WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
Spanish bank debts deepen eurozone crisis
ஸ்பெயினின் வங்கிகளுடைய கடன்கள் யூரோப்பகுதி
நெருக்கடியைத் தீவிரமாக்குகின்றன
By Nick Beams
14 May 2012
Back to screen version
ஸ்பெயினின் வங்கி முறையின் கடன்தீர்க்கும்
திறன் பற்றிய சந்தேகங்கள் மற்றும் கிரேக்கம் யூரோப்பகுதியில்
இருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது ஆகியவற்றை
அடுத்து ஐரோப்பிய நிதிய நெருக்கடி இன்னும் மோசமான நிலையை
அடைந்துள்ளது.
கடந்த வெள்ளியன்று ஸ்பெயினின் அரசாங்கம்
வங்கிகள் கூடுதலாக 30 பில்லியன் யூரோக்களை ($39 பில்லியன்)
சொத்துக் கடன்கள் பேரிழப்பை ஈடுகட்ட ஒதுக்கி வைக்க வேண்டும்
எனக் கோரியது. இது நாட்டின் வங்கிமுறையைத் தூய்மைப்படுத்த
கடந்த மூன்று ஆண்டுகளில் எடுத்த நான்காம் முயற்சியாகும். ஆனால்
இந்த நடவடிக்கை மிகவும் போதாது மற்றும் அதுவும் தாமதமாக
வந்துள்ளது என நிதியச் சந்தைகளால் கருதப்படுகிறது. ஐரோப்பிய
ஒன்றியத்தில் இருந்து ஒரு பிணை எடுப்புப் பொதியை ஸ்பெயின் நாட
வேண்டியிருக்கும் என்ற அச்சத்தில் வங்கிகளின் பங்குவிலை
சரிந்தது, ஸ்பெயின் கடன் பத்திரங்கள் வட்டிவிகிதம் 6%க்கும்
மேலாக உயர்ந்தது. வங்கிகளின் பங்கு மதிப்புச் சரிவில்
Banco Santander என்னும்
யூரோப்பகுதியின் மதிப்பீட்டின்படி பெரிய வங்கியும் அடங்கும்.
ஸ்பெனியன் அரசாங்கம் கூடுதல் நிதிகளை ஒதுக்கி
வைக்குமாறு கோரியிருப்பது, இந்த வாரம் முன்னதாக அது 4.5
இல்லியன் யூரோக்கள் இருப்பை
Bankia
கூட்டு நிறுவனத்தில் இருப்பதை பங்குகளாக
மாற்றும் முடிவை அடுத்து வந்துள்ளது. இது கிட்டத்தட்ட கடன்
கொடுத்த வங்கியை தேசியமயமாக்குதலுக்கு ஒப்பாகும்.
இப்படி அரசாங்கத்தால் எடுத்துக் கொள்வது
முன்னதாக அரசாங்க ஆதரவு பெற்றிருந்த வங்கி மீட்புத்
திட்டத்தின் சரிவைக் குறிப்பதுடன், அரசாங்கமும் கட்டுப்பாட்டு
அதிகாரிகளும் சொத்துச் சந்தை உறுதியாகவிட்டது, ஸ்பெனின்
வங்கிகள் மீட்பை நோக்கி வருகின்றன என்ற கூற்றுக்களின்
மோசடித்தனத்தையும் அம்பலமாக்குகிறது.
எல்லா வங்கி சேமிப்புக்களிலும் 10%இனை
கொண்டுள்ள
Bankia
2010ல் பிராந்திய வங்கிகளை இணைப்பதின் மூலம்
தோற்றுவிக்கப்பட்டது. அந்த வங்கிகள் கிட்டத்தட்ட திவால்தன்மையை
ஸ்பெயினின் சொத்துச் சந்தைக் குமிழின் சரிவை ஒட்டி, 2008
உலகளாவிய நிதிய நெருக்கடி வந்தவுடன் அடைந்துவிட்டன. இணைப்பில்
தொடர்புடைய ஏழு வங்கிகள் 55 பில்லியன் யூரோ விற்கமுடியா
சொத்துக்களை கொண்டுள்ளன. இது கிட்டத்தட்ட அவற்றின் மொத்த
இருப்பு நிலைக்குறிப்புக்களில் 30%க்கும் மேலாகும்.
