WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
மீட்பு
பற்றிய
ஒபாமாவின்
கருத்து
பெருமந்த
நிலைக்குப் பின்னர், அமெரிக்கா ஆழ்ந்த மந்தநிலையில் இருக்கையில், ஜனாதிபதி ஒபாமா
கடந்த சில மாதங்களில் ஓரளவு ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்புக்களைப் பற்றி அதிகம் பேசி
நவம்பர் மாதத் தேர்தலில் தனது வாய்ப்புக்களை உயர்த்திக் கொள்ள முற்படுகிறார்.
டிசம்பர்
முதல் பெப்ருவரி வரையிலான மூன்று மாத காலம் நிகர அளவிலான 744,000 வேலைகளைத்
தோற்றுவித்துள்ளது. 2006ல் இருந்து எந்த மூன்றுமாதக் காலத்திலும் இவ்வளவு அதிகம்
இருந்தது இல்லை. உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் செப்டம்பரில் இருந்து 9.2%ல்
இருந்து பெப்ருவரி மாதம் 8.3% எனக் குறைந்துள்ளது.
2008 ல்
வோல் ஸ்ட்ரீட் சரிவைத் தொடர்ந்து வேலைகளில் ஏற்பட்ட பேரழிவான வீழ்ச்சிகளின்
பின்னணியில் இந்த வெற்றி பார்க்க்ப்பட வேண்டும். வோல் ஸ்ட்ரீட் சரிவு அமெரிக்கப்
பொருளாதாரத்தில் டிசம்பர் 2007ல் உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கிய மந்த நிலையில்
இருந்ததை விட 5 மில்லியன் வேலைகளைக் குறைவாக்கியது. சரிவின் உச்சக்கட்டத்தில்
அமெரிக்க வணிகங்கள் ஒவ்வொரு மாதமும் 744,000க்கும் மேல் வேலைகளைக் குறைத்திருந்தன.
அமெரிக்கப்
பொருளாதாரம் 2010, 2011ல் இணைந்து நிகர புதிய உற்பத்தித்துறை வேலைகள் 335,000 ஐ
ஏற்படுத்தியிருக்கையில், அது ஜனவரி 2008 ல் இருந்து மார்ச் 2009 வரையிலான காலத்தில்
10% ஆன 1.6 மில்லியன் உற்பத்தித் துறை வேலைகளை இழந்துள்ளது. தற்போதைய அளவான 12
மில்லியன் உற்பத்தித் துறை வேலைகள் என்பது 1979ன் உச்சக்கட்டத்தில் இருந்ததைவிட 7.5
மில்லியன் குறைவானதாகும்.
மத்திய
வங்கிக்கூட்டமைப்பின் தலைவர் பென் பெர்னன்கே திங்களன்று வாஷிங்டன் டி.சி.யில் ஒரு
வணிகக் கூட்டத்தில் பேசுகையில், வேலை எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய உயர்வு
குறித்துக் குறிப்பிடத்தக்க வகையில் எச்சரிக்கையாக இருந்தார். தொழிலாளர் சந்தையில்
முன்னேற்றம் தற்பொழுதைய பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப நீடித்திருக்க
முடியாது என்ற கருத்தைக் கூறினார்.
“தொழிலாளர்
சந்தையில் கணிசமான முன்னேற்றம் என்பது பணிநீக்கங்களில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை
பிரதிபலிக்கின்றதே தவிர வேலைக்கு ஆட்களை நியமனத்தில் அதிகரிப்பு ஏற்படவில்லை”
என்ற அவர்,
“நிலைமைகள்
சாதாரண தன்மைக்கு மிகத் தொலைவில் உள்ளன. உதாரணமாக நீண்டகால வேலையின்மை தரம் மற்றும்
வேலைகள் மணிநேரங்கள் ஆகியவை நெருக்கடிக்கு முன் இருந்த உச்சக்கட்டத்திற்கு பெரிதும்
குறைந்த நிலையில் உள்ளன—தொழிலாளர்
பிரிவில் அதிகரிப்பிற்கு எவ்வித திருத்தமும் இல்லாத நிலையில் இது உள்ளது”என்று
சேர்த்துக் கொண்டார்.
ஆனால்
ஒபாமாவும் தொழிற்சங்க அமைப்பில் அவருடைய ஆதரவாளர்களும் மறைப்பது பொதுவாக வேலை
வளர்ச்சி நிதானமாக இருப்பதை பற்றியும், குறிப்பாக உற்பத்தித் துறை வேலைகள்
பற்றியும்தான். கடந்த மாதம் மிலுவாக்கி
Master Lock
ஆலையில் பேசுகையில்
“ஒரு
நாடு என்ற முறையில் நம் பணி, பல நிறுவனங்களுக்கு வசதியளித்து ஈர்க்குமாறு பல
நிறுவனங்களுக்கு ஈர்ப்புடையதாக இருப்பதற்கு வேலைகளை உள்நாட்டினுள் கொண்டுவர நாம்
முடிந்த அனைத்தையும் செய்தல்”
என்று அவர் அறிவித்த வகையில் இப்பிரச்சினை பற்றிச்
சுட்டிக்காட்டினார்.
தொழிலாள
வர்க்கத்தின்மீது தீவிரமான தாக்குதலுக்கு வழிநடத்துவதைத்தான் ஒபாமா
செய்துகொண்டிருக்கிறார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் தொழிலாள
வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் மீதான தாக்குதலை அவர் விரிவுபடுத்தியுள்ளார்.
ஊதியங்களிலும் நலன்களிலும் கடுமையான, நிரந்தரக் குறைப்பில் முக்கியத்துவம்
காட்டியுள்ளார். இந்த வழிவகையில் பல கட்டங்கள் உள்ளன.
