WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
Socialist Party candidate Hollande wins French presidential elections
பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹாலண்ட் வெற்றி பெற்றார்
By Alex Lantier and Kumaran Ira in Paris
7 May 2012
Back to screen version
பிரெஞ்சு
ஜனாதிபதித் தேர்தலில் நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் சோசலிஸ்ட் கட்சி
(PS)வேட்பாளரான
பிரான்சுவா ஹாலண்ட் வெற்றி பெற்றார்.
நடப்பு ஜனாதிபதியான
வலது-சாரி
நிக்கோலோ சார்க்கோசிக்கு எதிராய்
51 சதவீத வாக்குகளை
இவர் பெற்றார்.
பிரான்சின்
46 மில்லியன்
வாக்காளர்களில் சுமார்
81 சதவீதம் பேர்
இத்தேர்தலில் வாக்களித்தனர்.
இரவு
8 மணி தேர்தல்
அறிவிப்பு வந்த சற்று நேரத்திற்கெல்லாம்,
சார்க்கோசி தனது
மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியம்
(UMP)கட்சியின்
கூடியிருந்த உறுப்பினர்களுக்கு முன்னதாக ஒரு சிறிய சுருக்கமான உரையை நிகழ்த்தினார்.
தோல்விக்கான
“முழுப்
பொறுப்பையும்”
தான் ஏற்றுக்
கொள்வதாகக் கூறிய அவர்,
ஹாலண்டுக்கு
நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
“நான் உங்கள்
[UMP] பக்கம் தான்
தொடர்ந்து இருப்பேன் அத்துடன் நமது சிந்தனைகளையும் உறுதிப்பாடுகளையும் பாதுகாக்கும்
விதமாக நீங்கள் என் மீது தாராளமாக நம்பிக்கை வைக்கும் விதத்தில் நடந்து கொள்வேன்...ஆனால்
எனது பாத்திரம் முன்புபோலத் தொடர்வது சாத்தியமில்லை.”
சார்க்கோசி,
குறைந்தபட்சம்
பொதுத்தோற்றத்திற்கேனும்,
அரசியலில் இருந்து
ஓய்வு பெறுவார் என்கிற எதிர்பார்ப்புகளை ஊடக ஆதாரங்கள் மேற்கோள் காட்டின.
சென்ற ஆண்டில்,
அவருக்கான ஒப்புதல்
29 சதவீதத்திற்கு
வீழ்ச்சி கண்ட பின்னர்,
1958 இல் பிரான்சின்
ஐந்தாம் குடியரசு தொடங்கியதற்குப் பிந்தைய காலத்தின் பிரான்சின் மிகுந்த அவப் பெயர்
சம்பாதித்த ஜனாதிபதியாக அவர் ஆனார்.
செல்வந்தர்களுடன்
அவர் கொண்டிருந்த படோடாபமான உறவுகளுக்காகவும்,
அத்துடன்
ஓய்வூதியங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான தொடர்ச்சியான வெட்டுகள்,
அவப்பெயர் பெற்ற
போர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை நடத்தியதற்காகவும்
அவர் மீது பரவலான அதிருப்தி இருந்தது.
சார்க்கோசிக்கு எதிரான இந்த மனோநிலையை ஹாலண்டின் வெற்றியும் பிரதிபலித்தது.
ஸ்தூலமான
கொள்கைகளின் விடயத்தில் இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையில் வித்தியாசம் அதிகமில்லை
என்கிற உணர்வு தொழிலாள வர்க்கத்தில் இருந்தது என்ற போதிலும்,
தொழிலாளர்கள் ஒரு
மாற்றத்தை எதிர்பார்த்து நின்றனர்.
ஆனால் ஹாலண்டின்
அரசாங்கத்தில் அவர்கள் காணவிருப்பது மாற்றத்தையல்ல,
மாறாக தொழிலாள
வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுவதைத் தான்.
தெற்கு
பிரான்சில் இருக்கும் ஒரு சிறிய நகரமான துல் இல் ஹாலண்ட் தனது வெற்றி உரையை
அளித்தார்.
இங்கே தான் அவர்
2001 முதல்
2008 வரையான
காலத்தில் மேயராக இருந்தார்.
இக்காலத்தில் அவர்
PS இன் முதல்
செயலராகவும் இருந்தார்.
