WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
கிரேக்கத்தில் கூட்டணி அரசாங்கம் அமைப்பது
பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன
By Christoph Dreier
12 May 2012
use
this version to print | Send
feedback
சிக்கன
நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசிய கட்சிகளுக்குக் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற
தேர்தல்களில் மிகப்பெரிய பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ள நிலையில் ஏதென்ஸில்
கூட்டணி அரசு பற்றிய பேச்சுக்கள் நடைபெறுகின்றன. இப்பேச்சுவார்த்தைகளின் நோக்கம்
தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருக்கும் பாரிய எதிர்ப்பிற்கு எதிராக ஐரோப்பிய
ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளை செயல்படுத்தும் திறனுடைய ஒரு அரசியல்
அமைப்புமுறையை கண்டுபிடிப்பதுதான்.
சமீபத்திய
ஆண்டுகளின் முன்னோடியில்லாத சமூகநலச் செலவு வெட்டுக்களைச் சுமத்துவதை இயக்கிய
முன்னாள் ஆளும் கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சி-
PASOK-
பழைமைவாத புதிய ஜனநாயக கட்சி -ND-
ஆகியவை தேர்தலில் பாதிக்கும் மேலான தங்கள் ஆதரவாளர்களை இழந்து விட்டன.
இதற்கு
மாறாக, தீவிர இடது கூட்டணியான
(SYRIZA)
மற்றும் அதிலிருந்து
பிரிந்த
Dekocratic Left (DIMAR)
ஆகியவை
தேர்தல் பிரச்சாரத்தின்போது சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து, பெற்ற வாக்குகளில்
தங்கள் பங்கை நான்கு மடங்கிற்கும் மேலாக உயர்த்திக் கொண்டன.
வெட்டுக்களுக்கு எதிர்ப்பு என்ற அடிப்படையில் அவை தேர்ந்தெடுக்கப்பட்டாலும்கூட, இரு
கட்சிகளும் நாடு ஐரோப்பிய ஒன்றியம், யூரோப்பகுதி ஆகியவற்றில்
“எப்படியும்”
தொடர வேண்டும் என
வலியுறுத்துகின்றன. வியாழன் அன்று சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ், அமெரிக்க
தொலைக்காட்சி இணையமான
CNBC
யிடம் கிரேக்கம் ஐரோப்பிய
ஒன்றியத்தில் இருந்து பின்வாங்குவது என்பது
“பேரழிவைத்
தரும்”,
“என்னால்
இயன்றது அனைத்தையும்”
செய்து அதைத் தடுப்பேன் என்றார்.
உண்மையில்
இதன் பொருள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைகள் செயல்படுத்தப்படும் என்பதுதான். ஐரோப்பிய
ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பியப் பாராளுமன்றம் ஆகியவற்றின்
பிரதிநிதிகள் பேச்சுக்களின் கடைசிச் சுற்றுக்கு முன்பே,
கிரேக்கக் கட்சிகளை சிக்கன நடவடிக்கைகளில் இருந்து விலகி புதிய
அரசாங்கம் தைரியமாகச் செயல்பட்டால், கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து தூக்கி
எறியப்படும் என்று அச்சுறுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை பற்றிய
மறுபேச்சுவார்த்தைக்கே இடமில்லை.
இதே
செய்திதான் கடந்த சில நாட்களாக இன்னும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜேர்மனியின்
வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்லே பகிரங்கமாக பின்வருமாறு அறிவித்தார்:
“ஒப்புக்
கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் கைவிடப்பட்டால், உதவி வழங்குவது என்பது இனி இயலாத
செயலாகிவிடும்.”
ஜேர்மனியின்
நிதிமந்திரி வொல்ப்காங் ஷொய்பிள கிரேக்கம் வெளியேறினால் அதற்கேற்ப போதுமான
உறுதிப்பாட்டிற்கான வழிமுறைகளை யூரோப்பகுதி தோற்றுவித்துள்ளதாக கூறினார். ஒப்புக்
கொள்ளப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு கிரேக்கத்திற்கு அவர்
அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மனிய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகியான மைக்கேல்
கெம்மரும் யூரோப் பகுதி உறுப்பினர்களின் எண்ணிக்கைக் குறைப்பு சாத்தியமானது
என்றார்.
