WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
Spanish debt crisis pushing global economy to the brink
ஸ்பெயினின் கடன் நெருக்கடி உலகப் பொருளாதாரத்தை உடைவின் விளிம்பிற்கு தள்ளுகிறது
By Nick Beams
30 April 2012
Back to screen version
ஐரோப்பிய மத்திய வங்கி நிதியச் சந்தைகளில் அதன் சமீபத்திய தலையீட்டை
ஆரம்பித்த நான்கே மாதங்களில், நிதிப்பற்றாக்குறையான வங்கிகளுக்கு மிகக் குறைந்த
வட்டியில் மொத்தம் 1 டிரில்லியன் யூரோக்களைக் கொடுத்தபின், ஐரோப்பிய நிதிய
அமைப்புமுறை நீண்டகால உலக தாக்கத்தை கொடுக்கும் புதிய நெருக்கடியை நோக்கிச் சென்று
கொண்டிருக்கிறது.
நீண்டகால மறுநிதி நடவடிக்கைகளின்
(LTRO)
கீழ் ஐரோப்பிய மத்திய வங்கி எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஐரோப்பா
முழுவதும் நிதியச் சந்தைகளின் வலியுறுத்தலில் சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கைகள்
இவற்றின் விளைவுதான் புதுப்பிக்கப்பட்டுள்ள சந்தைக் கொந்தளிப்பு ஆகும்.
கிரேக்கம் கிட்டத்தட்ட செலுத்துமதியின்மையை அடையலாம் என்பது கடந்த
ஆண்டின் இறுதியில் சந்தைகள் கரைப்பிற்கு உட்படக்கூடிய நிலையைத் தோற்றுவிக்கும் என்ற
அச்சுறுத்தலைக் கொடுத்ததால், நிதியப் புயலின் மையம் ஸ்பெயினுக்கு மாறியுள்ளது. இது
ஐரோப்பாவின் நான்காம் பெரிய பொருளாதாரம் ஆகும். கடந்த வாரம், ஸ்பெயினில் வேலையின்மை
விகிதம் கிட்டத்தட்ட 25% என உயர்ந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது.
வேலையின்மை விகிதத்தில் பெரும் ஏற்றம் என்பதற்கு முன் ஸ்டாண்டர்ட் &
பூர் என்னும் கடன்தரம் நிர்ணயிக்கும் அமைப்பு இந்நாட்டின் கடன்தரத்தைக் கீழே
குறைத்துள்ளது என்னும் அறிவிப்பு வந்துள்ளது. அந்த அறிவிப்பு ஸ்பெயினின் வங்கிகள்
முகங்கொடுக்கும் ஆபத்துங்கள் பற்றி எச்சரித்து, பொருளாதாரம் இன்னும் ஆழ்ந்த
மந்தநிலையை அடையும் என்றும் கணித்துள்ளது. ஸ்பெயினின் கடன்களில் கடன்தரக் குறைப்பு
இந்த ஏழு மாதங்களில் மூன்றாம் முறையாகச் செய்யப்பட்டுள்ளது.
“ஸ்பெயினின்
பொருளாதார வளர்ச்சி, அதன் வரவு-செலவுத்
திட்ட செயல்பாடுகள் இவற்றைப் பற்றி நாங்கள் காணும் கணிசமான அபாயத்தையும் மற்றும்
அரசாங்கத்தின் கடன்திருப்பி செலுத்துவதில் இது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு என்பன
நீண்டகால கடன்தரம் பற்றிய எதிர்மறை முன்னறிவிப்பில் பிரதிபலிக்கிறது”
என்று
S&P
கூறியுள்ளது. ஸ்பெயினின் பொருளாதாரம் இந்த ஆண்டு 1.5% சுருங்கும்
என்றும் 2013 ல் 0.5% சுருங்கும் என்றும் இது கணித்துள்ளது; முன்னாதாக இது 2012ல்
0.3% விரிவாக்கம் இருக்கும், மறு ஆண்டு 1% விரிவாக்கம் இருக்கும் எனக்
கூறியிருந்தது.