சார்க்கோசிக்கு ஒரு
“குடியரசுவாதிக்கான
வாழ்த்துக்களை”
வழங்கிய ஹாலண்ட்
“எல்லோருக்குமான
ஜனாதிபதியாக இருப்பேன்”என்று
பிரகடனப்படுத்தினார்.
பிரெஞ்சுக்
குடிமக்களுக்கு இடையிலான
”பிளவுகள்”எல்லாம்
“முடிந்து போனது”
என்று கூறிய அவர்
“உற்பத்தியை
அதிகரிப்பதற்கும்,
பற்றாக்குறைகளைக்
குறைப்பதற்கும்,
அத்துடன் நமது சமூக
மாதிரியைப் பாதுகாத்துக் கொள்வதற்கும்”
தேசிய ஒற்றுமையைக்
கோரினார்.
ஒரு மேம்பட்ட வாழ்க்கையை
நோக்கிய “முன்னேற்றம்”
மற்றும்
“நீண்ட பயணம்”
கொண்ட ஒரு
“பிரெஞ்சுக் கனவை”
குறித்து அவர்
கோடிட்டுக் காட்டினார்.
“நமது
ஐரோப்பியப் பங்காளிகளுக்கும் எல்லோருக்கும் முதலாய் ஜேர்மனிக்கும்”
எனக் குறிப்பிட்டு
”சிக்கன
நடவடிக்கைகள் என்பவை இனியும் தவிர்க்க முடியாத தலைவிதியாக இருக்க முடியாது”
என்று கூறிய அவர்,
”ஐரோப்பியக்
கட்டுமானத்திற்கு வளர்ச்சி,
வேலைகள்,
வளமை மற்றும்
வருங்காலம் ஆகியவற்றின் ஒரு பரிமாணத்தை அளிக்க”
அழைத்தார்.
இந்த
புளித்துப் போன வார்த்தைகள் எல்லாம்,
’ஹாலண்டும்
சார்க்கோசியும் ஏறக்குறைய பிரித்துக்பார்க்க முடியாத இரு வேட்பாளர்கள்’
என்று தேர்தல்
பிரச்சாரத்தின் போது பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த மக்களால் பரவலாய்
உணரப்பட்டிருந்த அரசியல் யதார்த்தத்தை மறைக்கும் நோக்கம் கொண்டவையாக உள்ளன.
வங்கிகளுக்கும் மூலோபாய நிறுவனங்களுக்குமாய் பெரும் தொகைகளைக் கையளிக்கும்
குறிப்பிடப் பெறாத
“வளர்ச்சி அம்ச”த்திற்கு
அழைப்பு விடுக்கின்ற அதே சமயத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான ஐரோப்பிய ஒன்றிய
நிதிய ஒப்பந்தத்திற்கு மரியாதையளிக்க அரசுச் செலவினங்களை வெட்டுவது என்னும் ஒரு
வலதுசாரி வேலைத்திட்டத்தின் மீது தான் ஹாலண்ட் போட்டியிட்டார்.
சார்க்கோசியின்
வெளியுறவுக் கொள்கையின்
- ஆப்கானிஸ்தான்,
லிபியா,
ஐவரி கோஸ்ட் மற்றும்
இப்போது சிரியா ஆகிய நாடுகளிலான போர்கள் இதில் அடங்குகின்றன
- மீது தனக்கு
விமர்சனங்கள் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
தொழிலாளர்
செலவுகளைக் குறைப்பதற்கும் தொழிலாளர்களின் நலன்களைப் பலியிட்டு சர்வதேச சந்தைகளில்
பிரெஞ்சு நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்துவதற்குமான கட்டமைப்புச்
சீர்திருத்தங்களுக்கு
“ஜேர்மன் மாதிரி”யை
அவர் புகழ்ந்தார்.
ஜேர்மனியும்
தனது பங்கிற்கு,
ஹாலண்டின்
“வளர்ச்சி”க்கான
அழைப்புகளை எல்லாம் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் மீது கூடுதலான சிக்கன
நடவடிக்கைகளைத் திணிப்பதற்கான செலுத்தத்தின் ஒரு பகுதியாகவே தான் காண்பதைத்
தெளிவுபடுத்தி விட்டது.
