சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Student’s suicide highlights low education and social condition in plantations

இலங்கை: மாணவியின் தற்கொலை தோட்டத்துறையில் கல்வியும் சமூக நிலைமைகளும் கீழ்மட்டத்தில் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

M. Vasanthan
3 May 2012

use this version to print | Send feedback

Dayaini's family.jpg
தயாழினியின் குடும்பம்

இலங்கை பெருந்தோட்டப் பிரதேசமான ஹட்டனை அண்மித்த நோர்வுட்டில், அரசரட்னம் தயாழினி என்ற 18 வயது தமிழ் மாணவி, தான் கல்விப் பொதுத்தராதர (சாதாரண) தரப் பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டார். அவரது இத்தகைய துன்பகரமான மரணம், இலங்கையின் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரான தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பாரிய சமூக-பொருளாதார நெருக்கடிகளையும் கல்வி நிலைமை கீழ் மட்டத்தில் இருப்பதையுமே சுட்டிக் காட்டுகிறது.

சென் ஜோன்ஸ் டெல்றி தோட்டப் பாடசாலையில் படித்த தயாழினி தொழிலாள வர்க்க குடும்பத்தின் ஒரே ஒரு மகளாவார். தான் இரண்டாவது தடவையாக பரீட்சையில் தோல்வியுற்றதாக மார்ச் 26 அன்று கேள்வியுற்ற பின்னர், தயாழினி தனது வீட்டில் துணியினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். நோர்வூட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

ஹட்டனில் இருந்து 15 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள சென் ஜோன் டெல்றி தோட்டத்திற்கு உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சென்று துன்பத்தில் ஆழ்ந்திருந்த அவரது குடும்பத்தினரை சந்தித்தனர்.

தயாழினியின் பாடசாலையில் சாதாரண தரம் வரை மட்டுமே வகுப்புகள் உள்ளன. உயர்கல்வி கற்க விரும்புபவர்கள் வெகுதூரத்தில் உள்ள பாடசாலைகளுக்கு செல்லவேண்டும். 2006ம் ஆண்டு முதல் இத்தோட்டத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் மட்டுமே பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இத்தோட்டத்தின் தொழிலாளியான தயாழினியின் தந்தை கூறியதாவது: எனது மகள் மிகவும் கடும் முயற்சியெடுத்து படித்ததுடன் மிகவும் நம்பிக்கையுடனும் இருந்தாள். வழக்கமாக காலை 4 மணிக்கே எழும்பி படிக்கத் தொடங்கிவிடுவாள். இங்குள்ள இடர் மிகுந்த துர்ப்பாக்கிய நிலைமைகளில் இருந்து விடுபட்டு எமக்கு ஒரு நல்ல நிலையிலான வாழ்க்கையை பெற்றுக்கொள்ள அவள் விரும்பினாள்.

ஒரு தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளையாக தயாழினி அனுபவித்த கஷ்டங்களை விளக்கிய தந்தை, எமது சம்பளம் போதாமையால் நாம் மேலதிக வருமானத்திற்காக பால்மாடு ஒன்றை வளர்த்து பால் விற்கின்றோம். இந்த பசுவிற்கு புல்வெட்ட ஒவ்வொரு நாளும் மாலை எனக்கு அவள் உதவியாக வருவாள். வீட்டு வேலை எல்லாவற்றிலும் தாய்க்கு உதவுவாள், என்றார்.

தயாழினியின் மூத்த தமையன் சதீஷ் பிரசாத், தாம் ஒரு சிறந்த வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருப்பதாக கூறினார். தோட்டத்தில் காணப்படும் சீரழிந்த வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பதே இங்குள்ள ஒவ்வொரு பிள்ளையினதும் கனவாகும். எண்ணற்ற இன்னல்கள் மற்றும் வசதியீனங்களுக்கு மத்தியிலும் கல்வி ஒன்றே ஒரே வழியாக உள்ளது. எனது சகோதரி பெரும் முயற்சி செய்தாள். ஆனால் அம்முயற்சி தோற்றதால் வாழத் தேவையில்லை என்று அவள் நினைத்திருக்கக் கூடும், என பிரசாத் கூறினார்.

பிரசாத் மேலும் கூறுகையில், ஒரு மாணவன் உயர்தரம் கற்க வேண்டுமாயின் அவன் ஹட்டனுக்கு போய் தனியார் டுயூஷனில் படிக்க வேண்டும். அதிகரித்த டியூஷன் கட்டணத்தினாலும் அதிகரித்த போக்குவரத்து செலவினாலும் பெருமளவு மாணவர்கள் உயர் கல்வியை கைவிட்டுள்ளனர், என்றார்.

