WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஐரோப்பிய
“வளர்ச்சி
ஒப்பந்த”
மோசடி
By Nick Beams
8 May 2012
use
this version to print | Send
feedback
ஐரோப்பாவில் மோசமடைந்து செல்லும்
பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியானது
[நிதிச்
சந்தைகளால் உத்தரவிடப்படும் சிக்கன நடவடிக்கைகளினால் விளையும் அதிகரித்த
வேலைவாய்ப்பின்மை மற்றும் ஆழமடையும் மந்தநிலை ஆகியவற்றால் இது குறிக்கப்படுகிறது]
அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் பிரிவுகள் ஒரு
“வளர்ச்சி
ஒப்பந்தத்திற்கு”
துவக்கமளிக்க அழைப்பு விடுவதற்குத் தூண்டியுள்ளது.
ஃபைனான்சியல் டைம்ஸ்
”வளர்ச்சிக்கான
ஒரு ஒப்பந்தம் ஐரோப்பாவிற்கு உயிர்நாடியானதாகும்”என்ற
தலைப்பில் சென்ற சனிக்கிழமை வெளியான ஒரு தலையங்கத்தில்
”கூடுதலான
வளர்ச்சி நோக்குநிலைக் கொள்கைகளுக்கு ஆதரவான சமீபத்திய ஆதரவு அலையை”
சுட்டிக் காட்டியிருந்தது.
கிரேக்க மற்றும் பிரெஞ்சுத் தேர்தல்களில் யார் வெல்வார் என்பதல்ல
மாறாக
“இக்கண்டத்தை
வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் திருப்புவது எப்படி”
என்பது தான் மையப் பிரச்சினையாக இருந்தது என்று அது அறிவித்தது.
பிரெஞ்சுத் தேர்தலை ஒட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும்
நிதி விவகாரங்களுக்கான ஆணையர் ஒலி ரேன்,
“நிதித்
திண்ணமாக்கல்”
அவசியம் என்கிற அதே சமயத்தில் அது
“வளர்ச்சிக்கு
நட்பான”
வழியில் செய்யப்படுவது அவசியம் என்று அறிவித்தார்.
பதவியேற்கவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்
-
இவர் ஐரோப்பிய நிதிய ஒப்பந்தத்தை தான் திருத்த விரும்புவதாய்
தெரிவித்திருந்தவர்
-
தனது ஆதரவாளர்களிடம் கூறுகையில்,
தான் தேர்ந்தெடுக்கப்பட்டமை ஐரோப்பாவுக்கு நம்பிக்கை
அளித்திருப்பதாகவும்
“சிக்கன
நடவடிக்கை என்பது தவிர்க்கவியலாததாக”
ஆக அவசியமில்லை என்றும் கூறினார்.
பெருகும் கூட்டக் குரலாக ஆகியிருக்கும் இதில் வரவிருக்கும்
நாட்களில் மேலும் பலரும் தங்கள் குரல்களைக் கொடுக்கவிருக்கிறார்கள் என்பதில்
சந்தேகமில்லை.
ஆனால் இந்த அழைப்புகள் எல்லாம் நிதி மற்றும் அரசியல் உயரடுக்கின்
தரப்பில் ஒரு தலைகீழ் மாற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ மற்றும் சமூகப்
பேரழிவைக் கொண்டு வருகின்ற சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டங்களை அது கைவிடும் என்றோ
நினைத்து எவரொருவரும் ஏமாந்து விடக் கூடாது.
“வளர்ச்சி
ஒப்பந்தம்”
என்றழைக்கப்படுவதான எதுவும் வேலைகள் மற்றும் சமூக நிலைமைகளை மீட்சி
செய்யும் நோக்கத்துடம் இருக்கப் போவதில்லை.
மாறாக வணிகங்களுக்கு கூடுதல் இலாபகரமான நிலைமைகளை
-
எல்லாவற்றுக்கும் மேலாய் உண்மை ஊதியங்களைக் குறைப்பதன் மூலமும் வேலை
நிலைமைகளின் மீது ஆழமான தாக்குதல்களுக்குத் துவக்கமளிப்பதன் மூலமும்
-
உருவாக்குவது தான் அதன் மைய இலக்காக இருக்கும்.
