WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
ஒரு
முன்கூட்டிய இஸ்ரேலியத் தேர்தல்களுக்கு நெத்தனியாகு அழைப்பு விடுவார் என
எதிர்பார்க்கப்படுகிறது
By
Jean Shaoul
7 May 2012
use
this version to print | Send
feedback
அக்டோபர் 2013 அளவில் வழமையான பதவியிலிருக்கும் பாராளுமன்றத்திற்கு
இந்தச் செப்டம்பர் மாதமே முன்கூட்டிய தேர்தல்களை பிரதம மந்திரி பெஞ்ஜமின்
நெத்தனியாகு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவருடைய அரசியல்
தந்திரங்கள் பிளவுகள், ஊழல்கள் ஆகியவற்றால் உடைந்துபோயுள்ள அரசாங்கத்தால் அவர் மீது
கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது.
நெத்தனியாகுவின் லிகுட் கட்சி 120 பாராளுமன்ற தொகுதிகளில் 30 ஐக்
கொண்டு முன்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் அத்தகைய தேர்தல் வழமையான பாதை
எதையும் மாற்றும் என்னும் குறிப்பைக் கொண்டிருக்கவில்லை. இரண்டு எதிர்க்கட்சிகளான
கடிமா மற்றும் தொழிற்கட்சி ஆகியவை ஒரு வருங்கால நெத்தனியாகு தலைமையிலான கூட்டணியில்
சேரத்தயார் என்று கூறியுள்ளன.
இத்தகைய தேர்தலின் நோக்கம் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கூடிய
கூட்டணியை அமைப்பது ஆகும். அதே நேரத்தில் மதிப்பிழந்துள்ள அரசியல் நம்பகத்தன்மையை
முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ள இராணுவவாதக் கொள்கைக்கும் மற்றும் தொழிலாளர்கள்,
அவர்கள் குடும்பங்கள் ஆகியவை மீதான சமூகத் தாக்குதல்களுக்கான கொள்கைகளுக்கும்
வழங்குதல் ஆகும்.
ஆளும் உயரடுக்கிற்குள் மோதலுக்குக் கணிசமான ஆதாரம் ஈரான் ஆகும்.
அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு-உளவுத்துறை அமைப்பிற்கும் இடையே தெஹ்ரான்
அணுவாயுதங்களைக் கட்டமைக்கின்றன என்னும் கூற்று பற்றி பெரும் பிளவுகள் உள்ளன.
அதேபோல் அரசாங்கத்தின் தவிர்க்கமுடியாத வான்தாக்குதல்கள் அச்சுறுத்தல் குறித்தும்
பிளவுகள் உள்ளன.
ஈரான்
தன் பங்கிற்கு அத்தகைய தாக்குதல்களுக்கு உரிய விடையளிக்கப்படும் என்று உறுதிமொழி
கொடுத்துள்ளது. இது முன்னோடியில்லாத வகையில், மூத்த, தற்போதைய மற்றும் முன்னாள்
இராணுவ, உளவுத்துறை அதிகாரிகளிடம் பெரும் பகிரங்க எதிர்ப்பை ஏற்படச் செய்துள்ளது.
கடந்த வெள்ளியன்று, இஸ்ரேலின் உள்துறைப் பாதுகாப்பு அமைப்பான ஷின்
பெட்டின்- Shin Bet-
முன்னாள் தலைவர் யுவல் டிஸ்கின்,
ஈரான் மீதான தாக்குதலுக்கு எதிராக எச்சரித்தார். தெஹ்ரான் ஒரு அணுவாயுதத்தைக்
கட்டமைப்பதை அது விரைவுபடுத்துமே ஒழிய, நிறுத்தாது என்று அவர் கூறினார்.
நெத்தனியாகு மற்றும் பாதுகாப்பு மந்திரி எகுட் பரக் ஆகியோர்
“தீர்க்கதரிசிகள்
எனக்”கருதிக்
கொள்ளும் அரசியல்வாதிகள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்றும் குறிப்பாக ஈரான்
பற்றி அவர் இருவரையும் தாக்கிப்பேசினார். ஒரு நெருக்கடியின்போது
“செலுத்தும்
சக்கரம் இவர்கள் கையில் இருப்பதை நான் விரும்பமாட்டேன்”
என்று டிஸ்கின் கூறினார்.
