WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ரஷ்யா மற்றும்
முந்தைய
USSR
விளாடிமீர் புட்டின் ரஷ்ய ஜனாதிபதியாகப் பதவி ஏற்கிறார்
By Clara Weiss
8 May 2012
use
this version to print | Send
feedback
திங்களன்று விளாடிமீர் புட்டின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்யக் கூட்டாட்சியின்
ஜனதிபதியாகப் பொறுப்பேற்றார்.
கிரெம்ளின் கொண்டாட்டம் ஜார் ஆட்சி முறையின் ஆடம்பரத்தைக் கொண்டிருந்தது; இதற்கு
முந்தைய தினம் புட்டின்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மாஸ்கோவில் நடைபெற்றபோது,
அதில் கலந்து கொண்ட 20,000 ஆதரவாளர்கள் மீது பொலிஸ் கலகப் பிரிவினர் மிருகத்தனத்
தாக்குதலை நடத்தியிருந்தனர். குறைந்தப்பட்சம் 400 பேர் கைதுசெய்யப்பட்டனர்;
அவர்களுள் எதிர்த்தரப்புத் தலைவர்கள்
Sergey Udaltskov, Boris Nemtsov
மற்றும்
Alexey Navalny
ஆகியோரும் அடங்குவர்.
ஆனால்
எதிர்ப்புக்கள் தொடங்கி ஆறு மாதத்தில் இருந்தே, ரஷ்ய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து
இந்த மத்தியர வர்க்க எதிர்ப்பு இயக்கம் ஆதரவைப் பெற முடியவில்லை என்பது
தெளிவாயிற்று; இதற்கு முக்கிய காரணம் எதிர்ப்பு இயக்கத்தின் வலதுசாரி, முதலாளித்துவ
சார்பு வேலைத்திட்டமாகும்.
புட்டினின் ஜனாதிபதிப் பதவியின் மூன்றாம் வரைகாலம் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி,
புவி அரசியல் அழுத்தங்கள் என்று முக்கிய சக்திகளுக்கு இடையே போரைத் தூண்டும்
அச்சுறுத்தலைக் கொண்ட வகையில் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.
உலகப்
பொருளாதார நெருக்கடி ரஷ்யாவை ஆழ்ந்த, நீடித்த மந்த நிலையில் தள்ளியுள்ளது; இது
சோவியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் அழுகிய தன்மையை முற்றிலும்
வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்க வருமானங்களில் முக்கிய ஆதாரங்களாக இருக்கும்
எண்ணெய், எரிவாயு ஆகியவை மிக அதிக விலையில் விற்கப்பட்டாலும், பொருளாதாரம் மீட்சி
அடைவதில் தோற்றுவிட்டது.
2000த்தில் இருந்து 2007 வரை நிலையான ஏற்றத்தைப் பெற்று வந்த உண்மை ஊதியங்கள் கடந்த
மூன்று ஆண்டுகளாகத் தேக்க நிலையில் உள்ளன; ஆனால் பணவீக்கமோ மிக உயர்ந்துதான்
நிலைபெற்றுள்ளது. உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, வேலையின்மையில் இருப்போரின்
முழு எண்ணிக்கை 2008ல் இருந்து 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அப்படி இருந்தும்,
கணிசமான வேலையற்றோர் பதிவு செய்துகொள்ளவில்லை என்ற நிலையில், இந்த எண்ணிக்கை உண்மை
நிலையை சரியாகப் பிரதிபலிக்கவில்லை.
சில
பொருளாதார வல்லுனர்கள் 1991ல் தொடங்கிய சமூகப், பொருளாதார நெருக்கடி போன்ற
காலத்தில்தான் ரஷ்யா நுழைந்துள்ளது எனச் சரியாக ஒப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த
ஒற்றுமை பற்றிக் குறிப்பிடும்போது, அவர்கள் பொருளாதாரச் சரிவை மட்டும் மனதில்
வைத்துக் கொள்ளவில்லை. முதலாளித்துவ மீட்பு சமாதானக் காலத்தில் எந்த இடத்திலும்
இல்லாத அளவிற்கு மோசமான சரிவிற்குத்தான் வழிவகுத்துள்ளது. இப்பொழுது, அரசாங்கம்
1990களில் சமூக எதிர்ப்புரட்சியை தொடர்ந்து ஏற்பட்ட வாழ்க்கைத்தரச் சரிவுகளை
இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் கடுமையான சிக்கன நடவடிக்கைக்களுக்கு
தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது.
