WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
குந்தர் கிராஸும் Waffen SS உம்
By Peter Schwarz
4 May 2012
use
this version to print | Send
feedback
ஈரானுக்கு எதிரான ஒரு இஸ்ரேலியப் போர் குறித்து எச்சரித்த
“என்ன
கூறப்பட வேண்டும்”
என்ற அவருடைய கவிதையை வெளியிட்டதை அடுத்து, பிரபல ஜேர்மனிய படைப்பாளர் குந்தர்
கிராஸிற்கு எதிராகச் சுமத்தப்பட்ட முக்கிய அவதூறுகளில் ஒன்று யூத எதிர்ப்பு
என்பதாகும்.
Die Zeit
இன்
ஆசிரியர் ஜோஸெவ்
ஜொவ்வ,
17 வயது கிராஸின் மிகக் குறுகிய காலத் தொடர்பு இரண்டாம் உலகப் போரின் இறுதி
நாட்களில் நாஜி
Waffen SS
(நாஜி
கட்சியின் இராணுவம்)
உடன் கொண்டிருந்த தொடர்பு இவ்வகையில் முக்கியமானது என்றும்
தெரிவித்துள்ளனர். கிராஸின் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு விடையிறுக்கும்
வகையில், ஜேர்மனிய ஆசிரியர் பகிரங்கமாக தன் போர் அனுபவங்களைப் பற்றிக் கூறியவை
தொடர்பான அந்தநேர கட்டுரையை இங்கு மீண்டும் வெளியிடுகிறோம்.
***
மீண்டும், மேம்போக்கானவர்கள் வன்சொற்களைக் கூறுகின்றனர்.
ஜேர்மனியின் மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர் குந்தர் கிராஸ் முன்பு
கூறப்பட்டது போல் விமான எதிர்ப்புப் பிரிவில் அல்ல தான் போரின் இறுதியில்
Waffen SS
இல் ஒரு 17 வயது இளைஞராகப் பணிபுரிந்தேன் என்று ஒப்புக்கொண்டுள்ளமை,
கொடூரமான குற்றச்சாட்டுக்கள் ஏராளமானவற்றை வெளிவரச்செய்துள்ளது. எழுத்தாளர் அறநெறி
நம்பகத்தன்மைக்கு உரியவர் அல்ல என்பதில் இருந்து இலக்கியத்திற்காக பெற்ற நோபல்
பரிசை அவர் திருப்பித்தர வேண்டும் என்பது வரை பல கோரிக்கைகள் எழுந்துள்ளன.
79 வயது கிராஸ் கடந்த வாரம்
Frankfurter Allgemeinene Zeitung
பத்திரிகையிடம் முதல் தடவை பகிரங்காக தான்
Waffen SS
இன்
உறுப்பினராக இருந்தது குறித்துப் பேசினார். அவருடைய புதிய சுயசரிதையான
Peeling the Onion
-வெங்காயத்தை உரித்தல்- என்பதில் இந்நிகழ்வு பற்றி அவர் விரிவாகக் கூறி,
அதைப் பற்றி நினைவுகூருகையில் ஏற்படும் வேதனையையும், அந்நினைவு ஏற்படுத்தும்
வெட்கத்தை பற்றியும் விவாதிக்கிறார்.
கிராஸைக் குறை கூறுபவர்கள் இந்நூலைப் படிக்கும் வரை
காத்திருக்கவில்லை.
“Waffen SS”
என்னும் சொற்கள் அவர்களைச் செயலில் ஈடுபடப் போதுமானதாக இருந்தன.
பழமைவாத வரலாற்றாளர் மைக்கேல் வொல்ப்சோன்
Waffen SS
இல்
கிராஸ் உறுப்பினராக இருந்தது அவர் வாழ்வின் படைப்புக்களேயே
“முற்றிலும்
சேதப்படுத்திவிட்டது”
எனக் கூறுகிறார்.
“Aspekte”
தொலைக்காட்சி நிகழ்வில் வொல்ப்சோன்
“எஞ்சியிருப்பது
மதிப்பற்ற அருமையான சொற்களே. இப் பெரும் கவிஞரின் அழகான சொற்கள் வெறும்
போலிச்சொற்கள்தான். வேறு ஒன்றும் இல்லை.”
