World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Striking NLC contract workers must expand struggle—industrially and politically

இந்தியா: வேலைநிறுத்தத்தில் இறங்கியிருக்கும் NLC ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை தொழிற்துறைரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் விரிவுபடுத்த வேண்டும்

By Arun Kumar and Moses Rajkumar
15 May 2012

Back to screen version

இந்தியாவின் அரசுத்துறை மற்றும் தனியார்துறை இரண்டிலுமே ஒரேமாதிரியான நிர்ணயமாகியுள்ள ஒரு மலிவு-உழைப்பு மற்றும் ஒடுக்குமுறை முறைமையை இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) நிறுவனத்தில் வேலைசெய்து வரும் 14,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஏப்ரல் 21 அன்று முதல் நடத்தி வரும் வேலைநிறுத்தத்தின் மூலம் சவால் செய்து வருகின்றனர்.

இந்தச் சவாலுக்கு இந்திய ஆளும் உயரடுக்கும் அதன் ஸ்தாபனங்களும் அச்சுறுத்தலையும் வன்முறையையும் பதிலாக அளித்துள்ளது. சென்ற வாரத்தின் இறுதி வரையிலும் தமிழகத்தில் அமைந்திருக்கும் இந்த நிலக்கரி அகழ்வு மற்றும் மின் உற்பத்தி நிறுவனம் வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் நடத்துவதற்கு பிடிவாதமாக மறுத்து வந்தது. அதேசமயத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை நீக்கி விட்டு அவர்களுக்குப் பிரதியீடாக புதிய தொழிலாளர்களைப் பணியமர்த்தும்படி ஒப்பந்ததாரர்களுக்கு அழுத்தமளித்தது. 2010ல் 39 நாள் வேலைநிறுத்தத்திற்கு பின்னர் ஏற்பாடான ஒரு ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் கையெழுத்திட்டுள்ளதை காட்டி நீதிமன்றங்கள் இந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமானதாக அறிவித்துள்ளன. இதே ஒப்பந்தத்தை NLCம் ஒப்பந்ததாரர்களும் திட்டமிட்டபடி மீறி வந்துள்ளனர். தமிழகத்தின் மாநில ...தி.மு.கழக அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்துள்ளவர்கள் மீது போலிசை ஏவியுள்ளதை அடுத்து மொத்தம் மொத்தமாய் கைது நடவடிக்கைகள் அடுத்தடுத்து நடந்துள்ளன. மிகுந்த போர்க்குணத்துடன் போராடி வரும் பல தொழிலாளர்களையும் இந்த கைதுகளை சாக்காக வைத்து வேலையிலிருந்து நீக்க மத்திய அரசாங்கத்துக்கு சொந்தமான NLC நிறுவன நிர்வாகம் இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

இருப்பினும், சம ஊதியம் மற்றும் வேலைநிரந்தரம் ஆகியவற்றுக்கான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு, வறுமைப்பட்ட NLC ஒப்பந்தத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக போலியாக காட்டிக் கொள்கின்ற முதலாளித்துவ ஆதரவு தொழிற்சங்கங்கள் தான் மிகப்பெரும் முட்டுக்கட்டையாக அமைந்திருக்கின்றன.

ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தொழிற்சங்கக் கூட்டமைப்பான அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸில் (AITUC) இருந்து இந்தத் தொழிற்சங்கங்கள் எல்லாமே கடந்த இரண்டு வருடங்களில் தமிழகம் மற்றும் இந்தியாவெங்கிலும் வெடித்த பல பிற போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்களை எவ்வாறு தனிமைப்படுத்தினவோ, அதே வகையில் NLC தொழிலாளர்களது போராட்டத்தையும் திட்டமிட்டு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

