WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
சர்வதேச
தொழிலாளர் அமைப்பின் அறிக்கை: உலகெங்கிலுமான வேலையின்மை எண்ணிக்கை 200
மில்லியனுக்கும் அதிகமாகிவிட்டது
Patrick Martin
1 May 2012
use
this version to print | Send
feedback
ILO
எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, திங்களன்று அது வெளியிட்ட
உலகத் தொழிலாளர் நிலைமைகள் பற்றிய ஆண்டு அறிக்கையில், 2012ல் 200 மில்லியனுக்கும்
மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்மையில் இருப்பர் என்று கணித்துள்ளது. ஐக்கிய நாட்டு
மன்றத்தின் இந்தப் பிரிவு 50 மில்லியன் வேலைகள் 2008ம் ஆண்டு நிதிய நெருக்கடியில்
இருந்து தகர்க்கப்பட்டுவிட்டன என்றும் குறைந்தப்பட்சம் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு
வேலைகளிலோ, ஊதியங்களிலோ உலகளாவிய மீட்பு ஏதும் இராது என்றும் கணித்துள்ளது.
World of
Work Report 2012
அறிக்கை உலக வேலையின்மை
விகிதம் 2012ல் 6.1% இருக்கும் என்று கணித்துள்ளது.
உலகின் மொத்த
வேலையின்மை 2011ல் 196 மில்லியன் என இருந்ததில் இருந்து 2012ல் 202 மில்லியன் என
ஆகும் என்று கணித்துள்ளது. வேலையின்மையின் மொத்தம் மற்றுமோர் ஐந்து மில்லியன்
2013ல் உயரும் என்றும் வேலையின்மை விகிதம் 6.2% க்கு உயரும் என்றும்
கணிக்கப்பட்டுள்ளது. (சதவிகித விகிதங்கள் செயற்கையாய் குறைவாக இருப்பதற்குக் காரணம்
ILO
ஒவ்வொரு நாடும் அளிக்கும் உத்தியோகப்பூர்வ வேலையின்மைத் தகவல்களைத்தான்
பயன்படுத்துகிறது; உண்மை விகிதங்கள் இன்னும் அதிகமாகும். உதாரணமாக, அமெரிக்காவில்
உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 8.3%, ஆனால் பகுதி நேர வேலை மட்டுமே
அளிக்கப்படுபவர்கள் அல்லது வேலை தேடுவதையே நிறுத்திவிட்டவர்களின் எண்ணிக்கையைச்
சேர்த்தால் உண்மை விகிதம் 14% ஐ நெருங்கி நிற்கும்.
வேலையின்மை
விகிதம் 2016ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக 210 மில்லியன் என்ற எண்ணிக்கை அடையும் வரை
உயர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது. அது மேலும்
கூறுவதாவது:
“இப்பொழுது
இருக்கும் வேலைகள் பற்றாக்குறையை அகற்றவும், வேலைச் சந்தையில் நுழைய
எதிர்பார்க்கப்படும் 80 மில்லியன் மக்களுக்கு வேலை அளிப்பதற்கும் போதுமான அளவு
வேகத்தை அடுத்த சில ஆண்டுகளில் உலகப் பொருளாதரம் எட்ட சாத்தியமுண்டு எனக்
கூறுவதற்கில்லை.”
இந்த
அறிக்கை பெரும்பாலான தொழில்துறை வளர்ச்சியுற்ற நாடுகளில்,
குறிப்பாக
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்,
ஏற்கப்பட்டுள்ள
கடுமையான சிக்கன நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது. சமூகநலத் திட்டங்களுக்கான செலவுக்
குறைப்புக்கள் வேலை அளிப்பதில்
“பேரழிவுதரும்
விளைவுகளை”
ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில் நிதிநிலை பற்றாக்குறைகள் உண்மையில்
அதிகரித்துள்ளன; ஏனென்றால் சிக்கன நடவடிக்கைகள் பொருளாதார மந்தநிலையை
தீவிரப்படுத்தி விட்டன என்று அறிக்கை கண்டிக்கிறது.
டஜன்
கணக்கான நாடுகள்,
குறிப்பாக
ஐரோப்பாவில், தங்கள் தொழிலாளர் சந்தைகளில்
“சீர்திருத்தங்களை”
கொண்டுவருவதற்கு
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன; இதன் மூலம் முதலாளிகளுக்கு தொழிலாளர்களை வேலைநீக்கம்
செய்வதை அல்லது ஊதியங்கள், நலன்களைக் குறைப்பதை எளிதாக்கிவிட்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட ஒவ்வொரு விவகாரத்திலும்,
“வேலை
ஸ்திரநிலையைக் குறைத்தல், ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தல்,
அதே நேரத்தில்
வேலைவாய்ப்பு நிலைகளுக்கு ஊக்கமளிக்கத் தவறுதல்”
என்பது தான்
விளைவாய் உள்ளது.