கடந்த ஜூலை மாதம் அது பங்குச் சந்தையில்
நுழைந்ததில் இருந்து,
Bankia
வின் பங்குகள் 45%க்கும் மேலாகச் சரிந்து
விட்டது. ஏனெனில் பெரிய சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள்
பணத்தைத் திருப்பப் பெற்றுக் கொண்டுவிட்டனர். ஆரம்பத்தில்
பங்குகளை வாங்கிய சிறிய முதலீட்டாளர்கள், தேசிய
புத்துயிர்ப்பித்தல் என்னும் ஒரு அரசாங்க பிரச்சாரத்திற்கு
செவிமடுத்தவர்களாவர்.
பார்க்கிளேஸ் வங்கியின் தெற்கு ஐரோப்பாவிற்கு
தலைமைப் பொருளாதார வல்லுனரான அன்டோனியோ பாஸ்கல், கடந்த ஆறு
மாதங்களில் ஸ்பெயினில் இருந்து நிறைய பணம் வெளியேறிவிட்டது
என்றார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாதிப்பு வராமல்
இருப்பதற்கு தொடர்ந்து
“பொருளாதாரத்தைத்
தகர்க்கும் விகிதத்தில்”
பணத்தை எடுப்பதை குறைக்கவேண்டுமானால் வெளி நிதி
ஆதரவு தேவைப்படும் என்று அவர் எச்சரித்தார்.
மொத்தத்தில் வங்கிகள் கிட்டத்தட்ட 308
பில்லியன் யூரோக்களை சொத்துக் கடன்கள் பிரிவில் வைத்திருப்பதாக
மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 184 பில்லியன் யூரோக்கள்
“விற்கமுடியாத
சொத்துக்கள்”
எனக் கருதப்படுகின்றன. இந்த மோசமான கடன்கள்
சொத்துச் சரிவின் விளைவு ஆகும்; அது மீட்கப்பட்ட வீடுகள்
வளாகங்களை காலியாக, எவரும் வாங்காத நிலையில் விட்டுள்ளது.
இதைத்தவிர, வீடுகள் அடைமானங்களுக்கு வங்கிகள் மொத்தம் 656
பில்லியன் யூரோக்களைக் கொடுத்திருப்பது பற்றிய கவலைகளும்
உள்ளன. இச்சொத்துக்கள் அவற்றின் மூல மதிப்பைத்தான் வங்கிக்
கணக்குகளில் காட்டுகின்றன. ஆனால் வீடுகளின் விலைகள்
கிட்டத்தட்ட 25% இனால் 2008ல் இருந்து சரிந்து விட்டன. கடந்த
வியாழன் அன்று உத்தியோகப்பூர்வ தகவல்கள் வீட்டு விற்பனைகள்
13வது தொடர்ந்த மாதமாகச் சரிந்துள்ளதைத்தான் காட்டுகின்றன.
இந்நெருக்கடியைக் குறைத்தல் என்பதற்கு
முற்றிலும் மாறாக, அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் அதைத்
தீவிரமாகத்தான் ஆக்கும். ஏற்கனவே ஸ்பெயின் ஒரு சிக்கனத்
திட்டத்தின் பிடியில் உள்ளது. அது அரசாங்கத்தின் செலவு
வெட்டுக்கள் 27 பில்லியன் யூரோக்கள் என ஆக்கியுள்ளதுடன்,
வேலையின்மையை 25% வும் ஆக்கியுள்ளது. இவற்றின் விளைவாக பல
பலவீனமான வங்கிகள் தேவைப்படும் கூடுதல் நிதிகளைத் திரட்டுவதில்
இடருக்குட்படும். இதனால் அரசாங்கத் தலையீடு தேவைப்படும்.
