WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
ஸ்பெயினின் வெளியுறவு மந்திரி பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி
“மிகப்
பெரியளவில்”
உள்ளதாக ஒப்புக் கொள்ளுகிறார்
By Vicky Short
1 May 2012
use
this version to print | Send
feedback
“புள்ளி
விவரங்கள் அனைவருக்கும் பெரும் அச்சத்தைக் கொடுப்பவை, அரசாங்கத்திற்கும் அச்சத்தைக்
கொடுக்கின்றன”
என்று மக்கள் கட்சியின்
(PP)
வெளியுறவு மந்திரி ஜோஸே மானுவல் கார்சியா-மார்கல்லோ ஸ்பெயினின் தேசிய வானொலிக்கு
“ஸ்பெயின்
மிகப் பெரியளவில் நெருக்கடியில் உள்ளதாக”
தெரிவித்தார்.
மக்கள் கட்சியின் வலென்சியா பிராந்திய அரசாங்கத்தின் தலைவரான அல்பேர்ட்டோ
பாப்ரோ,
“சமூகநல
அரசாங்கத்தை உறுதி செய்யக்கூடிய அளவிற்குத் தன்னிடம் பணம் இல்லை என்பதை அரசாங்கம்
கண்டறிந்துள்ளது”
என அறிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு சற்றுக் கூடுதலான காலத்தில் இரண்டாம் முறையாக
ஸ்பெயின் உத்தியோகப்பூர்வமான மந்த நிலையில் உள்ளது. வேலையின்மை கிட்டத்தட்ட
மக்கட்தொகையில் கால் பகுதிக்கு உயர்ந்துவிட்டது (இளைஞர்களில் பாதிக்கும் மேல்); இது
இரு தசாப்தங்களில் மிக உயர்ந்த அளவு ஆகும் என்பதுடன் கணித்ததைவிட மிக மோசமானது
ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக்
கொண்டுள்ளபடி வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறையை அரசாங்கம் குறைக்க முடியாது என்னும் அச்சங்கள் அதன் கடன்
வாங்கும் செலவுகளை அதிகரித்துள்ளன. அத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டதைவிட வங்கிக்
கடன்கள் அதிகம் என்னும் ஊகங்களும் பெருகியுள்ளன.
“இது
ஒரு சவால் விடப்பட்டிருக்கும் நிலைமையாகும். வங்கிகள் இன்னும் ஆபத்திற்கு
உட்படவில்லை என நினைக்கிறேன், ஆனால் அரசாங்கம் விரைவில் அவற்றின் பிரச்சினைகளத்
தீர்க்க முன்வரவேண்டும்.”
என்று
Deutsche Bank
இன் பொருளாதார வல்லுனர் கில்லிஸ் மோயக் கூறினார்.
இதன் விளைவாக கடன் தரத்தை நிர்ணயிக்கும் நிறுவனமான
Standard & Poor’s
நாட்டின் கடன்தர மதிப்பைக் குறைத்துள்ளது. இன்னும் கூடுதலான
குறைப்புக்களும் ஏற்படலாம்.
பிரதம மந்திரி மரியனோ ரஜோய் தான் சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்து
செயல்படுத்த இருப்பதில் உறுதியாக உள்ளார். அவருடைய அரசாங்கம் இந்த ஆண்டு 42
பில்லியன் யூரோக்கள் செலவுகளைக் குறைத்துள்ளது. இது பொருளாதார உற்பத்தியில் நான்கு
சதவிகிதத்திற்கு சமம் ஆகும்.
இதன் விளைவாக, ஸ்பெயின் மக்களில் பெரும்பாலானவர்களின் சமூக
நிலைமைகள் கிரேக்கத்தில் இருப்பவர்களுடயதைப் போல் விரைவாக மாறிக் கொண்டிருக்கிறது.
