WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சுத் தொழிற்சங்கங்களும் குட்டி முதலாளித்துவக் குழுக்களும் மே தினப் பேரணிகளில்
முதலாளித்துவ “இடது”
வேட்பாளருக்கு ஆதரவுக் குரல் எழுப்பின
By Kumaran Ira
2 May 2012
use
this version to print | Send
feedback
நேற்று பிரான்சில் தொழிற்சங்கங்களும் மற்றும் குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சிகளும் நாடு முழுவதிலும் மே தின ஊர்வலங்களுக்கு ஏற்பாடு
செய்திருந்தன.
சர்வதேசப் பாட்டாளி வர்க்க விடுமுறை தினத்தை இவை,
ஒரு அரசியல் மோசடியாக,
மே
6
தேர்தலில் வலதுசாரியைச் சேர்ந்த நடப்பு ஜனாதிபதியான நிக்கோலோ
சார்க்கோசிக்கு எதிராக,
சிக்கன நடவடிக்கை ஆதரவு மற்றும் போர் ஆதரவு வேட்பாளரான சோசலிஸ்ட்
கட்சியை(PS)சேர்ந்த
ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஹாலண்டுக்கு ஆதரவு திரட்டப் பயன்படுத்தின.
பாரிசில் பேரணி
இந்த ஊர்வலங்களில் தொழிற்சங்கங்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது.
ஸ்ராலினிச ஆதிக்கம் உடைய
CGT(தொழிலாளர்
பொதுக் கூட்டமைப்பு,
CFDT (PS
உடன் இணைப்பு கொண்டது),
FSU,
Solidaire
மற்றும்
UNSA
ஆகியவை இவற்றில் அடங்கும்.
இவற்றுக்கு
PS
மற்றும் அதன் அரசியல் துணைக்கோள்களின்
(ஸ்ராலினிச
பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி
(PCF),
ஜோன் லூக் மெலன்சோனின் இடது கட்சி
(PG,
புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக்
கட்சி மற்றும்
LO (தொழிலாளர்
போராட்டம்)
போன்ற குட்டி முதலாளித்துவ
”இடது”
குழுக்கள் ஆகியவை)
ஆதரவு இருந்தது.
பிரான்ஸ் எங்கிலும் நடந்த சுமார்
300
ஆர்ப்பாட்டங்களில்
750,000
பேர் வரை பங்கெடுத்ததாக
CGT
கூறியது.
இதில் பாரிசில்
250,000
பேரும்,
துலூஸில்
40,000
பேரும்,
மார்சையில்
20,000
பேரும்,
போர்டேக்ஸில்
12,000
பேரும்,
அத்துடன் லியோன்,
நான்ஸி மற்றும் நான்ந் இல்
10,000
பேரும்,
ஸ்ட்ராஸ்போர்க்,
மொன்ட்பெல்லியர்,
லிமோஷ் மற்றும் அமியானில்
3000
இல் இருந்து
10,000
வரையான பேரும் பங்கெடுத்தனர் என்று அது தெரிவித்தது.
ஆயினும்,
பிரான்சு எங்கிலும்
300,000
பேர் ஊர்வலத்தில் பங்கெடுத்தனர் என்றும் பாரிஸில்
48,000
பேர் பங்கெடுத்தனர் என்றும் பிரான்சின் உள்துறை அமைச்சகம்
தெரிவித்தது.
பாரிசில் மூடல் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து நிற்கும்
Aulnay-sous-Bois
இல் இருக்கிற
Peugeot/Citroen
வாகன உற்பத்தி ஆலையில் இருந்து தொழிலாளர்கள் இந்த ஊர்வலத்தில்
பங்கெடுத்தனர்.
ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இந்தப் பேரணியில் கலந்து
கொண்டனர்.
”PSA
ஒல்னேயை மூடாதே”என்கிறது
பதாகை.
ஊர்வலத்தின் தலைமையில்
CGT
தலைவரான பேர்னார்ட் திபோவும்
CFDT
இன் பிரான்சுவா செரெக்கும் அருகருகே நடந்து வந்தனர்.
CGT, FSU
மற்றும்
Solidaires
ஆகியவை பகிரங்கமாக ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளன.
ஹாலண்டுக்கு வாக்களிப்பாரா என்று கேட்டபோது திபோ,
Europe 1
இடம் கூறினார்:
“ஆம்,
குடியரசின் நடப்பு ஜனாதிபதி தோற்கடிக்கப்படுவதற்கு
CGT
அழைப்பு விடுத்திருக்கிறது.”