ஜேர்மன் வெளியுறவுச்
செயலரான கிடோ வெஸ்டெர்வெல்ல அறிவித்தார்:
“பிரான்சுவா
ஹாலண்டின் வெற்றிக்குப் பின்னர்,
ஞாயிறன்று
பேர்லினில் இருக்கும் பிரெஞ்சுத் தூதரகத்திற்கு ஒரு சிறு விஜயம் செய்து,
ஒரு ஐரோப்பிய
வளர்ச்சி ஒப்பந்தத்திற்காக நாங்கள் இணைந்து வேலை செய்வோம்:
வளர்ச்சிக்கு ஒரு
புதிய உத்வேகத்தை நாங்கள் அளித்தாக வேண்டும்.
அதற்கு கட்டமைப்பு
சீர்திருத்தங்கள் அவசியமாய் உள்ளது.”
சார்க்கோசியை ஹாலண்ட் சிறிய வித்தியாசத்தில் வென்றிருப்பது அவரது பிரச்சாரம்
தொழிலாள வர்க்கத்திடையே எந்த புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி விடவில்லை என்கிற
உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
குறிப்பாக
சார்க்கோசியின் ஆழமான அவப்பெயரைக் கொண்டு பார்த்தால்,
ஹாலண்ட் அவரை
நூலிழையில் தான் தோற்கடிக்க முடிந்திருப்பதென்பது இன்னும் சிந்திக்க வைக்கக்
கூடியதாக இருக்கிறது.
அக்டோபரில்
PS இன் ஜனாதிபதி
வேட்பாளராக முன்னணிக்குக் கொண்டுவரப்ப்படுகின்ற சமயத்தில்,
ஹாலண்ட் முக்கியமாக
PS
அதிகாரத்துவத்துக்குள் இருக்கும் ஒரு நிர்வாகியாகத் தான் ஒரு வரலாற்றைக்
கொண்டிருந்தார்.
அவரது கண்ணோட்டங்கள்
வாக்காளர்களுக்கு அறிந்திராதவையாக இருந்தன.
முதல் கருத்துக்
கணிப்பில் இவர்
62 சதவீத வாக்குகள்
பெற்று சார்க்கோசி வெறும்
38 சதவீதமே
பெற்றிருந்த நிலையில்,
அடுத்தடுத்து அவர்
தனது 24
புள்ளி அனுகூலத்தைக்
தொலைத்திருக்கிறார்.
முதல் சுற்றின்
சமயத்தில் இவரது தேர்தல் தரநிலை
54 சதவீதமாகச்
சரிந்தது,
அதேசமயத்தில்
சார்க்கோசியின் தரநிலை உயர்வு கண்டிருந்தது.
மே
2 தொலைக்காட்சி
விவாதத்திற்குப் பின்னர்
- இந்த விவாதத்தின்
போது ஹாலண்ட் மிகுந்த வலதுசாரி நிலைப்பாட்டில் நின்றார்,
நிதிய ஒப்பந்தத்தை
மதிக்கவும்,
சார்க்கோசியின்
பர்தாவுக்கான தடையைப் பராமரிக்கவும்,
ஹலால் உணவைத் தடை
செய்யவும் அவர் வாக்குறுதி கூறினார்
- அவருக்கான ஆதரவு
52.5
சதவீதத்திற்குச் சரிந்தது.
ஹாலண்டுக்கு
ஆதரவு தேர்தல் நாள் வரையிலும் தேய்ந்து கொண்டு சென்று கொண்டிருந்தது.
வெற்றி குறித்துக்
கவலையுடன் இருப்பதை சனியன்று ஹாலண்ட் ஒப்புக் கொண்டார்:
“தோல்வி குறித்த
கவலை எனக்கு இல்லாதிருந்தால்,
இப்போது
நானிருக்கும் ஒரு கவலை கொண்ட நிலையில் நான் இருந்திருக்க மாட்டேன்.
ஹாலண்டின்
பிரச்சார செய்தித் தொடர்பாளரான நஜாத் வலூ-பெல்காசெம்
கருத்து கூறுகின்ற போது,
“கடவுளுக்கு நன்றி,
நல்ல வேளை
பிரச்சாரம் இன்னும் ஒரு வாரம் நீளவில்லை”
என்றார்.
