WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
மே
1
ஆக்கிரமிப்பு
எதிர்ப்புக்களின்
நடைமுறை
அரசியல்
Joseph Kishore
3 May 2012
use
this version to print | Send
feedback
மே 1ம்
திகதி வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு
இயக்கம் அமெரிக்க நகரங்கள் முழுவதும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு
செய்திருந்தது. அன்றைய எதிர்ப்புக்கள் பெரும்பாலும் சிறிய அளவில் இருந்ததுடன்,
வரையறுக்கப்பட்ட அரசியல் கருத்துக்களை எதையும் வெளிப்படுத்தாததால் அவை பெரு
வணிகங்களின் கட்சிகளுக்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை. மாறாக, தீவிரமற்ற
அரசநிராகரிப்புவாதிகளின் -anarchist-
குழுக்களின் நாடகம் போன்றவற்றையும் தொழிற்சங்கங்களின் முற்றிலும்
செயல்படுத்தப்படும் மற்றும் பிற்போக்குத்தன நிலைப்பாட்டுடன் இணைந்த வகையில்
நடத்தின.
ஒரு
“பொது
வேலைநிறுத்தம்”
என்னும் தலைப்பில்
ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடப்பட்டிருந்தன. ஆனால் அவை அத்தகைய தன்மை எதையும்
கொண்டிருக்கவில்லை. உதாரணமாக வாஷிங்டன் டி.சி.யில்
Anarchist Alliance DC
Network, Occupy DC Labour Committee
இரண்டும்
AFL-CIO, Amalgamated Transit Union
உடன் சேர்ந்து
“பிற்பகல்
விளையாட்டுக்கள், நேரடி இசை, நாடகம், பணிப்பட்டறைகள், சுற்றுலா ஆகியவற்றைத்
தொடர்ந்து சைக்கிள் பயணம், ஊர்வலம், அணிவகுப்பு”
இவற்றைக்
கொண்டிருந்தன என்று
Occupy DC
வலைத் தளம் எழுதியுள்ளது.
ஆக்கிரமிப்பு எதிர்ப்புக்களின் வார்த்தைப்பிரயோகங்களும் மற்றும் இயக்கமுமே, ஆறு மாத
காலத்திற்குள்ளாக அரசியல் நடைமுறையின் பொது வடிவமைப்புக்கள் ஒருங்கிணைந்துவிட்டன.
ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதில் இன்னும் எஞ்சியிருப்பதும் பாரக் ஒபாமாவின் மறு தேர்தல்
பிரச்சாரத்தின் பின்னிணைப்பை விடச் சற்றே தீவிரத்தன்மையுடையதாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த
நிகழ்வுப்போக்கின் மிக வெளிப்படையான வடிவம்
“99%
வசந்தம்”
என்று சொல்லப்படும் ஒரு
குழு ஆகும். இது ஜனநாயகக் கட்சியின்
Moveon.org
இனால் நிறுவப்பட்ட குழு ஆகும். அனைத்து முக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் தாராளவாதப்
பிரிவுகள் இதில் பங்கு பெற்றுள்ளன. இந்த தாய்க்குழு அதன் செயலர்கள் பலரை கடந்த
இலையுதிர்கால ஆக்கிரமிப்புக்களில் பங்கு பெற்றவர்களிடம் இருந்து நிரப்பியுள்ளது.
99%
வசந்தகாலத்தின் ஆதரவாளர்கள் பட்டியலில்
AFL-CIO
வின் தலைவர் ரிச்சார்ட்
ட்ரும்கா, ஐக்கிய கார் தொழிலாளர்களில் போப் கிங், அமெரிக்க ஆசிரியர்கள்
கூட்டமைப்பின் ராண்டி வெயின்கார்ட்டனும் இன்னும் பலரும் உள்ளனர். இக்குழு
பெருநிறுவன நிர்வாகக் குழுக்களில் கூட்டங்களில் எதிர்ப்புக்களை நடத்துவதற்குப்
“பொது
அடிபணியாமை”
பணிப்பட்டடைகளுக்கு ஏற்பாடு செய்கின்றது. நவம்பர் தேர்தல்களுக்கு
முன்னதாக பல பிற தந்திர வித்தைகளையும் செய்ய உள்ளது.
