்றைய G8 தலைவர்களுடன் இன்று மாலையும் நாளையும் நாங்கள் பயனுடைய விவாதம் ஒன்றை எதிர்பார்த்துள்ளோம். வலுவான வளர்ச்சிக்கான செயல்பட்டியலுடன் இணைந்த நிதிய உறுதிப்படுத்தல் அணுகுமுறைக்குப் பொறுப்பான வகையில் எப்படி நிர்வகிப்பது என்பது பற்றி விவாதிக்க உள்ளோம் என்றார்.

பிரெஞ்சுத் தேர்தல்களின் போது ஹாலண்ட் கொண்டிருந்த கொள்கைகளுக்கு தன் உடன்பாட்டை இதன் மூலம் ஒபாமா அடையாளம் காட்டியுள்ளார். ஐரோப்பிய நிதிய உடன்பாட்டில் ஒரு வளர்ச்சிக் கூறுபாட்டை சேர்த்தல் என்பதே அது. இது கண்டம் முழுவதும் வரவு-செலவுத் திட்டத்தில் கடுமையான குறைப்புக்களைக் கட்டாயமாக்கும்.

இதனால் விளையும் கொள்கை தொழிலாளர் வர்க்க விரோதச் செலவுக்குறைப்புக்களுடன் விரிவான நிதிகளை வங்கிகளுக்கு அளிப்பதுடன் இணையும். ஒப்புமையில் சிறிய எண்ணிக்கையில் உள்கட்டுமானத் திட்டங்களும் செயல்படுத்தப்படும். அதன் நோக்கம் கிரேக்கத்தின்மீது சுமத்தப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார கரைப்பைத் தவிர்த்தலாகும். தன் கடன்களைத் திருப்பிக் கொடுக்கும் வேகத்திற்கு அதிகமாக கிரேக்கத்தின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கையில், நாட்டின் அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 160% என உயர்ந்துள்ளது.

சிக்கன நடவடிக்கைகளுடன் பொருளாதார உந்துதலுக்கான அழைப்புக்கள், வளர்ச்சிக் கொள்கை என்ற பெயரில் வருவது, பேர்லினிடம் இருந்து எதிர்ப்பை எதிர்நோக்குகின்றது. அங்கு கடந்த வாரம் மேர்க்கெல் இன்னும் கடன் வாங்கி வளர்ச்சிக்கு நிதியளித்தல் என்பது நம்மை மீண்டும் நெருக்கடியின் ஆரம்பத்திற்குத்தான் இட்டுச் செல்லும் என்றார். சில ஜேர்மனிய அதிகாரிகள் கிரேக்கத்துடன் அணுகுவது குறித்து பரிசீலிக்கின்றனர். இன்னும் அதிக கடன்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் குறித்தும் அவற்றை யூரோப்பகுதியில் இருந்து வெளியேற்றுவது குறித்து ஆலோசிக்கின்றனர். இதன் பொருள் நிதி உதவிகளை நிறுத்தி அவற்றை தத்தம் தேசிய நாணயங்களை மீண்டும் அறிமுகப்படுத்தச் செய்வது ஆகும்.

ஐரோப்பிய ஒன்றிய வணிக ஆணையர் கரேல் டி குக்ட், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கிரேக்கம் யூரோப்பகுதியை விட்டு ஒருவேளை நீங்கினால் அந்த நிலைக்கு அவசரக்காலத் திட்டங்களைத் தயாரித்துவருவதாகக் கூறினார்.

கிரேக்கத்தின் ஜனாதிபதி காரோலோஸ் பாபௌலியஸ் நேற்று ஒரு தொலைப்பேசித் தகவலில் மேர்க்கல், 17 ஜூன் தேர்தல்களுடன் யூரோ அங்கத்துவ தன்மை குறித்து வாக்கெடுப்பை கிரேக்கம் நடத்த வேண்டும் எனத் தெரிவித்ததாகக் கூறினார். இத்தேர்தல்கள் மே 6 தேர்தல்களை அடுத்து கிரேக்க அரசியல் கட்சிகள் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாமற்போனதால் நடத்தப்பட உள்ளன.

பாபௌலியஸின் குறிப்பை தவறு என்று ஜேர்மனிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் பின்னர் தள்ளுபடி செய்துவிட்டார். ஜேர்மனியின் அறிக்கையைத் தொடர்ந்து, கிரேக்க அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரிஸ் டிசியோடரஸ் BBC இடம் பாபௌலியஸ் அறிக்கையில் தான் எதையும் சேர்ப்பதாக இல்லை என்றார்.