எனக்கூறினார்.
இலக்கியத் திறனாய்வாளர் ஹெல்முத் காராசேக்
“போலித்தனம்
நிறைந்தவர்”,
“மோசமாக
பாசாங்குத்தனத்தைக் கொண்டவர்”
என்று கிராஸை குற்றம்சாட்டி,
“இது
ஒருவர் ஒன்றை உபதேசித்துக்கொண்டு அதற்கு முற்றிலும் எதிரானதை செய்வதைப் போல் உள்ளது”
என்று அறிவித்தார்.
Financial Times Deutschland
பத்திரிகை, எழுத்தாளரின்
“அரசியல்-அறநெறி
ஆதிக்கம்”
இந்த காலம் கடந்த நினைவுகூர்தலினால் அழிந்துவிட்டது என்று கூறியுள்ளது. கிராஸ்
குறைந்தப்பட்சம் விவாதத்திற்குரிய மே 1985இல் சான்ஸ்லர் ஹெல்முட் ஹோல் மற்றும்
அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் ரேகன் ஆகியோர் பிட்பேர்க்கில் (SS
உறுப்பினர்கள் புதைக்கப்பட்ட இடம்) இராணுவக் கல்லறைக்கு வருகை
புரிந்தபோதாவது இதைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும் என்று செய்தித்தாள் கூறுகிறது.
இக்குறை பல பழமைவாத அரசியல்வாதிகளாலும் எதிரொலிக்கப்பட்டுள்ளது.
பசுமைக் கட்சியுடன் நெருக்கிய தொடர்புகளை உடைய
taz
செய்தித்தாள்
அரசியல் விஞ்ஞானி கிளவ்ஸ் லெக்கிவியுடன் கண்ட பேட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர்
கிராஸின் நிலைப்பாட்டை
SS
தளபதி ஹான்ஸ் ஷ்னைடருடன் ஒப்பிட்டுள்ளார். போருக்குப் பின் தன் அடையாளத்தை ஷ்னைடர்
மூடிமறைத்திருந்தார். அவருடைய உண்மையான அடையாளம் 1990களில் வெளிப்படும்வரை ஒரு
ஜேர்மன் மொழி ஆசிரியராக ஹான்ஸ் ஷ்வெர்ட்ட என்னும் பெயரில் தனது உத்தியோகத்தை
தொடர்ந்திருந்தார். கிராஸ்
“அறநெறியில்
ஆழ்ந்த இழிவுடையவர்”
என்று கிராஸை லெக்கிவி குற்றம் சாட்டியுள்ளார்.
போலந்தில் ஜேர்மனிக்கு எதிரான வார்த்தைபிரயேகங்களில் களிப்படையும்
காக்ஜின்ஸ்கி இரட்டையர்களின் தலைமையில் உள்ள தேசிய பழமைவாத
PiS
அரசாங்கம் தன்னுடைய திவால்தன்மையை மூடிமறைப்பதற்காக, கிராஸ் தன்னுடைய பிறந்த நகரான
Gdansk
ன் கௌரவக் குடிமகன் என்னும் பட்டத்தைத் துறந்துவிட வேண்டும், நோபல்
பரிசையும் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது.
ஜேர்மனி-போலந்து நாடுகளுக்கு இடையே நல்ல உறவுகள் வேண்டும் என்பதில் நீண்ட காலமாக
கிராஸ் ஊக்கம் கொடுத்து வருகிறார்.
அதே நேரத்தில், பல புத்திஜீவிகள், கலாச்சாரத்துறைச் சான்றோர்கள்
மற்றும் அரசியல்வாதிகள், கிராஸிற்கு எதிரான பிரச்சாரத்தால் மிரண்டு போகாமல்
அவருக்கு ஆதரவைக் கொடுக்கின்றனர். இதில் வரலாற்றாளர் ஹான்ஸ் மோம்சென், இலக்கிய
வல்லுனர் வால்டர் ஜேன்ஸ், நடிகர் மரியோ அடோர்ப், சமூக ஜனநாயகவாத அரசியல்வாதி எகோன்
பாஹ்ர் மற்றும் தொலைக்காட்சி செய்திதொகுப்பாளர் உல்ரிச் விக்கெர்ட் ஆகியோர்
அடங்குவர்.
