World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A dangerous dispute in the South China Sea

தென் சீனக் கடலில் ஓர் ஆபத்தான பூசல்

John Chan
19 May 2012

Back to screen version

ஒரு மாதத்திற்கும் மேலாக பிலிப்பைன்ஸ் மற்றும் சீனக் கப்பல்கள் ஸ்கார்பாரோ ஷோலுக்கு அருகே ஒன்றையொன்று எதிர்கொண்டுள்ளனதென் சீனக் கடலில் பூசலுக்கு உட்பட்ட குன்றுகள் நிறைந்த சிறு பகுதியாகும். சீன மீன்பிடிக்கும் படகிற்கு பிலிப்பைன்ஸ் ஓர் எச்சரிக்கை கொடுத்தல் என்று தொடங்கிய ஒரு சிறு நிகழ்வு இராணுவ மோதல் என்னும் இடரைக் கொண்டுள்ள இராஜதந்திர மோதல் நிலைக்கு சென்றுவிட்டது.

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்களுடன் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொண்டிருந்தது. இது ஆத்திரமூட்டும் வகையில் கடல், நிலப் பகுதிகளில் செயற்பாடுகளைக் கொண்டுவந்து ஓர் எண்ணைய்க் கிணறு தோண்டப்பட்டுள்ளதின் மீதும் தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டது. பிலிப்பைன்ஸில் அரசாங்க சார்பு குழுக்கள் சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன; அதே போல் மற்ற நாடுகளிலும் சீனத் துணைத்தூதரக அலுவலகங்களுக்கு முன் நடத்தியுள்ளன. இவற்றை எதிர்கொள்ளும் வகையில், சீனா பிலிப்பைன்ஸின் வாழைப் பழ ஏற்றுமதியைத் தடுத்தும், சீன சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கையும் கொடுத்துள்ளது. சீனக் கடற்படையும் அதன் பயிற்சிகளை நடத்தியது; அவற்றுள் தென் சீனக் கடலில் நிலத்தில் இறங்கும் பயிற்சிகளும் இருந்தன; அரச செய்தி ஊடகத்திலோ போர்வெறி தலைவிரித்து நின்றது.

ஸ்கார்பாரோ ஷோல் குறித்த ஆபத்தான மோதல், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒபாமா நிர்வாகத்தின் பொறுப்பாகும். சீனாவுடன் இதன் மோதல் போக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளை தென் சீனக் கடலில் தங்கள் நிலப்பகுதி உரிமைகளுக்காக அழுத்தம் கொடுக்க ஊக்குவித்துள்ளது. சீனாவை விட மிகவும் இராணுவ, பொருளாதார முறையில் வலுவற்ற பிலிப்பைன்ஸ், வாஷிங்டனுடைய அரசியல், இராணுவ ஆதரவு இல்லாமல் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கும் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாகும்.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன், முன்னாள் அமெரிக்க காலனிக்கான வாஷிங்டனின் ஆதரவை கடந்த நவம்பர் அவர் மணிலாவில் இருந்துபோது தெளிவாக்கினார். சீனாவுடன் அழுத்தங்கள் பெருகிய நிலையில், அவர் 1951ம் ஆண்டு அமெரிக்க-பிலிப்பனைஸ் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து மறு உறுதி அளித்து, அமெரிக்க எப்பொழுதும் பிலிப்பைன்ஸ் புறம் இருக்கும் என்று அறிவித்தார். தென் சீனக் கடலை மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் என்றும் அவர் குறிப்பாக சுட்டிக்காட்டினார்இப்புதுப் பெயர் மணிலாவில் உள்ள பேரினவாதிகளால் உருவாக்கப்பட்டது.

தென் கிழக்கு ஆசியாவில் உள்ள கடற்பாதைகள் ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவின் மூலோபாய முன்னிலை என்பதற்கு மையப்பகுதி ஆகும்; இவை சீனாவை இராணுவ அளவில் கட்டுப்படுத்தவும் இப்பிராந்தியம் முழுவதும் அதன் செல்வாக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் நோக்கம் கொண்டுள்ளன.

ASEAN எனப்படும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் 2010ம் ஆண்டு உச்சிமாநாட்டில் கிளின்டன் அமெரிக்க தென் கிழக்கு சீனக் கடலில் தடையற்ற கப்பல்போக்குவரத்தை காப்பதில் ஒரு தேசிய நலனைக் கொண்டுள்ளது என்று அறிவித்தார். இக்கடல் பாதைகள் வழியே ஆயிரக்கணக்கான கப்பல்கள் வாடிக்கையாக தடையின்றிச் செல்கின்றன. கிளின்டன் அடையாளம் காட்ட விரும்பியது, வாஷிங்டன் தென் சீனக் கடலில் கடற்படை மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் உறுதிப்பாடு பற்றியதாகும்; இது சீன கடலோரப்பகுதிக்கு அருகே அமெரிக்க போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவதின் மூலம் சாதிக்கப்படும்.

