WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Voters in German state election reject government austerity policy
அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கையை ஜேர்மன்
மாநிலத் தேர்தல்களில்
வாக்காளர்கள் நிராகரிக்கின்றனர்
By Peter Schwarz
16 May 2012
Back to screen version
வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில்
(NRW)
ஞாயிறன்று நடைபெற்ற தேர்தலில் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் பெரும் தோல்வியை
அடைந்தார். கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்
(CDU) 8.3% வாக்குகளை
இழந்து ஜேர்மனியில் மிக அதிக மக்கள் இருக்கும் மாநிலத்தில் 26.3% வாக்குகள் மட்டுமே
பெற்று இதுவரையில் அதன் மோசமான வாக்குப்பதிவைக் கண்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கடைசி மாநிலத் தேர்தலில் கிறிஸ்தவ
ஜனநாயக ஒன்றியம் சமூக ஜனநாயகக் கட்சியை
(SPD)
விடச் சற்றே முன்னணியில் இருந்தது. ஞாயிறுத் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி 39.1%
வாக்குகளைப் பெற்றது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 4.7% அதிகம்
ஆகும். இது மீண்டும் மாநிலப் பாராளுமன்றத்தில் முதலிடத்தைப் பெற்ற கட்சியாக
நுழைகிறது. 2010 தேர்தல்களுக்கு பின்
SPD
பசுமைவாதிகளுடன் சேர்ந்துகொண்டு ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை
அமைத்தது. இப்பொழுது இரு கட்சிகளுக்கும் ஒரு தெளிவான பெரும்பான்மை உள்ளது.
பசுமைவாதிகள் ஞாயிறு வாக்குப்பதிவில் சற்றே குறைந்த வாக்கிழப்பிற்கு உள்ளானார்கள்.
அவர்களுக்கு 11.3 சதவிகிதம்தான் கிடைத்தது.
தாராளவாத ஜனநாயகக் கட்சி
(FDP)
தன்
பங்கு வாக்கை 6.7ல் இருந்து 8.6% என உயர்த்திக் கொண்டது. செய்தி ஊடகம் இந்த
முடிவைப் பெரும் பரபரப்புடன் வெளியிட்டது. ஏனெனில் சில மாதங்கள் முன்பு
FDP
கருத்துக்கணிப்பில் 2% மட்டுமே பெற்று வந்தது.
FDP
க்கு ஆதரவு அதிகரித்துள்ளமை, 2010ல்
CDU
விற்கு வாக்களித்த 160,000 பேர் இப்பொழுது
FDP
க்கு வாக்களித்துள்ளனர் என்ற உண்மையால் விளக்கப்படுகிறது. இது
FDP
பெற்ற மொத்த வாக்குகளில் கால் பகுதியாகும்.
FDP
க்கு ஆதரவு கூடுதலானது அதன் முக்கியமான வேட்பாளரான 33 வயது கிறிஸ்டியான்
லிண்ட்னரினால் என்றும் கூறலாம். இவர் கட்சியின் தலைமையிலிருந்து தன் பிரச்சாரத்தை
ஒதுக்கி வைத்துக் கொண்டார். லிண்ட்னர் FDP
உடைய தலைவர் பிலிப் ரோஸ்லருக்கு உறுதியான எதிரியாவார். ரோஸ்லருடன் கருத்து
வேறுபாடுகள் காரணமாக ஆறு மாதங்களுக்கு முன்புதான் லிண்ட்னர்
FDP
செயலர் பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.
CDU, FDP
என
பேர்லின் கூட்டாட்சி அரசாங்கத்திலுள்ள இரு முக்கிய கட்சிகளுக்கு மொத்த வாக்கு
இழப்புக்கள் 6.4% ஆகும். இரு கட்சிகளுக்கும் மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு
பகுதியினர்தான் வாக்களித்தனர்.
NRW
மாநிலத்தேர்தல்கள் பொதுவாக மத்திய அளவில் உள்ள போக்குகளை
பிரதிபலிக்கும் எனக் கருதப்படும். 2013ல் அடுத்த கூட்டாட்சித் தேர்தல்கள் நடக்க
இருக்கையில் ஞாயிறு வாக்கு முடிவுகள் அரசாங்க மாற்றம் ஒன்று வரலாம் என்பதைச்
சுட்டிக்காட்டுகின்றன.
NRW
தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற இரண்டாம் கட்சி
Pirate Party
ஆகும். 7.8% மொத்த வாக்குகளை பெற்றுள்ளது இக்கட்சி இப்பொழுது நான்காம் மாநிலப்
பாராளுமன்றத்தில் நுழைகிறது. பேர்லின், சார்லாந்து, ஷிலேஷ்விக்-ஹோல்ஸ்ரைன்
ஆகியவற்றை அடுத்து இது நான்காம் மாநிலம் ஆகும்.