கிராஸின் மீதான தாக்குதல்கள் வெறும்வார்த்தையாடல்களையும், தீய
தன்மையையும் கொண்டுள்ளன. அவற்றிற்குத் உண்மைகளுடன் தொடர்பு இல்லாத்துடன்,
முற்றிலும் அரசியல், சிந்தனைப் போக்கு ஆகியவற்றால் உந்துதல் பெறுகின்றன.
தன்னுடைய ஆரம்பகால நாவல்களில் கிராஸ் ஜேர்மனியின் போருக்குப்
பிந்தைய சுயதிருப்தியான, பழமைவாதச் சமூகத்தை எதிர்கொண்டார். அதுவோ உயர்மட்ட
நாஜிக்களை முக்கிய அரசாங்கப் பதவிகளில் இருந்தியதுடன், மூன்றாம் குடியரசின்
வெளிப்படையான சித்திரத்தை கொண்டிருந்தது. அவருடைய நாவல்களில் ஜேர்மனியர்களை
பொறுப்பற்ற முறையில் தீயவை செய்தவர்கள் என்று காட்டவில்லை. மாறாக, பாசிசம் தோன்றி,
வளரக்கூடியதாக இருந்த குட்டிமுதலாளித்துவச் சமூகத் தட்டை ஆராய்ந்து, வெகு
திறமையாகச் சித்தரித்துள்ளார்.
குணநலன்களில் பலவீனமான மற்றும் இகழ்வான தன்மை கொண்டிருந்தவர்கள்
எப்படி நாஜிக்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் முடிவைக் கண்டனர் என்பதை அவர்
விளக்குகிறார். உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றித் தங்களைத் தாங்களே
ஏமாற்றிக் கொள்ளும் வகையில் மக்கள் வேறுபுறம் திரும்பி நின்றது குறித்தும் அவர்
தகவல் கொடுக்கிறார். இறுக்கமான அரசியல் குற்றவாளிகளை விவரிப்பதுடன்,
இடருற்றவர்களையும் மற்றும் எதிர்ப்பை ஒழுங்கமைத்தவர்களையும் பற்றியும்
சித்திரிக்கிறார்.
ஆனால் அவருடைய முக்கிய கருத்து அவருடைய தலைமுறையைப் பற்றித்தான்
இருந்தது. இது மூன்றாம் குடியரசினால் பயிற்றுவிக்கப்பட்டு அப்பொழுது
வளர்ந்திருந்தது. இத்தலைமுறையின் முரண்பாடுகளையும் அறவழிச் சங்கடங்களையும், கடந்த
காலத்தை அணுகுவதில் அது கொண்டிருந்த இடர்களையும் அவர் விளக்குகிறார்.
கிராஸ் எழுதியதை ஒருபொழுதும் மன்னிக்காதவர்கள் பலர் உண்டு. வாழ்நாள்
விரோதிகள் பலரை அவர் உருவாக்கிக்கொண்டார். இப்பொழுது கிராஸ்மீது வரும் கடுமையான
தாக்குதல்கள் வலதுசாரி, பழமைவாத வட்டங்களில் இருந்து என்பது ஒன்றும் தற்செயல்
நிகழ்வு அல்ல. மெத்தனத்தன்மை, தம்மைத்தாமே அறநெறியில் உயர்ந்தவர் என்று கருதிக்
கொள்ளுபவர்கள், கிராஸினால் அதிர்ச்சியுற்றவர்கள், இப்பொழுது வெற்றியுடன்
கூவுகின்றனர்.
இறுதியில் கூட்டம் கூச்சலிடுகையில், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்
அவருடைய உயர்ந்த மேடையில் இருந்து தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு ஒன்றும் நம்மைப்
பற்றி விமர்சிக்க உரிமை இல்லை, நம் குறைகளைச் சித்தரிக்கும் உரிமையும் அவருக்கு
இல்லை, என்கின்றனர்.
இத்தகைய வலதுசாரிக் குரல்களுள், பல முன்னாள் இடதுகளும் உள்ளனர்.
இவர்கள் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பின்னரும், அதேபோல் முந்தைய சமூக
ஜனநாயக-பசுமைக் கட்சிக் கூட்டணி அரசாங்கத்தின் ஏழாண்டு ஆட்சிக்குப் பின்னும் தங்கள்
நிலைப்பாட்டை இழந்துவிட்டவர்கள்.