மே 1ம்
திகதி “பொது
வேலைநிறுத்தம்”
நேஷன் இதழ் போன்ற தாராள வெளியீடுகளினால் அதிகம் ஆதரிக்கப்பட்டுள்ளது. அந்த
இதழ் இப்பொழுது ஒபாமா மறு தேர்தலுக்காகப் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது.
எதிர்ப்புக்கள் பொதுவாகச் செய்தி ஊடகத்தில் சாதாகமான குறிப்புக்களைப் பெறுகின்றன.
இந்த
வழிவகையை எப்படி விளக்குவது? கடந்த செப்டம்பர் மாதம் முதன் முதலாக ஆக்கிரமிப்பு
எதிர்ப்புக்கள் வெளிப்பட்டபோது, அவை விரைவில் பரந்த ஆதரவைப் பெற்றன.
“99%”
உயர்மட்ட 1% த்திற்கு எதிராக என்னும் கோஷங்கள் பொதுவாக மிகப் பெரிய
மக்கள் ஆதரவை, சமத்துவம் அற்ற நிலை மற்றும் அமெரிக்கப் பொருளாதார, அரசியல் வாழ்வின்
மீதான வோல் ஸ்ட்ரீட்டின் மேலாதிக்கத்திற்கு எதிராக எதிரொலித்தது. நவம்பர் மாதம்
டேவிஸில் கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான மிளகு தூவுதலுக்குப் பின்
ஏற்பட்டிருந்ததுபோல் சில நேரங்களில் எதிர்ப்புக்கள் தொழிலாளர்கள், மாணவர்களின்
கணிசமான பிரிவினரின் பங்கையும் ஈர்த்தன.
அரசியல்
நடைமுறையும் அதன் பல துணை அமைப்புக்களும்
—தொழிற்சங்கங்கள்,
தாராளவாத வெளியீடுகள் மற்றும் சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற போலி இடது குழுக்களும்—மிகுந்த
முழு உணர்வுடன் விடையிறுத்து எதிர்ப்புக்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல்,
பொருத்தமான வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுதல், அதற்கு எதிர்த்தன்மைகொண்ட
உள்ளடக்கத்தை தகர்த்து அதை ஜனநாயகக் கட்சியின் அரசியல் ஆதரவுக்கு முற்றாக பொருந்தி
இருக்குமாறு செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டன.
ஆக்கிரமிப்பு எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்தவர்களின் பார்வை எளிதில் இத்தகைய
நோக்கத்திற்கு வளைந்து கொடுப்பதற்குப் பயன்பட்டது.
“அரசியல்
தேவையில்லை”,
“தலைமை
தேவையில்லை”
என்ற கோஷங்கள் பலமுறை முடிவில்லாமல் ஆக்கிரமிப்புக் குழுக்களின்மீது
ஆதிக்கம் செய்தவர்கள் கூறியது உண்மையில் ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கக்
அமைப்பின் நடைமுறை அரசியலுடன் முற்றிலும் பொருந்தியிருந்தது. உண்மையில் அவை
கொண்டிருந்த பொருள் எந்தச் சுயாதீன அரசியலும் கூடாது, எந்தச் சுயாதீனத்
தலைமையும் கூடாது என்பதுதான்.
எதிர்ப்புக்களின் மையத்தில் இருந்தவர்களின் சமூக, அரசியல் பார்வை விரைவில்
வெளிப்பட்டது. எத்தகைய தீவிரமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டாலும், இறுதியில்
எதிர்ப்புக்களுக்கு உந்துதல் கொடுத்தது செல்வம் சமூகத்தின் உயர்மட்டத்தில்
இருப்பவர்களுக்குப் மறுபங்கீடுசெய்யப்பட்டதுடனான அதிருப்தியே தவிர பொருளாதாதார
வாழ்வு முழுவதும் தீவிரமாக மறுகட்டமைப்பிற்கான ஒரு போராட்டம் அல்ல.
“99%”
என்னும் கோஷம் இந்த உண்மையைத்தான் சுட்டிக் காட்டியது; ஏனெனில் இது
மக்களின் பரந்த பெரும்பான்மையினரான தொழிலாள வர்க்கத்திற்கும் மத்தியதர வர்க்க
உயரடுக்கின் சலுகை பெற்ற பிரிவுகள், உயர்மட்ட 10 சதவிகிதம் அல்லது உயர்மட்ட 5%
ஆகியோருக்கு இடையே இருந்த ஆழ்ந்த பிளவுகளை மறைத்தது.