SPD
யிடம் இருந்து 90,000, பசுமை வாதிகள், இடது கட்சிகள் ஆகியவற்றிடம் இருந்து 80,000,
முன்னர் வாக்களிக்காதவர்களிடம் இருந்து 70,000, முன்னாள்
CDU
வாக்குகள் 60,000 மற்றும்
FDP
இடம் இருந்து 40,000 என அனைத்து முகாம்களில் இருந்தும் இக்கட்சி வாக்குகளைப்
பெற்றது.
இப்படி பல பிரிவுகளிடம் இருந்து வந்துள்ள ஆதரவு கட்சியின்
வேலைதிட்டத்தில் பிரதிபலிக்கிறது.
Pirate Party
நடைமுறைக் கட்சிகள் மீது இருக்கும் பரந்த அதிருப்தியினால் ஆதாயம் அடைந்துள்ளது
என்றாலும், உள்ளடக்கத்தை பொறுத்தவரை
Pirate Party
தனது போட்டியாளர்களிடம் இருந்து அதிகம் வேறுபாடு கொண்டிருக்கவில்லை. கட்சியின்
பொதுத் வேலைத்திட்ட நிலைப்பாடு இன்னும் கூடுதலான வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவாதம்
வேண்டும் என்று கூறுகிறது. மற்ற விதங்களில்,
Pirate Party
திட்டங்கள் பசுமைவாதிகள்,
FDP, CDU, SPD, Left Party
ஆகியவற்றின் திட்டங்களில் இருக்கும் கோரிக்கைகளின் தொகுப்பு என்று கூறலாம். ஏற்கனவே
Pirate Party
மறுபடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் ஹெனலோர கிராவ்ட்
(SPD)
உடன் ஒத்துழைக்கத் தயார் என்று அறிவித்துள்ளனர். பாராளுமன்றத்தில் ஒவ்வொரு
பிரச்சினை அடிப்படையிலும் அது அரசாங்கத்திற்கு ஆதரவு வாக்கு கொடுக்கும் என்பதையும்
தெளிவாக்கியுள்ளது.
NRW
ல்
மிக அதிகளவில் இழப்பைக் கண்டுள்ள மற்றொரு கட்சி இடது கட்சியாகும். இது தன்
வாக்குகளில் பாதிக்கும் மேல் இழந்துவிட்டது
(பார்க்க
“Collapse for Left Party in North Rhine-Westphalia vote”).
இடது கட்சியின் இழப்புக்களுக்கு முக்கிய காரணம் அதன் வலதுசாரிக் கொள்கையின்
விளைவும் மற்றும்
SPD
இடம் அது சந்தர்ப்பவாத முறையில் சார்பு கொண்டிருப்பது ஆகியவைதான். ஞாயிறன்று
முன்னாள் இடது கட்சியின் வாக்காளர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர்
SPD
க்கு மாறினர். மற்றும் ஒரு ஐந்தில் ஒரு பகுதியினர்
Pirate Partyக்கு
ஆதரவு அளித்தனர். சிறிய பகுதியினர் பசுமைக்கட்சியை நோக்கி திரும்பினர்.
மொத்தத்தில்
NRW
தேர்தல், மேர்க்கெலுடைய சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை ஐயத்திற்கு
இடமின்றி நிராகரிப்பதைப் பிரதிபலிக்கிறது. கிரேக்கம் மற்றும் பிரான்ஸில் ஒரு
வாரத்திற்கு முன் நடந்த தேர்தல்களில் காணப்பட்ட போக்கைத்தான் இது தெளிவாகப்
பின்பற்றியுள்ளது.
மேர்க்கெல் மந்திரிசபையில் சுற்றுச்சூழல் மந்திரியாக இருக்கும்
CDUவின்
முக்கிய வேட்பாளர் நோர்பேர்ட் றொட்கென்,
SPD-பசுமைவாதச்
சிறுபான்மை அரசாங்கத்தை பொதுச்செலவுகள் குறைத்தலுக்கு விருப்பமின்மை என்பதற்காக
தாக்கி இன்னும் ஆழ்ந்த வெட்டுக்களுக்குத் தன் பிரச்சாரத்தில் கவனத்தை காட்டினார்.
“அவர்கள்
புதிய கடன்களைச் சேர்க்கின்றனர்”
என்று கூறுவது றொட்கெனின் தேர்தல் மந்திரமாக இருந்தது. தேர்தலுக்குச் சற்றுமுன்பு
அவர்
NRW
வாக்கு என்பது மேர்க்கேலின் சிக்கனக் கொள்கைகள் பற்றிய மக்கள் கருத்துக் கணிப்பைப்
பிரதிபலிக்கும் என்று அறிவித்தார். தோல்வி உறுதி என்பதை அறிந்த, பீதியுற்ற
CDU
தலைமையகம் பேர்லினில் அவர் தன் அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று
வலியுறுத்தியது.