அதே தோட்டத்தைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி பேசும் போது, எமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் இலவசமாக வழங்கும் பாடசாலை துணி கடந்த ஆண்டில் இருந்து எமக்கு கிடைப்பதில்லை. எனது பிள்ளைகளுக்கு உடை, சப்பாத்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிட முடியாத நிலையில் நான் பிள்ளகளை பாடசாலையில் இருந்து விலக்கிக்கொள்ளத் தள்ளப்பட்டேன்.

ஆசிரியர்கள் தரமான உணவு கொண்டுவருமாறு பிள்ளைகளுக்கு கூறுகின்றார்கள். அப்படிப்பட்ட உணவு எம்மால் கொடுக்க முடியாததால் பிள்ளைகள் பாடசாலை போக மாட்டோம் எனக் கூறுகிறார்கள். இத்தகைய விடயங்களினால் தோட்டப் பகுதி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார்.

அவர் கூறுவதன்படி, தோட்டப் புத்தகசாலை மூடப்பட்டுள்ளதுடன் பாலர் பாடசாலை தற்காலிக மண் குடிசை ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தோட்டத் துறையில் சமூக-பொருளாதார அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளதாக கூறும் அரசாங்கத்தின் வாயளப்புக்கு முற்றிலும் மாறாக, தயாழினியின் மரணமும் மற்றும் அவரது குடும்பத்தினரதும் ஏனைய தொழிலாளர்களதும் நிலைமைகளும் அவர்களது அபிப்பிராயங்களும் தமிழ் தோட்டத் தொழிலாளரது பரிதாபகர நிலைமையையே எடுத்துக் காட்டுகின்றன.

குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) உட்பட தோட்ட தொழிற்சங்கங்கள், தாம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவே அரசாங்கத்தினுள் நுழைந்துகொண்டிருப்பதாக போலியாக கூறிக்கொள்கின்றன. அவர்கள், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் பங்காளிகளே ஆவர்.

இந்த சிக்கன நடவடிக்கைகளால் தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இ.தொ.கா. உட்பட சகல தொழிற்சங்கங்களும், தொழிலாளர்கள் மீது வறிய மட்டத்திலான சம்பளத்தை திணிக்கும் அரசாங்கத்தின் மற்றும் கம்பனிகளின் கருவாகளாகவே செயற்படுகின்றன.

அரச சார்பற்ற சஹாய என்ற நிறுவனம் 2007ல் பொதுக் கல்வி பற்றி வெளியிட்ட அறிக்கையில், தோட்டத் தொழிலாளர்களின் கல்வி நிலையைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. பெருந்தோட்டத் துறையில் பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகளில் 58 சதவீதத்தினர் கனிஷ்ட பாடசாலை தரத்துடன் நிறுத்திக்கொள்கின்றனர். 7 சதவீதத்தினரே க.பொ.த. சாதாரண தரத்தில் இருந்து உயர் தரத்திற்கு சித்தி பெறுவர். ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே (ஆண்டுக்கு 10க்கும் குறைவானவர்கள்) உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறுவர்.

கல்வியை கைவிடுபவர்களின் எண்ணிக்கை தோட்டத் துறையில் மிகவும் அதிகமாகும். ஐந்தாம் தரத்துடன் கல்வியைக் கைவிடுபவர்களது தொகை, முழு நாட்டிலும் சராசரியாக 1.4 வீதமாக இருக்கும் அதே வேளை, பெருந்தோட்டப் பகுதியில் அது 8.4 வீதமாக உள்ளது. கல்வி அமைச்சின் புள்ளி விபரப்படி, கனிஷ்ட-இடைத்தர மாணவர்களின் பரிமாற்றம், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஆகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது.

சென் ஜோன் டெல்ரி தோட்டத்தில் சுமார் 350 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஏனைய தோட்டங்களில் போலவே வீட்டு வசதி பிரச்சினை இங்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. தொழிலாளர்கள் இப்போதும் சரிந்த நிலையில் உள்ள லயன் காம்பரா என்றழைக்கபடுவனவற்றிலேயே வாழ்கின்றனர். தண்ணீர் வசதி இன்மையால் சுத்தீகரிக்கப்படாத ஆற்று நீரை குடிக்கவும் ஏனைய தேவைகளுக்கும் பாவிக்கின்றனர். அநேக தொழிலாளர்களுக்கு மலசல கூட வசதிகள் கிடையாது.

இன்னொரு பாரிய பிரச்சினை வேலையின்மையாகும். பெரும்பாலான இளைஞர்கள் பாடசாலையை விட்டு விலகி, கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்கும் வேலை தேடி செல்கின்றனர். அவர்கள் உணவகங்கள், கடைகள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் மலிந்த கூலிக்கு வேலை செய்யத் தள்ளப்பட்டுள்ளனர். சில இளைஞர்கள் தோட்டத்தில் நாளாந்தம் 90 ரூபாவுக்கு சமயாசமய தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.