ஒரு வளர்ச்சி ஒப்பந்தத்திற்கான அழைப்புகள் எழுவது சிக்கன நடவடிக்கை
வேலைத்திட்டங்களின் சமூகப் பாதிப்புகளினால் கவலைப்பட்டு அல்ல மாறாக யூரோ மண்டலம்
தொடர்ச்சியாக தேக்கநிலையில் இருப்பதென்பது போட்டி நாடுகளுக்கு எதிராய் சரிவதென்றாகி
விடுகிறது என்பதை உணர்ந்து கொண்டதால் தான்.
நெருக்கடி தீவிரப்பட்டு வருவதைத் தான் சமீபத்தியப் பொருளாதாரப்
புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
ஏனென்றால் நெருக்கடியானது சுற்றுப்புற நாடுகள் என்று
அழைக்கப்படுவனவற்றில் இருந்து ஐரோப்பாவின் வலிமையான பொருளாதாரங்களுக்குப் பரவிக்
கொண்டிருக்கிறது.
17
உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய மண்டலத்தில் வேலைவாய்ப்பின்மை
விகிதமானது மார்ச் மாதத்தில்
10.9
சதவீதத்தை எட்டியது.
1999
ஆம் ஆண்டில் யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில்
இதுவே மிக உயரிய அளவாகும்.
சிக்கன நடவடிக்கைகளின் இலக்காக இருந்து வந்திருக்கக் கூடிய ஸ்பெயின்
போன்ற நாடுகளில் தான் இந்த அதிகரிப்பு அதிகமாய் நிகழ்ந்துள்ளது.
ஸ்பெயினில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏறக்குறைய
25
சதவிகிதமாய் உள்ளது.
இளைஞர் வேலைவாய்ப்பின்மை
50
சதவீதத்திற்கும் அதிகமாய் இருக்கிறது.
மறுஇணைவுக்குப் பிறகு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதன் மிகத் தாழ்ந்த
மட்டத்தை எட்டியிருந்த ஜேர்மனியில் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை
19,000
வரை உயர்வு கண்டிருக்கிறது.
பொருளாதாரச் சுருக்கம் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
விற்பனை,
வேலைவாய்ப்பு,
பங்குச் சந்தைக் குறியீட்டு அளவுகள் மற்றும் விலைகள் ஆகியவற்றை
அளவிடும் ஐரோப்பிய மண்டலத்தின் மாதாந்திரக் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு முந்தைய
மாதத்தில்
47.7
ஆக இருந்ததில் இருந்து ஏப்ரல் மாதத்தில்
45.9
ஆகச் சரிந்திருந்தது.
50
புள்ளிகளுக்குக் கீழான எந்த அளவும் பொருளாதாரச் சுருக்கத்தைக்
குறிக்கிறது.
மந்தநிலை என்பதற்கான பொதுவான வரையறையாக இருக்கும் இரண்டு
காலாண்டுகளுக்கு அல்லது அதற்கும் அதிகமான காலத்திற்கு எதிர்மறை வளர்ச்சி என்பதை
கிரீஸ்,
ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து உள்ளிட மொத்தம் எட்டு யூரோமண்டல
நாடுகள் அனுபவம் கண்டுள்ளன.
முதல் காலாண்டில் பெல்ஜியப் பொருளாதாரத்தின் சோகையான
0.3
சதவீத வளர்ச்சியை
”பொருளாதார
விரிவாக்கம் சாத்தியம்”
என்பதற்கான அறிகுறியாக ஃபைனான்சியல் டைம்ஸின் ஒரு அறிக்கை சுட்டிக்
காட்டியது என்றால் அதுவே இக்கண்டமெங்கிலும் நிலவுகின்ற பொருளாதாரத்
தளர்ச்சிநிலைக்கு ஒரு அளவீடாகக் கொள்ளலாம்.
