WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பதவியேற்கவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி வரவு-செலவுத்
திட்ட குறைப்புக்களுக்கும், வங்கிகளுக்கு நிதியங்கள் வழங்குதலுக்கும் சைகை
காட்டுகிறார்
By Kumaran Ira and Alex Lantier
9 May 2012
use
this version to print | Send
feedback
ஞாயிறன்று பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றி அடைந்தபின்,
சோசலிஸ்ட் கட்சியின் (PS)
பிரான்ஸுவா ஹாலண்ட் ஏற்கனவே ஆழமான வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்களுடன் சமூகநலச் செலவுகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான
தாக்குதல்கள் பற்றி தான் கொடுத்த மட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளையும்
கைவிடுவதற்கான நிலைப்பாட்டை காட்டியுள்ளார்.
தற்பொழுதுள்ள ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைக்
கொள்கைகள் மற்றும் செல்வாக்கற்ற ஏகாதிபத்திய போர்களை பரந்த முறையில் மக்கள்
நிராகரித்துள்ளதைத்தான் ஹாலண்டின் வெற்றி பிரதிபலிக்கிறது. ஆனால் வரவிருக்கும்
அரசாங்கத்திடம் இருந்து எவ்வித மாற்றங்கள் பற்றிய நம்பிக்கையும் ஹாலண்டினால்
விரைவிலேயே ஏமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுவிட்டன. அவர் பிற்போக்குத்தனக்
கொள்கைகளைச் செயல்படுத்தத்தான் முயற்சிப்பார். தன்னுடைய பிரச்சாரத்தின்போது,
ஹாலண்ட் வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறையில் 100 பில்லியன் யூரோக்களுக்கும் மேல் குறைப்பதாக
உறுதியளித்து, 2017க்குள் சமச்சீர் உடைய வரவு-செலவுத்
திட்டத்தை முன்வைக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஒரு சில சமூகநலத்
திட்டங்களான கூடுதலான பள்ளி உதவித்தொகைகள், கூடுதல் ஆசிரியர் நியமனம் ஆகியவை
பற்றியும் முன்மொழிவுகளை வைத்துள்ளார்.
செவ்வாயன்று, ஹாலண்டின் பிரச்சாரக்குழு ராய்ட்டர்ஸிடம்,
ஹாலண்டின் ஆலோசகர்கள் பிரான்சின் முக்கிய கணக்கெடுப்பு அமைப்பான
Cour des comptes
அறிக்கையைப் பயன்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கின்றனர் என்று
தெரிவித்துள்ளது. இது அவருடைய குறைந்தப்பட்ச பிரச்சார வாக்குறுதிகளை
கைவிட்டுவிடவும், சமூகநலச் செலவுக் குறைப்புக்களை தீவிரப்படுத்தவும் உதவும்.
இந்த அறிக்கை ஜூன் 10-17 சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர்
வெளியிடப்பட உள்ளது. இது சோசலிஸ்ட் கட்சி
(PS)
க்கு வாக்காளர்களிடம் இருந்து அதன் சமூகச் சிக்கன திட்டத்தை மறைக்க
அனுமதிக்கும், அதே நேரத்தில் ஒரு அரசாங்கத்தை அமைத்திடவும், பாராளுமன்றப்
பெரும்பான்மை பெற்ற மந்திரிசபையை ஏமாற்றுத்தன வாக்குறுதிகளை அளித்தபின் விரைவில்
வெட்டுக்களைச் சுமத்த நடவடிக்கை எடுக்கவும் முற்படும்.
“இடது
சாரி வாக்காளர்களைச் சீற்றப்படுத்தக்கூடிய அரசியல் அபாயம் என்பதை நன்கு அறிந்துள்ள
ஹாலண்டின் ஆலோசகர்கள், அவர் மே 15ல் பதவி ஏற்புக்கு இரண்டு மாதங்களுக்குள் செயல்பட
வேண்டும் என்றும் இது சோசலிஸ்ட்டுக்களுக்கு வெளியேறும் சார்க்கோசி
அரசாங்கத்தின்மீது பழியைப் போட முடியும் என்பதையும் உணர்ந்துள்ளனர். ஜூன் 10, 17
பாராளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்தான் அறிவிப்பு ஏதும் வெளிவரும். இது
சட்டமன்றத்தில் செயல்படக்கூடிய பெரும்பான்மையை ஹாலண்டிற்குக் கொடுக்க
அவசியமானதாகும்”
என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
PS
இன்
பாராளுமன்றத் தலைவர்
Jean-Marc Ayrault
கணக்கெடுப்பு பற்றி,
“உறுதியாக
சில பற்றாக்குறைகள், நிழல்களில் மறைத்துவைக்கப்பட்டுள்ளன.... உண்மை என்ன என்பதைக்
கண்டுபிடித்து, வளர்ச்சியை அதிகரிக்க, கடனைக் குறைக்கத் தேவையான முயற்சிகள்
இவற்றிற்கு இடையே ஒரு சமச்சீர் நிலையை அடைவோம்”
என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது.