ஸ்பெயினின் வெளியுறவு மந்திரி ஜோஸ் மானுவல் கார்சியா-மார்கல்லோ நாடு
“மிகப்
பெரியளவில்”
நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும், அதே நேரத்தில் ஸ்பெயினின்
வங்கி முறை ஆண்டு இறுதிக்குள் 120 பில்லியன் யூரோக்கள் பிணை எடுப்பை நாடக்கூடும்
என்ற கணிப்புக்களும் உள்ளன.
பலமான ஐரோப்பியச் சக்திகளுக்கு, குறிப்பாக ஜேர்மனிக்கு, ஒரு தெளிவான
எச்சரிக்கை என்னும் முறையில், கார்சியா-மார்கல்லோ,
நிலைமையை டைடானிக்குடன் ஒப்பிட்டார்;
“இங்கு
மூழ்குதல் நடக்குமானால், முதல் வகுப்புப் பயணிகளும் மூழ்குவர்”
என்றார் அவர்.
ஸ்பெயினில் நெருக்கடி தொடர்ந்தால், அது விரைவில் இத்தாலிக்கும்
ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் என்ற அச்சங்கள் உள்ளன. யூரோப்பகுதியின்
மூன்றாம் பெரிய பொருளாதாரமான இத்தாலி, கிட்டத்தட்ட 1.9 டிரில்லியன் கடன்கள் கொடுக்க
வேண்டும். இது ஸ்பெயினின் கடனான 734 பில்லியன் யூரோக்களைப் போல் இரு மடங்கு அதிகம்
ஆகும். பிரான்சின் கடன்தர மதிப்பும் மீண்டும் குறைக்கப்படலாம் என்ற அச்சங்கள்
உள்ளன.
ஸ்பெயின் நாட்டு வங்கிகளின் ஆபத்தான நிலைமை கடந்த வாரம் சர்வதேச
நாணய நிதியம்-
IMF-
விடுத்த அறிக்கை ஒன்றில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில்
ஸ்பெயினின் நிதித் துறை
“முன்னோடியில்லாத
விகிதத்திற்கு”
நெருக்கடியைக் கொண்டது என்றும் நிலச்சொத்து
“எழுச்சி-வெடிப்பு
வட்டத்தினால்”
கணிசமான இடர்கள் ஏற்பட்டன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது
கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு வடிவமைப்பில் உள்ள பலமற்ற தன்மையை
அம்பலப்படுத்தியுள்ளதுடன், சேமிப்புக்கள் என்று இல்லாமல், நிதியச்சந்தைகள் மூலம்
பணம் திரட்டுதலில் உள்ள கூடுதல் நம்பிக்கையின் ஆபத்து பற்றியும்
அம்பலப்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் வங்கிகள் பற்றிய அசாதாரணமான அப்பட்டமான அறிக்கையில்,
சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாவது:
“நிதிய
உறுதிப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, குறிப்பாக மிக பெரிய இந்த வங்கிகள்
தங்கள் இருப்பு நிலைக் குறிப்புக்களை வலுப்படுத்தவும், நிர்வாகம் நடைமுறைச்
செயற்பாடுகளை வலுப்படுத்தவும் விரைவான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்கின்றன.”
“மிகப்
பெரிய”
வங்கி என்னும் குறிப்பு பாங்கியா-
Bankia-
பற்றியது ஆகும். இது ஏழு சேமிப்பு வங்கிகளைக் குறிக்கிறது. சரிந்துவிட்ட நிலச்
சொத்துக் குமிழில் அவற்றின் ஈடுபாடு காரணமாக அவை குறிப்பிடத்தக்க வகையில் பாதிப்பை
எதிர்கொள்ளும்.
ஆனால்,நெருக்கடி ஸ்பெயின் நிலைமைகளின் விளைவு மட்டும் அல்ல.
ஐரோப்பிய மத்திய வங்கி அதன்
LTRO
திட்டத்தின்கீழ் செயல்படுத்திய
“மீட்பு”
நடவடிக்கைகள் எனப்படுபவற்றின் விளைவினாலும் ஏற்பட்டுள்ளது.
