WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
அமெரிக்க-சீனப் பேச்சுக்களில் தீர்க்கப்படாத அழுத்தங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன
By John Chan
4 May 2012
use
this version to print | Send
feedback
நேற்று பெய்ஜிங்கில் தொடங்கிய நான்காம் அமெரிக்க-சீன மூலோபாய
மற்றும் பொருளாதார
பேச்சுவார்த்தைகள்
இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார, மூலோபாயப் பிரச்சினைகளில்
இருக்கும் ஆபத்துக்களை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. வெளிவிவகாரச் செயலர்
ஹில்லாரி கிளின்டன் மற்றும் நிதி மந்திரி டிமோதி கீத்னர் தலைமையிலான அமெரிக்க
உயர்மட்டக்குழு கணிசமான விட்டுக்கொடுப்புக்களை வழங்க சீன ஆட்சிக்கு அழுத்தம்
கொடுப்பதற்கு இக்கூட்டத்தைப் பயன்படுத்துகிறது.
சீனாவின் பிளவுற்று நிற்கும் வக்கீலான ஷென் குவாங்செங் விவகாரம்,
பேச்சுக்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் அச்சுறுத்துகிறது. இருதரப்பினரும்
பிரச்சினையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த விரும்பியும் இந்நிலைதான் உள்ளது.
கட்டாயக் கருக்கலைப்புக்களை அம்பலப்படுத்தியதற்காக பரந்த அளவில் அறியப்பட்டுள்ள
ஷென்,
ஷாங்டாக் மாநிலத்தில் இருக்கும் அவருடைய வீட்டில் வைக்கப்பட்ட
இல்லக்காவலில் இருந்து கடந்த வாரம் பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குத்
தப்பிச் சென்றுள்ளார். புதன் அன்று தூதரகத்தின் அமெரிக்க அதிகாரிகள் அவருக்கு
மருத்துவ சிகிச்சைக்காக உடன் சென்றிருந்தனர். இதுகூட அவரையும் அவர் குடும்பத்தையும்
அவர் விரும்பும் நகரத்திற்கு சட்டம் படிக்க செல்ல அனுமதிக்க ஓர் உடன்பாடு
காணப்பட்டதின் பின்தான் நடந்தது.
ஆனால் இந்த ஏற்பாடு விரைவில் செயல்படாமல் போயிற்று. ஏனெனில் ஷென்
தன்னுடையதும் மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளதாகவும்,
சீனாவை விட்டு வெளியேற விரும்புவதாகவும் அறிவித்துவிட்டார். அமெரிக்காவில் தனக்குப்
புகலிடம் கொடுக்குமாறு ஒபாமா நிர்வாகத்திற்கு அவர் அழைப்புவிடுத்துள்ளதுடன்,
கிளின்டனுடைய விமானத்திலேயே தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இன்று வரை இருதரப்பினரும் ஒரு கீழ்மட்டத்திலான அணுகுமுறையைத்தான்
இதைப்பொறுத்தவரைக் கடைப்பிடித்துள்ளனர். கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில்,
சீன வெளியுறவு அமைச்சரகம்
“சீனாவின்
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்காக”
அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரியுள்ளது. சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோ
நேற்று வாஷிங்டனிடம்
“சீன
இறைமை, அடிப்படை நலன்கள், சமூக அமைப்புமுறை விருப்பங்கள் ஆகியவற்றை மதிக்குமாறு”
கேட்டுக் கொண்டார். ஆனால் பெயரைக் கூறி ஷென்னை குறிப்பிடவில்லை.