நீண்ட காலம்
வேலைவாய்ப்பின்றி இருக்கும் பெரும்படையின் வளர்ச்சி தான் விளைவாய் இருக்கிறது:
வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலை தேடுபவர்களில் 25 வயது முதல் 49 வயது
வரையானோரில் 40% பேர் நீண்டகாலமாக வேலையின்மையில் இருப்பவர்கள், ஓராண்டிற்கும்
மேலாக வேலையில் இல்லாதவர்கள் ஆவர்.
ILO
அறிக்கையில் சில முக்கிய கண்டுபிடிப்புக்கள் மேற்கோளிடப்படத் தகுதி
படைத்தவையாய் உள்ளன.
நெருக்கடியின் முன்னோடியற்ற, நீடித்த தன்மை
“இது
ஒரு சாதாரண வேலைவாய்ப்பு மந்தநிலை அல்ல. உலக நெருக்கடி நான்காம் ஆண்டு சென்றுவிட்ட
நிலையில், தொழிலாளர் சந்தையில் உள்ள சமச்சீரற்ற தன்மைகள் இன்னும் கட்டமைப்பு
மாற்றமாய் ஆகின்றன, எனவே அகற்றுவதற்கு கடினமாகிவிட்டன. நீண்ட காலம் வேலையில்
இல்லாதவர்கள் போன்ற சில குழுக்கள் தொழிலாளர் சந்தையில் இருந்தே ஒதுக்கப்பட்டுவிடும்
இடரில் உள்ளன. அதாவது ஒரு வலுவான மீட்சி இருந்தாலும்கூட அவர்களுக்குப் புதிய வேலை
கிடைப்பது என்பது கடினமாகி விடக் கூடும்.”
சிக்கன
நடவடிக்கைக் கொள்கைகளின் திவால் தன்மை:
“சிக்கன
நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளை அகற்றுவதையும் மிகப் பெரிய அளவில் மேற்கொண்ட
நாடுகளில், முக்கியமாக தெற்கு ஐரோப்பாவில், பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பின்
வளர்ச்சி தொடர்ந்து சரிந்து வந்திருக்கிறது. இந்நடவடிக்கைகள் பல இடங்களில் நிதிய
நிலைகளையும் கூட ஸ்திரப்படுத்த முடியவில்லை.”
பகுதி-நேர,
தற்காலிக,
“எப்பொழுதும்
நீக்க ஆபத்து உள்ள”
வேலைகளின் வளர்ச்சி:
“இதைத்தவிர,
வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் பெரும் பகுதியினருக்கு, வேலை என்பது
உறுதியற்றது, எந்நேரமும் ஆபத்திற்குட்பட்டது என்ற நிலை வந்துவிட்டது. வளர்ந்த
பொருளாதாரங்களில் விருப்பமற்று பகுதி நேர வேலை, தற்காலிக வேலை என்பவை
இப்பொருளாதாரங்களில் முறையே மூன்றில் இரு பங்கு, பாதிக்கும் மேல் என
அதிகமாகிவிட்டது”
இளைஞர்கள்
மீதான பேரழிவுதரும் பாதிப்பு:
“இளைஞர்
வேலையின்மை விகிதங்கள் வளர்ந்த பொருளாதாரங்களில் கிட்டத்தட்ட 80% அதிகரித்துவிட்டன;
வளரும் பொருளாதாரங்களில் மூன்றில் இரு பகுதி வளர்ச்சி அடைந்துவிட்டது. சராசரியாக
வளர்ந்த பொருளாதாரங்களில் 36% க்கும் மேலான வேலை தேடுவோர் ஓராண்டிற்கும் மேலாகப்
பணியில் இல்லை.”
உயரும்
வறுமையும், சமத்துவமின்மையும்:
“வளர்ந்த
பொருளாதாரங்களின் பாதியிலும் வளரும் பொருளாதாரங்களில் மூன்றில் ஒரு பங்கு
நாடுகளிலும் இந்நெருக்கடி வறுமை விகிதங்களை அதிகரித்துள்ளது; மூன்றில் ஒரு
பகுதிக்கு மேல் அதிகரித்துள்ளது. இதேபோல் சமத்துவமின்மையும் வளர்ந்த
பொருளாதாரங்களில் கிட்டத்தட்ட பாதி நாடுகளிலும் வளரும் பொருளாதாரங்களில் கால்வாசி
நாடுகளிலும் அதிகமாகியிருக்கிறது. கல்வி, உணவு, நிலம், கடன் வசதி ஆகியவற்றைப்
பெறுவதிலும் சமத்துவமின்மை விரிவு கண்டிருக்கின்றன.