பைனான்ஸியல் டைம்ஸ் கூறியுள்ளபடி, இது ஒரு தீய
வட்டத்தைத்தான் உருவாக்கும்:
“அரசாங்கக்
கடன் அதிகரிக்கையில், இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள்
தேவைப்படும், அது பொருளாதார வளர்ச்சியை நெரிக்கும், வங்கிகள்
கடன் கொடுக்க முடியாத நிலையை இன்னும் அதிகமாக்கும்.”
இதேபோன்ற வழிவகைதான் ஐரோப்பிய மத்திய வங்கியின்
நீண்டகால மறுகடன் செயற்பாட்டுத் திட்டம் (LTRO)
வினால் ஏற்பட்டது; அதன்படி 1 டிரில்லியன்
யூரோக்கள் பலவீனமான ஐரோப்பிய வங்கிகளுக்கு மூன்று
ஆண்டுகாலத்திற்கு மிக மிகக் குறைவான வட்டிவிகிதமான 1%க்கு
அளிக்கப்பட்டன.
ஸ்பெயினின் வங்கிகள் இப்பணத்தை வாங்கி
அரசாங்கக் கடன் பத்திரங்களை வாங்கி, மற்றும் ஒரு சாத்தியமான
தீய வட்டத்தினை ஏற்படுத்திவிட்டன. வங்கிகளுடைய நிலைமை
வலுவிழக்கையில், அவை இன்னும் கூடுதலான நிதியைப் பத்திரங்களில்
குவிக்கின்றன. இதனால் அவை பெருகியளவில் அரசாங்கக் கடன்
அபாயங்களுக்கு ஆளாகின்றன.
இந்த நெருக்கடி ஸ்பெயினின் வளர்ச்சியில் மேலும்
சரிவு ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின்
சமீபத்திய கணிப்புக்களை ஒட்டி, ஸ்பெயின் அடுத்த இரண்டு
ஆண்டுகளுக்கேனும் சரிவை எதிர்பார்க்க முடியும். இதன் பொருள்
அரசாங்க வருமானங்கள் தொடர்ந்து சரியும், இன்னும் கூடுதலான
சிக்கன நடவடிகைகளுக்கான கோரிக்கைகள் வரும். ஏனெனில் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் அதன் கடன் விகிதம் வரவுசெலவுத்திட்ட
இலக்குகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் இன்னும் ஏற்றம் அடையும்.
மேலும் அரசாங்கத்தின் செலவுக் குறைப்புக்கள் மற்றும் ஒரு
பொருளாதாரச் சுருக்கத்திற்கு வழிவகுக்கும். ஐரோப்பிய ஆணையம்
2012ல் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 6.4% மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் இருக்கும் என்று கணித்துள்ளது. இது ஐரோப்பிய
இலக்கான 5.3% ஆக இருக்கவேண்டும் என்பதை பூர்த்தி செய்யாது.
ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயினுக்கு அதன்
வரவுசெலவுத்திட்ட இலக்குகளில் சில சலுகைகள் கொடுக்கலாம் என்ற
பேச்சு இருந்தாலும், பொருளாதார விவகாரங்கள் ஆணையர் ஒலி ரெஹ்ன்
கடன் நிலைமை
“பிராந்திய
அரசாங்கங்கள் மிக அதிகம் செலவு செய்வதைத் தடுக்க உறுதியான
நடவடிக்கையைக் கொருகிறது”
என்று எச்சரித்துள்ளார்.
சமீபத்திய ஸ்பெயினின் கடன் நெருக்கடித்
திருப்பம் கிரேக்கத்தில் இருக்கும் உறுதியற்ற அரசியல் நிலைமை
பற்றி கவலைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. கிரேக்கத்தில் புதிய
அரசாங்கம் அமைப்பது பற்றிய பேச்சுக்கள் கிட்டத்தட்ட
சரிந்துவிட்டன. இது கிரேக்கம் யூரோப்பகுதியை விட்டு நீங்கும்
விளைவை ஏற்படுத்தலாம்.