இராஜதந்திர ரீதியாக கிளின்டன் தலையிட்டு, சீனாவிற்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்ட கால கடலையொட்டிய பூசல்களைத் தீர்த்து வைக்கும் தரகராக முன்வந்தார். அவருடைய கருத்து ASEAN நாடுகளுக்குச் சீனாவுடனான தங்கள் பூசல்களுக்கு அழுத்தம் கொடுக்க ஓர் அடையாளம் ஆயிற்று: சீனா இப்பூசல்கள் இரு நாடுகளிடையே தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்திவிட்டது. சீன வெளியுறவு மந்திரி யாங் ஜீச்சி இக்கருத்துக்களை கிட்டத்தட்ட சீனாவின் மீது ஒரு தாக்குதல் என்று முத்திரையிட்ட வகையில் எதிர்கொண்டார்.

வியட்நாமும் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது; இதையொட்டி தென் சீனக் கடலில் பூசலுக்கு உட்பட்ட சில ஸ்ப்ராட்லி தீவுகள்மீது தன் கட்டுப்பாட்டை அது உறுதி செய்து கொள்ள விளைகிறது. இந்தியா கூட ஒரு தற்காலிகத் தலையீட்டை செய்துள்ளது; வியட்நாமுடன் சேர்ந்து தென் சீனக் கடலில் எண்ணெய் ஆய்விற்கு கூட்டாக ஏற்பாடு செய்தது; பின்னர் அதில் இருந்து பின்வாங்யது. இந்த நடவடிக்கைகள் அனைத்துமே சீன ஆட்சியை சீற்றத்திற்கு உட்படுத்தியுள்ளன.

தென் சீனக் கடல் தன்னுடைய அடிப்படை நலன்களில் ஒன்று என அதாவது அவசியமானால் அதன் பலத்தை பயன்படுத்தி காக்கக் கூடிய அதன் நிலப்பகுதியில் ஒரு பகுதி என்று பெய்ஜிங் கருதுகிறது. குறிப்பாக எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களை ஆபிரிக்கா, மத்திய கிழக்கு ஆகியவற்றில் இருந்து பெறுவதற்கு, மேலும் உற்பத்திப் பொருட்களை ஐரோப்பா இன்னும் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா வணிகத்திற்காக இக்கடற்பாதைகளை மிகவும் நம்பியுள்ளது. தென் சீனக் கடல் சில மதிப்பீடுகளின்படி 23-30 பில்லியன் டன்கள் எண்ணெயைக் கொண்டுள்ளது; அதாவது கிட்டத்தட்ட உலக இருப்புக்களில் 12%.

தென்கிழக்கு ஆசிய கப்பல் செல்லும் பாதைகளின்மீது கட்டுப்பாட்டை வலுப்படுத்துகையில், குறிப்பாக முக்கிய நெரிக்கும் பகுதிகளான மலாக்கா ஜலசந்தி போன்றவற்றில், சீனாவுடன் ஒரு போர் மூண்டால் அதை முடக்கிவிடக்கூடிய கடற்படை முற்றுகை என்னும் அச்சுறுத்தலைக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. ஆசியாவில் மூலோபாயக் குவிப்பு என்னும் அதன் நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக, ஒபாமா நிர்வாகம் நவம்பர் மாதம் கான்பெர்ராவுடன் மரைன்களை அந்நாட்டில் நிறுத்தவும், வடக்கு ஆஸ்திரேலியாவில் நீர்நிலைகளை அணுகும் வகையில் தளங்களைப் பெறுவதற்கும் உடன்பாட்டைக் கொண்டுள்ளது. பிலிப்பைனின் இராணுவத் திறனைக் கட்டமைக்க அமெரிக்க உதவுவதுடன், தன்னுடைய ஏராளமான போர்க்கப்பல்களையும் சிங்கப்பூரில் நிறுத்தி வைத்துள்ளது; வியட்நாமுடன் இராணுவ உறவுகளுக்கு ஏற்றம் கொடுக்கின்றன

மலாக்கா சங்கடத்தை எதிர்கொள்ளும் வகையில், சீன ஆட்சி மாற்று தரைப் பாதைகளைத் தேட முற்பட்டுள்ளது; இதில் பாக்கிஸ்தான் மற்றும் பர்மா மூலமான பாதைகளும் அடங்கும்; இவற்றுடன் நீண்டகாலமாக பெய்ஜிங் உறவுகளைக் கொண்டுள்ளது. ஆனால் ஒபாமா நிர்வாகம் இந்த மூலோபாயத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயல்கிறது. பர்மாவைப் பொறுத்தவரை, அமெரிக்கா அங்குள்ள இராணுவ ஆட்சிக்குழுவுடன் வியத்தகு முறையில் உறவுகளை முன்னேற்றுவித்துள்ளது; இதையொட்டி டிசம்பர் மாதம் கிளின்டன் அங்கு சென்றிருந்தார்ஓர் அரை நூற்றாண்டில் இது முதல் தடவையாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலரால் மேற்கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக, பெய்ஜிங் எரிசக்தி குழாய்த்திட்டங்கள், இருப்புப் பாதைகள் ஆகியவற்றின் மூலம் தென் சீனாவை இந்தியப் பெருங்கடலில் உள்ள பர்மிய துறைமுகங்களுடன் இணைத்தல் என்பது கேள்விக்கு உரியதாகிவிடும்.