தன்னுடைய வாழ்க்கையில் இத்தனை காலம் மௌனமாக இதுபற்றி இருந்தது
கிராஸின் தவறு என்பது சரிதான். ஆனால் இத்தவறு அதன் முறையான விதத்தில் நோக்கப்பட
வேண்டும். மற்றும் இது உளவியல்ரீதியாகவும், வரலாற்றுரீதியாகவும் புரிந்து
கொள்ளக்கூடியதுதான்.
ஒரு 17 வயதுச் சிறுவனாக அவர் இராணுவப் பணிக்கு ஒரு பணி முகாமில்
அழைப்பு பெற்றபோது, அவர் கிட்டத்தட்ட ஒரு குழந்தை போல்தான். தான் சேரும் அமைப்பின்
குற்றம்சார்ந்த தன்மை பற்றி அறிந்துகொள்ளும் அறிவும் திறனும் அற்ற நிலையில்தான்
இருந்தார். கிராஸிற்கு ஏழு வயதான போது ஹிட்லர் ஜேர்மனியில் அதிகாரத்திற்கு
வந்துவிட்டார். சிறிதுகாலத்தின் பின் நாஜிக்கள் அப்பொழுது
Gdansk
என்று அழைக்கப்பட்ட டான்ஜிக் சுதந்திர நகரத்தில் நாஜிக்கள்
அதிகாரத்தை எடுத்துக்கொண்டனர்.
எங்கும் படர்ந்திருந்த, கிட்டத்தட்ட எதிர்ப்பு இல்லாத நாஜிப்
பிரசாரத்தின் செல்வாக்கான காலத்தில் கிராஸ் வளர்ந்திருந்தார். அச்சூழலில் ஒரு
விமர்சனரீதியான அணுகுமுறையை வளர்ப்பது கடினம். அவருடைய வயதில் இருந்த பல
இளைஞர்களைப் போலவே, அவரும் போர் முடியும் வரை
“இறுதி
வெற்றியில்”
நம்பிக்கை கொண்டிருந்தார். இதை ஒன்றும் அவர் மறைக்க முற்படவில்லை.
Waffen SS
உடைய குற்றங்கள் எவற்றிலும் கிராஸ் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு
கொண்டிருக்கவில்லை. அவரைத் தற்பொழுது குறைகூறுபவர்கள் அவ்வாறு கூறவும் இல்லை.
பயிற்சிக்குப்பின் அவர் ஒரு சில வாரங்கள் மட்டுமே போரில் கலந்துகொண்டிருந்தார். ஒரு
தோட்டாவை சுடுமுன்னரே காயமுற்று, அவர் அமெரிக்க இராணுவத்தால் கைதியாக்கப்பட்டார்.
அப்பொழுது அவருக்கு வயது 18க்கும் குறைவாகும்.
தன்னுடைய சுயசரிதையில் கிராஸ் அந்நேரத்தில் இருந்து
Waffen SS
குறித்த தன்னுடைய புரிதலை எழுதியுள்ளார்.
“இதைப்
பற்றி எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட
அப்பொழுது ஆள்திரட்டும் அலுவலகத்தில் இரட்டை
S
என்ன அதிர்ச்சியைக் கொடுத்ததோ, இப்பொழுதும் எனக்கு அதிர்ச்சியை கொடுப்பதுபோல்
அப்போது இருந்ததா?”
தன்னுடைய நினைவுகூர்தல்களில் அவர்
“அதிர்ச்சி
அல்லது இகழ்வு என விளக்கப்படக்கூடிய எதுவும் இல்லை என்றுதான் அவர்
விடையிறுக்கிறார். மாறாக
Waffen SS
ஓர்
விஷேட படைப்பிரிவு, முன்னரணில் ஒரு பிளவு ஏற்பட்டால் அதை மீட்கப்
பயன்படுத்தப்படுவது,
Demjansk
போல
சுற்றிச்சூழப்பட்டிருக்கையில் அதை முறிக்க பயன்படத்தப்படும், அல்லது
Charkow
போல் மீண்டும் வெற்றி கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்றே எனக்கு தோன்றியது. சீருடைய
கழுத்துப்பட்டியில் இருந்த இரட்டைக் கோடு பற்றி நான் ஒன்றும் வெறுப்புக்
கொள்ளவில்லை.”
புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஹான்ஸ் மோம்சன் இந்த விளக்கம்
ஏற்கத்தக்கது என்பதற்குச் சான்று கூறுகிறார்.
Waffen SS
இல்
விரும்பிச் சேர்வது என்னும் கொள்கை 1943ல் ஒதுக்கப்பட்டது. இராணுவப் பணிக்குத்
தகுதியுடைய ஏராளமானவர்கள்
Waffen SS
க்கு எந்த சம்பிரதாயமும் இல்லாமல் அழைக்கப்பட்டனர்.
Frankfurter Rundschau
வில்
மோம்சன் எழுதுகிறார்:
“எனவே
குந்தர் கிராஸ் அந்த ஆட்சி உருக்குலைந்துகொண்டிருந்த காலத்தில் நாஜி ஆட்சியின்
விஷேட படைப்பிரிவில் உறுப்பினராக இருந்தது பற்றிய பகிரங்க எதிர்ப்பு பொருத்தமற்றது
ஆகும்.”
அதேபோல் கிராஸிடம்
“அவர்
SS
மற்றும் நாஜி ஆட்சியின் குற்றத்தன்மை பற்றி 1944ல் அறிந்து கொண்டிருக்க முடியும்
என்றும் எவரும் கோர முடியாது. ஒரு காயமடைந்ததில் முடிவுற்ற இராணுவத்தில் அவர்
இருந்த சில வாரங்களில்
Waffen SS
பிரிவுகள் குடிமக்கள், போர்க்கைதிகள், வெளிநாட்டில் இருந்து பிடித்தவரப்பட்டு
கட்டாய உழைப்பு செய்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட குற்றங்களைக் காணவில்லை”
என மோம்சன் தெரிவிக்கின்றார்.
Waffen SS
இல் கிராஸின் உறுப்பினர் தன்மை அவருடைய இளமைக்காலத்தில் ஒரு
நிகழ்வாகும். இதற்காக அவர்மீது குறைகூறுவதற்கில்லை. உதாரணமாக 1933ல் 25 வயதில்
ஜேர்மனிய மற்றும் ஆஸ்திரிய தேசிய சோசலிஸ்ட் கட்சிகள் இரண்டிலும் சேர்ந்த
தொழில்வழங்குநர் ஹெர்பேர்ட் வோன் கரஜன் இன் நிகழ்வு போன்றது அல்ல. அந்த நடவடிக்கை
அவருடைய தொழில்வாழ்க்கைப் போக்கிற்கு மிகவும் இலாபகரமாயிற்று. அதேபோல் திரைப்படத்
தயாரிப்பாளர் லெனி ரைபென்ஸ்டால் எப்படி நாஜி ஆட்சிக்குப் பிரச்சாரப் படங்களை
தயாரித்தார் என்பதும் உள்ளது. இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் வரை அவர்
அதற்கான எவ்வித பொறுப்புக்களை மறுத்துவந்தபோதிலும், இன்னமும் கூட ஒரு பெரும் கலைஞர்
என்றுதான் பாராட்டப்படுகிறார்.
கிராஸின் அறநெறி ஆதிக்கம்
“பெரும்
சேதத்திற்கு உட்பட்டுவிட்டது”
என்று கூறுபவர்களில் வரலாற்றாளரும் செய்தியாளருமான ஜொகாயிம் ஃபெஸ்ட் உம் உள்ளார்.
1980 களின்
“வரலாற்றாளர்களின்
பிரச்சினைகள்”
என்பதில் ஏர்ன்ஸ்ட் நொல்ட நாஜி ஆட்சியை போல்ஷிவிசத்திற்குரிய
விடையிறுப்பு என்று நியாயப்படுத்திய முயற்சிகளுக்கு ஃபெஸ்ட் ஆதரவைக்
கொடுத்துள்ளார்.
