WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரான்ஸில் தொழிலாளர் விரோத இடைக்கால அரசாங்கத்தை சோசலிஸ்ட் கட்சி நியமிக்கிறது
By Antoine Lerougetel
18 May 2012
use
this version to print | Send
feedback
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோசலிஸ்ட் கட்சியின் (PS)
ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் நியமித்துள்ள இடைக்கால பிரெஞ்சுப் பிரதம மந்திரி
Jean-Marc Ayrault,
பிரான்ஸின் புதிய இடக்கால அரசாங்கத்தை நேற்று
ஆரம்பித்து
வைத்தார். இது ஜூன் 17ம் திகதி சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுகள் தெரியும் வரை
ஆட்சியை நடத்தும்.
PS ம்
அதன் நட்புக் கட்சிகளும் இத்தேர்தல்களில் பெரும்பான்மையை அடைந்தால், 34
மந்திரிகளில் பெரும்பாலானவர்கள் அநேகமாகத் தக்க வைக்கப்படுவர். போட்டியிடும்
முதலாளித்துவ
“இடது”
கட்சிகளான இடது முன்னணி, ஐரோப்பிய சுற்றுச்சூழல்-பசுமைவாதிகள்
பாராளுமன்றத்தில் பெறும் பங்கின் அளவு, செல்வாக்கின் பிரதிநிதித்துவம் இவற்றைப்
பொறுத்து நியமனங்கள் அமையும்; அதேபோல் பல தொகுதிகளில் தேர்தலில் நிற்பதற்கு
அவற்றுள் கொண்டிருந்த உடன்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
நேற்று அது கூடியபோது, மந்திரிசபையின் முதல் நடவடிக்கை,
தொடர்ச்சியான அடையாள நடவடிக்கைகளை இயற்றுதல் என இருந்தது—ஜனாதிபதி
மற்றும் மந்திரிகளின் ஊதியங்களை 30% குறைத்தல், உத்தியோகபூர்வ ஊழலுக்கு எதிரான
பாதுகாப்பாக
“சிறந்த
நடைமுறைகளின் பட்டயத்தை”
ஏற்றல் ஆகியவை அதில் இருந்தன. இது ஹாலண்ட்டின் பழமைவாத முந்தைய
ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மீதான ஒரு தாக்குதலுக்கு ஒப்பாகும்; அவர் தன்னுடைய
ஊதியத்தை அதிகரித்துக் கொண்ட வகையில் பரந்த சீற்றத்தைத் தூண்டிவிட்டிருந்தார்.
இத்தகைய முடிவுகள் வரவிருக்கும் அரசாங்கத்தின் அடிப்படை தொழிலாள வர்க்க விரோதத்
தன்மையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை.
PS
இன்
அதிக வெளிப்படையான வலதுசாரி அடுக்குகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்டுள்ள
இம்மந்திரி சபை,
ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் உள்நாட்டில் சிக்கன
நடவடிக்கைகளை சுமத்துவதையும் வெளியே ஏகாதிபத்தியப் போர்களை நடத்துவதையும் தொடர
முற்படும். இது,
குட்டி முதலாளித்துவ கட்சிகளான இடது முன்னணி,
NPA
எனப்படும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி
“இடது”
சக்திகளின் அரசியல் திவால்தன்மை குறித்த மற்றுமொரு அடையாளமாகும்.
இவைதான் மே 6 ஜனாதிபதி இரண்டாம் சுற்றுத் தேர்தலில் நிபந்தனையற்ற முறையில்
ஹாலண்டிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தன.
PS
இன் மூத்த தலைவரும் கட்சியின் முதல் செயலருமான மார்ட்டின் ஓப்ரிக்கு பிரதம மந்திரி
பதவி கொடுக்கப்படுவதற்கு முதலில் கருதப்படவில்லை, பின்னர் எந்த மந்திரிப் பதவியும்
அளிக்கப்படவில்லை.
PS
ன்
வணிக சார்பு குறுகிய வட்டத்திற்குள் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஓர் அரசியல் அடையாளம்
ஆகும். முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவரான ஜாக் டுலோர் இன் மகளான ஓப்ரி, வடக்கு
பிரான்ஸின் தொழில்துறை அழிவுற்ற பகுதியில் அதிகாரத்துவ சக்தித் தளத்தை அமைத்தவர்,
PS
க்கு
“இடது”
என்றுதான் கருதப்படுகிறார்.
