World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Arming of Syria’s opposition stepped up as demand for safe havens grows

பாதுகாப்புப் புகலிடங்களுக்கான கோரிக்கை பெருகுகையில் சிரியாவின் எதிர்த்தரப்பிற்கு ஆயுதம் கொடுக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன

By Chris Marsden
6 March 2012
Back to screen version

சிரிய எதிர்த்தரப்பிற்கு ஆயுதமளிப்பது தங்கள் கொள்கை என்று வளைகுடா அரசுகள், பல மாதங்கள் இரகசியமாக அவ்வாறு செய்தபின், பகிரங்கமாக அறிவித்துள்ளன.

கடந்த வியாழக்கிழமையன்று கட்டாரின் பிரதம மந்திரி ஷேக் ஹமத் பின் ஜசிம் அல்-தனி கட்டாரி முடியாட்சி  இப்பொழுது அவர்களுக்கு உதவ அனைத்தையும் செய்யும், தங்களைக் காத்துக்கொள்ள ஆயுதங்களைக் கொடுப்பது உட்பட என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து லிபியா 100 மில்லியன் டொலர்களை எதிர்த்தரப்பிற்கு அளிக்கும் என்ற அறிவிப்பு வந்தது. இப்பணம் கட்டாரில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.

கட்டார், சௌதி அரேபியாவுடன் இணைந்து லிபியாவின் தேசிய இடைக்காலக் குழுவிற்கு (NTC) ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்திருந்தது; அப்படித் தோற்றுவிக்கப்பட்ட சக்திதான் வாஷிங்டன் மற்றும் நேட்டோ சக்திகளின் பினாமியாக பின்னர் பயன்படுத்தப்பட்டது.

வெளிப்படையான இராணுவ உதவி என்னும் புதிய கொள்கை, சௌதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி சௌத் அல் பைசல் மற்றும் குவைத்தின் பாராளுமன்றத்தின் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை முதலில்  சுதந்திர சிரிய இராணுவத்தை (FSA) வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. அது ஹோம்ஸ், பாப அம்ர் ஆகிய இடங்களில் படுதோல்வி அடைந்தபின்னர் இம்முடிவு வந்துள்ளது. ஆனால் அரசியலளவின் நோக்கம் முழு இராணுவ ஆதரவு பஷிர் அல்-அசாத்தின் ஆட்சி அகற்றப்படுவதற்கு என வாஷிங்டன், பாரிஸ் மற்றும் லண்டனால் என்றுதான் உள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அனைத்துமே தங்கள் ஆதரவை ஆட்சி மாற்றத்திற்கு அறிவித்துள்ளன. ஆனால் முக்கிய நகர்ப்புற மையங்களான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் எதிர்த்தரப்பிற்கு ஆதரவு இல்லாதது குறித்து ஏமாற்றத் திகைப்பு அடைந்துள்ளன; அதேபோல் சுன்னி இஸ்லாமியவாதிகளின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட, முஸ்லிம் பிரதர்ஹுட்டினால் வழிநடத்தப்படும், அல்குவேடா போன்ற சக்திகளிடைய காணப்படும் குறைந்த போராளித்தன திறன்கள் குறித்தும் ஏமாற்றம் நிலவுகிறது.

எதிர்த்தரப்பிற்கு ஆயுதம் அளிப்பதை முடுக்கிவிடுதல் என்பது சிரிய தேசியக் குழு இயக்கத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதுடன் பிணைந்துள்ளது; பெரிய சக்திகளுக்கு அசாத்தின் வீழ்ச்சி அவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்கும் என்று நம்ப வைத்தலும் தேவையாகும்; அதாவது ஈரான் தனிமைப்படுத்தப்படல் என்பது; இது ஈராக்கில் சதாம் ஹுசைன் வீழ்ச்சியைத் தொடர்ந்த நீண்டகால உறுதியற்ற தன்மை, குறுங்குழுவாத மோதல் ஆகியவற்றைக் கொண்டுவராமல் இருக்க வேண்டும்.

சிரிய தேசியக் குழு (SNC) கடந்த புதனன்று ஒரு புதிய இராணுவப் பிரிவு FSA  உடன் பிணைப்புக்களை நிறுவியுள்ளது என்ற அறிவிப்பையும் ஒருங்கிணைத்தது. இந்த நடவடிக்கை SNC  தலைவர் புர்ஹன் காலியோனினால் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இப்பிரிவு அது விரும்பும் வகையில், வல்லுனர்களின் திறமையையும் உதவியையும் நாடலாம். என்று SNC கூறியுள்ளது.

குறைந்தப்பட்சம் 20 முக்கிய SNC உறுப்பினர்கள் முன்னதாக சிரிய தேசபக்தக் குழு (SPC) என்பதை ஆட்சியை இயன்ற அளவு உதவியுடன் வீழ்த்தும் தேசிய முயற்சிக்கு ஆதரவு கொடுப்பது என்பது சுதந்திர சிரிய இராணுவத்திற்கு ஆதரவு கொடுப்பதையும் அடக்கியுள்ளது என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளனர்.