இக்கொள்கையின்படி, பலவீனமான வங்கிகள் 1% வட்டியில் ஐரோப்பிய மத்திய
வங்கியால் நிதிகளைப் பெற்றன. இது நிதிய முறை முழுவதும் நீர்மை நெருக்கடி பரவாமல்
தடுப்பதற்குக் கொடுக்கப்பட்டது. இக்கொள்கை கடந்த டிசம்பர் மாதம் ஐரோப்பா லெஹ்மன்
பிரதர்ஸ் நெருக்கடி அளவை ஒட்டிய பெரும் நெருக்கடியை முகங்கொடுக்கிறது என்ற
எச்சரிக்கைகளுக்கு இடையே தொடங்கியது.
ஆனால், ஐரோப்பிய மத்திய வங்கியின் நடவடிக்கைகள் நீண்டகாலத் தீர்வு
எதையும் அளிக்கவில்லை. உண்மையில் அவை பிரச்சினைகள் தீவிரப்படுத்துவதற்குத்தான்
உதவின. ஏனெனில் நிதிகளைப் பெற்ற பலவீனமான வங்கிகள் அவற்றை உண்மையான பொருளாதாரத்தின்
நிதிய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவில்லை, மாறாக எளிதான இலாபங்கள் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் அரசாங்கக் கடன் பத்திரங்களை வாங்கின. இதன் விளைவாக மிகப்
பலவீனமான வங்கிகளின் விதி இப்பொழுது இன்னும் நெருக்கமான பெரிய கடன் பிரச்சினைகளை
உடைய அரசாங்கங்களின் விதியுடன் பிணைந்துள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் செயல்கள் நிதியச் சந்தைகள் இந்த ஆண்டின்
முதல் நான்கு மாதங்களில் குறுகியகால ஏற்றத்தை நிதியச் சந்தைகளுக்கு அளித்தன
என்றாலும், கொந்தளிப்பு மீண்டும் கடுமையான வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது
கவலைகள் வங்கிகள் அரசாங்கப் பத்திரங்களை வாங்குவதற்குப் பணம் இல்லாமல் உள்ளன என்பது
அதிகரித்துவிட்டதுதான்.
ஸ்பெயின் மற்றும் இத்தாலிய அரசாங்கக் கடன்களின் வட்டி விகிதங்களில்
சமீபத்தில் ஏற்பட்டுள்ள உயர்வில் இந்த அச்சங்கள் பிரதிபலிக்கின்றன. ஸ்பெயினின்
கடன்மீதான வட்டி விகிதம் நெருக்கடிக்கட்டமான 6
%
இனை
சமீப நாட்களில் அணுகுகிறது. ஜனவரி மாதம் 7%த் தொட்டு, மார்ச் மாதம்
4.5% என்று சரிந்த இத்தாலியப் பத்திரங்கள் மீதான வட்டிவிகிதம் இப்பொழுது மீண்டும்
5.63% என உயர்ந்துவிட்டன.
யூரோப்பகுதிப் பொருளாதாரங்களுக்கு எதிராக தனியார் முதலீட்டு
நிதியங்கள் பந்தயம் கட்டுவதாகக் கூறப்படுகின்றது.
ஏனெனில் அவை மேலதிக பணப்புளக்கத்தை அதிகரிப்பது என்பது நீடித்த தீர்வை அளிக்கவில்லை
என அவை கருதுகின்றன. பைனான்சியல் டைம்ஸ் கொடுத்துள்ள ஒரு தகவல்படி, ஏராளமான
தனியார் முதலீட்டு நிதியங்கள்
“யூரோப்பகுதியின்
பிரச்சினைகள் ஆழ்ந்துள்ள நிலை, அது இன்னும் தீவிர நெருக்கடியைத்தான் வரும்
மாதங்களில் இதுவரை யூரோப்பகுதி அனுபவித்திராத அளவிற்குச் செலுத்தும் என்று
நேரடியாகப் பந்தயம் கட்டுகின்றன”
எனத் தெரிகிறது.
நிதிய உறுதியற்ற தன்மை இப்பொழுது ஐரோப்பியப் பொருளாதாரத்தை இன்னும்
ஆழ்ந்த மந்தநிலையில் தள்ளியுள்ள சிக்கன நடவடிக்கைகளினால் அதிகமாகியுள்ளது.