இத்தொலைவிளைவுகளைக் கொடுக்கும் வெட்டுக்களைச் செயல்படுத்தும் முதல் நடவடிக்கைகள்
முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மேட்வடேவின்
“நவீனமயமாக்கும்”
இழிந்த பிரச்சார காலத்தில் தொடங்கின. அவர் இப்பொழுது பிரதம மந்திரியாகிவிட்டார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று கூறப்பட்டது, வணிகச் சார்பு திட்டம் என
மாற்றப்பட்டு, தொழிலாள வர்க்க மக்களின் சமூக, ஜனநாயக உரிமைகள் மீதான தீய
தாக்குதல்களாகிவிட்டன. ஆனால் இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கு பேரழிவுகளை
விளைவித்தன என்றாலும் நிதிய உயரடுக்குகளுக்கு போதுமானவையாக இல்லை.
ரஷ்ய
மற்றும் மேலை விமர்சகர்கள் இப்பொழுது மேட்வெடவ் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப
இல்லை எனச் சுட்டிக்காட்டுகின்றனர்; உண்மையில் அரசாங்கம் ஒரு
“சாதகமான
முதலீட்டுச் சூழல்”
மற்றும் போட்டித்தன்மை உடைய பொருளாதாரத்திற்குத் தேவையாள அளவிற்கு தொழிலாள
வர்க்கத்தின் மீது மாபெரும் தாக்குதல்களை நடத்தத் தவறிவிட்டது என்பது அவர்களுடைய
உணர்வாகும். அவர்கள் பார்வையில் ஒவ்வொரு சமூக உரிமையும் தேவையற்ற சுமை; எந்தத்
தொழிலாளர் தொகுப்பும் அதிக செலவைக் கொடுப்பவை அவை சீன, வியட்நாமியத் தொழிலாளர்களின்
அடிமை உழைப்பு மையங்களுடன் போட்டியிட முடியாவிட்டால்.
புட்டின் மற்றும் அவருடைய உட்குழு மீது நிறையச் சந்தேகங்கள் இருந்தாலும், ரஷ்யா
மற்றும் மேலைநாடுகளின் ஆளும் தட்டுக்கள் தனக்கு முன் பதவிக்கு இருந்தவர் செய்யத்
தவறியதை புட்டின் செய்துவிடுவார் என நம்புகின்றன—அதாவது,
தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கள் அனைத்தையும் எதிர்கொண்டு முன்னோடியற்ற வகையில்
மக்களின் பரந்த அடுக்குகளின் வாழ்க்கைத் தரங்கள் மீது தாக்குதல் நடத்துவார் என.
2012
க்கான நடைமுறைத் திட்டங்கள் பற்றிய கட்டுரைகளில் புட்டின் தான் மேட்வெடவின்
பொருளாதாரத்தை
“நவீனமாக்குதல்”
கொள்கையைத் தொடர இருப்பதாக வலியுறுத்தியுள்ளார். முக்கிய கிரெம்ளின் அதிகாரிகள்
ஏற்கனவே
“மூலோபாயம்
2020”
க்குத் தங்கள் உறுதிப்பாட்டை உறுதியளித்துள்ளனர்; இது ஒரு சிக்கனத் திட்டம் ஆகும்;
இதில் 2030க்குள் ஓய்வூதிய வயது 63 என அதிகரிக்கப்படும், 2012-2015 காலத்தில்
விரிவான தனியார்மயம் ஆக்குதல், மற்றும் ஊதியக் குறைப்புக்கள் இருக்கும்.