வாரப்பணி நேரத்தை 35 மணி என்று குறைத்த சட்டத்தை இயற்றிய (பின்னர்
அது அகற்றப்பட்டு விட்டது) ஓப்ரி
PS
இன்
ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆரம்ப தேர்தல்களின்போது ஹாலண்டை
“மிருதுவான
இடதைப்”
பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று குறைகூறியிருந்தார். ஹாலண்டிற்கு சற்றும்
குறையாமல் நிதி மூலதனத்தின் நலன்களையே தானும் தளமாக ஓப்ரி கொண்டுள்ளார் என்றாலும்,
அவருடைய கருத்து,
ஹாலண்டின் அரசாங்கம் முற்றிலும் பெரு வணிக நலன்களுக்குத்தான்
பாடுபடும் என்ற மக்களுடைய உணர்விற்கு முறையீடும் வகையில் அமைந்திருந்தது.
இடைக்கால அரசாங்கத்தில் இருக்கும் மந்திரிகளின் அடையாளங்கள்
தெளிவாக்குவதை போல், இவ்வகையில்தான் உண்மையாக நடந்துள்ளது.
Laurent Fabius
வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளது
—உத்தியோகபூர்வமாக
அரசாங்கத்தில் இரண்டம் உயர் இடம்—
மிக
அதிக அடையாள குறியீடாகும்.
PS
இன்
ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் பிரதம மந்திரியாக 1984ல் இருந்து 1986 வரை
இருந்தார்; தொழிலாள வர்க்கத்திடம் அவருடைய தொழில்துறை மறுகட்டமைப்பு, சமூகநலச்
சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக ஆழ்ந்த இகழ்வை பெற்றவர். பிரெஞ்சு இரத்த
வங்கிகளில்
AIDS
தொற்றுக் கிருமிச் சோதனைக்காக அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை
தடுப்பதில் அவருடைய அரசாங்கம் கொண்டிருந்த பங்கின் குற்றம் சார்ந்த பொறுப்பு
அனைத்தில் இருந்தும் அவர் தப்பிவிட்டார். இம்முடிவு பின்னர்
AIDS
தொற்று பரவ வகை செய்தது; கிட்டத்தட்ட பிரான்ஸில் பரம்பரை இரத்த
ஒழுக்கு நோய் உடையவர்கள் அனைவரின் மரணத்திற்கும் வழி செய்தது.
தொழில்துறை மந்திரி, பின்னர் பிரதம மந்திரி என்ற நிலையில் அவர்
தேசியமயமாக்கப்பட்ட தொழில்களான நிலக்கரி, எஃகு ஆகியவற்றில்
“நவீனமயமாக்குதலை”
கடுமையாக செயல்படுத்தினார்; இதையொட்டி வடக்கு, மற்றும் கிழக்கு
பிரான்ஸின் மையங்களில் தொழிலாள வர்க்கம் தொழில்துறை இழப்பு மூலம் பேரழிவிற்கு
உட்படத் தொடங்கியது. இவருடைய கண்காணிப்பின் கீழ்த்தான் 1985ல் கிரீன்பீசின்
ரெயின்போ வாரியர் கப்பல் பிரெஞ்சுச் சிறப்புப் படைகளால் மூழ்கடிக்கப்பட்டது;
அப்பொழுது அது பிரெஞ்சு அணுச் சோதனைகளுக்கு எதிராக எதிர்ப்புக்களைக் காட்டியது;
ஒருவர் அதில் கொல்லப்பட்டார்.
வணிக சமூகத்துள் ஆழ்ந்த தொடர்புகளைக் கொண்டிருக்கும்
Fabius
பிரெஞ்சு ஏகாதிபத்தியம் கோரும் கொள்கைகள் எதையும் செயல்படுத்துவார் என்பதை உறுதியாக
நம்பலாம். முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் வெளியுறவுக் கொள்கை பற்றி
எக்குறைகூறலும் கிடையாது என்னும் ஹாலண்டின் அறிவிப்பிற்கு இணங்க,
Fabius
சார்க்கோசி ஐவரி கோஸ்ட், லிபியா மற்றும் சிரியாவில் நடத்திய
இராணுவத் தலையீடுகள் மற்றும் பிரெஞ்சு இராணுவ வாத வெடிப்பு பற்றி எந்த விமர்சனமும்
கிடையாது.