ஐரோப்பிய வளர்ச்சிக்கான உரத்த அழைப்புகளில் சில அமெரிக்காவில்
இருந்து வந்திருக்கின்றன.
செலவின வெட்டுகளின் எதிர்மறையான பாதிப்பு குறித்தும்
“வளர்ச்சியைக்
கொல்லும் சிக்கன-நடவடிக்கையின்
எதிர்மறைச் சுருள் ஒன்று தன்னைத் தானே வலுப்படுத்திக் கொள்வது”பற்றியும்
அமெரிக்க கருவூலச் செயலரான டிமோதி கீத்னர் எச்சரித்திருக்கிறார்.
இதேபோல் முன்னாள் அமெரிக்கக் கருவூலச் செயலரான லாரன்ஸ் சம்மர்ஸ்
நடப்பு யூரோமண்டல வேலைத்திட்டம் ஒரு தோல்வி என்று பிரகடனப்படுத்தியுள்ளதோடு
வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்புகள் எல்லாமே முழுவதும் சொந்த நலன் கருதிக்
கூறப்படுபவையே.
ஐரோப்பிய வீழ்ச்சி தொடர்வது அமெரிக்கப் பொருளாதாரத்தையும் நிதி
அமைப்புமுறையையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதான அமெரிக்க அச்சங்களை இவை
பிரதிபலிக்கின்றன.
ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைகளின் பாதிப்புகள் குறித்து
எச்சரிக்கும் கீத்னர் தான்,
ஆறு தொடர்ந்த காலாண்டுகளுக்கு மொத்த அரசாங்கச் செலவினங்களிலும்
வெட்டுகளைச் செய்து கணிசமான வேலை இழப்புகளை விளைவித்திருக்கக் கூடிய கொள்கைகளை
நடத்தியிருக்கும் ஒபாமா நிர்வாகத்தில் ஒரு முக்கியமான அதிகாரியாக இருக்கிறார்.
பெரும் ஐரோப்பிய வளர்ச்சி கோரி ஃபைனான்சியல் டைம்ஸ் விடுகின்ற
அழைப்புகளிலும் இதே தேசிய சுய-நலன்
தான் வேலை செய்கிறது.
“சிக்கன
நடவடிக்கைகளின் சரியான வகைகள்”
என்று அது அழைக்கும் ஒன்றைப் பற்றிய அதன் சமீபத்திய தலையங்கத்தில்,
ஃபைனான்சியல் டைம்ஸ் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதி மூலோபாயத்திற்கு
அதன் ஆதரவை அறிவித்தது.
அதேசமயத்தில் யூரோமண்டலத்திலும் அமெரிக்காவிலும் வெட்டுகளுக்கு
“மிதமிஞ்சிய
உத்வேகம்”
இருப்பதை அது விமர்சனம் செய்தது.
இலண்டன் மாநகரத்தில் இருக்கும் நிதி நலன்களின் செய்தித் தொடர்பாளராக
FT
இருக்கிறது என்கிற உண்மையில் தான் இந்த முரண்பாடான நிலைக்கான
விளக்கம் இருக்கிறது.
உலகின் எஞ்சிய பகுதிகளில் எல்லாம் அவர்கள் அதிகமான வளர்ச்சியைக் காண
விரும்புவார்கள் ஆனால் இங்கிலாந்தில்
“நிதியியல்
மெத்தன”த்தை
எதிர்ப்பார்கள் இல்லாவிட்டால் அது பிரிட்டிஷ் பவுண்டை பலவீனம் செய்து அவர்களது
செயல்பாடுகளைப் பாதிக்கும்.
யூரோமண்டலக் கொள்கைகளின் மையமாக வளர்ச்சியை நிறுத்த வேண்டியதன்
அவசியம் பற்றி ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் மரியோ ட்ராகி விடுத்திருக்கும்
சமீபத்திய அறிக்கை சிக்கன நடவடிக்கைச் செயல்பாடுகளைத் தலைகீழாக்கும் நோக்கத்துடன்
அல்ல.