உள்நாட்டில் சமூக அழுத்தங்கள் உயர்கையில், கிரெம்ளின் அதன் புவி மூலோபாய, பொருளாதர
நலன்கள் அயல்நாடுகளிலும் பெருகிய முறையில் எண்ணெய் வளம் உடைய மத்தியக் கிழக்கில்
அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டு நாடுகள் காட்டும் பெருகிய ஆக்கிரோஷத்
தன்மையினால் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளதையும் காண்கிறது. லிபியாவிற்கு எதிரான
போர் மற்றும் அமெரிக்கத் தலைமையிலான மேற்கத்திய கூட்டு சிரியா, ஈரானுக்கு எதிரான
இராணுவத் தலையீடுகள் திட்டங்கள் ரஷ்ய, சீன ஆளும் உயரடுக்குகள் இப்பிராந்தியங்களில்
கொண்டுள்ள நலன்களுக்கு எதிரான நேரடித் தாக்குதல்கள் ஆகும்.
பிரதான
சக்திகளிடையே மிகப் பெரிய அளவிற்கு இருக்கும் பூகோளஅரசியல் அழுத்தங்கள் மீண்டும்
ரஷ்யப் படைகளின் தலைவர் நிக்கோலே மகரோவின் அச்சுறுத்தலில் அடிக்கோடிட்டுத்
தெரிகிறது. தவிர்க்க முடியாத தாக்குதலை கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ஏவுகணைப்
பாதுகாப்புத் திட்டங்கள் இருக்கும் இடங்கள்மீது நடத்தப்பட வேண்டும் என இவர்
விரும்புகிறார்.
(See “Russian
general threatens pre-emptive attack on US missile defence system in Europe”)
மரபார்ந்த வகையில் மேட்வெடவை விட மேற்கின் பால் குறைந்த சமரசத்திற்கு மட்டுமே
உட்படும் புட்டின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றிருப்பது, அவர் இரகசியப்பணித் துறைகள்
மற்றும் படைகளில் தேசிய வாத வட்டங்களை நம்பியிருப்பது ஆகியவையும் வாஷிங்டனுடன்
கூடுதலான அழுத்தங்களுக்குத்தான் வகை செய்யும்.
இச்சூழலில், புட்டினுடைய ஆட்சிக்காலம் மிகவும் உறுதியற்றதாக இருக்கும். ஆளும்
உயரடுக்கிற்குள் சிக்கன நடவடிக்கைகளை எப்படிச் செயல்படுத்துவது, அமெரிக்க
ஏகாதிபத்தியம் நடத்தும் போர்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆழ்ந்த
கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதே நேரத்தில் புட்டினும் ஆளும்
“ஐக்கிய
ரஷ்யா”
கட்சியும் பெருகிய முறையில் மக்களிடையே செல்வாக்கற்று உள்ளன; எதிர்க்கட்சிகளும்
பெருமளவு குறைமதிப்பிற்கு உட்பட்டிருக்கின்றன.
மார்ச்
மாதம் ஜனாதிபதித் தேர்தல்களில் புட்டின் 64.6% வாக்குகள் பெற்றார் என்றால்,
டிசம்பர் 2011ல் தில்லுமுல்லுக்கு உட்பட்ட பாராளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்
வெடித்த எதிர்ப்பு இயக்கத்திற்கு வழிநடத்திய வலதுசாரி எதிர்த்தரப்பின்மீது தொழிலாள
வர்க்கம் கொண்டுள்ள பரந்த விரோதப்போக்குத்தான் அதற்குக் காரணம் ஆகும். பாராளுமன்றத்
தேர்தல்கள் முடிந்த குறுகிய காலத்திலேயே, ஓராண்டிற்கும் மேலாகச் சரிந்து வந்திருந்த
புட்டின் பற்றிய ஒப்புதல் ஆதரவுகள் எட்டு ஆண்டுகள் இல்லாத்த அளவிற்கு 44% எனக்
குறைந்தன. ஆளும் கட்சியான
“ஐக்கிய
ரஷ்ய கட்சி”
தேர்தல்களில் பெரும் பின்னடைவைப்பெற்றது; அதிக அளவு தில்லுமுல்லுகள் தேர்தலில்
இருந்தாலும் 15% க்கும் மேலான ஆதரவை இழந்தது.
ஒரு
சமூக எதிர்ப்புரட்சியை முகங் கொடுக்கும் நிலையில், சமூக அழுத்தங்களின் வெடிப்பிற்கு
இது தவிர்க்க முடியாமல் வகை செய்யலாம், மற்றும் முக்கிய போர் என்னும் பெருகிய
அச்சுறுத்தல் இருக்கையில், தொழாலாளர்கள் எந்தவித அரசியல் பிரதிநிதித்துவமும்
இல்லாமல் உள்ளனர்.