ESFS
எனப்படும் யூரோ மீட்பு நிதி இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒப்புக்
கொள்ளப்பட்ட 5.2 பில்லியன் யூரோக்களில் (அமெரிக்க$6.8 பில்லியனில்) ஒரு
பகுதியைத்தான் கிரேக்கத்திற்கு மாற்றியுள்ளது. எஞ்சிய பணமான 1 பில்லியன் யூரோவை
ஜூன் மாதம் வரை இது நிறுத்தி வைத்துள்ளது. நிதியத்தின் தலைவரான க்ளாஸ் ரெக்லிங்
உடைய கருத்துப்படி, பிந்தைய பணம் கொடுக்கப்படுவது என்பது ஐரோப்பிய மத்திய வங்கி,
ஐரோப்பிய ஆணையம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய முக்கூட்டின் உடன்பாட்டின்
படியே நடக்கும் என்றார்.
இச்சூழலில்தான் இப்பொழுது கிரேக்கத்தில் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதற்கான
பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
திங்கள்
அன்று
ND
உடைய தலைவர் அன்டோனிஸ்
சமாரஸ் திடீரென்ற விவாதங்களுக்குப் பின் தன்னால் ஒரு கூட்டணியை அமைக்க முடியவில்லை
என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து அரசாங்கம் அமைக்கும் பொறுப்பு இரண்டாம் இடத்தில்
இருக்கும் சிரிசா கட்சி, அதன் தலைவர் அலெக்சிஸ் டிசிப்ரஸ் இடம் வந்தது. புதன் மாலை
அவர் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தானும் வெற்றி பெற முடியவில்லை என்று
அறிவித்தார். டிசிப்ரஸ்
DIMAR,
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
வலதுசாரி தேசிவாத
Independent Greeks
மற்றும்
PASOK, ND
ஆகியவற்றுடன் பேச்சுக்களை நடத்தினார்.
வியாழன்
அன்று, அரசாங்கம் அமைக்கும் பொறுப்பு தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்த
PASOK
உடைய தலைவர்
எவெஞ்சலோஸிடம் கொடுக்கப்பட்டது. அவருடைய நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்
இருக்கவேண்டும் என்ற தீர்மானத்தை அறிவித்துள்ள நான்கு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி
அமைப்பதாகும்.
கணக்குப்படி
SYRIZA
இல்லாமல்
PASOK, ND, DIMAR
ஆகியவை ஒரு கூட்டணி
அமைப்பது பெரும்பான்மை அரசாங்கம் அமைக்கப் போதுமானது ஆகும். இவை மொத்தம் உள்ள 300
இடங்களில் 168 இடங்களைக் கொண்டுள்ளன. வெள்ளியன்று
DIMAR
உடைய தலைவர் போடிஸ்
கௌவெலிஸ் முதலில் அத்தகைய கூட்டணிக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் சில
மணிநேரத்திற்குள் பின் வாங்கி அவர் சிரிசாவுடன் சேர்ந்துதான் அத்தகைய கூட்டணியில்
சேரமுடியும் என அறிவித்து விட்டார்.
DIMAR
இல் இப்பிரச்சினை குறித்து பிளவுகள் உள்ளன. இது பின்னர் ஒரு உடைவை ஏற்படுத்திவிட
முடியும்.
வெள்ளியன்று
சமரஸும் ஒரு உறுதியான அரசாங்கம் அமைப்பதில் சிரிசா பங்கு பெறுவதைத் தான்
வரவேற்பதாகக் கூறினார்.
“ஓர்
உறுதியான அரசாங்கம் இருக்க வேண்டும்”
என்று கூறிய அவர்
இம்முடிவிற்குப் பொறுப்பு இப்பொழுது
“அவர்கள்
கைகளில் உள்ளது”
என்றார். கிரேக்க ஆளும் உயரடுக்கின் பரந்த பிரிவுகள் சிக்கன
நடவடிக்கைகளைத் தொடர சிரிசாவின் ஒத்துழைப்பு தேவை என உணர்கின்றனர் என்பது
வெளிப்படை.
