சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Strike challenges NLC’s decades-long use of contract labor

இந்தியா: NLC தசாப்த காலங்களாய் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி வரும் விதத்தை வேலைநிறுத்தம் சவால் செய்கிறது

By Satish Simon
5 May 2012

use this version to print | Send feedback


march
வேலைநிறுத்தம் செய்த
NLC ஒப்பந்தத் தொழிலாளர்களின் பேரணி நிறுவனத்தின் முதலாவது நிலக்கரிச் சுரங்கத்தை நெருங்குகையில் போலிஸ் தடுத்து நிறுத்தியது

தமிழகத்தின் நெய்வேலியில் அமைந்திருக்கும் மத்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் (NLC) நிறுவனத்துக்கு எதிராக ஏப்ரல் 21 முதலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 14,000 ஒப்பந்தத் தொழிலாளர்களில் சிலரிடம் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர் குழு பேசியது.

லிக்னைட் அகழ்வு மற்றும் மின் உற்பத்தி நிறுவனமாக இயங்கும் NLC தமிழகத்திற்கும் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்மையில் இருக்கும் பிற தென்னிந்திய மாநிலங்களுக்கும் பிரதானமாக மின்சாரம் உற்பத்தி செய்கிறது

பரிதாபகரமான ஊதியம் பெற்று வரும் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் நடந்த ஒரு வேலைநிறுத்தத்திற்குப் பிறகு எட்டப்பட்ட ஒரு ஒப்பந்த உடன்பாட்டை முழுமையாக அமல்படுத்தும்படி கோரி வருகின்றனர். வேலை நிரந்தரம், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு நிகரான ஊதியம் மற்றும் ஓய்வு பெறும் வயதை 58 இல் இருந்து 60 ஆக உயர்த்துவது ஆகியவை உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளுக்காகவும் அவர்கள் போராடி வருகின்றனர்.

மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம், தமிழ்நாட்டின் அஇஅதிமுக தலைமையிலான அரசாங்கம், மற்றும் நீதிமன்றங்கள், போலிஸ் என அரசின் அத்தனை பிரிவுகளுமே NLC நிர்வாகத்திற்குப் பின்னே அணிதிரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை நிரந்தரம் செய்ய அது மறுப்பதையும் வேலைநிறுத்தத்தை உடைக்கும் நோக்கத்துடன் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கையாள்வதையும் ஆதரித்து நிற்கின்றன.

சென்னை உயர்நீதி மன்றம் இந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவித்து தடையாணை வழங்கியிருக்கிறது. போலிசோ வேலைநிறுத்தம் செய்வோரை அச்சுறுத்தும் நோக்கத்துடன் அன்றாடம் கூட்டம் கூட்டமாய் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

march
சென்ற திங்கள்
, ஏப்ரல் 30 அன்று, வேலைநிறுத்தம் செய்த NLC ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஒரு பேரணி நடந்தது

வேலைநிறுத்தம் செய்து வருகிற ஒப்பந்தத் தொழிலாளர்களை நீக்கி விட்டு புதிய தொழிலாளர்களைக் கொண்டு அவர்களை பிரதியீடு செய்யுமாறு தனக்கு மலிவு-உழைப்புமுறைசாரா தொழிலாளர்களைக் கொண்டு தரக் கூடிய தொழிலாளி ஒப்பந்ததாரர்களிடம் NLC நிர்வாகம் கோரியிருக்கிறது. ஆயினும், எதிர்ப்பு சூறாவளியாய்க் கிளம்பும் என்று அஞ்சி, ஒப்பந்ததாரர்கள் எல்லாம் இந்த நடவடிக்கையில் இன்னும் இறங்காமல் உள்ளனர்.

2010 ஆம் ஆண்டில் ஒப்பந்தத் தொழிலாளர்களிடையே மிகப் பெரும் தொழிற்சங்கமாய் இருக்கக் கூடிய அனைத்திந்திய தொழிற் சங்க காங்கிரஸ் (AITUC), இந்திய தொழிற் சங்கங்களின் மையம் (CITU) மற்றும் மூன்று பிற சங்கங்கள் NLC நிர்வாகத்துடன் உடன்பாட்டுக்கு வந்த ஒரு ஒப்பந்தம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியத்தில் ஒரு சிறு பகுதியையே ஊதியமாகப் பெறுவதை அப்படியே விட்டுவிட்டதோடு நிரந்தர வேலை கோரிய அவர்களது கோரிக்கையையும் முழுமையாகக் கைவிட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்களில் பலரும் NLC ஆல் பல வருடங்களாய், இன்னும் சொன்னால், பல தசாப்தங்களாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளவர்களாவர்.