மக்கள்
அதிருப்தி மற்றும் சமூக அமைதியின்மையின் வளர்ச்சி:
“தகவல்கள்
கிடைக்கின்ற 106 நாடுகளில் 54 சதவீத நாடுகளுக்கான சமூக அமைதியின்மைக் குறியீடு 2010
உடன் ஒப்பிடும்போது 2011ல் (குறியீட்டு எண் அதிகம் என்றால் மதிப்பீட்டு அபாய அளவு
அதிகம் எனப் பொருள்) அதிகரிப்பைக் கண்டுள்ளது. துணை சகாரா ஆபிரிக்கா மற்றும் மத்திய
கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா ஆகியவை தான் அமைதியின்மையின் மிக உயர்ந்த ஆபத்தைக்
கொண்டிருக்கும் உலகத்தின் இரு பிராந்தியங்களாய் உள்ளன.
என்றாலும் வளர்ந்த பொருளாதாரங்கள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு
ஐரோப்பாவிலும் முக்கிய அதிகரிப்புக்கள் உள்ளன.
ILO
பொருளாதார வல்லுனர்களும்
பகுப்பாய்வாளர்களும் முதலாளித்துவத்தின் தாராளவாத ஆதரவாளர்கள், அதி வலதினர் போல்
தடையில்லாச் சந்தைக்கு முரசு கொட்டுபவர்களாய் இல்லாமல்,
அதற்குப் பதிலாய் பொதுவாக கீனிசியச் சீர்திருத்த நிலைப்பாட்டை
ஏற்பவர்கள் என்கிற வகையில் அவர்கள் தொகுத்துள்ள புள்ளிவிவரங்கள் இலாப
அமைப்புமுறையின் மீதான அதிர்ச்சியளிக்கும் குற்றப்பதிவாகத்தான் உள்ளன. அவர்கள்
புள்ளி விவங்களை மட்டுமே கொடுத்துள்ளனர், ஆனால் ஒரு மார்க்சிச முன்னோக்கு மட்டுமே
தொழிலாள வர்க்கத்துக்கு அரசியல் மாற்றீட்டை அளிக்க முடியும்.
சமூகத் தேவை
பெருகிச் செல்வதற்கு இடையே,
வேலையின்மையில்
ஏற்பட்டிருக்கும் பாரிய வளர்ச்சி முதலாளித்துவ அமைப்புமுறை மீதான படுபயங்கரக்
குற்றச்சாட்டு ஆகும். மில்லியன் கணக்கான மக்களுக்கு வேலைகள் அவசியமாய் உள்ளது.
அப்படி இருந்தும் நிதிய மூலதனத்தின் சர்வாதிகாரம் மற்றும் இலாப
உந்துதலின் காரணத்தால் இந்தப் பரந்த மனித ஆற்றல் அணிதிரட்டப்பட முடியாதிருக்கிறது.
முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்விக்குப் பதிலளிக்கும் முகமாக, தொழிலாள வர்க்கம்
ஒரு திறம்பட்ட, உலகளாவிய சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும்; அதன் மூலம்
உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமைகளாயிருத்தல்,
மற்றும் உலகம்
குரோதமுடைய தேசிய அரசுகளாக
– இவை ஒவ்வொன்றும்
தனது சொந்த இலாபங்களையும் அதிகாரத்தையும் விரிவுப்படுத்திக் கொள்ள முனையும் ஒரு
முதலாளித்துவ உயரடுக்கினால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது
-
பிளவுபட்டுக் கிடப்பது ஆகிய நெருக்கடிக்கான அடிப்படைக்
காரணங்கள்மீது ஒரு நேரடியான புரட்சிகரத் தாக்குதலை நடத்த வேண்டும்.
மாபெரும்
பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவற்றை பொது
உடைமையின் கீழும் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டு வருவதன் மூலம் தொழிலாள
வர்க்கம் தன் உழைப்பின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட சமூகத்தின் செல்வத்தைத் தன்
சொந்தக் கரங்களுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்; கொண்டுவர வேண்டும். அதன்பின்
உலகப் பொருளாதாரமானது துரிதமான பொருளாதார வளர்ச்சி மற்றும்,
வறுமை மற்றும்
சமூகத் துயர ஒழிப்பு ஆகிய இரண்டையும் உருவாக்கும் வண்ணம் வரையப்பட்டு உலகெங்கிலுமான
உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களை கண்ணியமான மட்டத்திற்கு உயர்த்துகின்றதாய்
இருக்கக் கூடிய ஒரு சர்வதேசத் திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்த
வேலைத்திட்டம் வெறும் கற்பனாவாதமோ அல்லது நம்பவியலாததோ அல்ல. மாறாக, தொடர்ச்சியான
முதலாளித்துவ மந்தநிலை, சமூகத் துருவப்படல், மற்றும் ஏகாதிபத்தியப் போர்
ஆகியவற்றின் முன்னோக்கு தான் மனித இனத்தின் பரந்த பெரும்பான்மை மக்களின் நலன்களில்
இருந்து பார்க்கையில் யதார்த்தமற்றதாகவும் இன்னும் சொன்னால் முட்டாள்த்தனமானதாகவும்
இருக்கிறது. |