இளைஞர்கள் பாதிப்பினால் பெரிதும் இடர் உற்றுள்ளனர். ஸ்பெயினின்
வார்த்தைபிரயோகங்களில் ஒரு புதிய சொல் பிரபலமாகியுள்ளது, 2008 நெருக்கடியின் விளைவு
உணரப்பட்டவுடன்:
“Mileuristas
எனப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைகளை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்தில்
தள்ளப்பட்டு மாதம் ஆயிரம் யூரோக்கள்தான் கொடுக்கப்பட்டனர். அது இப்பொழுது
“nimileuristas”
என்னும் சொல்லாக மாறிவிட்டது—அதாவது
ஆயிரம் யூரோக்கள் கூட கொடுக்கப்படாதவர்கள் என்று.
மார்ச் மாதம்
El Pas “nimileurista
தலைமுறையின் பிரச்சினைகள், சவால்கள்மற்றும் கனவுகள்”
பற்றிய அன்றாட அறிக்கைகளை வெளியிடத் துவங்கியது.
சமூகவியல் வல்லுனரும் இளைஞரின் ஆபத்தான நிலை பற்றிய வல்லுனருமான
எஸ்டபென் சான்செஸ்,
“அனைத்துக்
குறியீடுகளும் மோசமாகிவிட்டன.... ஒன்றுகூட விடாமல்.”
“மிக
அதிக வேலையின்மை, மிக அதிக தற்காலிக வேலை விகிதம் மற்றும் மிகக் குறைந்த ஊதியங்கள்.
இது மிகவும் கொடூரமானது. எத்தகைய சாதகமான முன்னறிவித்தல்களையும் பற்றிக்கொள்ள நம்மை
அனுமதிக்கும் ஒரு தகவல்கூட இல்லை.”
என்று சான்செஸ் தொடர்ந்தார்.
உயரும் வேலையின்மை, வேலைகள் இல்லாத நிலை, பொருளாதார நெருக்கடி நீண்ட
காலத்திற்குத்தொடரும், இன்னும் மோசமாகக் கூடும் என்னும் தற்பொழுதுள்ள நம்பிக்கை
ஆகியவை மக்கள் கூட்டம் கூட்டமாக ஸ்பெயியினை விட்டு நீங்கி மற்ற இடங்களில் வேலை
கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செல்ல வைத்துள்ளது. ஜனவரியில் இருந்து மார்ச் வரை
27,004 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில்
வெளியேறியவர்களின் எண்ணிக்கையைப்போல் இருமடங்கு ஆகும்.
எஞ்சியிருக்கும் மக்களில் 4.77மில்லியன் வேலையற்று இருப்பவர்களில்
பத்தில் நான்கு பேர் எந்தவிதப் பொருளாதார உதவியையும் பெறவில்லை. 1.4மில்லியன்
மக்கள் மாதம் ஒன்றிற்கு 865 யூரோக்கள் மட்டுமே குறைந்தப்பட்சம் 4 மாதங்களுக்கு
அதுவும் அதிகப்பட்சம் 2 ஆண்டுகளுக்குப் பெறுவர். மற்றும் ஒரு 1.6 மில்லியன் மக்கள்
வேறுபட்ட உதவிநிதியைப் பெறுவர், இது மாதம் 426 யூரோக்கள் என்னும் சிறு தொகையைக்
குறிக்கும். அதன் கால ஆளவு 6 முதல் 18 மாதங்கள் ஆகும். பலரும்
“பயிற்சி”
வகை வேலைகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அவர்கள்
முழுநேர வேலையை பயிற்சித்தர ஊதியத்தில் செய்கின்றனர். ஸ்பெயினில் மணிக்கு தொழிலாளர்
செலவு என்பது ஐரோப்பிய சராசரியைவிட குறைவாக 23.3%மாக சரிந்துவிட்டது.