AITUC மற்றும் CITU ஆகியவை முறையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஆகிய இருபெரும் முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளுடன் இணைப்பு கொண்டவையாகும்.

AITUC தான் தற்போதைய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது, அதற்கு CITU ஆதரவு வழங்குகிறது. NLC இல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டுமே கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்பது AITUC இன் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது. இது NLC தொழிலாளர்களை அண்டை மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்துவதற்கு மட்டுமே சேவை செய்யத்தக்க ஒரு பிற்போக்குத்தனமான பிராந்தியவாதத்தின் காட்சி ஆகும்.

WSWS நேர்காணல் செய்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் பலரும் தாங்கள் பழிவாங்கப்படலாம் என்று அச்சம் வெளியிட்டதால் அவர்களின் பெயர்களை வெளியீட்டுக்காக நாங்கள் மாற்றியிருக்கிறோம்.

50 வயதாகும் இராமன் இந்நிறுவனத்தில் 1982 ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார். முப்பதாண்டு வேலை அனுபவத்திற்குப் பிறகும் அவர் இன்னும்திறன்பயிலாத் தொழிலாளியாகவே குறிக்கப்படுகிறார். ஏறியிருக்கும் விலைவாசி, குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைவாசி தான் தொழிலாளர்களை வேலைநிறுத்தத்திற்குத் தள்ளியிருப்பதாகத் தெரிவித்தார். சென்னை உயர் நீதி மன்றம் வேலைநிறுத்தத்தை தடை செய்து ஆணை பிறப்பித்துள்ளது பற்றிக் கூறுகையில், நீதிமன்றங்களும் அரசாங்கமும் நிர்வாகத்தின் பக்கம் நிற்பதாக ராமன் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு வேலைநிறுத்தம் பற்றி அவர் கூறினார்: “எல்லா தொழிற் சங்கங்களுடனும் சேராமல் AITUC மட்டும் தனித்து செயல்பட்டிருக்குமானால் இன்னும் சிறப்பாய் அது செயல்பட்டிருக்க முடியும். கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கூட்டாய் எங்களை நிர்வாகத்திடம் அடகு வைத்து விட்டன. நாங்கள் பெற்ற அற்பமான 60 ரூபாய் ($1.20) ஊதிய அதிகரிப்பு என்பது, 39 நாள் வேலைநிறுத்தத்தின் விளைவாக நாங்கள் இழந்த தொகையைக் கணக்கிட்டால் நட்டம் என்று தான் சொல்ல வேண்டும், அது எங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை.”

AITUC இன் ஸ்ராலினிசத் தலைமை மீது ராமன் எந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தவில்லை: “சென்ற ஆண்டு முழுமையிலும் AITUC (NLC தொழிலாளர்களின்) எந்த  ஆர்ப்பாட்டத்திலும் பங்குபெறவில்லை. 2010 ஆம் ஆண்டின் காட்டிக்கொடுப்புக்குப் பிறகு துண்டுப் பிரசுரங்கள் அளிப்பதையும் கூட நிறுத்தி விட்டது. இந்த வேலைநிறுத்தத்திற்குத் தலைமையேற்க தங்களுக்கு இறுதியாக ஒரு வாய்ப்பினை வழங்குமாறு AITUC தொழிலாளர்களிடம் வேண்டிக் கொண்டது என்றாலும் 2010 இல் இதே தலைமையின் கீழ் நடத்தப்பட்ட வேலைநிறுத்தம் தோல்வியடைந்ததன் காரணத்தால் தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள், விரக்தி நிலைக்குச் செல்கின்றனர்.”  NLC இல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்கிற AITUC இன் பிராந்திய மேலாதிக்கவாத கோரிக்கை குறித்து கேட்டபோது, அவர் கூறினார்: “அவர்கள் எங்களை முட்டாளாக்குகிறார்கள், அவ்வளவு தான். எப்போது அழைத்தாலும் இவர்கள் வருவார்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள்.”