PS
வெட்டுக்களைச் சுமத்துவதற்கும் தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கும்
தொழிற்சங்கங்களை நம்பியிருக்கும் என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. அவையோ
ஹாலண்டின் வெற்றியைப் பாராட்டியுள்ளன.
PS
அதிகாரிகள்
“அவர்களுடன்
நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளனர்
—குறிப்பாக
மிதவாதப்போக்குடைய
CFDT (பிரெஞ்சு
ஜனநாயகத் தொழிலாளர் கூட்டுமைப்பு) இது அவர்களுக்கு இன்னும் தைரியமான
சீர்திருத்தங்களை பூர்த்திசெய்ய அனுமதிக்கும்”
என்றும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
2009ல் கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரூ கிரேக்கப்
பொருளாதாரத்திற்கு ஊக்கப் பொதியை அளிப்பதாகத் தெரிவித்த பிரச்சார உறுதிமொழிகளைக்
கைவிட்டு, பல ஆண்டுகள் பேரழிவு தரக்கூடிய சமூகநலச் செலவு வெட்டுக்களைச் சுமத்தினார்
என்பதை
Cour des Comptes
பற்றிய ஹாலண்ட் இன் குழுவின் அறிவிப்பு நினைவு கூர்கிறது. கிரேக்க வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறை எதிர்பார்த்ததைவிட அதிகம் என்று பாப்பாண்ட்ரூ கூறி பின் தொழிலாள
வர்க்கத்தின்மீது பெரும் தாக்குதல்களை நடத்தினார்.
ஒரு தொலைக்காட்சி பிரச்சார விவாதத்தின்போது, ஹாலண்ட்,
பாப்பாண்ட்ரூவின் இந்நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார்.
(பார்க்கவும்:
“பிரெஞ்சு
ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் சார்க்கோசியும் ஹாலண்டும் வலது-சாரிக் கொள்கைகளை
கோடிட்டுக் காட்டுகின்றனர்”).
ஜூன் மாதம்,
சிக்கன நடவடிக்கைகளை செய்ய பேர்லினும் தலையீடு செய்யக்கூடும் என்று செய்தி ஊடகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சட்டமன்றத் தேர்தல்களுக்குப்பின், ஹாலண்டிற்கு
தொழிலாள வர்க்கத்தின்மீது தாக்குதல்களுக்குக் கூடுதல் ஆதரவைத் தரும்.
Le Monde
உடைய கருத்துப்படி, ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் ஆலோசர்கள்
“புதிய
பிரெஞ்சு ஜனாதிபதி ஜூன் 17 இரண்டாம் சுற்றுச் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்
கணிசமாக சலுகைகளை அறிவிக்க முடியாது எனக் கருதுகின்றனர்”
என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்துமே ஜூன் 18 மற்றும்
ஐரோப்பியக் கூட்டமான ஜூன் 28-29க்குப் பின்தான் நகரத் தொடங்கும்.
தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களில் இவர்கள்
உடன்பட்டாலும், மேர்க்கெலும் ஹாலண்டும், ஐரோப்பிய நிதிய உடன்பாடு மீண்டும்
பேச்சுக்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் ஹாலண்டின் திட்டங்கள் குறித்துத்
தீவிர மோதலில் ஈடுபடலாம். அந்த உடன்பாடு ஐரோப்பிய அரசாங்கங்கள் வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறைகளை கடுமையாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகிறது.