பதிலாய்,
ஐரோப்பாவை சர்வதேசரீதியாக கூடுதல் போட்டித்திறனுடையதாக்கும்
பொருட்டு ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது ஒரு தாக்குதல் தொடுப்பதற்கான
அழைப்பே அது.
வழிகாட்டுதற்கு அமெரிக்காவையும் ஒபாமா நிர்வாகம்,
குறிப்பாக வாகன உற்பத்தித் துறையில்,
செய்திருக்கக் கூடிய
“மறுசீரமைப்பையும்”
எதிர்நோக்குகின்ற ஐரோப்பிய கொள்கை உருவாக்குநர்களின் நிலையையே
ட்ராகி பிரதிபலிக்கிறார்.
அமெரிக்காவை உலகின் சில மலிவு உழைப்புப் பிராந்தியங்களுடன்
போட்டியிடும் திறம்பெற்றதாக இப்போது ஆக்கியிருக்கக் கூடிய அளவுக்கு,
இந்த மறுசீரமைப்பானது அமெரிக்காவின் உற்பத்தித் துறை எங்கிலும்
ஊதியங்களிலும் வேலைநிலைமைகளிலும் ஒரு கீழ்நோக்கிய நகர்வை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் உண்மை ஊதியங்கள் வீழ்ச்சி கண்டிருக்கும் அதே
சமயத்தில்,
2007
டிசம்பர்,
அதாவது மந்தநிலையின் உத்தியோகப்பூர்வமான ஆரம்ப காலத்தில்,
எட்டப்பட்ட அதே மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி இப்போது
5
மில்லியன் குறைவான தொழிலாளர்களது எண்ணிக்கையைக் கொண்டே
எட்டப்பட்டிருக்கிற அளவுக்கு அதன் உற்பத்தித் திறனானது அதிகரிப்பு கண்டுள்ளது.
ட்ராகியின்
“வளர்ச்சித்
தொகுப்பு”
யோசனை என்பது அமெரிக்க
“மாதிரியை”
விஞ்சும் முயற்சியை நோக்கமாய்க் கொண்டது.
யூரோமண்டலமெங்கும்
”நெகிழ்வுத்தன்மை”
மற்றும்
“நகர்நிலை”யை
மேம்படுத்தும் பொருட்டு
“தொழிலாளர்
சீர்திருத்தங்களுடன்”
இணைந்து
”கட்டமைப்புச்
சீர்திருத்தங்களுக்கான”
அவசியத்தை இது சுட்டிக் காட்டுகிறது.
இவை யாவும் முந்தைய வேலை நிலைமைகளை ஒழிப்பதற்கும்,
முதலாளிகள் இஷ்டம் போல் வேலைக்கு எடுப்பது மற்றும் நீக்குவது
அத்துடன் அமெரிக்காவில் இருப்பது போன்ற ஈரடுக்கு ஊதிய அமைப்புமுறைகளை
அமல்படுத்துவது ஆகியவற்றுக்கு இருக்கக் கூடிய கட்டுப்பாடுகளை இல்லாமல் செய்வதற்கும்
கூறப்படுகின்ற சங்கேத வார்த்தைகளே.
எந்த
“வளர்ச்சி
ஒப்பந்தமும்”
பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான
பாதையைத் திறக்கப் போவதில்லை மாறாக தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையை மேலும்
கீழிறக்கும் நோக்கத்துடன் பொருளாதார மற்றும் சமூக உறவுகளை மேலும்
“மறுசீரமைப்பு”
செய்வதைத் தான் குறித்து நிற்கும்.
தொழிலாள வர்க்கம்,
வங்கிகள் மற்றும் நாடுகடந்த பெருநிறுவனங்களின் நலன்களைக் காட்டிலும்
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்ட சோசலிச அடித்தளங்களின்
மீது ஒட்டுமொத்த ஐரோப்பியப் பொருளாதாரத்தையும் மறுசீரமைப்பு செய்வதை நோக்கமாய்க்
கொண்ட தனது சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தின் மூலம் பதிலிறுப்பு செய்தாக வேண்டும். |