PS
இன் செயலர் மார்டின் ஆப்ரி,
2007
ஆம் ஆண்டின் ஜனாதிபதி வேட்பாளரான செகோலின் ரோயால் மற்றும் ஹாலண்டின்
பிரச்சார இயக்குநர் மானுவல் வால்ஸ் ஆகிய முன்னணி
PS
உறுப்பினர்களும்,
அவர்களுடன் முந்தைய சுற்றில் இடது முன்னணியின் வேட்பாளராய் இருந்த
ஜோன் லூக் மெலன்சோன் மற்றும் முன்னணி
PCF
உறுப்பினர்களும் இந்த ஊர்வலத்தில் பங்குபெற்றனர்.
ஹாலண்டுக்கு வாக்களிக்க மெலன்சோன் அழைப்பு விடுத்தார்.
அவர் கூறினார்:
“நாம்
சார்க்கோசிக்கு எதிராக அணிதிரட்டிக் கொண்டிருக்கிறோம்,
ஞாயிறன்று அவரை நாம் தூக்கியெறிவோம்.
நாமெல்லாம் ஏன் இங்கே இருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் தெரியும்.”
குட்டி முதலாளித்துவ
“இடது”களான
NPA
மற்றும்
LO
வின் உறுப்பினர்கள்
PS
மற்றும் இடது முன்னணி உறுப்பினர்களுடன் இணைந்து ஊர்வலத்தில்
சென்றனர்.
போர்தோவில் ஊர்வலத்தில் பங்கேற்ற
NPA
இன் ஜனாதிபதி பிலிப் புட்டு ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைத்தார்.
”ஹாலண்டுக்கு
வாக்களிப்பதை ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் சார்க்கோசியைத்
தூக்கியெறிவதற்கான கருவியாகக் கொள்வோம்.
சார்க்கோசி போனால்,
நமக்கெல்லாம் வெற்றி பெற்ற உணர்வு வரும்,
அது நம்மை மேம்பட்ட வகையில் உணர வைக்கும்,
கூடுதலான அணிதிரட்டல்களுக்கு நம்மை அனுமதிக்கும்.”
PS
அரசாங்கத்தில் இருந்த போது,
அதிலும் குறிப்பாக
PS
ஜனாதிபதியான பிரான்சுவா மித்திரோன்
1983ல்
அமல்படுத்திய
“சிக்கன
நடவடிக்கைத் திருப்ப”த்திற்குப்
பின்னர் அமல்படுத்தப்பட்ட தொழிலாளர்-விரோதக்
கொள்கைகளை
PCF, NPA
மற்றும் பிற குட்டி-முதலாளித்துவ
சக்திகள் எல்லாம் பல தசாப்தங்கள் ஆதரித்ததன் விளைவே இத்தகைய அறிக்கைகள் எல்லாம்.
இந்தக் கட்சிகள் எல்லாம் தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கும் சமூக
மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளின் விடயத்தில் உணர்ச்சியற்று இருக்கின்றன.
இதனை ஹாலண்டுக்கு தேர்தல் பிரச்சார ஊர்வலமாய் மாற்றுவதற்கு ஒவ்வொரு
முயற்சியையும் இவர்கள் செய்தனர்.
வேலைகள்,
வாங்கும் திறன்,
இனவாதத்திற்கும் வெளிநாட்டினர் மீதான குரோதத்திற்கும் எதிரான
போராட்டம் ஆகியவற்றுக்காக ஹாலண்ட் போராடுவதாக இவை மோசடித்தனமாய்க் கூறிக் கொண்டன.
பத்து வருடங்களுக்கு முன்பு,
இந்த சக்திகள் எல்லாம்,
முதல் சுற்றில்
PS
வேட்பாளரான லியோனல் ஜோஸ்பனை நவ பாசிச தேசிய முன்னணி(FN)வேட்பாளர்
ஜோன் மரி லு பென் தோற்கடித்த பின்னர்,
இரண்டாம் சுற்றில் அவருக்கு எதிராக அப்போது ஜனாதிபதியாக இருந்த வலது
சாரி ஜாக் சிராக்குக்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்தன.
கடந்த பத்து வருடங்களில் ஆளும் வர்க்கத்தால் ஊக்கப்படுத்தப்பட்ட
பிற்போக்குத்தனமான சமூக மற்றும் ஜனநாயக-விரோத
நடவடிக்கைகளுடன் சமரசத்தை மேற்கொண்டு விட்டு,
இவர்கள் மறுபடியும் தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை பிறழச்
செய்வதற்காக ஒரு பிற்போக்குத்தனமான
PS
அரசாங்கத்திற்காகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நெவேர் இல் முன்னாள் பிரதமர் பியர் பெரெகோவோவிக்கு நினைவஞ்சலி
செலுத்தச் சென்று விட்டதால் இந்த ஊர்வலங்களில் கலந்து கொள்ளாத ஹாலண்ட் சமூகச்
செலவினங்களை வெட்டுவதற்கு தொடர்ந்து உறுதி பூண்டு வருகிறார்.