முன்னதாக, இஸ்ரேலின் தற்போதைய படைத்தலைவர் லெப்டினென்ட் ஜெனரல்
பென்னி கிளான்ட்ஸ்,
Haaretz
பத்திரிகைக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில், ஈரானுடன் இராஜதந்திர மற்றும்
பேச்சுவார்த்தைகள் பலன்களை அளித்துவருகின்றன, அதன் அணுத்திறன்கள் நெத்தனியாகு
கூறுவது போல் ஒன்றும் தவிர்க்க முடியாதவை அல்ல என்றும் வலியுறுத்தினார். தெஹ்ரான்
இன்னும் அணுகுண்டை தயாரிப்பதா வேண்டாமா என முடிவெடுக்கவில்லை என்னும் அமெரிக்க
உளவுத்துறை மதிப்பீடுகளுடன் அவர் உடன்பாடு கொண்டுள்ளார்; ஈரானின் தலைமை “மிகவும்
புத்திசாலித்தனமானதால்”
அவ்வாறு செய்யாது எனத் தான் நினைப்பதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேலின் வெளிநாட்டுப்பிரிவு உளவுத்துறை மொசாட்டின் முன்னாள்
தலைவர் மீர் டாகனுடைய சொற்களைத்தான் கிளான்ட்ஸ் எதிரொலித்துள்ளார்; முந்தையவர்
கடந்த ஆண்டு ஈரானிய அரசாங்கம்
“ஒரு
புத்திசாலித்தனமான
அரசாங்கம்”
என
விவரித்திருந்தார். ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் என்பது தான் கேட்பதிலேயே
“மிகவும்
மடைத்தனமான கருத்து”
என்றும் அவர் கூறினார்.
CBS
செய்தி நிறுவனத்திற்கு சென்றமாதம் கொடுத்த பேட்டி ஒன்றில், ஈரானுடனான போர் என்பது
இஸ்ரேல் மீது பேரழிவு தரும் பாதிப்பை ஏற்படுத்தும், ஏனெனில் அது
“குறைந்தபட்சம்
எனது நிலைப்பாட்டிலாவது, ஒரு பிராந்தியப் போருக்கு எரியூட்டும்”
என்றார்.
மொசாட்டின் தற்போதைய தலைவரான தமிர் பர்டோ இதேபோன்ற
கருத்துக்களைத்தான் கொண்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் அவர் இஸ்ரேலியத் தூதர்கள்
நிறைந்த அரங்கம் ஒன்றில் இஸ்ரேலின்“
உயிர்தப்பிபிழைப்பதற்கு”
ஆபத்து ஏதும் இருப்பதாகத் தான் நம்பவில்லை என்றார்.
கடிமாத் தலைமைக் கூட்டணி ஒன்றிற்குத் தலைமை தாங்கிய எகுட்
ஒல்மெர்ட்டும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடிமாத் தலைவர் ஷாவுல் மொபஸ்,
மற்றும் இஸ்ரேலின் ஜனாதிபதி சீமோன் பெரஸ் ஆகியோரும் இதேபோன்ற கவலைகளைத்
தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கைகள் ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறது என்று பலமுறை
கூறப்படும் கருத்துக்களைப் பொய் ஆக்குகின்றன. அதுதான் இஸ்ரேலும் அமெரிக்காவும்
தெஹ்ரானுக்கு எதிராகப் போர்வெறி பிடித்து அலைவதற்கான வெளிப்படைக் காரணமாகக்
கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்குள்ளேயே போருக்கு எதிராக மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பையும்
இவை வலுப்படுத்தும்.
Israeli Democracy Institute, Tel Aviv University
இரண்டும் இணைந்து நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி,
இஸ்ரேலியர்களில் 63% ஈரானின் அணுச்சக்தி நிலையங்கள் மீது தவிர்க்க முடியாத
தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்க்கின்றனர். மேரிலாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஒரு
முந்தைய கருத்துக் கணிப்பு இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகமாகத்தான் காட்டி
இருந்தது.
ஆளும் உயரடுக்கிற்குள் இருக்கும் பிளவுகள், மற்றும் ஈரானுக்கு
எதிரான அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு பரந்த மக்கள் எதிர்ப்பு இவற்றைத் தவிர,
நெத்தனியாகுவின் வலதுசாரிக் கூட்டணி தங்கள் சொந்த சமூகப்பிரிவினருக்கும் பாதிப்பைக்
கொடுக்கும் உள்நாட்டுக் கொள்கைகளைப் பற்றியும் உள்மோதல்களைக் கொண்டுள்ளது.
மரபார்ந்த யூதர்களை இராணுவத்தில் கட்டாயமாகச் சேர்த்தல் என்பது
முதல் பிரச்சினை ஆகும். இப்பொழுது மக்கள் தொகையில் 30% இருக்கும் தீவிர மரபார்ந்த
யூதர்களின் திறனுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்
Tal
சட்டப்படி காலவரையற்று அவர்கள் கட்டாய இராணுவச் சேவையில் இருந்து ஒத்திவைக்கப்பட
வேண்டும் என்பதை நெத்தனியாகு உறுதியளித்துள்ளார். இச்சட்டம் ஜூலை மாதம்
காலாவதியாகிறது. அவர்கள் சமயப் பயிலகங்களில் சேர்ந்தால்தான் அத்தகைய விதிவிலக்கு
என்றும் கூறுகிறார். அவருடைய திட்டங்களின்படி மொத்த மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 20%
இருக்கும் இஸ்ரேலின் அரபுக் குடிமக்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில்
“தேசியப்பணி”
செய்ய வேண்டும். அவர்கள் இப்பொழுது அவிக்டர் லீபர்மன்னின் கடுமையான சமயச் சார்பற்ற
Israel Beiteinu விற்கும், அவருடைய கூட்டணியில்
இருக்கும் தீவிர-மரபார்ந்த பிரிவுகள் இவற்றிற்கு இடையே அகப்பட்டுள்ளனர்.