பிரான்சின்
முதலாளித்துவக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களுக்குத் தயாரிப்பு
செய்து கொண்டு ஹாலண்டின் கீழ் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அமைவு
செய்திருக்கும் நிலையில்,
அவர்கள்
எதிர்கொண்டிருக்கும் ஸ்திரமற்ற அரசியல் நிலையையே கருத்துக்கணிப்பு வாக்குகளில்
நடந்திருக்கும் கணிசமான நகர்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
சட்டமன்றத்
தேர்தல்கள் ஜூன்
10 மற்றும் ஜூன்
17 அன்று நடைபெற
இருக்கின்றன.
குட்டி
முதலாளித்துவ
“இடது”
கட்சிகளிடம்
இருந்தான தொடர்ச்சியான ஆதரவின் மீது ஹாலண்ட் தங்கியிருப்பார்.
இடது முன்னணி
மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக்
கட்சி உள்ளிட்ட இக்கட்சிகள் இத்தேர்தலில் ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைப்பு
விடுத்ததோடு சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கான ஹாலண்டின் திட்டங்களை
மூடிமறைப்பதற்கும் முயற்சி செய்து வந்திருக்கின்றன.
தேர்தலின்
முதல் சுற்றில்
11 சதவீத
வாக்குகளைப் பெற்ற இடது முன்னணியின் தலைவரான ஜோன் லூக் மெலன்சோன் ஹாலண்டின்
வெற்றியைப் புகழ்ந்து தள்ளினார்:
“ஒருவழியாய்
சார்க்கோசி அகன்றார்!
நமது சமூக
உரிமைகளையும் நமது குடியரசின் பொதுச் சேவைகளையும் குழிதோண்டிப் புதைத்தவரை
இவ்வாறாய் நாம் கையாண்டிருக்கிறோம்.
அவரது தோல்வி என்பது
அதி வலதுக்கு விண்ணப்பிக்கும் அவரது திட்டத்திற்கான தோல்வியாகும்.
இப்போது ஒவ்வொன்றும்
பிரான்சுக்கும் நமது இடதுக்குமான தொடக்கமாகும்.”
சட்டமன்றத்
தேர்தல்களில்
PS பெரும்பான்மை
பெற்று அரசாங்கம் அமைக்குமானால்,
அதில் தனது இடது
முன்னணியின் உறுப்பினர்கள் அமைச்சரவைப் பதவியை ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும்
என்று மெலன்சோன் சுட்டிக்காட்டினார்.
ஹாலண்டுக்கு
குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சிகள் அளிக்கும்
ஆதரவின் விளைவு என்னவென்றால்,
முதல் சுற்றில்
சுமார் 18
சதவீத வாக்குகளைப் பெற்ற நவ
பாசிச தேசிய முன்னணியின்
(FN) தலைவரான மரின்
லு பென்,
தன்னை,
சிக்கன
நடவடிக்கைகளுக்கும் பரவலான வெறுப்பைச் சம்பாதித்திருக்கும் அரசியல்
ஸ்தாபகத்திற்கும் எதிரான ஒரே வேட்பாளர் என்று காட்டிக் கொள்ள முடிந்திருப்பது தான்.
தொழிற்துறைமயம் அகற்றப்பட்டிருக்கும் வடக்கு பிரான்சில்
FN இன் புதிய
செல்வாக்கான இடங்களில் ஒன்றாக ஆகியிருக்கும் ஹெனன்
- போமோன் இல் அவர்
செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறினார்:
“நான் வெற்று
வாக்களிப்பதாகக் கூறினேன்.
மனதை மாற்றிக்
கொள்ளும் வழக்கம் எனக்குக் கிடையாது.
களத்தில்
எஞ்சியிருக்கும் இரண்டு வேட்பாளர்களுமே சியாமீஸ் இரட்டையர்கள்
(அதாவது அச்சுஅசலான
இரட்டையர்கள்),
அதனால் தேர்தல்
முடிவுகளில் இருந்து நம்பிக்கையுடன் எதிர்நோக்க எனக்கு அதிகமாய் ஒன்றுமில்லை.”
புலம்
பெயர்ந்தவர்களுக்கான எதிர்ப்பு என்கின்ற பிற்போக்குத்தனமான களத்தில் பிரச்சாரம்
செய்து தேசிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் கணிசமான இடங்களை வெல்வதற்கு
FN நம்பிக்கை
கொண்டிருக்கிறது.
அதன்மூலம் ஒரு
நாடாளுமன்றக் குழுவை உருவாக்குவதற்கு அவசியமான
15 தொகுதிகளைப் பெற
அது நோக்கம் கொண்டிருக்கிறது. |