சார்க்கோசியின் வெளியுறவுக் கொள்கையுடன்
-
இவர் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பிரெஞ்சு
ஏகாதிபத்தியத்தின் போர் முயற்சிகளை,
சென்ற ஆண்டில் லிபியாவிலும் இப்போது சிரியாவிலும்,
தீவிரப்படுத்தியிருக்கிறார்
-
தனக்கு எந்த கருத்துபேதங்களும் இல்லை என்று இவர் கூறியிருக்கிறார்.
ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னதாய்,
ஏப்ரல்
30
அன்று,
பிரான்சில் சமூகச் சட்டங்களுக்காக பேசுவதில் தொழிற்சங்கங்களின்
பாத்திரத்தைப் பாராட்டி அச் சங்கங்களுக்கு ஹாலண்ட் ஒரு கடிதம் அனுப்பினார்.
தான் தேர்ந்தெடுக்கப்பட்டால்
“ஒரு
பெரும் சமூக மாநாட்டுக்கு”
அழைப்பு விட இருப்பதாக அவர் கூறினார்.
“கட்டளையிடுவதில்
இருந்து ஆலோசனை செய்வதற்கும்,
தனிப் பிரசங்கங்களில் இருந்து விவாதங்களுக்கும்,
தூரத்தில் இருந்து கேட்பதில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும்
நாம் கடந்து செல்ல வேண்டும்”
என்று எழுதிய அவர்,
தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொழிற்சங்கங்களுடன் இணைந்து வேலை செய்ய
இருப்பதை வலியுறுத்தினார்.
தொழிற்சங்கங்களுக்கு சார்க்கோசி
“கட்டளையிட்டது”
குறித்த ஹாலண்டின் கடுகடுப்பான பிரயோகங்கள் சார்க்கோசியின் ஐந்து
ஆண்டு கால ஆட்சியின் போது ஓய்வூதியங்களையும் தொழிலாளர் பாதுகாப்புகளையும்
வெட்டுவதில் சார்க்கோசியுடன் தொழிற்சங்கங்கள் எல்லாம் நெருங்கி வேலை செய்தன
என்கின்ற நன்கறிந்த உண்மையை வசதியாய் மறந்து விட முனைகின்றன.
இப்போது சங்கங்கள் எல்லாம் சார்க்கோசியுடன் இருந்து தங்களை தள்ளி
நிறுத்திக் கொண்டு,
ஹாலண்டை நோக்கி பார்வையமைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றன.
சார்க்கோசி தன் பங்கிற்கு,
“தொழிற்சங்கங்கள்
எல்லாம் ஜனாதிபதித் தேர்தலில் என்னை எதிர்ப்பதன் மூலமாக தொழிற்சங்கங்களின்
மூலநோக்கங்களுக்குத் துரோகமிழைக்கின்றன”
என்று குற்றம் சாட்டினார்.
சார்க்கோசி தொழிற்சங்கங்களை விமர்சனம் செய்த பின்னர்,
பிரதமர் பிரான்சுவா ஃபிய்யோன் அவற்றின் பாத்திரத்தைப் பாராட்டினார்.
“தொழிற்சங்கங்கள்
மீதான இத்தகைய விமர்சனங்களை நான் விரும்பவில்லை,
ஏனென்றால் பொருளாதாரமும் பிரெஞ்சு சமூக அமைப்பும் இயங்குவதற்கு இவை
அவசியமானதாகும்”
என்றார் அவர்.
தொழிற்சங்கங்களும்,
தங்கள் பங்கிற்கு,
தங்கள் உதவி இல்லாமல் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சமூக வெட்டுகளை
அமல்படுத்துவது சாத்தியமில்லாதது என்பதைத் தெளிவாக்கி விட்டன.
CFDT
இன் பிரான்சுவா செரெக் பட்டவர்த்தனமாய் கூறினார்:
“2003
ஆம் ஆண்டின்
[ஓய்வூதிய]
சீர்திருத்தங்களை அமல்படுத்த
CFDT
மீது நம்பிக்கை வைக்க முடியும் என்பதை பிரதமர் அறிவார்.
சீர்திருத்தங்களை தடுக்கும் ஒரு அமைப்பாக நாங்கள் இருக்கவில்லை.”
திங்களன்று,
செரெக்
Liberation
நாளிதழுக்கு ஒரு நேர்காணலை வழங்கினார்.
வரவிருக்கும் அரசாங்கத்தின் கீழான ஊதிய வெட்டுகளையும் பிற சமூக
வெட்டுகளையும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பான
MEDEF
உடன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க தொழிற்சங்கங்கள்
திட்டமிட்டுள்ளதை அவர் தெளிவாக்கினார்.
“ஆகவே
ஒரு உண்மையான முதலீட்டுக் கொள்கையை நாங்கள் முன்னெடுப்போம்,
அத்துடன் தொழிலாளர் செலவு குறித்த ஒரு விவாதத்திற்கும் நாங்கள் அஞ்ச
மாட்டோம்.”
என்றார் அவர்.
|