இன்னும் பரந்த அளவில் ஒபாமா நிர்வாகம் ஆசியாவில் அதன் இராணுவக் கூட்டை ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வலுப்படுத்துகிறது; அதன் மூலோபாய பங்காளித்தனத்தை இந்தியாவுடன் பெருக்கியுள்ளது. இதன் விளைவாக, தென் கொரியா சீனாவின் நட்பு நாடான வட கொரியாவுடன் ஆக்கிரோஷ நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது; ஜப்பான் இன்னும் ஆக்கிரோஷமாக சீனாவிற்கு எதிராக பூசல் நிறைந்த சென்காகு தீவுகளில் கொண்டுள்ளது; இந்தியா, சீனாவுடனான எல்லைப் பூசல்களில் அழுத்தம் கொடுக்கிறது. சுற்றிலும் சூழப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில், பெய்ஜிங் ரஷ்யாவுடன் மூலோபாய உறவுகளைப் பிணைத்துள்ளது; இதையொட்டி மிகப் பெரிய அளவில் இராணுவங்களின் கூட்டுப் போர் ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன; இதில் கடந்த மாதம் வட-கிழக்கு ஆசியாவில் நடைபெற்ற பெரிய கடற்படைப் பயிற்சியும் அடங்கும்.

ஒபாமா நிர்வாகத்தின் பொறுப்பற்ற சீனாவுடனான மோதலுக்கு உந்து சக்தியாக இருப்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றுத் தன்மை வாய்ந்த வீழ்ச்சியாகும். கடந்த இரு தசாப்தங்களில் வாஷிங்டன் பலமுறையும் ஆக்கிரமிப்புப் போர்களில் ஈடுபட்டுள்ளது குறிப்பாக மத்திய கிழக்கில்; தன்னுடைய பொருளாதார, மூலோபாய நிலைமையை வலுப்படுத்தும் முயற்சியில் தன் இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்துகிறது. ஆசியாவில் முன்னிலை என்பது வியத்தகு அளவில் இந்தப் பணயங்களை விரிவாக்கிவிட்டது. ஆசியா மீது தன் மேலாதிக்கத்தை முத்திரையிட முற்படுகையில், அமெரிக்கா அணுவாயுதம் நிறைந்த சக்திகளிடையே பேரழிவு தரும் போர் பற்றிய ஆபத்துக்களைத் தூண்டுகிறது.

உலகில் பிரதான குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு என்னும் முறையில் சீனாவிடம் பொருளாதார ரீதியில் நம்பகத்தன்மை கொண்டிருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கும் உலக மூலோபாய, பொருளாதார வடிவமைப்பிற்குள் அதன் மேலாதிக்க நிலைமைக்கு எந்த சவால் விடும் திறனையும் பொறுத்துக் கொள்ளாது. ஆசியா முழுவதும் வேண்டுமென்றே அழுத்தங்களை அதிகரிக்கையில், ஒபாமா நிர்வாகம் கணக்கிலடங்கா வட்டார ஆபத்துக்களை விரிவாக்கும் வகையில் கொரியத் தீபகற்பத்தில் இருந்து தென்சீனக் கடல் நிலப்பகுதி பூசல்கள் வரை செய்துள்ளது; மேலும் தெற்கு ஆசியாவில் போட்டிகளுக்கும் வகை செய்துள்ளது. ஸ்கார்பாரோ ஷோல் பற்றிய சாதாரண மோதல் கூட விரைவில் ஒரு சர்வதேச வலிமைக்குச் சோதனை என்று ஆகும்; ஏனெனில் சீனா தன் அடிப்படை நலன்களை பாதுகாக்கும்; அமெரிக்க அதன் நட்பு நாடான பிலிப்பைனுக்கு இராணுவ ஆதரவு கொடுக்கும்.

போர் பற்றிய உண்மையான ஆபத்துக்கள் எதிர்ப்புக்களினாலும், அரசாங்கங்களுக்கு முறையீடு செய்வதின் மூலமும் தவிர்க்கப்பட முடியாதவை. அதன் மூலகாரணங்கள் முதலாளித்துவ முறையில் உலகளாவிய நெருக்கடி மோசம் அடைந்துள்ளதிலும், அதையொட்டி மூலோபாய, பொருளாதார நலன்களில் மோதல் தீவிரம் அடைந்துள்ளது என்பதிலும் உள்ளன. சீனா, அமெரிக்கா, ஆசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் புரட்சிகர ஐக்கிய இயக்கத்தை கட்டியெழுப்பி, இலாப முறையை அகற்றி, உலகை போட்டியிடும் தேசிய அரசுகள் என்ற பிற்போக்குத்தனப் பிரிவு முறையில் இருந்து அகற்றி சர்வதேச அளவில் சோசலிசத்தை நிறுவுவதுதான் இராணுவ வாதம் மற்றும் போரின் எழுச்சியை நிறுத்த ஒரே வழிவகையாகும்.