வேலைநிறுத்தத்தில் தலையீடு செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கும் மாநில ...தி.மு.. அரசாங்கத்திற்கும் கோரிக்கைவிடுமாறு தொழிலாளர்களை இந்த AITUC, CPI, மற்றும் நாடாளுமன்றத்தில் அதன் சகோதர ஸ்ராலினிசக் கட்சியாக இருக்கும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஆகியவை வலியுறுத்திக் கொண்டுள்ளன. ஏதோ இந்த பெரு வணிக ஆதரவு அரசாங்கங்கள் எல்லாம் NLC நிர்வாகத்தை ஆதரிப்பதில் ஏற்கனவே ஆழமான ஈடுபாடு கொண்டிருக்காதவை போலவும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதற்கு முன்னிற்காதவை மற்றும் ஊக்கப்படுத்தாதவை போலவும் இவை இவ்வாறு கூறுகின்றன.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாய் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கும்படி நிரந்தரத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கும் கூட AITUC, CPM உடன் இணைந்த இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), மற்றும் பிற தொழிற்சங்கங்கள் தயாரில்லை.

வேலைநிறுத்தம் செய்து வரும் NLC தொழிலாளர்களிடம் இருந்து ஒப்பந்த உழைப்பு மற்றும் மலிவுக் கூலிக்கு எதிராகவும் தொழிலாளர் உரிமைகளுக்காகவும் தொழிலாள வர்க்கத்தின் தொழிற்துறைரீதியான மற்றும் அரசியல்ரீதியான தாக்குதலை வேண்டி கோரிக்கை விடுக்கப்படுமானால் அது இந்தியாவெங்கிலும் ஆதரவைப் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கடந்த இரண்டு தசாப்தகாலத்தில் NLC போன்ற பொதுத்துறை நிறுவனங்களாயினும் சரி மற்றும்  இந்தியாவின் புதிய உலகளாவிய ஒருங்கிணைப்பு பெற்ற வாகன உற்பத்தித்துறை மற்றும் மின்னணுத்  தொழிற்துறைகளாயினும் சரி, இவை ஒப்பந்த தொழிலாளர்களை திட்டமிட்டு விரிவுபடுத்திச் சென்றிருந்தன. அவற்றின் நோக்கமெல்லாம் ஊதியங்கள் மற்றும் நல உதவிகளைக் குறைத்து இலாபங்களைப் பெருக்குவது, தொழிலாளர்களை மேலதிகமாய் சுரண்டும் பொருட்டு அவர்களை பிளவுபடுத்தி வைப்பது, மற்றும் விருப்பம் போல் வளைத்துக் கொள்கின்றநெகிழ்வுத் தன்மை பெற்ற தொழிலாளர் படையை உருவாக்குவது இவை தான். வேலை விடயத்தில் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலைமை நிரந்தரத் தொழிலாளர்கள் போன்று தான் உள்ளது. ஒரே வித்தியாசம் இவர்களின் ஊதியங்கள்  மிகக் குறைந்ததாய் இருக்கும். அத்துடன் நிரந்தரத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச  பாதுகாப்புகளும் கூட இவர்களுக்குக் கிடைக்காது.

NLC இல் வேலை பார்க்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களில் பலரும் பதினைந்து வருடங்களாக, இருபது வருடங்களாக, சில சந்தர்ப்பங்களில் முப்பது வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்தியாவின் மிகுந்த இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான NLC இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் சிலருக்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு அளிக்கும் ஊதியத்தில் 10 சதவீத அளவே இருக்கக் கூடிய மிகக் குறைந்த ஊதியத்தையும் கூட வழங்கி வருகிறது.

