சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Plantation workers denounce tea estate unions

இலங்கை: பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களை கண்டனம் செய்கின்றனர்

By Panini Wijesiriwardane and M. Vasanthan
10 May 2012

use this version to print | Send feedback

இலங்கை மத்திய மலையக மாவட்டங்களில் ஹட்டன் மற்றும் பண்டாரவளை பிரதேசங்களின் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எதிர்வரும் மே 20 அன்று நடக்கவுள்ள தோட்ட தொழிலாளர்களின் மாநாடு பற்றி சமீபத்தில் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களுடன் பேசினார். சோசலிச சமத்துவ கட்சி ஹட்டனில் நடத்தும் இந்த மாநாட்டில், தோட்டத் தொழிலாளர்களின் ஊதியங்கள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளையும் காக்க ஒரு சோசலிச வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடி ஏற்றுக்கொள்ளப்படும். (பார்க்க: "இலங்கை சோசலிச சமத்துவ கட்சி தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டை நடத்துகிறது.)

ஹட்டனில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெளி ஒயா தோட்டத்தில், மார்ச் மாதம் 1,200 தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இடம்பெற்றது. ஒரு தொழிலாளி ஒரு நாளுக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை 17 முதல் 20 கிலோ வரை அதிகரிக்க தோட்ட நிர்வாகம் எடுத்த முடிவை எதிர்த்தே இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

வெலி ஒயா தோட்டத் தொழிலாளர்கள், தமது வேலை நிறுத்தத்தின் போது சோசலிச சமத்துவ கட்சி காட்டிய ஆதரவுக்கு நன்றி கூறினர். "எங்கள் போராட்டத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தை முன்வைத்தது உங்கள் அமைப்பு மட்டுமே, மற்றும் வேலை நிறுத்தம் முடிந்து விட்ட பின்னரும் நீங்கள் இங்கே வந்தீர்கள். வேலை நிறுத்தத்தின் போது, அனைத்து தொழிற்சங்கங்களும் எங்களை காட்டிக்கொடுத்துவிடும், மற்றும் அவர்கள் நிர்வாகத்துக்கே வேலை செய்கின்றனர் எங்களுக்கு அல்ல என நீங்கள் விளக்கியிருந்தீர்கள். இது எங்களுக்கு ஒரு தெளிவான அனுபவமாகும்", என ஒரு தொழிலாளி கூறினார்.

வேலைநிறுத்தத்தின் பின்னர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) இரு தலைவர்கள், நிர்வாகத்தால் வெகுமதியளிக்கப்பட்டு மேற்பார்வையாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என தொழிலாளர்கள் தெரிவித்தனர். NUW ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியை ஆதரிக்கும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரத்தின் தலைமையிலான தொழிற்சங்கமாகும்
.

"
நீங்கள் தொழிற்சங்கங்களில் இருந்தும் அவர்களது அரசியலில் இருந்தும் வெளியேறுமாறு எமக்கு கூறினீர்கள், நாங்கள் இப்போது அந்த விடயத்தைப் பற்றியே விவாதிக்கின்றோம்", என அவர் கூறினார் "

தொழிற்சங்கங்கு எதிரான போராட்டத்துக்கும் சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்கவும் சோசலிச சமத்துவ கட்சி அழைப்பு விடுத்தது பற்றி பேசிய வெலி ஓயா தொழிலாளி தெரிவித்ததாவது: "உங்கள் வேலைத் திட்டம் பற்றி எனக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு புரிகிறது, ஆனால் நான் நடவடிக்கை குழுக்கள் பற்றி கொஞ்சம் குழப்பத்தில் உள்ளேன். தொழிற்சங்கங்களுக்கும் இந்த நடவடிக்கை குழுக்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன? இந்த குழுக்கள் நிர்வாகத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வது எபபடி? நிர்வாகம் உத்தியோகபூர்வமாக இந்த குழுக்களை ஏற்றுக் கொள்ளுமா? நான் மாநாட்டில் இந்த விஷயங்கள் பற்றி கலந்துரையாட விரும்புகிறேன், அதனால் நான் என் நண்பர்கள் சிலருடன் பங்கேற்க விரும்புகிறேன்."

மற்றொரு தோட்டத் தொழிலாளி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.) ஆற்றும் பாத்திரம் பற்றி சுட்டிக் காட்டினார். .தொ.கா. தலைவர், இலங்கையின் கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானாவார்.