இதற்கு மாறாக, தன்னுடைய இலக்கியப் படைப்பு மற்றும் அரசியல் வாழ்வின்
பெரும்பகுதியை கிராஸ் நாஜி ஆட்சியுடனான கணக்கைத் தீர்க்கத்தான்
பயன்படுத்தியுள்ளார். அவர் வளர்ந்த தலைமுறையின் சங்கடம், நாஜி ஆட்சியுடன் தொடர்பு
கொண்டதின் சங்கடம், அதன் குற்றத்தன்மையை அறியவோ, உணர்ந்து கொள்ளவோ இயலாத நிலை
ஆகும். இப்பிரச்சினையை சமாளிக்க அவர்கள் கொண்ட இடர்பாடுகள், என்ன நடந்தது என்பது
பற்றிப் பேசுகையில் அவர்கள் கொண்ட வெட்கம்—இவைதான்
அவருடைய படைப்புக்கள் முழுவதிலும் மீண்டும் மீண்டும் வருகின்றன.
கிராஸே இந்த வெட்கத்தை வலுவாக உணர்ந்திருந்தார். தான்
Waffen SS
இல்
உறுப்பினராக இருந்ததை ஒப்புக் கொள்ள 60 ஆண்டுகாலம் பிடித்தது என்பதில் ஒரு சோகம்
கலந்த விந்தை உள்ளது. (கிராஸ்
Waffen SS
இல்கொண்டிருந்த தொடர்பு இப்பொழுது கூறப்படுவது போல் இரகசியமானது ஒன்றும் அல்ல.
அமெரிக்கர்களின் காவலில் இருந்து அவரை விடுவித்த ஆவணங்கள்,
Waffen SS
இல் அவர் உறுப்பினராக இருந்ததைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. பல தசாப்தங்களாகப்
பொதுமக்கள் இவற்றைப் பார்த்திருக்க முடியும்; ஆனால் எவரும் இதைச் சரிபார்க்க
முன்வரவில்லை. ஒரு ஜேர்மனிய தொலைகாட்சி நிறுவனத்தின் தகவல்படி, பிரெஞ்சுச்
செய்தித்தாள்
Figaro
சில
ஆண்டுகளுக்கு முன் அவர்
Waffen SS
இல் உறுப்பினராக இருந்தது குறித்துத் தகவல் கொடுத்தது, ஆனால் அந்த
நேரத்தில் இந்த வெளிப்படுத்தல் குறித்து ஜேர்மனியில் பிரதிபலிப்பு ஏதும் இல்லை.
இப்பிரச்சினை குறித்து
Peeling the Onion
இல்
கிராஸ் வெளிப்படையாக எழுதுகிறார்.
Waffen SS
இல்
தன் உறுப்பினர் தன்மை குறித்து போதுமான காரணங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன.
அப்படியும்கூட, பல தசாப்தங்கள் நான் அச்சொல்லையோ இரட்டை எழுத்தையோ நானே ஒப்புக்
கொள்ள மறுத்துள்ளேன். என்னுடைய இளம் ஆண்டுகளில் மடத்தனமான பெருமிதத்தின் அடிப்படை
என நான் என்றுகொண்டவை, போர் முடிந்த பின் என்னுடைய பெருகிய வெட்க உணர்வினால் மறைக்க
முற்பட்டேன். ஆனால் சுமை நீடித்து இருந்தது; எவரும் அதை அகற்ற முடியவில்லை.”
“இலையுதிர்காலத்திலும்
மற்றும் குளிர்காலம் முழுவதும் நான் தாங்கிக்கொண்டிருந்த பீரங்கி படையினன் என்னும்
பயிற்சியை நான் பெறும்போது, பின்னர் வெளிவந்த போர்க்குற்றங்கள் பற்றி எத்தகவலும்
கிடையாது. ஆனால் தெரியாது என்னும் கூற்றுக்கள் மில்லியன் கணக்கான மக்களை
அழிப்பதிற்குத் திட்டமிடப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்ட
அமைப்புமுறையில் நான் ஈடுபட்டு இருந்தேன் என்பதை மறைக்க இயலாது. கூட்டு பொறுப்பு என
இன்று இலகுவாக அழைக்கப்படும் தீவிரப் பொறுப்பில் இருந்து நான் அகற்றப்பட்டாலும்கூட,
இன்றும் கூட அவற்றில் அப்பட்டமான எஞ்சியவை உள்ளன. என் வாழ்நாளின் எஞ்சிய ஆண்டுகளில்
இத்துடன்தான் நான் வாழ்ந்தாக வேண்டும்.”
