World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: PSA Aulnay unions admit no solidarity action planned to defend jobs

பிரான்ஸ்: PSA Aulnay தொழிற்சங்கங்கள் வேலைகளைப் பாதுகாக்க ஐக்கியத்திற்கான நடவடிக்கை ஏதும் திட்டமிடப்படவில்லை என ஒப்புக் கொள்கின்றன

By Antoine Lerougetel
11 May 2012

Back to screen version

கடந்த வெள்ளியன்று அமியானில் உள்ள Goodyear ஆலையின் தொழிலாளர்கள் பெருமன்றக் கூட்டத்தில், Aulnay-sous-Bois ல் உள்ள PSA கார்த் தயாரிப்பு ஆலையில், ஸ்ராலினிச CGT ன் (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) செயலர் Jean-Pierre Mercier உரையாற்றினார்.

Goodyear டயர் தயாரிப்பு ஆலை CGT செயலாளர் Mikaël Wamen அழைப்பின் பேரில் Mercier வந்திருந்தார்; Mikaël Wamen டயர் தயாரிப்பு ஆலை மூடலுக்கு எதிராக நான்கு ஆண்டுகாலமாகப் போராடிவரும் தொழிலாளர்கள் நிலைபற்றி விவாதிக்கக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். ஒல்னே மற்றும் அமியானில் இருக்கும் CGT அதிகாரிகள் பெருநிறுவனத்தின் திட்டமான ஆலைச் செயற்பாடுகளை மூடுவதற்கு எதிராக பரந்த தொழிலாள வர்க்க நடவடிக்கைக்கான அழைப்பு எதையும் தவிர்த்துள்ளனர்.

கடந்த ஆண்டு கசியவிடப்பட்ட PSA ஆவணம் ஒன்று 2013இல் ஒல்னே ஆலையில் பணிநீக்கத் திட்டம் ஒன்றை வெளிப்படுத்தியது. இதன்படி ஆலை 2014ல் மூடப்படும். வடக்கு பிரான்ஸில் Calais க்கு அருகே உள்ள Hordain இல் இருக்கும் ஆலைகளும், மாட்டரிட்டில் Peugeot ஆலை ஒன்றும் மூடல் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளன. இது கிட்டத்தட்ட 9,500 பணிகளை ஆபத்திற்கு உட்படுத்துகிறது. ஒல்னேயில் தொழிற்சங்கங்கள், முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி தலையிட வேண்டும் என்பதில் கூடிய கவனம் காட்டினர்.

இந்த ஆவணம் அறியப்பட்டதில் இருந்து, ஒல்னேயில் உள்ள தொழிற்சங்கங்கள் மாதாந்த ரீதியான எதிர்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்தனர்; ஆனால் Mercier, “3,500 தொழிலாளர்களில் 800 பேர்தான் பங்கு பெற்றனர் என்று குறைகூறினார். அவநம்பிக்கையானவர்கள் என்று தொழிலாளர்களைக் கண்டித்த அவர் நம்மிடையே வலிமை இல்லாததால் ஒரு பரந்த போராட்டத்தை தொழிற்சங்கம் அபிவிருத்திசெய்வதில்லை என்ற முடிவை நியாயப்படுத்தினார்.

Mercier ஐ பொறுத்தவரை ஒல்னே தொழிலாளர்களின் அவநம்பிக்கையான தன்மைக்கான காரணங்கள் விரைவில் தெளிவாகின. Goodyear தொழிலாளர்களிடம் அவர் CGT மற்ற PSA ஆலைகள் அல்லது பிற கார்த்தயாரிப்பு ஆலைத்தொழிலாளர்கள் தொடர்பு கொள்ள முயலவில்லை, ஏனெனில் அதற்காகப் போதுமானவற்றை நாம் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

தொழிற்சங்கங்கள் ஏன் போதுமானவற்றைச் செய்யவில்லை என்பதை Mercier விளக்க முற்படவில்லை. ஆனால் வெற்றுத்தனமாக, இங்கு பாரிய நெருக்கடி உள்ளது. நாம் அவர்களுக்கு மிகப் பெரிய கலக்கத்தை கொடுக்க வேண்டும். என்றார்.

இது முற்றிலும் அபத்தமானது. Mercier ஒன்றும் சார்க்கோசியை பயமுறுத்த முற்படவில்லை. அவருடன் ஓர் உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தத்தான் விரும்பினார். சார்க்கோசிக்கு Mercier ஒரு கடிதம் எழுதி, PSA நிர்வாகம் 2016 வரை ஆலையைத் திறந்து வைத்திருக்க உறுதிமொழிகளை அவர் பெறுமாறு அதில் கோரியிருந்தார். அப்பொழுது C3 கார் உற்பத்தி முடிந்துவிடும், பின்னர் அத்தேதிக்குப் பின் ஆலை திறந்து வைத்திருப்பதற்கு C3 க்குப் பதிலாகப் புதிய வாகனத்தை தயாரிப்பது பற்றி விவாதிக்கப்படலாம் என்றார்

மற்ற PSA ஆலைகளோடு ஒப்பிடும்போது ஆல்னேயின் இலாபங்களுக்கு ஏற்றம் கொடுக்கத் தொழிற்சங்கங்கள் ஒரு ஏற்பாட்டைத் தெளிவாகக் கொண்டிருந்தன. அச்சூழலில் PSA  ஆல்னேயைத் திறந்து வைக்க PSA பரிசீலிக்கும் என. இது ஆலையில் தொழில் நிலைமைகளைத் தாக்குவதின் மூலம்தான் சாதிக்கப்பட முடியும்.