றொட்கென் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தியிருப்பது அதிக
வேலையின்மை, நீண்டகாலமாக நிதிப் பிரச்சினைகளை உடைய ஒரு மாநிலத்தில் பெரும்
எதிர்ப்பைத்தான் சந்தித்துள்ளது.
NRW
இல் உள்ள வாக்காளர்கள் பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகியவை
ஆணையிட்டு கிரேக்கம், ஸ்பெயின் இன்னும் பிற ஐரோப்பிய நாடுகளில் சிக்கன
நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பேரழிவு விளைவுகளைக் கவனிக்கத் தவறவில்லை.
அடிப்படையில் மேர்க்கெலின் சிக்கனத் திட்டத்தை நிராகரிக்கும் ஒரு
கட்சி இல்லாத நிலையில்,
SPD
ஐ இடதில் இருந்து அதன் நிலைப்பாட்டிற்கு குறைகூறல் இல்லாத நிலையில்,
SPD
கூட்டாட்சி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பில் இருந்து இலாபம்
அடைய முடிந்தது. பிரதமர் கிராவ்ட் சிறந்த மாற்றீடு எனக் காட்டிக் கொள்ள முடியும்—அவருடைய
கொள்கைகள் றொட்கென் உடைய கொள்கைகளில் இருந்து அதிக வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை
என்றாலும். றொட்கெனை போல் கிராப்ட் கடன் தடையை ஏற்க உறுதி கொடுத்துள்ளார். ஆனால்
வெட்டுக்களை சற்று தாமாதமான முறையில் கொண்டுவர இருப்பாதகவும், குழந்தைகள், கல்வி
தொடர்பான வெட்டுக்களை ஒதுக்கிவிடப்போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இவ்வகையில்
SPD
யிடம் வாக்காளர் தொகுப்பு கொண்டுள்ள விருப்பம் ஒவ்வொரு கட்சியின் திறமை பற்றிய ஒரு
மதிப்பீட்டை பிரதிபலிக்கின்றது. அக்கருத்துக்கணிப்புப்படி,
CDU, SPD
இரண்டும் ஒப்புமையில் ஒன்றான தரங்களை
“கடன்
பிரச்சினைகளைத் தீர்த்தல்”,
“பொருளாதாரம்”
ஆகிய பிரிவுகளில் பெறுகின்றன; ஆனால்
“சமூக
நீதி”
என்று வரும்போது
CDU
பெற்ற 16% உடன்
SPD
பெற்ற 55% ஒப்பிடத்தக்கது.
SPD
வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது வாக்காளர்களில் புதிய அடுக்குகள் இதற்குத்
திரட்டப்பட்டுள்ளன என்ற பொருளைத்தராது. வாக்குப் பதிவு கிட்டத்தட்ட 2010க்கு
ஒப்பானதாகத்தான் இருந்தது. அதாவது 60%க்குச் சற்று குறைவாக. இது மாநிலம்
தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து மிகவும் குறைந்த விகிதம் ஆகும்.
SPD
க்கு கிடைத்த மொத்த 3
மில்லியன் வாக்குகளில் 110,000 முன்னாள் வாக்களிக்காதவர்களிடம் இருந்து வந்தது.
சாராம்சத்தில், நடைமுறைக் கட்சிகளுக்கும்
Pirates
களுக்கும் இடையே வாக்குகளில் மறுபகிர்வு ஏற்பட்டது. வாக்களார்களில்
60% இதைச் செய்துள்ளனர். 40% வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டனர்.
NRW
தேர்தல் வெற்றி
SPDஇற்கு
இருந்தபோதிலும்கூட, இக்கட்சிதான் 2010
சமூகநல
விரோத செயற்பட்டியல், ஹார்ட்ஸ் விதிகள் ஆகியவற்றிற்குப் பொறுப்பு கொண்டது என்பதைத்
தொழிலாளர்கள் மறந்துவிடவில்லை. வரவிருக்கும் மாதங்கள் விரைவில் கிராவ்ட்டின் மிக
நிதானமான உறுதிமொழிகள் கூட சூடான காற்றுப் போல்தான் என்பதை வெளிப்படுத்தும்.
ஐரோப்பிய கடன் நெருக்கடியின் தீவிரம் எவ்வித சமூக சலுகைக்கும் இடம்விட்டு வைக்காது.
கிராவ்ட் முதலிலும் முக்கியமானதாகவும் தொழிலாளர்களுக்கு எதிரான புதிய
தாக்குதல்களைச் சுமத்துவதற்கு
SPD
தொழிற்சங்கங்களுடன் கொண்டிருக்கும் நெருக்கமான பிணைப்புக்களை
நம்பியிருப்பார். கடுமையான சமூக மோதல்கள் தவிர்க்க முடியாதவை. |