தங்கள் கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில், ஒபாமாவும் ஹாலண்டும் யூரோப்பகுதியில் இருந்து கிரேக்கத்தை வெளியேற்றும் திட்டங்களை எதிர்த்தனர். கிரேக்கம் யூரோப்பகுதியில் நீடித்திருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார் ஹாலண்ட்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது சார்க்கோசியின் வெளியுறவுக் கொள்கை குறித்து குறைகள் ஏதும் கூறாத ஹாலண்ட், சார்க்கோசி அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இராணுவ விவகாரங்களில் வைத்திருந்த நெருக்கமான பிணைப்புத் தொடர்வதாக அடையாளம் காட்டியுள்ளார். அமெரிக்காவிற்கு செல்வதற்குமுன், பாபியுஸ் இழிந்த முறையில், தேர்தல் முடிவுகள்படி அதிகாரிகள் மாறுவர்; ஆனால் பிரெஞ்சு நலன்கள் அப்படியேதான் தொடரும். என்றார்.

ஒபாமாவுடன் வெள்ளை மாளிகையில் நடத்திய பேச்சுக்களில், ஹாலண்ட் 2012 இறுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸின் 3,400 துருப்புக்களைத் திரும்பப் பெறுவது என்னும் தேர்தல் உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கினார். போரில் ஈடுபடும் துருப்புக்கள் மட்டுமே அகற்றப்படும் என்று அவர் கூறினார். பிரெஞ்சுத் துருப்புக்கள் பயிற்சியாளர்களாக அங்கு தொடரும் சாத்தியப்பாடு இதனால் நீடிக்கிறது.

ஈரான் குறித்த அமெரிக்க நிலைப்பாட்டில் பிரான்ஸிற்கும் ஒரேமாதிரியான கருத்துக்கள் உள்ளன, இது குறித்த உரையாடல் தொடங்கப்படும் என்று ஹாலண்ட் கூறினார். நேட்டோ சக்திகள் ஈரான் மற்றும் சிரியாவில் தலையிடுதை விரிவாக்கும் முயற்சிகள் பற்றி இன்று G8 உச்சிமாநாட்டில் அது குறித்து விவாதிக்கப்படவுள்ளன. அதேபோல் மயான்மாரில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்தும் விவாதம் இருக்கும்.

இந்த விவாதங்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு பெருகும் மக்கள் எதிர்ப்பிற்கு சர்வதேச அளிவில் இருக்கும் பாதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. குறிப்பாக கிரேக்கத்தில் நடைபெறும் ஜூன் 17 தேர்தல்கள் சிரிசா தலைமையில் ஓர் அரசாங்கத்தைத் தோற்றுவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது ஒரு குட்டி முதலாளித்துவ இடது கட்சியாகும். மேலதிக சிக்கன நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்னும் கருத்தை முன்வைக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளுடன் கிரேக்கத்தின் கடன்கள் பற்றி மறு பேச்சுக்கள் வேண்டும் என்றும் கூறுகிறது. இவை உலக அழுத்தங்களை அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றன.

நேற்று சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் டிசிபரஸ் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் பின்வருமாறு கூறினார்: நம் முதல் விருப்பம் நம் ஐரோப்பிய பங்காளிகளை அவர்களுடைய நன்மையை ஒட்டியே நிதியளித்தல் நிறுத்தப்படக்கூடாது என நம்ப வைப்பதாகும்... ஆனால் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை அவர்கள் எடுத்தால், அதை வேறுவிதமாகக் கூறினால், நிதியளித்தலை நிறுத்தினால், கடன்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நாங்கள் நிறுத்த நேரிடும், எமது கடன்காரர்களுக்கு திருப்பியளிப்பது நிறுத்தப்படும்.

வாஷிங்டன், பாரிஸ் இன்னும் அதே போன்ற உணர்வுடைய சக்திகள் பேர்லினுக்கு அழுத்தம் கொடுத்து பரந்த பிணையெடுப்புக்கள், சற்றே குறைந்த சமூகநல வெட்டுக்கள் ஆகியவற்றைச் செய்தலுக்கு டிசிபரஸ் முறையீடு செய்கிறார். ஐரோப்பிய தீர்வு தேவை என்று அழைப்புவிடும் அவர், நாம் என்ன செய்தாலும் இடர்கள் இருக்கும். அதே நேரத்தில் ஐரோப்பா முழுவதற்குமே கடினமாகிவிடும், ஏனெனில் கிரேக்கத்திற்கு நிதிய அளிக்கப்படவில்லை என்றால், யூரோவும் சரிந்துவிடும். என்றார்

ஆழ்ந்த உடனடியான வெட்டுக்களுக்கான மேர்க்கலின் கோரிக்கையோ, வெட்டுக்களுடன் கூடுதல் வங்கிப் பிணையெடுப்புக்கள், பெயரளவு உள்கட்டுமானத்திட்டங்களுக்கு திட்டங்கள் என்றும் ஒபாமா, ஹாலண்ட் கூறுவதோ, தொழிலாள வர்க்கத்திற்கு முற்போக்கான பாதையை காட்டாது. இவை வேறுவிதமான கொள்ளை முறைகள்தான் எனலாம். இரு கொள்கைகளும் அரசாங்கக் கடனைப் பயன்படுத்தி மிருகத்தனமான சமூகநல செலவுகளைக் குறைத்தல், 2008ல் வெடித்த நிதிய நெருக்கடிக்குக் காரணமாக வங்கிகளுக்குப் பாரிய நிதியளித்தல் ஆகியவற்றை நியாயப்படுத்துபவை ஆகும்.