Goodyear தொழிலாளர்களிடம், தொழில்துறை மந்திரி எரிக் பெஸோனைச் சந்தித்து ஒரு முக்கூட்டு உரையாடலுக்கு ஏற்பாடு செய்வதற்கு எங்களுக்கு 10 மாதம் பிடித்தது; என்று Mercier கூறினார். அக்கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் PSA நிர்வாகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்தனர்.

கூட்டத்தில் பேசியவர்கள் அனைவரும் பிரெஞ்சுத் தொழில்துறை மற்றும் சீனா, கிழக்கு ஐரோப்பா மற்றும் பிற குறைவூதிய நாடுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள போட்டியைக் குறித்து விளக்கினர். எவரும் ஊதிய, வேலை வெட்டுக்களுக்கு எதிராக சர்வதேச அளவில் கார்த்தயாரிப்புத் தொழிலாளர்களின் பொதுப் போராட்டம் பற்றிய கருத்தைத் தெரிவிக்கவில்லை.

2008ல் பொருளாதார நெருக்கடி வெடித்ததில் இருந்து, பிரான்ஸில் டஜன் கணக்கான ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. இதில் டயர் தயாரிப்பு நிறுவனம் Continental Clairoix ஆலை, Crepy-en-Valoisnல் உள்ள Sodimatex ஆலை ஆகியவையும் அடங்கும். தொழிற்சங்கங்கள் இப்போராட்டங்களை தனிமைப்படுத்தி, முதலாளிகள் அரசாங்கங்கள் உடன் தொழிற்சாலை ரீதியாக பேச்சுக்களை நடத்தின. இது நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஆலைகளை மூட, அதையொட்டி பலமுறை தொழிலாளர்களுக்கு தோல்வியை தர வாய்ப்பை அனுமதித்தது. தொழிற்சங்கங்கள் பல முறையும் ஆலைகள் ஒழுங்குமுறையாக மூடப்பட ஏற்பாடு செய்தனர்; தொழிலாளர்களுக்கு அற்பத்தனமான இறுதிப் பணிநீக்கத் தொகைகள்தான் கிடைத்தன.

இந்நிகழ்வுகள் குட்டி முதலாளித்துவ தொழிலாளர்கள் போராட்டம் (LO) குழுவின் அரசியல் பங்கைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவற்றின் தேசியவாதப் போக்கு, தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் ஒருங்கிணைப்பு ஆகியவை பலமுறை தொழிலாளர்கள் போராட்டங்களை தனிமைப்படுத்தி, அவற்றை விற்றுவிடுவதில்தான் வெளிப்பட்டுள்ளது.

LOவின் Roland Szpirko ஆல் நடத்தப்படும் Continentnal-Clairoix இல் உள்ள தொழிற்சங்கங்கள், ஆலை மூடலை ஏற்று பணிநீக்க உடன்பாட்டிற்கும் ஒப்புக் கொண்டனர். மேலும் தொழிற்சங்கங்கள் ஐரோப்பாவில் மற்ற இடங்களில் நிறுவனத்தின் ஆலை மூடல்களைத் தடை செய்யாமல் இருப்பதற்கும் உத்தரவாதம் கொடுத்தன.

தன்னுடைய பங்கிற்கு Eric Mercier தான் LO வின் தலைவர் பதவி வேட்பாளரான Nathalie Arthaud உடைய பிரச்சார மேலாளராக சமீபத்திய ஜனாதிபதி தேர்தலில் பணியாற்றினார். அமியானில் அவர் கொடுத்த கருத்துக்களில் இருந்து அவர் தன்னுடைய Clairoix ல் உள்ள சக-சிந்தனையாளரைப் போலத்தான் வர்க்க ஒத்துழைப்பு போக்கைக் கொண்டவர் என்பது தெளிவாகிறது.

இத்தகைய நிகழ்வுகள் சர்வதேசரீதியாக கார்த்தயாரிப்புத் தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் என்பது தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாகவும் அதை எதிர்க்கும் வகையிலும் மற்றும் குட்டி முதலாளித்துவ இடது கட்சிகளிடம் இருந்து சுயாதீனமாகத்தான் ஒழுங்கமைகப்படமுடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.