அடுத்த மாதம் கிரேக்கம் 11.5 பில்லியன்
வெட்டுக்களில் சுமத்தும் நிலையில் உள்ளது. இது ஐரோப்பிய
ஒன்றியம் சுமத்தியுள்ள திட்டத்தின் கீழ் வருகிறது. இவ்வாறு
கிரேக்கம் செய்யாவிட்டால், அதற்கு நிதி அளிப்பது என்பது
நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கைகளுக்கு இடையே இது வந்துள்ளது.
இந்த வெட்டுக்கள் ஊதியங்களிலும், ஓய்வூதியங்களிலும் இன்னும்
அதிக குறைப்புக்களை ஏற்படுத்தும்—இந்த
நடவடிக்கைகளைத்தான் கிரேக்க மக்கள் பெருகிய அளவில் மே 6
தேர்தல்களில் நிராகரித்தனர்.
வார இறுதியில் சிக்கனத் திட்டங்களை செயல்படுத்த
ஐரோப்பிய மத்திய வங்கி அதிகாரிகள் அழுத்தத்தை அதிகரித்தனர்.
ஐரோப்பிய மத்திய வங்கி ஆளும் குழு உறுப்பினர் பாட்ரிக் ஹோனோஹன்
நிதிய ஒன்றியத்தின் நம்பகத்தன்மையை கிரேக்கம் விலகினால்
சேதப்படுத்தும் என்றாலும், அது
“தொழில்நுட்ப”
முறையில் சமாளிக்கப்பட முடியும் என்றார்.
கிரேக்க மக்களை மேலும் பொருளாதாரப் பேரழிவால்
அச்சுறுத்தும் வகையில், ஜேர்மன் மத்தியவங்கி தலைவரான ஜென்ஸ்
வைட்மான்
“[யூரோப்பகுதியில்
இருந்து] கிரேக்கம் விலகுவதின் விளைவு யூரோப்பகுதியின் பிற
நாடுகளுக்கு இன்னும் அதிக ஆபத்தைக் கொடுக்கும்”
என்று எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் அதிகாரிகள் இன்னும்
பிற அதிகாரிகள் யூரோப்பகுதி கிரேக்க விலகினால் வரும் விளைவைச்
சமாளிக்க முடியும் என வலியுறுத்தினாலும், இது குறித்தக்
கணிசமான சந்தேகங்கள் உள்ளன. போர்த்துக்கல் உடனடியாக இலக்கு
வைக்கப்படும் என்ற அச்சுறுத்தல் உள்ளது—வங்கிகளும்
நிதிய நிறுவனங்களும் தங்கள் பணத்தை அங்கிருந்து திரும்பப்
பெற்று ஜேர்மனிய வங்கிகளில் முதலிடுவர். இந்நிலை பின்னர்
ஸ்பெயின், இத்தாலியிலும் ஏற்படும்.
பிரிட்டனின் வணிக மந்திரி வின்ஸ் கேபிள்
இத்தொற்றைத் தடுக்கும் வகையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் வலுவாக
இருந்து ஸ்பெயின், இத்தாலிக்குப் பரவாமல் இருக்க வேண்டும் என
ஐக்கிய அரசு
“கட்டாயம்
நம்ப வேண்டும்”
என்று கூறினார். இல்லாவிடில் பிரிட்டிஷ் வணிகத்தில்
“பெரும்
தாக்கத்தை”
ஏற்படும். இத்தொற்று அத்துடன் நின்று விடாது,
உலக நெருக்கடியைத் ஆரம்பித்துவிடும். அது 2008 லெஹ்மன்
பிரதர்ஸ் சரிவினால் விளைந்த நெருக்கடியை விட மிக அதிகமாக
இருக்கும். |