சில முதலாளித்துவ விமர்சகர்கள் கிரேக்கத்தின் கடன்களை தள்ளுபடி செய்தலை எதிர்க்கும் காரணம், இது ஐரோப்பா முழுவதும் சமுகச் செலவுக்குறைப்புக்கள் தொடர்வதற்கு ஊக்கம் இல்லாமல் செய்துவிடும் என்பதாலாகும். இவ்வகையில் மைக்கேல் கெர்சன் வாஷிங்டன் போஸ்ட்டில்  பின்வருமாறு எழுதுகிறார்: யூரோப் பகுதிக்குள் கிரேக்கம் திருப்பிக் கொடுக்காமல் இருக்கலாம், அதன் கடன்கள் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படலாம். ஆனால்... மிகக்குறைந்த நம்பகத்தன்மை உடைய உறுப்பினருக்கு ஐரோப்பிய ஒன்றியம் சிறப்புச் சலுகைகளைக் கொடுத்தால் கடினமான சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ள இத்தாலி, ஸ்பெயின், அயர்லாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகளுக்கு இது எத்தைகயை தகவலைத் தரும்? .

தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மீது வங்கிகள் தாக்குதலை எதிர்ப்பதற்கு ஒரு புரட்சிகர சோசலிசத் தலைமையை அபிவிருத்தி செய்வதுதான். வோல் ஸ்ட்ரீட், ஏதென்ஸ், பாரிஸ் ஆகியவற்றால் திட்டமிடப்படுகின்ற வளர்ச்சிக் கொள்கைகள் என்ற மறைப்பில் இத்தாக்குதல்களை தொடர முன்மொழிவுகள் வைக்கப்படுகின்றன.

தன்னுடைய பங்கிற்கு ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் பெருகும் எதிர்ப்பை அடக்குவதற்கும் போருக்குமான தயாரிப்புக்களையும் மேற்கொள்கின்றது. நேற்று இத்தாலியின் உள்துறை மந்திரி அன்னமிரா கான்செல்லேரி எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் விரிவாக்கம் அடைவதைச் சுட்டிக்காட்டி இத்தாலிய உளவுத்துறை, பொலிஸ், இராணுவ அதிகாரிகள் கூட்டாக இயற்றியுள்ள அவசரக்கால பாதுகாப்புத் திட்டங்களை நியாயப்படுத்த முயன்றார். இத்தாலிக்குள் எதிர்ப்பை நசுக்குவதற்கு இராணுவப்பிரிவுகளை பயன்படுத்துவது இதில் அடங்கியுள்ளது.

அதே நேரத்தில், சிரியா மற்றும் ஈரானில் போர் குறித்து விவாதங்கள் தெளிவாக்குவதைப்போல், ஐரோப்பிய, அமெரிக்க சக்திகள் மத்திய கிழக்கிலும் மற்றும் இறுதியில் பிற எதிராளிகளுக்கு எதிராக வெளிநாட்டில் ஏகாதிபத்திய போர்களை விரிவாக்கத் தயாரிப்புக்களை மேற்கொள்கின்றன.

பிரான்ஸில் நிதிய நாளேடு Les Echos நெருக்கடியின் விளைவாக ஐரோப்பிய இராணுவச் செலவுகள் குறைவது குறித்து எச்சரித்துள்ளது. பிரேசில், சீனா, இந்தியா போன்ற மற்ற பொருளாதார, இராணுவச் சக்திகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை அது மேற்கோளிட்டுள்ளது. செய்தித்தாள் தொடர்ந்து எழுதியது: இந்நாடுகள் [நேட்டோவின் தலைமைச் செயலர் அண்டெர்ஸ் போக் ரஸ்முசன்] சரியாகச்சுட்டிக் காட்டியுள்ளதுபோல், தங்கள் சொந்த செழுமையை கட்டமைப்பதற்கு அனுமதிக்கும் உலக ஒழுங்குப்பிரச்சினை பற்றிக் கவலை கொண்டிருக்கவில்லை இந்நாடுகள் ரஷ்யாவைப் போல் இல்லாமல், பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவை நேட்டோ, அமெரிக்க ஆதரவுடன் லிபியாவில் இராணுவ நடவடிக்கைகளை தடுக்கவில்லை என்றாலும், அதற்கு ஆதரவையும் கொடுக்கவில்லை. .... அவற்றின் நலன்கள் எப்பொதும் நேட்டோவின் நலன்களுடன் இணைந்திருக்கவில்லை.