CPI மற்றும் CPM ஆகிய இருகட்சிகளுமே திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இரண்டு பிராந்தியக் கட்சிகளில் ஒன்றுக்குத் தான் சமீபத்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஆதரவளித்து வந்திருக்கின்றன, அத்துடன் மத்தியில் 2004 முதல் 2008 வரை காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து வந்திருக்கின்றன என்பதை WSWS செய்தியாளர்கள் சுட்டிக் காட்டிய போது, அவை காட்டிக் கொடுப்புகளே என ராமன் ஒப்புக் கொண்டார்.

WSWS கட்டுரைகளையும் தமிழில் வெளிவரும் WSWS இதழையும் தனது சக தொழிலாளர்களிடம் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார். தென்னிந்தியாவின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்துக் கூறுகையில் அவர் கூறினார், “பல தசாப்தங்களாய் நாங்கள் மின்சாரம் இன்றி இருட்டில் தான் வசித்தோம்.”

NLC இல் நிரந்தரத் தொழிலாளியாக இருக்கும் சேகர் வேலைநிறுத்தம் செய்கின்ற ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அனுதாபத்துடன் பேசினார். 1995 ஆம் ஆண்டு முதலாகவே நிர்வாகம்புதிதாய் ஆளெடுக்க வேண்டாம் என்கிற கொள்கையைப் பின்பற்றி வருவதாக அவர் கூறினார். அவர் வேலை செய்யும் பிரிவையே உதாரணம் காட்டி விளக்கினார்: 2000 ஆவது ஆண்டில் 45 தொழிலாளர்கள் இருந்த இப்பிரிவில் இப்போது  வெறும் 15 நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இத்தனைக்கும் உற்பத்தி அதிகரித்து நிறுவனத்தின் இலாபத்தை அதிகரித்திருக்கிறது என்கிற போதிலும். ”தொழிற்சங்கங்கள் எல்லாம் தங்களின் அரசியல் தலைவர்களை தத்தமது அரசியல் கட்சிகளில் கொண்டுள்ள காரணத்தால் தொழிலாளர் போராட்டங்களில் அவை ஒருபோதும் சுயாதீனமாகச் செயல்படுவதில்லை என்று சேகர் தெரிவித்தார்.

49 வயதான ஜோ NLC இல் 1986 ஆம் ஆண்டு இணைந்தார். அவருடைய தற்போதைய சம்பளம் ஒரு நாளைக்கு 303 ரூபாய் (தோராயமாக 5.80 அமெரிக்க டாலர்). சேம நல நிதிக்கான பிடித்தம் போக ஒரு நாளைக்கு 262 ரூபாய் ($5.00). “வேலை நிலைமை கொஞ்சமும் மேம்பட வழியில்லை. என்னை ஒட்டுமொத்தமாய்ச் சுரண்டி ஓடாய்த் தேய்ந்து நிற்கிறேன். 26 வருடங்கள் வேலை செய்ததற்குப் பிறகும் இன்னமும் நான் ஒருதிறன்பயிலாத தொழிலாளியாகத் தான் இருக்கிறேன்.”

2010 வேலைநிறுத்தத்தில் முன்னணியில் நின்றதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளிகளில் பலரும் இன்னமும் மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்படாத நிலையில் இருப்பதாக ஜோ கூறினார். சேமநல நிதிக்காக தங்கள் ஊதியங்களில் இருந்து தொகை பிடித்தம் செய்யப்பட்டு வந்தும் கூட 2001 வரையான காலத்திற்கான சேம நல உதவிகளை ஒப்பந்ததாரர்கள் வழங்கவில்லை என்றும் ஜோ குறைகூறினார். NLC இல் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரம் முழுமையையும் தமிழ்நாட்டுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என்கிற AITUC இன் பிராந்தியவாதக் கோரிக்கையை அவர் முழுமையாய் நிராகரித்தார்.