சம வேலைக்கு சம ஊதியம் என்பதும், வேலை நிரந்தரம் என்பதும் தான் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான், BYD எலெக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் மற்றும் ஹரியானா மாநிலத்தின் மானேசரில் இருக்கும்  மாருதி சுசுகி கார் பாகங்கள் ஒன்றுசேர்ப்பு தொழிற்சாலை உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகளில் சமீபத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்ளிருப்புப் போராட்டங்களின் பிரதான அல்லது மையப் பிரச்சினையாக இருந்து வந்திருக்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுமே, ஒப்பந்தத் தொழிலாளர்களைநிரந்தரமாக்கக் கோரும் கோரிக்கையை முதலாளிகள், அரசாங்கம், போலிஸ்  மற்றும் நீதிமன்றங்களின் உதவியுடன் கடுமையாக எதிர்த்து வந்திருக்கின்றனர். சொல்லப் போனால், நிரந்தரத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதையும் தொழிற்சாலைகளை மூடுவதையும் எளிதாக்கும் வகையில், அதாவதுநிரந்தரத் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளையும் மோசமாக சுரண்டப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலைக்கு இறக்குகின்ற வகையில், தொழிலாளர்  சட்டங்களில்சீர்திருத்தம் செய்ய பெரு வணிகங்கள் வெகுநாட்களாகவே மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தமளித்து வருகின்றன.

ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்துவதற்கு எதிரான ஒரு உண்மையான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை பெருந்திரளாய் அணிதிரட்டுவது அவசியம். அதாவது ஒட்டுமொத்த ஆளும்  ஸ்தாபகத்துடன், அதன் நீதிமன்றங்களுடன் மற்றும் போலிசுடன் நேருக்கு நேர் மோத வேண்டியிருக்கும்  என்பதை தொழிற்சங்கங்கள் நன்கு உணர்ந்துள்ளன. அரசாங்கம் மற்றும் முதலாளிகள் வடிவமைக்கின்ற  கூட்டு பேர முறைமையை அமுல்படுத்துபவர்கள் என்ற அரசு அங்கீகாரத்துடனான பாத்திரத்தை வகித்து முதலாளித்துவ ஒழுங்கின் பாதுகாவலர்களாய் திகழும் இந்த தொழிற்சங்கங்கள்  அத்தகையதொரு அணிதிரட்டப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்கு தீர்மானத்துடன் உள்ளன. NLC வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புப்போராட்டத்தின் தாக்குமுனையாக மாறுவதைக் காட்டிலும் அது தோற்கடிக்கப்படுவதைத் தான் அவை அதிகம் விரும்புகின்றன.

2010 இல், நிரந்தரத் தொழிலாளர்களும் போராட்டத்தில் இழுக்கப்பட ஆரம்பிக்கின்ற அந்த சரியான நேரம் பார்த்து இவை NLC ஒப்பந்தத் தொழிலாளர்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்கி விட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்த தொழிற்சங்கம் போராட்ட அடகுவைப்பைத் திணிப்பதில் தோல்வியுற்றதற்கு பின்னர், AITUC, நாள் கூலியில் வெறும் 60 ரூபாய் (1.15 அமெரிக்க டாலர் அற்பமான அதிகரிப்புக்குப் பிரதிபலனாக 2015 ஆம் ஆண்டு வரை மேலதிகமான ஊதிய அதிகரிப்புக் கோரிக்கைகளை வைப்பதில்லை என்பதான ஒரு வாக்குறுதியை அளித்து இந்தப் போராட்டத்தைக் கைவிட அழைப்பு  விடுப்பதற்கு ஒப்புக் கொண்டது.