தொழிலாள வர்க்க எதிர்ப்பு வெட்டுக்களைக் கட்டாயப்படுத்தும் வரவு-செலவுத்
திட்ட வரம்புகளைத் தான் எதிர்க்கவில்லை என்பதை ஹாலண்ட் வலியுறுத்தியுள்ளார்; ஆனால்
நிதிய உடன்பாட்டில்
“வளர்ச்சிக்
கூறுபாட்டை”
சேர்க்க அவர் விரும்புகிறார். திங்களன்று மேர்க்கெல் தன்னுடைய கருத்துப்படி
“வரவு-செலவுத்
திட்ட உடன்பாடு என்பது பேச்சுவார்த்தைக்குட்படுத்தக்கூடியதல்ல”
என்று மீண்டும் கூறினார்.
“வளர்ச்சி”
பற்றிய இந்த விவாதம் ஓர் அரசியல் மோசடி ஆகும். இது ஒன்றும் தொழிலாளர்களுக்கு வேலை
கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக ஐரோப்பிய அரசாங்கங்களுக்குக் கடன்
கொடுத்துள்ள வங்கிகளுக்கு பொதுப் பணத்தை இன்னும் அதிகமாக உத்தரவாதப்படுத்தத்தான்
உதவும். வங்கிகளுக்கு பணம் திரும்பக் கொடுக்கப்படுவது உத்தரவாதப்படுத்தப்பட
வேண்டும் என்று ஹாலண்ட் விரும்புகிறார். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும்
நாடுகள் கூட்டாக
“யூரோப்
பத்திரங்களுக்கு”
ஆதரவு கொடுப்பதின் மூலம் அல்லது ஐரோப்பிய மத்திய வங்கி
(ECB)
நாணயத்தை அச்சடித்தல் மூலம் என்று நடத்தப்படலாம்.
இரு செயற்பாடுகளுக்குமே பேர்லின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இவை
யூரோப்பத்திரங்களைப் பொறுத்தவரை மற்ற நாடுகளின் கடன்களுக்கு ஜேர்மனி உதவித்தொகை
வழங்கக் கட்டாயப்படுத்தும் அல்லது கணிசமான விலை ஏற்றத்தை ஏற்க நேரிடும்.
பேர்லினின் கொள்கை ஏற்கத்தக்கது அல்ல என்று ஹாலண்ட் கூறியுள்ளார்.
Slate.fr.க்குக்
கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார்:
“நம்
பங்காளிகளுடன், குறிப்பாக நம் ஜேர்மனிய நண்பர்களுடன் நாம் விவாதிப்போம்; ஆனால் ஒரே
நேரத்தில் இரு கொள்கைகளையும் அவர்கள் புறக்கணிக்க முடியாது. முதலாவது யூரோப்
பத்திரங்கள், இரண்டாவது ஐரோப்பிய மத்திய வங்கி கடனுக்கு நிதி வழங்குவது.”
ஒபாமா நிர்வாகத்துடைய ஆதரவுடன் ஹாலண்ட் செயல்படுகிறார் எனத்
தோன்றுகிறது. வங்கிகளுக்கு பொது நிதியை விரைவில் கொடுப்பதைத் தடுக்கும் தன்மையில்,
பேர்லினின் சிக்கன நடவடிக்கைகளை வாஷிங்டன் எதிர்க்கிறது. வங்கிகள் மீது உள்ள
நம்பகத்தன்மையை பேர்லின் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, நிதிய நெருக்கடியை
அதிகமாக்குகிறது. மத்திய வங்கிக் கூட்டமைப்பு கிட்டத்தட்ட 7.7 டிரில்லியன் டாலர்கள்
என மதிப்பிடப்பட்டுள்ள நிதியை 2008 நெருக்கடிக்குப் பின் அச்சடித்து குறைந்த
வட்டியில் வோல்ஸ்ட்ரீட்டிற்கு கொடுத்தல் என்று நடந்த அமெரிக்க நிகழ்விற்கு மாறாக,
ஐரோப்பிய மத்திய வங்கி அதுவும் பேர்லினுக்கும் பாரிஸுக்கும் இடையே பல முறை
இராஜதந்திர மோதல்களுக்குப் பின் சற்று கூடுதல் நிதானத்துடன்தான் நடந்து
கொண்டுள்ளது.