இதையொட்டி எதிர்மறை பின்னூட்ட நிலைப்பாடுதான் உருவாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சி
சரிகையில், வரிமூலமான வருவாய்கள் குறைகின்றன. இது கடன் நிலை இன்னும் மோசமாகும்
நிலைக்குத் தள்ளும். இதனால் அரசாங்கப் பத்திரங்கள் மீதான வட்டிவிகிதங்கள் இன்னும்
அதிகமாகும்.
இந்த நிகழ்வுப்போக்குத்தான் ஸ்பெயின் உதாரணமாக உள்ளது. வரிமூலமான
வருவாய்கள் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் யூரோக்கள் குறைந்துவிடும் என
மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 374,300
வேலைகள் இழக்கப்பட்டுவிட்டன என்பதாகும். அதே நேரத்தில் ஸ்பெயினின் வங்கிகள்
ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து 316 பில்லியன் கடன் வாங்கியுள்ளதாக
மதிப்பிடப்பட்டுள்ளது. இது அவற்றின் மொத்த இருப்புநிலைக் குறிப்பில் 11% த்திற்குச்
சமம் ஆகும். 10% இற்கு அதிகமான எதுவும்
“
பிரச்சனைக்குரிய புள்ளி”
எனக்கருதப்படும். இதன் பின்பு மேலதிக நிதி செலுத்தப்படுவது
அவசியமாகின்றது.
அமெரிக்க நிதிய நிறுவனங்களின் அச்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில்,
முன்னாள் அமெரிக்க நிதி மந்திரி லாரன்ஸ் சம்மர்ஸ், இன்றைய பைனான்சியல் டைம்ஸில்
வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் ஐரோப்பிய மத்திய வங்கி கொடுத்துள்ள
அதிகபணப்புழக்க தீர்வானது வெறும் இடைக்கால நிவாரணத்தைவிட வேறு ஒன்றும் இல்லை என
எச்சரித்துள்ளார்.
“பலவீனமான
வங்கிகள், குறிப்பாக ஸ்பெயினில், தங்கள் அரசாங்கங்களின் கடன் பத்திரங்களை அதிகமாக
வாங்கியுள்ளன. அதே நேரத்தில் வெளிநாட்டினர் தங்கள் பத்திர இருப்புக்களை
விற்றுவிட்டனர். சந்தைகள் இதையொட்டி வங்கிகள் தளரச்சி அடைந்துள்ளதைக் காண்கின்றன.
மீண்டும் ஐரோப்பா மற்றும் உலகப் பொருளாதாரமும் உடைவின் விளிம்பை நோக்கிச்
செல்லுகின்றன.”
ஸ்பெயின் நெருக்கடியின் பாதிப்பு ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றிற்கு
அப்பால் விரிவடையும், கடந்த வாரம் ஆசியா பற்றிய ஒரு அறிக்கையில் சர்வதேச நாணய
நிதியம் உலகப் பொருளாதாரம்
“அசாதாரண
பாதிப்பிற்கு உட்பட்ட நிலையில்”
உள்து என்றும்
“கூடுதலான
பின்னடைவுகள்”,
ஆசியாவிற்கு
“பெரும்
பின்விளைவுகளை ஏற்படுத்தும்”
என்றும் கூறியுள்ளது.
“குறிப்பாக,
முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளுக்கான ஏற்றுமதிகளில் தீவிர சரிவு என்பதும் மூலதனப்
பாய்வுகள் பின்னோக்கி செல்வதும் இப்பிராந்தியத்தில் செயற்பாடுகளைக் கடுமையாகப்
பாதிக்கும்.”
நிதியங்கள் பின்னோக்கி செல்வது ஏன்பது எற்கனவே தொடங்கிவிட்டது.
ஐரோப்பிய வங்கிகள் ஆசியாவிற்குக் கொடுக்கப்பட்ட கடன்களில் 2011ம் ஆண்டின் கடைசி
மூன்று மாதங்களில் 100 பில்லியன் டாலர்களை திரும்பப் பெற்றுக் கொண்டன எனக் காட்டும்
புள்ளி விவரங்களை
Bank for International Settlements
வெளியிட்டுள்ளது. |