ஷென் விவகாரம் கையாளப்படுவது குறித்து குடியரசுக் கட்சியினரிடம்
இருந்து பெருகிய குறைகூறல்கள் வந்துள்ளபோதிலும்கூட, ஒபாமா நிர்வாகம் பிரச்சினையை
மிகைப்படுத்தவில்லை. நேற்று பெய்ஜிங்கில் பேசிய வெளிவிவகாரச் செயலர் கிளின்டன் மனித
உரிமைகள் பற்றிப் பேசினார்,
“எந்த
நாடும் இந்த உரிமைகளை மறுக்கக்கூடாது”
என்று கூறினாலும் ஷென்னை பற்றிக் குறிப்பிடவில்லை.
பெய்ஜிங் ஏற்கனவே கணிசமான சலுகைகள் கொடுக்க இருப்பதாக அடையாளம்
காட்டிய நிலையில், கிளின்டன் இதுவரை ஷென் விவகாரத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை.
அமெரிக்கப் பெருநிறுவன உயரடுக்கு சீனப் பொருளாதாரத்தில் சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் சீர்திருத்த சார்பு செயற்பட்டியலின் கீழ் இலாபம் மிகுந்த ஈடுபாடுகளைக்
கொள்ள இருக்கிறது. இதனால் நிதி, எரிசக்தி போன்ற அதிக பாதுகாப்புடைய
அரசாங்கத்துறைகள் வெளிநாட்டு முதலீட்டிற்குத் திறந்துவிடப்பட உள்ளன. நிதிமந்திரி
கீத்னர் பொருளாதாரக் கொள்கையில்
“அடிப்படை
மாற்றத்திற்கு”
ஆதரவை வெளிப்படுத்தி, அதை மூன்று தசாப்தங்களுக்கு முன்பான
முதலாளித்துவ மீளமைப்பிற்கான ஆரம்ப முயற்சிகளுடன் ஒப்பிட்டார்.
செய்தியாளர் கூட்டத்தில் நேற்று பேசிய கீத்னர்,
பெய்ஜிங் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.
“ஏற்றுமதிகளைவிட
சீன உள்நாட்டு நுகர்வில் அதிகம் நம்ப வேண்டும்; தனியார் நிறுவனங்களின் புதிய
கண்டுபிடிப்புக்களுக்கு அரசாங்கச் சொந்த நிறுவனங்களின் விரிவாக்கத் திறனைவிடக்
கூடுதல் நம்பிக்கை கொள்ள வேண்டும்; பொருளாதாரம் வெளிநாட்டு நிறுவனங்களின்
போட்டிக்கு இன்னும் திறந்துவிடப்பட வேண்டும், இன்னும் நவீன நிதிய முறை கொண்டுவரப்பட
வேண்டும்.”
என்றார் அவர்.
பிரதமர் வென் ஜியாபோ மார்ச் மாதம் வெளியிட்ட
“சீனா
2030”
என்ற தலைப்பில் உலகவங்கி வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்று ஏற்கனவே
அரசாங்கப் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மேலை மூலதனம் மற்றும் தனியார் சீன
நிறுவனங்களுக்கு விற்கப்பட வேண்டும் என்னும் செயற்பட்டியலை அடிக்கோடிட்டுக்
காட்டியுள்ளது. அமெரிக்காவிற்கு செல்லும் ஏற்றுமதிகளில் சரிவு ஏற்பட்டதை அடுத்து
பொருளாதார வளர்ச்சிக் குறைப்பை ஈடு செய்வதற்குப் புதிய சர்வதேச முதலீடு தேவை என்று
வென் வலியுறுத்தி வருகிறார். ஏற்றமதிக் குறைவுகள் அதிகரிக்கும் வேலையின்மை, சமூக
அமைதியின்மை ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும் என்று சீன அரசாங்கம் அஞ்சுகிறது.