"
நான் .தொ.கா. உறுப்பினராக இருக்கிறேன். அவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டாம் என எங்களுக்கு கூறியதோடு எமது போராட்டத்தை குழப்ப அனைத்தையும் செய்தனர்" என்று கூறிய அவர், "அத்தகைய தடைகள் இருந்த போதிலும், எங்கள் மீது சுமத்தப்படும் வேலை சுமைகளை தாங்க முடியாத காரணத்தால், இந்த தோட்டத்தின் ஒவ்வொரு தொழிலாளியும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்," என மேலும் கூறினார்.

அவர், .தொ.கா. மற்றும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதாக கூறிய மற்ற தொழிற்சங்கங்கள் இடையே வேறுபாடு எதுவும் இல்லை என்று கூறினார். " [மலையக மக்கள் முன்னணி தலைவர்] ராதாகிருஷ்ணன், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமேக உடன் வந்து, வேலைநிறுத்தத்தை முடிக்குமாறு எம்மிடம் கூறினார். நிர்வாகம் தேயிலை பறிக்கும் இலக்கை அதிகரிப்பதை கைவிடுவதற்கு உடன்பட்டுள்ளதாகவும், தோட்ட முகாமையாளர் ஒரு மாதத்திற்குள் இடம் மாற்றப்படுவார் என்றும் அவர்கள் கூறிக்கொண்டனர்."

வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த போதிலும் வாக்குறுதிகள் எவையும் உண்மையாக்கப்படவில்லை, என அவர் தொடர்ந்தும் பேசினார். "கம்பனி, அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றுசேர்ந்து எங்களை ஏமாற்றிவிட்டன. நீங்கள் சொல்வது போல், எமக்கு சொந்த இயக்கம் ஒன்று இருந்தால் அவர்கள் நம்மை ஏமாற்ற முடியாது. அவ்வாறு ஒரு இயக்கத்தை உருவாக்குவது இந்த மாநாட்டின் பணிகளில் ஒன்று என்று நினைக்கிறேன். அதனால் நான் கலந்து கொள்ள முடிவு செய்து விட்டேன்," என அவர் தெரிவித்தார்.

ஒரு 82 வயதான ஓய்வுபெற்ற தொழிலாளி 1950 களின் பிற்பகுதியில் மற்றும் 1960 களின் ஆரம்பத்தில் தன்னுடைய அனுபவங்களை விவரித்தார். "நான் லங்கா சமசமாஜ கட்சி உறுப்பினராக இருந்தேன். நாம் லங்கா சமசமாஜ கட்சி தலைமையின் கீழ் நகர்ப்புற தொழிலாளர்களுடன் இணைந்து பாரிய போராட்டங்களில் ஈடுபட்டோம், "என்று அவர் கூறினார்.

"
அந்த நாட்களில் நாம் கடுமையாக சோசலிசத்தை நம்பினோம். எனினும், 1964 இல் அவர்கள் [லங்கா சமசமாஜ கட்சி] பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் நுழைந்து கொண்டனர். அந்த அம்மையார் நாம் இந்த நாட்டின் குடிமக்கள் அல்ல என்று கூறி,  தோட்டத் தொழிலாளர்கள் ஒரு பகுதியினரை சொந்த தேசத்திற்கு திரும்ப அனுப்ப இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன் பின், சோசலிசம் பற்றிய எங்கள் நம்பிக்கை படிப்படியாக குறைந்தது."

மற்றொரு சோ... / .எஸ்.எஸ்.. பிரச்சார குழு, சுமார் 1,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்ற, பண்டாரவளையில் உள்ள ஐஸ்லபி தோட்டத்துக்கு சென்றிருந்தது. இந்த தோட்டத்தில் தொழிற்சங்கங்கள், வேலை சுமை, சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் அனுபவங்களும் வெளி ஓயா தோட்டத்தை ஒத்திருந்தன. பொருத்தமற்ற வீடுகள், இளைஞர்கள் அநேகர்களுக்கு வேலையின்மை மற்றும் போசாக்கின்மை போன்றவை ஐஸ்லபி தோட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளாகும்
.

ஐஸ்லபி தோட்ட நிர்வாகம் தேயிலை பறிக்கும் அளவை 20 கிலோ வரை அதிகரித்த பிறகு, தோட்டத் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்துப் போராட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோருவதற்காக தொழிற்சங்க தலைவர்களை சந்திப்பதன் பேரில் பண்டாரவளையில் உள்ள உள்ளூர் .தொ.கா. அலுவலகத்துக்கு சென்றிருந்தனர். தொழிற்சங்க எதுவும் செய்யவில்லை.

