சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to hold plantation workers’ congress

 

இலங்கை சோ.ச.க. தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டை நடத்தவுள்ளது

By the Socialist Equality Party
7 May 2012

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் மே 20 அன்று இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டை நடத்தவுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள், தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை காப்பதற்கான சோசலிச வேலைத் திட்டமொன்றை கலந்துரையாடி ஏற்றுக்கொள்வதற்காகவே இந்த ஒரு நாள் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாள வர்க்கத்தில் மிகவும் குறைந்த சம்பளம் பெறும் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரான தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந் தோட்ட தொழிலாளர்கள் அரசாங்கத்தால் திணிக்கப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரம், அதே போல் கோதுமை மா மற்றும் பால் மா போன்றவற்றின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டமை, தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் ஒரு பெரும் அடியாகும்.

பெருந்தோட்டக் கம்பனிகள் சர்வதேச ரீதியில் போட்டித்தன்மை உடையவையாக இருப்பதன் பேரில், தோட்டத் தொழிலாளர்களின் முதுகெலும்பை உடைக்கும் வேலைச் சுமையை மேலும் அதிகரிக்கவும், அவர்களது வறிய மட்டத்திலான சம்பளத்தை வெட்டிக் குறைக்கவும் கோரிவருகின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட சகல தொழிற்சங்கங்களும், தொழிற்துறை பொலிஸ்காரராக செயற்பட்டு, முதலாளிகளினதும் அரசாங்கத்தினதும் சார்பில் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குகின்றன.

சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ, தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொள்ளவேண்டிய எதிர்த் தாக்குதலையும் அது வழிநடத்தப்பட வேண்டிய அரசியல் முன்நோக்கையும் பற்றிக் கலந்துரையாடுவதற்கே இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு அரசியல் கிளர்ச்சியும் மற்றும் கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு சுயாதீனமான இயக்கத்துக்கான அடிப்படையாக நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதும் முதல் நடவடிக்கையாகும்.

இலங்கையிலும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த, சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தை நிராகரிக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான ஒரு புரட்சிகர போராட்டத்தின் பாகமாகவும் மற்றும் பொருளாதாரத்தை சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்வதன் பாகமாகவும் மட்டுமே தமது மிகவும் அடிப்படையான உரிமைகளுக்காக தொழிலாளர்களால் போராட முடியும்.

மே 20 அன்று சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ. நடத்தும் தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டில் இன்றியமையாத பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்காக பங்குபற்றுமாறும் பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறும் நாம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

விபரங்களுக்கு தயவு செய்து தொடர்புகொள்ளவும்:

The General Secretary
Socialist Equality Party
795, 1/1 Mati-ambalama Junction
Kotte Road
Kotte

 

மாநாடு நடக்கும் இடம்:

 

Christian Workers Fellowship (CWF) Hall
Danbar Road
Hatton

 

திகதியும் நேரமும்: மே 20, காலை 10.00 மணி