பேச்சுவார்த்தை நிகழ்ச்சிநிரலில் ஒரு விடயம் அமெரிக்க எரிசக்தி
பெருநிறுவனங்களான
Exxon Mobil, Chevron
போன்றவை சீனாவின் பரந்த
shale
வாயு சேமிப்புக்களைப் பெறும் வாய்ப்பு ஆகும். இது அமெரிக்க
இருப்புக்களைப் போல் இருமடங்கு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீன அதிகாரிகள்
அமெரிக்க அதிகாரிகளுடன் தற்போதைய 20% வரம்பு சீன வங்கிகள் மற்றும் நிதியப் பணி
நிறுவனங்களில் இருப்பதை உயர்த்துவதற்கான வாய்ப்பு குறித்தும் விவாதித்துள்ளனர்.
அதன் நாணயம் குறித்தும் கீத்னர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்.
யுவானின் அன்றாட வணிக நிலைப்பாடு 0.5% ல் இருந்து 1% என சமீபத்தில் விரிவாக்கம்
இருந்நபோதிலும்கூட கடந்த இரண்டு ஆண்டுகளில் யுவான் 8% மறுமதிபீடு
செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய நடவடிக்கையை வரவேற்றாலும், கீத்னர் சீனா அதன்
“வணிக
சமச்சீரற்ற தன்மையை”
குறைப்பதற்கு அமெரிக்கா கோருபவற்றில் இருந்து தொலைதூரத்தில் உள்ளதாக
அறிவித்தார்.
உண்மையில் சீனாவிற்கு அமெரிக்க ஏற்றுமதிகள் 2000-2011 காலத்தில்
500% வளர்ந்துள்ளன. ஜப்பானுடன் இதே காலத்தில் 1.4%தான் உயர்ந்துள்ளது. சீன வணிக
மந்திரி ஷென் டெமிங் யுவான் குறைமதிப்பில் வைக்கப்பட்டுள்ளது என்பதை மறுத்து,
சீனாவின் சுருக்கம அடையும் வணிக உபரி மார்ச் மாதம் $5.3 பில்லியன் என்று
பெரும்பாலும் 2011ல் அதிகமானகாலம் குறைந்தப்பட்சத் தொகையான மாதத்திற்கு $15
பில்லியன் என்பதைவிடக் குறைவு என்பதைச் சுட்டிக்காட்டினார். நாணயம் இன்னும்
மறுமதிப்பிற்கு உட்படுவது என்பது சீனாவின் திணறும் ஏற்றுமதி தொழில்களைத் தீவிரமாகப்
பாதிக்கும் என்றும், இத்துறைகளில்தான் பல மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும்
கூறினார்.
முக்கிய துறைகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிடும்
பெய்ஜிங்கின் முடிவு மூலோபாய மற்றும் பொருளாதார முன்னணிகளில் சீனாவின்மீது அழுத்தம்
கொடுக்கும் அமெரிக்க முயற்சியைத் தளர்த்துவதின் ஒரு பகுதியாகும். ஒபாமா நிர்வாகம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருங்கிணைந்த வகையில் தன் இராணுவ மற்றும் இராஜதந்திர
உறவுகளை ஆசியா முழுவதும் வலுப்படுத்தி வருகிறது. இதற்குக் காரணம் அது சீனச்
செல்வாக்கிற்கு குழிபறிக்க நினைப்பதுதான். சீனாவிற்கு வரும் வழியில், கிளின்டன்
பிலிப்பைன்சுடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தி அந்நாட்டின் இராணுவ ஒத்துழைப்பிற்கு
ஊக்கம் கொடுத்தார். அதே நேரத்தில் மணிலா தென் சீனக் கடலில் பிரச்சனைக்குள்ளான
தீவுகள் குறித்து பெய்ஜிங்குடன் மோதலில் நிற்கிறது.