CPI மற்றும் CPM ஆகியவை இந்திய ஆளும்வர்க்கத்தின் கட்சிகளாகும். அவை முதலாளித்துவ ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்கு கடமைப்பாடு கொண்டவையாய் செயல்பட்டு வருகின்றன. இக்கட்சிகளும் இவற்றின் இடது முன்னணியும் மத்தியில் அடுத்தடுத்து வந்த பெரு வணிக அரசாங்கங்களை முட்டுக் கொடுத்து வந்திருக்கின்றன. இப்போது நடந்து வரும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு 2004-08 வரையான காலத்தில் ஆதரவு கொடுத்து வந்ததும் இதில் அடங்கும். மே 2011 வரை இக்கட்சிகள் ஆட்சி அதிகாரம் அமைத்திருந்ததான மேற்கு வங்காளம்  மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் இவர்கள், சமூகச் செலவினங்களை வெட்டியது, தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்தது, மற்றும் பெரு வணிகங்களின்  பிரம்மாண்டத் திட்டங்களுக்காய் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பலவந்தமாய்ப் பறித்தது எனமுதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைகள் என்று அவர்களே அழைத்த ஒன்றையே பின்பற்றினர். தமிழ்நாட்டில் CPI மற்றும் CPM ஆகிய இருகட்சிகளும் தி.மு. மற்றும் ...தி.மு. ஆகிய இரு கட்சிகளைத் தான் மாறி மாறி ஆதரிக்கப் போட்டி போட்டு வந்திருக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை பெரு வணிகக் கட்சிகளுடனான தங்களின் பிற்போக்கான  கூட்டணிகளுக்கு திட்டமிட்டு இவை அடிபணியச் செய்து வந்திருக்கின்றன. 2010 நவம்பரில் BYD  எலெக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் நடத்திய வேலைநிறுத்தத்தை முடிவுக்குக்  கொண்டு வர வலியுறுத்திய ஸ்ராலினிசத் தலைமையிலான CITU அதற்குக் கூறிய காரணம் தமிழ்நாட்டின் வலதுசாரி திமுக அரசாங்கம் ...தி.மு. அரசாங்கத்தால் மாற்றப்படும்போது (இந்த ...தி.மு. கட்சி சென்ற முறை ஆட்சியில் இருந்த சமயத்தில் தான்  பெருந்திரள் கைதுகளையும் அதிகமான துப்பாக்கிச் சூடுகளையும் பயன்படுத்தி அரசாங்க ஊழியர்களின்  வேலைநிறுத்தத்தை உடைத்திருந்தது நிலைமை  சரியாகி விடும் என்பது தான். CPI மற்றும் CPM உடன் தேர்தல் கூட்டணி அமைத்து  சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று விட்ட ...தி.மு. இப்போது வேலைநிறுத்தம் செய்து வரும் NLC தொழிலாளர்களுக்கு எதிராக போலிஸை ஏவி வருகிறது.

தமிழக பிராந்திய முதலாளித்துவ உயரடுக்கின் கட்சிகளுடன் CPI செய்து வரும் கைப்புரட்டு  வேலைகளின் ஒரு பகுதியாக AITUC, NLC இல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இம்மாநிலத்திற்கு மட்டுமே பிரத்யேகமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு பிற்போக்குத்தனமான கோரிக்கையை,  NLC தொழிலாளர்களின் மேல் திணித்திருக்கிறது.

NLC தொழிலாளர்கள் வெற்றி பெற வேண்டுமாயின், அவர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிச இடது கட்சிகளிடம் இருந்து அரசியல்ரீதியாகவும் அமைப்புரீதியாகவும் கட்டாயம் முறித்துக் கொண்டு ஒப்பந்தத் தொழிலாளர் முறை மற்றும் வறுமைநிலை ஊதியங்கள்  ஆகியவற்றுக்கு எதிராய் ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கம் நடத்தும் தாக்குதலுக்கு ஈட்டிமுனையாய் தங்களது போராட்டத்தை மாற்ற வேண்டும். வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்ளிருப்புப் போராட்டங்கள் உள்ளிட்ட போர்க்குணம் பெற்ற தொழிற்சாலை நடவடிக்கைகள் எல்லாம், ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் பின்னால் ஏழை விவசாயிகள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களையும் அணிதிரட்டும்  நோக்கத்துடனான தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் தாக்குதலை அபிவிருத்தி செய்வதுடன் பிணைக்கப்பட வேண்டும். அத்தகையதொரு அரசாங்கம் முக்கியமான பொருளாதார நெம்புகோலை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கும். அதன்மூலம் பொருளாதார  வாழ்க்கையானது ஒரு மிகச்சிறிய பெருநிறுவன உயரடுக்கின் இலாபங்களை உற்பத்தி செய்வதற்காய் அல்லாமல் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதான விதத்தில் ஒழுங்கமைப்பு செய்யப்பட முடியும்.