Samy
NLC
ஒப்பந்தத் தொழிலாளி சாமியும் அவரது மனைவியும் தங்களது சிறிய வாடகை வீட்டிற்கு வெளியே நிற்கின்றனர்

ஒப்பந்தத் தொழிலாளியாக 29 வருடங்கள் வேலை பார்த்திருக்கும் சாமி WSWS செய்தியாளர்களிடம் கூறினார்: “சிறுநீரகக் கல் நோயால் இப்போது பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறேன். ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு NLC விநியோகிக்கும் மருத்துவ அட்டைகள் எல்லாம் வெறும் அடையாளத்திற்குத் தான். நிரந்தரத் தொழிலாளிகளுக்கு உலகத் தரமான மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்து கொள்ள முடியும், ஒப்பந்தத் தொழிலாளிகளாகிய எங்களுக்கு அத்தகைய வசதி கிடையாது சுரங்கத் தூசியால் இப்போது சிவப்பணுக் குறைபாடும் வந்து விட்டது, இப்போது மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

சுரங்கங்களில் 75 சதவீத வேலையை ஒப்பந்தத் தொழிலாளிகள் தான் செய்கிறார்கள். வயது மூப்பு என்பதெல்லாம் வெறும் நாடகம் தான். ஒப்பந்தத் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் 600 ரூபாய் செலுத்த வேண்டும் ($11.50) (நிரந்தரத் தொழிலாளிகளுக்கு ஆவதைக் காட்டிலும் இரு மடங்கு). மாதத்திற்கு 40,000 ரூபாய் ($769) (ஒரு நிரந்தரத் தொழிலாளிக்கான ஊதியம்) போதவில்லை என்றால் மாதத்திற்கு வெறும் 5,000 ரூபாயை ($96) கொண்டு நாங்கள் எவ்வாறு பிழைக்க முடியும்?” ஸ்ராலினிச CITU உடனான சாய்வு கொண்டவர் என்கிற  போதிலும், நிர்வாகம் மற்றும் பெரு வணிகத்தின் சார்பாக தொழிலாளர்களைக் கண்காணிப்பதில் தொழிற்சங்கங்கள் ஆற்றும் பாத்திரத்தின் மீது WSWS வைக்கும் விமர்சனத்துடன் சாமி உடன்பட்டார்.

பால் வியாபாரம் செய்து வரும் சரோஜா NLC உடன் 20 வருடங்களாய் வேலை செய்து வருகிறார். ஒப்பந்தத் தொழிலாளிகள் முகம் கொடுக்கும் பரிதாபகரமான நிலைமைகள் குறித்து அவர் கோபத்துடன் பேசினார். “நிர்வாகத்துக்குக் கொஞ்சமும் மனச்சாட்சி என்பதே கிடையாது என்றார் அவர்.

ராஜன் ஒரு நிரந்தரத் தொழிலாளியாக இருக்கிறார். “ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிச்சயம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். நடப்பு விலைவாசியைக் கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 15,000 ரூபாயேனும் ($288) வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொழிலாளர்கள் எப்போதும் தொழிற்சங்கங்களுக்கு இடையே பிளவுபட்டுக் கிடப்பது பற்றிய கவலைகளையும் அவர் வெளிப்படுத்தினார். NLC நிரந்தரத் தொழிலாளிகளை வேலைநிறுத்தத்தில் இணைப்பதற்கு AITUC அழைத்திருக்கவில்லை என்கிற உண்மையை அவர் சுட்டிக் காட்டினார்.

2010 உடன்பாட்டில் வாக்குறுதியளிக்கப்பட்ட சின்னச் சின்ன நடவடிக்கைகளையும் கூட நிறைவேற்றுவதற்கு NLC நிர்வாகம் எப்படித் தவறியது என்பதை வேலு மற்றும் பழனி ஆகிய இரண்டு ஒப்பந்தத் தொழிலாளிகள் விவரித்தனர். ”2010 இல் வாக்குறுதியளித்த குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பும் கூட பல ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை”.

2010 வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டது குறித்த எங்களது கருத்துகள் மற்றும் விமர்சனத்துடன் உடன்பட்ட ஒரு இல்லத்தரசி கூறினார்: “தொழிலாளர்களின் பக்கம் நின்று பேசும் ஒரு அமைப்பு இருந்தால் அதற்கு எங்களது உறுதியான மற்றும் முழுமையான ஆதரவு நிச்சயம் உண்டு.”