“ஒதுக்கிவைத்தலும்,
சமூக வளர்ச்சியும் 2012”
என்ற தலைப்பில்
Chariuty Cáritas அமைப்பின்
Fundación Foessa
வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஸ்பெயினில்
“வறுமை
மிகப் பரந்து, மிகவும் ஆழ்ந்த, நீடித்த நிலையில் முன்னைக்காட்டிலும் அதிகமாக
உள்ளது.”
வறுமைக்கோட்டு நுழைவாயிலுக்கும் கீழே உள்ள ஸ்பெயினின் இல்லங்கள் 22%
ஆகும். இன்னும் ஒரு 25%
“அபாயமான
நிலையில்”
உள்ளன. வேறுவிதமாகக் கூறினால், மக்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர்
வறுமை நிலையில் அல்லது அதற்கு வெகு அருகே வாழ்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள
84 மில்லியன் வறியவர்களில் 10.7 சதவிகிதத்தினர் ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் எனத்
தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
Cáritas
உடைய பொதுச் செயலாளர் செபஸ்தியன் மோரா கூறினார்:
“சமத்துவமற்ற
நிலை இடைவிடாமல் அதிகரித்தல் மற்றும் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே
உள்ள ஊதிய இடைவெளி, நெருக்கடியின் துவக்கத்தில் மிகப் பரந்த அளவு விரிவானது,
இப்பொழுது தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. இது சமூகத்தை
இன்னும் துருவமுனைப்படுத்தும்.”
ஸ்பெயினின் வீடுகளில் மூன்றில் ஒரு பங்கு மாத இறுதி வரை செலவுக்கு
பணத்தை கையிருப்பாக கொள்வதில் பெரும் இடர்களை அனுபவிக்கிறது. இளைஞர்கள்,
சிறுகுழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன: நாட்டின் வடபகுதியில்
இருக்கும்
Navarre
யில் வறுமைக்கூறியீடு 7% ஆகும், அதேநேரத்தில்
Extremadura
வில்அது 38% என உள்ளது.
2010ல் உதவி நிறுவனம் மிக அதிகத் தேவை உடைய ஒன்றரை மில்லியன்
மக்களுக்கு உதவியைக் கொடுத்தது. இது முந்தைய ஆண்டைவிட 20% அதிகமாகும் என்று மோரா
கூறினார்.
வீடு அற்ற நிலை பெருகிக் கொண்டிருக்கிறது. ஏனெனில்
வெளியேற்றப்படல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அடைமானம் உதவி கிடைப்பது
அரிதாகிவிட்டது. வீடுகளின் மதிப்புக்கள் கிட்டத்தட்ட 29% 2007ல் இருந்ததைவிட
அதிகமாகிவிட்டாலும், அடைமானங்கள் கிடைப்பது 45.7% குறைந்துவிட்டன.
வீடுகளில் வசிக்கும் முதியவர்களுக்கான கவனத்திற்கு நகரசபைகளும்
வழங்கி வந்த உதவியை அரசாங்கம் வெட்டிவிட்டது. ஓய்வூதியம் பெறுவோர் முன்பு இலவசமாகக்
கிடைத்த தங்கள் மருந்துச் செலவுகளுக்காக 10% கொடுக்க வேண்டியுள்ளது. இது எட்டு
மில்லியன் மக்களைப் பாதிக்கும். மற்ற
“வேலை
செய்யும் மக்களுக்கு”
மருந்துகளுக்கான செலவுகளும் 10% அதிகரித்துள்ளன;
குடியேறிய தொழிலாளர்கள் மருத்துவப் பாதுகாப்பைப் பெறுவது இன்னும்
கடினமாகும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முன்பு,
வசிக்கும் இடம் பற்றிய சான்றிதழ் முன்வைத்தால் போதும் என்று இருந்தநிலையில்,
இப்பொழுது அவர்கள் ஸ்பெயினில் வாழ்வதற்கான
“நிதிய
உரிமை”
கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை அளிக்க வேண்டும். |