பிந்தையவர் இராணுவ,
“தேசிய”
அல்லது எத்தகைய சமூகப்பணியைச் செய்யவேண்டும் என்னும் முயற்சியை
எதிர்த்துப் போராடுகின்றனர்.
இரண்டாவது பிரச்சினை தலைமை நீதிமன்றத்தின் உத்தரவான
Beit El
எனப்படும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள மேற்குகரை புறச்சாவடியை
அகற்றுதல் ஆகும். இது தனியார் பாலஸ்தீன நிலத்தின் மீது போலி ஆவணங்கள் உதவியுடன்
கட்டப்பட்டது ஆகும். இது நெத்தனியாகுவின் தீவிர தேசியவாத கூட்டணிப் பங்காளிகள்
மற்றும் அவருடைய கட்சி உறுப்பினர்களால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. அவர்களைத்
திருப்திப்படுத்துவதற்காக, நெத்தனியாகு ஒரு அமைச்சரகக் குழுவை நீதிமன்ற உத்தரவை
ஒதுக்குவதற்கு வழிவகைகள் என்ன என நிர்ணயிக்க அமைத்துள்ளார். பின்தேதியிட்ட சட்டம்
இயற்றுவதின் மூலம் இது சட்டப்பூர்வமாக்கப்படலாம் என்று அக்குழு கூறுவதாகக்
கருதப்படுகிறது; இதைத்தவிர இடிக்கப்பட வேண்டும் எனக்கூறப்படும் மற்ற
புறச்சாவடிகளுக்கும் இவ்வகை கையாளப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஊழல் மற்றும் நிதியத் தவறுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் உயர்மட்ட
அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரைச் சுற்றிக் குவிந்துள்ளன. முன்னாள் பிரதம
மந்திரி எகுட் ஓல்மெர்ட் ஏராளாமான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார். அவற்றில்
மோசடி, நம்பிக்கைத்துரோகம், மோசடி வருமானங்களை மறைத்தல் ஆகியவை அடங்கும். வெளியுறவு
மந்திரி லிபர்மன் கறுப்புபணத்தை மாற்றுதல், மோசடி, நம்பிக்கைத் துரோகம், 2001முதல்
2008 வரை அவர் அரசாங்கத்தில் இருந்தபோது சாட்சிகளை அச்சுறுத்தியது ஆகிய பல
குற்றச்சாட்டுக்களுக்காக விசாரணையில் உள்ளார். தலைமை அரசாங்க வக்கீல் இவர்மீது
குற்றப்பத்திரிக்கை சுமத்தக்கூடும்.
தேர்தல் திகதியை முன்கூட்டிக் கொண்டுவருவதில் நெத்தனியாகுவின்
முக்கிய உந்துதல் அவருடைய சமய மற்றும் தீவிர தேசியவாதப் பங்காளிகளுக்கு எதிராக
மந்திரிசபைக்குள் தன் நிலைமையை வலுப்படுத்துவது ஆகும். தீவிரத் தேசியவாதிகள்
அனைவரும் தங்கள் ஆதரவாளர்களுக்காக
“சிறப்பாக
வாதாடுவதில்”
ஈடுபாடு கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நிதிய உயரடுக்கு கோரும் சமூகநலச்
செலவுகள் மீது இன்னும் தாக்குதலை நடத்தும் முன் இது வந்துள்ளது. உண்மையான
நிலைப்பாட்டில் ஊதியங்கள் குறைந்து, பரந்த சமூக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது குறித்து
அரசாங்கம் நன்கு அறியும். இதனால் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும்
வருமானத்திற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இஸ்ரேலின் 7.8 மில்லியன் மக்களில் 1.7 மில்லியன் மக்கள் வறுமையில்
வாழ்கின்றனர். அதே நேரத்தில் 837,000 குழந்தைகள் ஒவ்வொரு இரவும் பட்டினியுடன்
உறங்கச் செல்லுகின்றன. கடந்த கோடையில் வீடுகள் செலவுகள், சமூகச் சமத்துவமின்மை
குறித்து மிகப் பெரிய எதிர்ப்புக்கள் நடந்தன. இவை பற்றி அரசாங்கம் எதையும்
செய்யவில்லை;
Trajtenberg
குழுவின் நிதானமான பரிந்துரைகளைக் கூடப் புறக்கணித்துள்ளது.
எனவேதான் இஸ்ரேலின் தன்னலக்குழுக்களின் ஊழல் மற்றும் சொத்துக்களின் பிரச்சினை
என்பது அரசியல்ரீதியாக வெடிப்புத்தன்மை உடையதாகிவிட்டது. |