ஆக்கிரமிப்பு ஏற்பாடு செய்தவர்களின் அரசியலைச் சூழ்ந்திருந்தது, தொழிலாள
வர்க்கத்தின் மீதான ஆழந்த விரோதப் போக்காகும். அதன் அடக்குமுறைக்கு அதையே அவர்கள்
குறைகூறினர். தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் என்பதை அவர்கள்
ஒருபொழுதும் உறுதியாகக் காண விரும்பியதில்லை.
இந்த
அனுபவத்தில் பல முக்கிய படிப்பினைகள் உள்ளன. ஆக்கிரமிப்பு எதிர்ப்புக்களில்
ஆரம்பத்தில் பலர் ஈர்க்கப்பட்டனர். அதற்குக் காரணம் அவர்கள் சமத்துவமின்மைக்கு
எதிராகப் போராடுதல், பெருநிறுவன, நிதிய உயரடுக்கின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட
விழைந்து அதில் தோல்வி அடைந்திருந்தனர். அவர்கள் இப்பொழுது ஓர் உண்மையான எதிரான
இயக்கம் முற்றிலும் மாறுபட்ட அடித்தளமான முதலாளித்துவ முறைக்கு எதிராகத் தொழிலாள
வர்க்கத்தின் சுயாதீன அரசியல் திரட்டின் மூலம்தான் அபிவிருத்திசெய்ய முடியும்
என்பதை எதிர்கொண்டனர்.
ஆக்கிரமிப்பு எதிர்ப்புக்கள் சீரழிவு பரந்த தொழிலாள வர்க்க மக்கள் எதிர்கொள்ளும்
ஆழ்ந்த பொருளாதார, சமூக நெருக்கடியின் சூழ்நிலையில் நிகழ்கின்றது. பெரும்பாலான
மக்களுக்கு எந்த உண்மை நலன்களையும் தோற்றுவிக்காத மிகவும் பலவீனமான
“மீட்பு”
மற்றொரு வீழ்ச்சிக்குத்தான் வழியமைக்கின்றது.
ஆளும்
வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான உரிமைகள்மீது கடுமையான தாக்குதலைச்
செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. நவம்பர் தேர்தல்களில் ஒபாமா அல்லது ரோம்னி எவர்
வென்றாலும் இருமடங்காக்கப்படும் தாக்குதலைத்தான் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற
சமூகநலத் திட்டங்களுக்கு எதிராகச் செயல்படுத்துவர். அதேநேரத்தில், பெருநிறுவன
மற்றும் நிதிய உயரடுக்கின் அரசியல் பிரதிநிதிகள் இப்பொழுது புதிய ஆக்கிரமிப்புப்
போர்களுக்கும் மிக அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கும்
திட்டமிட்டுத் தயாரித்து வருகின்றனர்.
இத்தாக்குதலை எதிர்த்து நிற்பதற்கு, தொழிலாள வர்க்கம் தன்னுடைய சுயாதீனத் தலைமை
மற்றும் வேலைத்திட்டத்தைக் கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பு எதிர்ப்புக்களின் சாதுவான,
ஒத்துப் போகும் அரசியல் முறை அல்ல. மாறாக ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் தேவை.
தொழிலாள வர்க்கம் தன் நலன்களை யதார்த்தமாக்குவது,
அரசியல் அதிகாரத்தை அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் எடுத்துக்
கொள்வதின் மூலமும் தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் சமூகத் தேவை என்னும்
கொள்கையின் அடிப்படையில் சமூகத்தை பகுத்தறிவார்ந்த முறையில் மறுகட்டமைக்கப்படுவதன்
மூலமுமே என்பதை விளங்கிக்கொள்வதனாலேயே சாத்தியமாகும்.
இத்தகைய
வேலைத்திட்டத்திற்குப் போராடும் ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுதான்.
இதற்காகத்தான் நாங்கள் 2012 தேர்தல்களில் போட்டியிடுகிறோம். ஒரு முன்னேற்றமான பாதை
ஒன்றைக் காண விரும்பும் அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்களை,
எங்கள்
பிரச்சாரத்தில் இணைந்து சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு
கேட்டுக்கொள்கிறோம். |