ஐரோப்பிய
ஒன்றிய நிறுவனங்களுக்கு,
அரசாங்கத்தில் தான்
பங்குபெறுவதற்கு வழிவகுக்குமாறு டிசிப்ரஸ் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்
நிபந்தனைகள் மறுபேச்சுவார்த்தைகளுக்கு உட்பட வேண்டும் என வாதிட்டுள்ளார்.
“எங்கள்
நாட்டின் பொருளாதார, சமூக உறுதிப்பாட்டை அவசரமாகக் பாதுகாக்கும் கட்டாயத்தில்
நாங்கள் உள்ளோம்.”
என்று அவர்
எழுதியுள்ளார். முந்தைய கொள்கை மந்தநிலையை அதிகரித்து, தேசியக்கடனையும்
பெருக்கிவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தேவையான அனைத்து அரசியல் ஆரம்ப
முயற்சியையும் எடுத்து
“வெட்டுக்கள்,
மந்த நிலைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும்”
என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு
நடைபெறாவிடில்,
“கிரேக்கத்தின்
சமூக ஒழுங்கு, உறுதிப்பாடு”
மட்டும் ஆபத்திற்கு
உட்படவில்லை, மாறாக கிரேக்கம்
“முழு
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியற்ற தன்மைக்கு ஓர் ஆதாரம் ஆகிவிடும்”
என்று அவர்
கூறியுள்ளார். நெருக்கடி என்பது ஐரோப்பா பற்றியது, எனவே ஒரு ஐரோப்பிய
மட்டத்தில்தான் தீர்க்கப்பட முடியும்”
என்று அவர் வாதிட்டுள்ளார்.
டிசிபிரஸ்
தன்னுடைய கடிதத்தில் உறுதியான கோரிக்கைகளை எதையும் தவிர்த்துவிட்டார். ஐரோப்பா
முழுவதும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை இல்லாதொழிப்பதில்
கொண்டிருக்கும் பங்கு என்ற நிலையில், இக்கடிதம் திட்டத்தில் தானும் பங்கு கொள்ளுவது
என்பதைத்தான் பிரதிபலிக்கிறது.
சிரிசா ஒரு
ND-PASOK
கூட்டணிக்கு ஓர் இடது மறைப்பு என்பதையும் விட மிக முக்கியமான பங்கைக் கொள்ள
முடியும். அத்தகைய கூட்டணி கட்டமைப்பதில் தோல்வி ஏற்பட்டால், புதிய தேர்தல்கள் ஒரு
மாதத்திற்குள் நடைபெறும். சமீபத்தியக் கருத்துக் கணிப்புக்கள் சிரிசாவிற்கு வெற்றி,
வாக்காளர்களில் 28% ஆதரவு உண்டு எனக் கணித்துள்ளன; இது கட்சிக்கு 128 இடங்களைக்
கொடுக்கும். அதில் முதல் இடத்தில் வருவதற்காக கிடைக்கும் வெகுமதியான 50 மேலதிக
இடங்களும் அடங்கும்.
ND
இரண்டாம் இடத்தைப் பெறும் 20% வாக்குகளுடன் (57 இடங்கள்), இதைத்தொடர்ந்து
PASOK (13%, 36
இடங்களையும்),
Independent Greeks
(10%, 29
இடங்களையும்),
KKE (7%, 20
இடங்களையும்), பாசிஸ்ட்டுக்கள் (6%, 16 இடங்களையும்) இறுதியில்
DIMAR
(5%,
14
இடங்களையும்) பெறும்.
நிலைமை
குறிப்பிடத்தக்களவு
நிலையற்றதாக
உள்ளபோது, இத்தகைய கருத்துக் கணிப்புக்கள் எச்சரிக்கை உணர்வுடன்தான்
கையாளப்பட வேண்டும். இவை புதிய தேர்தல்கள் ஓரிரு சிறு கூட்டணிப் பங்காளிகளுடன்
சிரிசாவின் தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்படலாம் என்பதைக் குறிப்பிடுகின்றன. இது
டிசிப்ரஸின் சிக்கன எதிர்ப்பு நிலைப்பாடுகளை உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தும். |