மானுவல் வால்ஸ் சக்திவாய்ந்த உள்துறை மந்திரிப் பதவியை எடுத்துக்
கொள்கிறார். ஒரு வலதுசாரி நபரான இவர், சோசலிஸ்ட் கட்சி,
தன்
பெயரில் இருந்து
‘சோசலிஸ்ட்’
என்றும் சொல்லை அகற்றிவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றி அதிகம் பேசப்படுவது குறித்தும் அவருக்கு உகந்ததுதான்;
அதேபோல் குடியேறுவோர் எதிர்ப்பு உணர்வில் இனவெறி முறையீடுகளையும் செய்துள்ளார்.
2002ல்
Evry
யின் மேயர் என்னும் முறையில் அவர் தொழிலாள வர்க்கப் பகுதியில் ஹலால் இறைச்சி விற்ற
கடை ஒன்றை அவர் மூடினார்; இக்கருத்து புதிய பாசிச
Marine Le Pen
ஆல் முதலிலும் பின்னர் ஹாலண்டினாலேயே ஜனாதிபதித் தேர்தல்கள்போது
எடுத்துக் கொள்ளப்பட்டது. இது சார்க்கோசியை வலதில் இருந்து தாக்கும் முயற்சி ஆகும்.
எவ்ரியில் பொலிஸ் படையை இரு மடங்காக அதிகரித்த வால்ஸ், வீடியோ காமெராக்கள்,
டிசர்கள், குண்டுகள் ஆகியவற்றின் பயன்பாட்டை பரப்புவதிலும் தீவிரமாக இருந்தார்.
Médiapart
என்னும் வலைத் தளம், வால்ஸின் புத்தகமான
Law and Order,
the left can change everything
என்பது
“சட்டம்
ஒழுங்கு ஆகியவற்றிற்கு முன்னுரிமை பகுதிகளைத் தோற்றுவித்தல், நிதிய ஊக்கம் மூலம்
அனுபவம் வாய்ந்த பொலிசாரை அவ்விடத்தில் நிலைநிறுத்துதல், கண்காணிப்பு காமெராக்களை
நிறுவுதல், இன்னும் அதிகச் சிறைகளைக் கட்டுதல், இளம் குற்றவாளிகளுக்கு உடனடித்
தண்டனைகள் ஆகியவற்றிற்கு வாதிடுகிறது என்று மேற்கோளிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)
முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் உடைய இரண்டு ஆதரவாளர்களின் பொறுப்பில்
நிதிய விவகாரங்கள் இருக்கும்—பொருளாதார
மந்திரி, நிதி மந்திரி என்று
Pierre Moscovici
உம், வரவு-செலவுத்
திட்ட மந்திரி என்று Jérôme
Cahuzac
கும் இருப்பர். இது அரசாங்கத்தின் உறுதியான தொழிலாள வர்க்க விரோத விருப்பங்களை
சுட்டிக் காட்டுகிறது.
Arnaud Montebourg
உற்பத்திமீட்புத் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Mediapart
அவருடைய நியமனம் அரசாங்கத்தின்
“இடது
உணர்விற்குச் சற்று ஊக்கம் கொடுக்கும்”
நோக்கத்தை கொண்டது எனக் கூறியுள்ளது; இக்கருத்து முக்கியமாக பிரெஞ்சு
“இடது”
என்னும் பெயரில் இருக்கும் பேரினவாத தன்மையைத்தான் காட்டுகிறது.
செய்தி ஊடகம் மற்றும் குட்டி முதலாளித்துவ
“இடது
கட்சிகளால்”,
“இடது
எனச் சித்தரிக்கப்படும்
Montebourg
ஆரம்ப பிரச்சாரத்தின்போது மூடல்களை எதிர்நோக்கியிருந்த பல
ஆலைகளுக்கு சென்றிருந்தார். பொருளாதாரத் தேசியவாதம் தேவை என உபதேசித்து,
ஜேர்மனியையும் கண்டித்தார். அவருடைய அமைச்சரகத்தின் செயற்பட்டியல்
தொழிற்சங்கங்களுடன் ஒன்றாக உழைத்து பிரெஞ்சு முதலாளித்துவத்தின் போட்டித்தன்மை,
உற்பத்தி ஆகியவற்றிற்கு ஏற்றம் அளிப்பது ஆகும்; இதற்காக அவர் தொழிலாளர்
செலவினங்களைக் குறைத்து, தொழிலாளர்கள் நலன்கள்மீதும் தாக்குதல் நடத்துவார். |