இந்த ஒப்புதல் வாக்குமூலம் கிராஸின் அறநெறி ஆதிக்கத்தையோ அவருடைய
வாழ்வின் பணியையோ அழித்துவிடுகிறதா? தன்னுடைய பணியில் இவர் குறிப்பிட்டுள்ள
முரண்பாடுகளால் சொந்தமுறையில் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் எழுத்தாளர்
கண்டிக்கப்படலாமா? வெளிப்படையான விடை,
கூடாது என்பதுதான்.
கிராஸின் விரோதிகள் பலர்,
இந்த வாழ்க்கைநூலில் வந்துள்ள ஒப்புதலை அடினவர் சகாப்தத்தை புனருத்தானம் செய்ய
பயன்படுத்துகின்றனர். அப்பொழுதுதான் ஜேர்மனிய சமூகம் அதன் முதல், பழமைவாத,
போருக்குப் பிந்தைய சான்ஸ்லரைக் கொண்டிருந்தது.
“கிராஸ்
ஒரு கறைபடிந்த கடந்தகாலத்தைக் கொண்டிருக்கிறார்”
என்னும் வாதத்துடன், அவர்கள் நாஜி ஆட்சியின் உயர்மட்டப்
பிரதிநிதிகள் எளிதில் மாற்றம் காண்பதை தூய்மைப்படுத்த முயன்றுள்ளனர். அதேபோல்
மத்திய குடியரசின் முழுச் சட்ட அமைப்புகளையும் தூய்மைப்படுத்த முற்பட்டுள்ளனர்.
ஏதோ முதிர்ச்சியடையாத கிராஸ், தேசிய சோசலிசத்தின் இராணுவ அமைப்பில்
தொடர்பு கொண்டிருந்ததை, போருக்குப் பிந்தைய காலத்தில் நூரெம்பேர்க் இனச்சட்டங்களை
இயற்ற உதவி ஹான்ஸ் க்லோப்க, நாஜிக்களின் கடற்படை நீதிபதி ஹான்ஸ் வில்பிங்கர்,
இரகசியத்துறைத் தலைவர் ரைன்கார்ட் ஹேலன், இன்னும் பலர் போன்ற நபர்களின் வெற்றிகரமான
உத்தியோக வெற்றிகளுடன் ஒப்பிடப்படமுடியும் என்பது போல்.
கிராஸை விமர்சிப்பவர்களின் அரசியல் நோக்கம், மத்திய கிழக்கில்
அமெரிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போருக்கு ஆதரவுடன் இணைப்பவர்களின் தாக்குதல்கள்
இருப்பது இன்னும் தெளிவாகிறது. இந்த முற்றிலும் இழிந்தவாத வழிவகை ஹென்ரிக்
எம்.புரோடரால்
Spiegel
இல்
அவர் எழுதியுள்ளவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கிராஸின் பெருமை இப்பொழுது
“முடிந்துவிட்டது”
என்று அறிவிக்கும் அவர்
“இப்பொழுது
முதல் மக்கள் அவரை அவருடைய முந்தைய தோற்றத்தின் கேலிப்படைப்பு என்றுதான் கருதுவர்;
வெட்கம் கெட்டவர்களின் அரங்கத்தில்தான் அவருக்கு இடமளிப்பர்”
என்று கூறுகிறார். அமெரிக்கக் கொள்கையை கடுமையாகக் கண்டித்த
பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஹரோல்ட் பின்டரின் நோபல் பரிசு உரைக்கு கிராஸ் ஆதரவு
கொடுத்தது பற்றியும் புரோடர் குறிப்பிடத்தக்க வகையில் கோபம் கொண்டுள்ளார்.
வலதுசாரி அரசியல் பிரிவு,
மிகுந்த கூச்சலுடன், கிராஸிற்கு எதிராக உட்பொருளற்ற அறநெறி என்னும்
தடியைக் காட்டி மிரட்டுகிறது. இதனால் கடந்த காலத்தில் இருந்து பெறப்படும்
படிப்பினைகளை அடக்கவும், புதிய போர்களையும் குற்றச்செயல்களையும் நியாயப்படுத்தவும்
முனைகிறது. |