ஒரு பெண் தொழிலாளி தொழிற்சங்கத்தின் பிரதிபலிப்பை கண்டித்தார். "அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள், ஆனால் நாம் இந்த பொறுத்து கொள்ள முடியாத வேலை சுமையுடன் எப்படி பொறுமையாக இருக்க முடியும்? என அவர் கேட்டார்.

"
நான் இதற்கு எதிராக தனித்து போராட முடிவு செய்து பகிரங்கமாக புதிய இலக்குகளை நிராகரித்தேன். இதன் விளைவாக நான் ஏழு நாட்கள் வேலை இழந்தேன். தொழிற்சங்கங்கள் கம்பனிக்கு சேவை செய்வதனால் நான் அதற்கு சந்தாப் பணம் கட்டுவதில் அர்த்தமில்லை என்று உணர்ந்து அதை நிறுத்தி விட்டேன். ஆனால் நான் இந்த போராட்டத்தை தொடர்வது எப்படி என யோசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் இங்கு இருப்பது நல்லது தான், " என்று அவர் கூறினார்.

சோசலிச சமத்துவ கட்சி மற்றும் அதன் முன்னோடியான புரட்சி கம்யூனிஸ்ட் கழகமும், தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக முன்னெடுத்த நீண்ட மற்றும் கொள்கை ரீதியான போராட்டத்தின் ஒரு முக்கிய மையமாக ஐஸ்லபி தோட்டம் இருந்தது.

அந்த போராட்டங்கள் நினைவுகூர்ந்து அவர் பேசினார்: "அந்த நாட்களில் நான் உங்களது தொழிலாளர் பாதை பத்திரிகையை படிக்கத் தொடங்கினேன். அப்போது இருந்து நீங்கள் எங்களுக்கு தொழிற்சங்கங்கள் ஆற்றும் பாத்திரம் பற்றி விளக்கியுள்ளீர்கள், அவர்களிடம் இருந்து பிரிந்து வருமாறு கூறியிருக்கிறீர்கள். ஆனால் நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. இப்போது நான் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து வெளியேறாமல் முன்னோக்கி செல்ல முடியாது என்பதை புரிந்துகொண்டுள்ளேன். "

சோசலிச சமத்துவ கட்சி மற்றும் .எஸ்.எஸ்.. பிரச்சாரகர்கள் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் பெருகியமுறையில் அரசியல்மயப்படுவது பற்றி கவனத்துக்கு கொண்டுவந்த போது, எகிப்து மற்றும் துனிசியாவில் தொழிலாளர்கள் சர்வாதிகாரிகளை வெளியேற்றிய பின்னரும், எவ்வாறு ஏகாதிபத்திய சக்திகளால் அந்த நாடுகளில் தமது கட்டுப்பாட்டை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது என ஒரு தொழிலாளி கேட்டார். அப்பெண் அந்த போராட்டங்களில் தொழிற்சங்கங்கள் ஆற்றிய பங்கு பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார்.

மற்றொரு தோட்டத் தொழிலாளியும் கலந்துரையாடலில் சேர்ந்துகொண்டார்: "நாங்கள் உங்களுடன் பேசும் போது, நாம் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியும் ஒரேவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒரு உலக வேலைத்திட்டம் வேண்டும் என்று புரிந்துகொள்ள முடிந்தது. நாம் மற்ற அரசியல்வாதிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு செவிமடுக்கும் போது, உள்ளூரில் குறுகிய கால தீர்வுகள் இருக்கும் என்றே நினைக்க வேண்டியுள்ளது. ஆனால் நாம் அந்த தீர்வுகளுக்காக போராடும் போது தோல்வியடைந்துவிட்டோம். இந்த குறுகிய கால அரசியலில் இருந்து வெளியேறுமாறு நீங்கள் சொல்வது அதனால்தான் என நான் நினைக்கிறேன். "

மற்றொரு தோட்டத் தொழிலாளி அனைத்துலகவாதம் பற்றியும் இந்தியாவில் சோசலிச சமத்துவக் கட்சி உருவாக்குவதற்கான போராட்டம் பற்றியும் கேட்டார்: "நீங்கள் உலக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் பற்றி பேசும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது. ஆம், நாம் இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட வேண்டும். நான் நிச்சயமாக இந்த பிரச்சினைகள் பற்றி விவாதிக்க உங்கள் மாநாட்டில் பங்கு பெற வேண்டும்," என்று அவர் கூறினார்
.