“பாரிசில்
ஏற்பட்ட மாற்றம் அமெரிக்க பொருளாதார நிலைக்கு மிகவும் பொருத்தமாகலாம்”
என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் நியூ யோர்க் டைம்ஸ் பின்வருமாறு
எழுதுகிறது:
“ஜேர்மன்
தலைமையில் சிக்கனத் திட்டம் யூரோப்பகுதியில் கடனில் மூழ்கியுள்ளதற்குக் கொடுத்த
ஆதரவில் இருந்து திரு.சார்க்கோசி வெள்ளை மாளிகை நிலைப்பாட்டில் இருந்து
விலகிவிட்டார்; வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்களை விரைவில் குறைப்பது என்பது ஐரோப்பா முழுவதும் தாமதமான
வளர்ச்சிக்கும், அதிக வேலையின்மைக்கும் வழிவகுக்கும். அதே நேரத்தில் பத்திர
முதலீட்டாளர்களின் தேவையையும் பூர்த்தி செய்யாது என்ற நிலைப்பாட்டில் வெள்ளை மாளிகை
அதை எதிர்த்திருந்தது.”
ஹாலண்ட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கோரும் கொள்கைகள் பேர்லின்
கோரும் சிக்கனக் கொள்கைகளைவிட எந்த வகையிலும் தொழிலாள வர்க்கத்திற்கு சாதகமாக
இராது. அமெரிக்காவில் அமெரிக்க அரசாங்கம் மற்றும் மத்திய வங்கிக் கூட்டமைப்பு
பெரும் பொது நிதிகளை வங்கிகளுக்கு கொடுப்பது என்று எடுத்த முடிவு,
தொழிலாள வர்க்கத்தின்மீது பெரும் தாக்குதல்களுக்கு
அடிப்படையாயிற்று. கார்த் தயாரிப்புத் துறைக்குப் பிணை எடுப்பை ஒட்டி ஊதியங்களைக்
குறைத்தது, பாரிய சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் மற்றும் வேலையின்மையில் பெரும்
அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டன.
பதவிக்கு வரவிருக்கும் ஹாலண்ட் நிர்வாகம் திட்டமிட்டுள்ள தொழிலாள
வர்க்க விரோதக் கொள்கைகள்,
ஜோன் லூக் மெலன்சோன் இன் இடது முன்னணி, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சி
(NPA)
ஆகிய குட்டி முதலாளித்துவ
“இடது
கட்சிகள்”
ஆகியவற்றின் வங்குரோத்தான கொள்கைகள் குறித்த பேரழிவுதரும்
தீர்ப்பாகும். இக் கட்சிகள் ஹாலண்டிற்கு முன்னிபந்தனைகள் ஏதும் இன்றி வாக்களிக்க
வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன. சமூகநலச் செலவுக் குறைப்புக்களை ஹாலண்ட்
ஆரம்பிக்கையில், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை உருக்குலைக்க இச்சக்திகள்
எவற்றையெல்லாம் செய்யும் என்பதைக் கணிப்பது கடினமல்ல. அப்படித்தான் அவை
சார்க்கோசியின் பதவிக்காலத்திலும் செய்தன.
இச்சக்திகள் சார்க்கோசி அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் கூடுதல்
சார்பு கொண்டிருந்ததை ஹாலண்ட் தொடர்வதற்கும் உடந்தையாகவுள்ளன. லிபியாவிற்கு எதிரான
போருக்கு ஹாலண்ட் ஆதரவு கொடுத்தார். செய்தி ஊடகப் பேட்டிகளில் ஈரானுடனான போர்
அச்சுறுத்தல், சிரியாவில் இராணுவத்தலையீடு ஆகிய சார்க்கோசியின் கொள்கைகளுக்கும்
ஆதரவைக் கொடுத்துள்ளார்.
சார்க்கோசியின் முடிவான பிரான்சை நேட்டோ கட்டுப்பாட்டு அமைப்புடன்
இணைத்துக் கொள்ளும் முடிவை மாற்றப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நேட்டோவில் பிரான்ஸ் கொண்டுள்ள பங்கு பற்றி ஹாலண்ட்
Slate
இடம் பின்வருமாறு கூறினார்:
“முந்தைய
நிலைமைக்குத் திரும்புவதற்கு நான் விரும்பவில்லை. இராணுவ அதிகாரத்தில் பிரான்சின்
பங்கு மற்றும் அதன் பொறுப்புக்கள் பற்றிய ஒரு மதிப்பீட்டை நான் கோருவேன்.” |