FSA, SNC ஆகியவற்றிற்குப் பல மாதங்களாக ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன; மேற்கதைதைய சக்திகள் கொடுப்பதும் இதில் அடங்கியுள்ளது. கடந்த மாதம் துனிசியாவில் நடைபெற்ற சிரிய நண்பர்களின் மாநாட்டில் SNC  செய்தித் தொடர்பாளர் பசாமா கொட்மனி பெயரிட விரும்பாத சில நாடுகள் ஆயுதங்களை அளிக்கின்றன, அவற்றில் இராணுவத் தொலைத்தொடர்பு தொழில் நுட்பக் கருவிகள், உடல் கவசங்கள், இரவுநேரப் பார்வையளிக்கும் கண்ணாடிகள் மற்றும் பேராபத்தைக் கொடுக்கும் ஆயுதங்கள் அடங்கும் என்று குறிப்பிட்டார்.

இப்பொழுது பகிரங்கமாகப் பேசப்படும் நூற்றுக்கணக்கான மில்லியன்கள் கனரக இராணுவக் கருவிகளை அளிக்கும் நோக்கத்தில் பயன்படுத்தப்படும்; இது FSA  உடைய கூறப்பட்டுள்ள விருப்பமான துருக்கிய எல்லைக்கு அருகே பாதுகாப்புப் புகலிடங்களை அமைத்தல் என்பதை வசதிப்படுத்தும்; அதற்குப்பின் அதற்கு இராணுவப் பாதுகாப்பு லிபியா, ஈராக், யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளில் போருக்கு முன் நடத்தப்பட்ட முன்முயற்சிகள் போன்றவை மேற்கொள்ளப்படும்.

துருக்கி இதில் முக்கிய பங்கைக் கொள்ள வேண்டும்; அதுதான், SNC மற்றும் இன்னும் பெயரளவு கட்டுப்பாட்டை மட்டும் கொண்டிருக்கும் FSA இரண்டிற்கும் தாயகமாக உள்ளது; FSA ஆனது கேர்னல் ரியத் அல்-அசாத்தின் தலைமையில் உள்ளது. பைனான்சியல் டைம்ஸிடம் கேர்னல் அசாத் கூறினார், டாங்கு எதிர்ப்பு ஏவுகணைகள் நம்மிடம் இருந்தால், நாம் பாதுகாப்புப் புகலிடத்தை நிறுவி, அப்பகுதி முழுவதையும் கைப்பற்ற முடியும்.

துருக்கி மீண்டும் அசாத் ஆட்சியின் மீதான அதன் வனப்புரைத் தாக்குதல்களை அதிகரித்துள்ளது; வெளியுறவு மந்திரி அஹ்மத் டவுடௌலி சிரிய நிகழ்வுகளை 1995ல் ஸ்ரேப்ரெனிகா நிலைமையுடன் ஒப்பிட்டுப் பேசினார். சனிக்கிழமையன்று இத்தாலிய வெளியுறவு மந்திரி குலியோ டெர்சியுடன் சேர்ந்து அவர் பேசினார். சேர்பியாவில் பொஸ்னிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டது பின்னர் இனவெறிக்கொலை என்று பெயரிடப்பட்டது. டவுடௌலி சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்; அதில் எதிர்த்தரப்பிற்கு இராணுவ உதவி அளித்தலும் அடங்கும்.

பல முறையும் துருக்கிதான் சிரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்கத் தயார் என்று குறிப்புக்காட்டியுள்ளது; ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன் நேட்டோவின் ஆதரவு வேண்டும் என அது விரும்புகிறதுஇதுவரை நேட்டோ அவ்வாறு அளிக்க முன்வரவில்லை.

இப்படிப் பிராந்திய சக்திகளுக்கும் ஏகாதிபத்தி சக்திகளுக்கும் இடையே போர் முழக்கம் பற்றிய வேறுபாடு புரிந்துகொள்ளக்கூடியதுதான்; அதுவும் அவர்கள் குறிக்கும் பணயத்தையொட்டி. சிரியாவில் ஆட்சி மாற்றம் என்பது ஈரானை ஒரு பிராந்திய எதிரி என்ற நிலையிலிருந்து அகற்றுவதற்கு ஒரு படிக்கல் என்றும் ரஷ்யா மற்றும் சீனா இப்பிராந்தியத்தில் எண்ணெய்ச் செழிப்பை அடைவதை மறுக்கும் வழிவகையாகும் காணப்படுகிறது. தயக்கங்கள் ஒருபுறமும், தேவையான எச்சரிக்கை உணர்வு, ஒதுங்கி நிற்றல் என்பதைக் கையாண்டாலும்கூட, பெரிய சக்திகள் அசாத் பாத்திஷ்ட் ஆட்சியை உறுதிகுலைக்கும் நடவடிக்கையில் அதிகம் ஈடுபாட்டைக் கொண்டுள்ளன.

வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி சிரிய எல்லைக்கு அருகே FSA,SNC  ஆகியவை கோரியுள்ள வழிவகைப்படி மனிதாபிமானப் பகுதி நிறுவப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் அவர் பிரான்ஸில் இருந்த சிரிய தூதரகத்தையும் மூடிவிட்டார். ஒரு ஐ.நா. பாதுகாப்புத் தீர்மானம் மனிதாபிமானப் பகுதிக்கு ஆதரவாக, எதிர்த்தரப்புக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது, அல்லது தாழ்வாரங்களை அமைப்பதற்குத் தேவையான சட்டபூர்வ நிலைமைகளை அது உருவாக்கும் என்று அவர் கூறினார்.

சட்டப்படியோ, இல்லாமலேயோ, பிரான்ஸ் மூன்று இலக்குகளை விரும்புகிறது என்பது தெளிவுஒரு இடைப்பட்ட பகுதி, மனிதாபிமானத் தாழ்வாரங்கள் மற்றும் எதிர்த்தரப்பிற்கு ஆயுதம் அளித்தல்; அந்த இலக்கை நோக்கி அது செயல்பட்டு வருகிறது.

திங்கள் அன்று லெபனானின் Daily Star, “கிட்டத்தட்ட 13 பிரெஞ்சு அதிகாரிகள் சிரிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளனர்... ஹோம்ஸ் நகர மையத்தில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது. பிரித்தானியாவின் டெய்லி டெலிகிராப் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரக அதிகாரி ஒருவருடைய மறுப்பை மேற்கோளிட்டு, பாதுகாப்பு அமைச்சரகம் அந்த அளவு உறுதியாகக் கூறவில்லை, கூற்றை நிராகரிக்கவும் இல்லை, உறுதிபடுத்தவும் இல்லை என்று கூறியுள்ளது.

மாஸ்கோவும் சீனாவும், அசாத்திடமிருந்து ஒதுங்கி ஐ.நா.பாதுகாப்புச் சபைத் தீர்மானத்திற்குத் தங்கள் எதிர்ப்பை நிறுத்துமாறு ஊக்குவிப்பதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; இது பாதுகாக்கும் பொறுப்பு என்னும் பெயரில் போருக்கு வழி அமைக்கும். இரண்டுமே தங்கள் எதிர்ப்பை ஒரு இராணுவத் தலையீட்டிற்கு எதிராகத் தெரிவித்துள்ளன. ஆயினும்கூட போர் சார்புடைய செய்தி ஊடகங்கள் வெள்ளியன்று விளாடிமிர் புட்டின் சிரியாவுடன் எங்களுக்குச் சிறப்பு உறவு ஏதும் இல்லைஎன்று கூறியபோது அவற்றின் களிப்பை மறைக்கவில்லை.

வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் அலெக்சாந்தர் லுகஸ்ஷேவிச் ரஷ்யா சிரியாவிற்கு இராணுவ உதவி எதையும் அது வெளிநாட்டுத் தாக்குதலின் கீழ் வந்தால் அளிக்காது என்று கூறுகையில் அவருடைய கருத்துக்களும் வெளிவந்தன. ஆனால் சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் அத்தகைய உதவி உடன்பாடுகள் கடமைப்படி அளிக்கப்பட வேண்டும் என இருந்தது.

ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் சிரியா ஐ.நா. மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரக்கால உதவி ஒருங்கிணைப்பாளர் சீமாட்டி வாலெரி அமோஸை அந்நாட்டிற்குள் ஒரு முழுமையான, தடையற்ற வகையில் மனிதாபிமான ஆர்வலர்களைக் காணவும், உதவி தேவைப்படும் மக்கள் அனைவரையும் அணுகவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று விடுத்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

வளைகுடா நாடுகளுக்கும், சிரிய எதிர்ப்பிற்கு பிற அரபு ஆதரவாளர்கள் காட்டும் ஆதரவிற்கும் பெரும் சங்கடம்விளைவிக்கும் வகையில் இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி அவிக்டர் லிபர்மன் இராணுவ வானொலியில் இஸ்ரேல் தேவையான மனிதாபிமான உதவியை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் மூலம் கொடுக்கத் தயார் என்று அறிவித்துள்ளது. இஸ்ரேல் வேறு எந்த நாட்டையும் ஈரான் தாக்குதலுக்கு எதிராக சிரியாவைப் போல் நம்பமுடியாது என்பதால் இவ்வாறு கூறுவதாகவும், தெஹ்ரான் மீது ஒரு இராணுவத் தாக்குதல் என்று வந்தால், இஸ்ரேலிய அரசாங்கம் நிலைமைக்கு ஏற்ப உரிய மதிப்பீட்டுத் தளத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் என்றும் கூறினார்.