பாராளுமன்ற எதிர்க் கட்சியான
–KPRF
ல் இருந்து ஸ்ராலினிஸ்ட்டுக்கள், தாராளவாத ஜனநாயக வாதிகள் மற்றும்
“நேர்மையான
ரஷ்யா”ஆகியவை—தங்கள்
ஆதரவைச் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக விரோதக் கொள்கைகள் என்று கடந்த
காலத்தில்
“ஐக்கிய
ரஷ்யா”
முன்வைத்துள்ளவற்றிற்கு ஆதரவைக் கொடுத்துள்ளன. பாராளுமன்றத்தில் இல்லாத எதிர்ப்பு
முற்றிலும் வலதுசாரித்தனமானது, பல நேரமும் அமெரிக்க அரசாங்கத்தின் ஊக்கத்தில்
வெளிவருவது.
தொழிற்சங்கங்கள் அரசாங்க கட்டுமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைந்துள்ளன.
உத்தியோகபூர்வ
FNPR
எனப்படும் ரஷ்யாவில் உள்ள சுயாதீன தொழிற்சங்கக் கூட்டமைப்பு மே 1ம் திகதி
கிரெம்ளின் ஆட்சிக்கு தன் ஆதரவை நிரூபித்தது. அப்பொழுது அது மாஸ்கோவில் நடத்திய
அணிவகுப்பில் புட்டின், மேட்வெடவ் மற்றும் பல மூத்த்த அரசாங்க அதிகாரிகள் பங்கு
பெற்றனர். பிற சுயாதீன தொழிற்சங்கங்கள் என அழைக்கப்படும்
MPRA
போன்றவை அவ்வப்பொழுது
“இடதுபுறம்
இருந்து
”FNPR”
ஐத்
தேவையானால் குறைகூறல் என்பதுடன் நின்றுவிடுகின்றன.
போலி
இடது குழுக்களான
RSM
எனப்படும் ரஷ்ய சோசலிச இயக்கம்
(Russian Socialist Movement)
மற்றும்
சர்வதேச தொழிலாளர் குழுவின் ரஷ்யப் பிரிவு
(Committee for a Workers’ International)
ஆகியவை
ஸ்ராலினிஸ்ட்டுக்கள், தாராளவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் விருப்பத்திற்கேற்ப
நடந்து கொள்கின்றன. மே தினத்தன்று,
RSM
ன் முக்கிய நபர்களில் ஒருவரான போரிஸ் ககரலிட்ஸ்கி, ஸ்ராலினிஸ்ட்டுக்கள்,
தாராளவாதிகள், தேசிய போல்ஷ்விக்குகள் கொண்ட தவறான பெயரைப் பெற்றுள்ள
“இடது
அரங்கு”என்பதின்
மேடையில் இளித்துக் கொண்டே பங்கு பெற்றார். இப்பிற்போக்கு சக்திகளை ஒன்றுபடுத்துவது
சமூக சிக்கனம், போர் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கம்
ஏற்பட்டுவிடுமோ என்னும் அச்சம்தான்.
வரவிருக்கும் காலகட்டம் தொழிலாள வர்க்கத்திற்கு ஆபத்துக்கள் நிறைந்த வகையில்
இருக்கும்; தொழிலாள வர்க்கம் இதற்கு முகங்கொடுக்க வேண்டும் என்றால், அது ஒரு
சர்வதேச சோசலிச திட்டம் மற்றும் ஒரு புரட்சிகரத் தலைமையை ஆயுதமாகக் கொண்டால்தான்
முடியும். வரவிருக்கும் காலத்தின் முக்கிய பணி ரஷ்யாவின் தொழிலாள வர்க்கத்தின்
மகத்தான சோசலிச மரபுகளைப் புதுப்பித்தல், அதற்காக ட்ரொட்ஸ்கியின் உலகப் புரட்சிக்
கட்சியான
ICFI
ன் பிரிவைக் கட்டமைத்தல் என்பது ஆகும். |