வட கொரியா, ஈரான் என்னும் இரு முக்கிய பிரச்சினைகளில் சீனாவின்
ஒத்துழைப்பிற்கு கிளின்டன் அழுத்தத்தைத் தொடர்கிறார். சீனாவின நட்பு நாடான வட
கொரியா மீது அதன் சமீபத்திய ராக்கெட் ஏவியது பற்றிக் குறைகூறியபின், கிளின்டன்
பெய்ஜிங் வாஷிங்டனுடன் ஒத்துழைத்து
“வட
கொரியாவிடம் அதன் வலிமையும் பாதுகாப்பும் அதன் மக்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை
கொடுப்பதின் மூலம் வருமே ஒழிய இன்னும் ஆத்திரமூட்டும் வகைகளால் அல்ல”
என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
“வட
கொரிய அச்சுறுத்தல்”
என்பதை அமெரிக்கா வாடிக்கையாகப் பயன்படுத்தி, ஜப்பான், தென்
கொரியாவில் அதிக அமெரிக்க இராணுவ நிலைப்பாடு தொடர்வதை நியாயப்படுத்தவும், சீனாவில்
இருந்து விட்டுக்கொடுப்புகளை பெறவும் நியாயப்படுத்துகிறது.
ஈரானின் அணுத்திட்டங்கள் குறித்தும் சீனா கடின நிலைப்பாடு கொள்ள
வேண்டும் என்று கிளின்டன் வலியுறுத்தியுள்ளார். ஒபாமா நிர்வாகம் ஈரானின் வங்கி,
நிதிய முறைக்கு எதிரான அமெரிக்க ஒருதலைப்பட்சப் பொருளாதார நடவடிக்கைகளுக்குச் சீனா
ஆதரவு கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. இது ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகளைத்
திறமையுடன் தடுத்துவிடும். ஜூலை மாதத்திற்குள் இவ்வழிவகைப்படி சீனா நடக்காவிட்டால்,
வாஷிங்டன் சீன நிறுவனங்கள்மீதும் கடுமையான அபராதங்களைச் சுமத்தலாம். இது இரு
நாடுகளுக்கும் இடையே உள்ள அழுத்தங்கள் அதிகரிக்கும். ஈரானிடம் இருந்து அதன் எண்ணெய்
இறக்குமதிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்னும் அமெரிக்கக் கோரிக்கைகளை சீனா
இதுவரை எதிர்த்து வருகிறது.
சூடான் மற்றும் தெற்கு சூடான் இரண்டும் சமீபத்திய போர்ச்செயல்களை
நிறுத்த வேண்டும் இல்லாவிடின் பொருளாதாரத் தடைகள் சுமத்தப்படும் என்று அமெரிக்கா
இயற்றிய ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் குழுத் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்கும்
வகையில் சீனா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்கு கிளின்டன் பாராட்டினார்.
ஆரம்பத்தில் பெய்ஜிங் இத்தீர்மானத்தை எதிர்த்தது. அமெரிக்கா இந்த நிலையைப்
பயன்படுத்தி சூடானில் தலையிடக்கூடும் எனக் கருதியது. அங்கு சீனாவிற்கு எண்ணெய்
உட்பட கணிசமான பல பொருளாதார நலன்கள் உள்ளன.
செய்தி ஊடகத்திற்குக் கருத்து தெரிவித்த கிளின்டன்:
“இன்றைய
உலகில், எந்த உலக சக்தியும் பூபோள அரசியலை ஒரு பூஜ்ய முடிவு விளையாட்டு என்று
கருதிவிடக்கூடாது”
என்று அறிவித்தார். ஆனால் ஒபாமா நிர்வாகம் அக்கணக்குகளைத்தான்
துல்லியமாக இடுகின்றது. சீனாவுடன் அதன் மோதல் போக்கைக் கொண்டிருக்கும்போதே,
பெய்ஜிங் கொடுக்கும் சலுகைகளையும் ஏற்கிறது. இத்தகைய பொறுப்பற்ற அமெரிக்க
மூலோபாயம் அதன் போட்டியாளர்களின் இழப்பில் அதன் பொருளாதாரச் சரிவை ஈடுசெய்யும்
மூலோபாயம் ஆகும். ஆனால் இதுதான் மோதலுக்கும் போருக்குமான பாதையும் ஆகும். |