செப்டம்பர்
2008 நிதியக் கரைப்பை தொடர்ந்த உடனடியான மாதங்களில், அமெரிக்கப் பெருநிறுவனங்கள்
மாபெரும் பணிநீக்கங்களை நடத்தி, வேலையின்மை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தொழிலாள
வர்க்கத்தை முன்னோடியில்லாத சலுகை இழப்புக்களை ஏற்குமாறு செய்தன. பெருவணிகம் புதிய
தொழில்நுட்பத்துறை (இயந்திரமயமாக்குதல், கணினிமயமாக்குதல்) மற்றும் செலவுகளை
விரைவாகக் குறைக்கும் வழிகளையும் செயல்படுத்தி, விற்பனையிலும், வருவாய்களிலும்
குறைவு என்றாலும் குறைந்த தொழிலாளர்களை வைத்திருந்ததன் அடித்தளத்தில் மிக அதிக
இலாபங்களைக் கண்டன.
ஜெனரல்
மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லரை 2009ல் ஒபாமா கட்டாயப்படுத்தி மறுகட்டமைக்கச் செய்தது
தனியார்துறை முழுவதும் ஊதிய, நலன்கள் வெட்டுக்களை அலையெனக் கொண்டுவந்தார். பெரும்
கார்த்தயாரிப்பு நிறுவனங்களுக்கு பிணையெடுப்பிற்கு முன்னிபந்தனையாக ஐக்கிய
கார்த்தொழிலாளர் சங்கம் 50% ஊதிய வெட்டுக்களை சுமத்தவேண்டும், புதிதாக
நியமிக்கப்படும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும ஓய்வூதியங்கள், பிற நலன்கள்
அழிக்கப்பட வேண்டும் என்பவற்றை சுமத்த வேண்டும் என்று இருந்தது. இது ஒரு புதிய
அளவான அமெரிக்க கார்த் தொழிலாளர்களுக்கு $12 முதல் $15 வரை ஒரு மணிக்கு என
நிர்ணயித்தது; முன்பு உலகிலேயே மிக அதிக ஊதியம் பெற்ற தொழிலாளர்கள் என்ற நிலையில்
இருந்தவர்கள் கிட்டத்தட்ட வறுமைத்தர ஊதியங்களுக்குத் தள்ளப்பட்டனர்.
2010
தொடங்கி, ஊதிய வெட்டுக்கள் வகையிலான தாக்குதல் பொதுத்துறை ஊழியர்கள் மீதும்
விரிவாக்கம் செய்யப்பட்டது; அவர்கள் பாரிய பணிநீக்கங்கள், ஊதியங்கள்,
ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் மாநில, உள்ளூராட்சிகளால்
பாதிக்கப்பட்டனர்; இதற்கு வெள்ளை மாளிகையின் ஆதரவும் இருந்தது.
அரசாங்கம்-பெருநிறுவனம் இவ்வகையில் நடத்திய தாக்குதல்தான் ஊதியங்கள், தொழிலாளர்
துறைச் செலவுகள், வருமானம் ஆகிய புள்ளிவிவரங்களில் பிரதிபலிப்பாகிறது. செப்டம்பர்
2011 ல் வெளியிடப்பட்ட மக்கள்தொகை அறிக்கையின்படி, உண்மை நடுத்தர இல்லத்தின்
வருமானம் 2010ல் 2.3% குறைந்தது. இது ஒரு தசாப்தத்திற்கு முன்
அடையப்பட்டிருந்ததைவிட 7.1% குறைவாக இருந்தது.
அமெரிக்க
உற்பத்தித் துறை தொழிலாளர் செலவினங்கள் உற்பத்தி அலகு ஒன்றிற்கு 2010ல் 13% ஆக ஒரு
தசாப்தம் முன் இருந்ததைவிடக் குறைந்து போயிற்று. சீனாவிற்கும் பிற குறைவூதிய
நாடுகளுக்கும் முன்பு அனுப்பி வைக்கப்பட்டிருந்த உற்பத்தி வேலைகளில் ஒரு பகுதி
அமெரிக்காவிற்கு மீண்டும் கொண்டுவரப்படுகிறது என்று சொன்னால், இதற்குக் காரணம்
இவர்கள் இங்கு கொடுக்கும் ஊதியம் பெரிதும் வீழ்ச்சியடைந்துவிட்டது, இவர்கள்
வெளிநாடுகளுக்குப் போகாமல் தங்கள்
“சொந்தத்”
தொழிலாளர்களையே
சுரண்டுவதால்தான் என்பது தெளிவாகும். இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு வியத்தகு
அளவில் குறைந்துவிட்டது. கடந்த மாதம்
GE Consumer &
Industrial உடைய
தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் காம்ப்பெல் நியூ யோர்க் டைம்ஸிற்குக்
கூறியுள்ளது போல்,
“அமெரிக்காவில்
உற்பத்தி செய்வதும் மற்ற இடங்களில் உற்பத்தி செய்வதைப் போல் சாத்தியாமாகிவிட்டது”,
இதற்குக் காரணம் உள்நாட்டுத் தொழிலாளர் செலவுகள் இப்பொழுது
“கணிசமாகக்
குறைந்துவிட்டன, போட்டித்தன்மை உடைய ஊதியங்கள்”
இப்பொழுது
அமெரிக்கத் தொழிலாளர்களால் ஏற்கப்படுகின்றன என்பதால்தான்”.
ஒபாமா
கூறும் மீட்பின் மொத்த விளைவு, தொழிலாள வர்க்கத்தின் இன்னும் பரந்த அடுக்குகள் வறிய
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், சமூக சமத்துவமின்மையின் அதிர்ச்சிதரும்
வளர்ச்சியும் ஆகும். அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையின் சரிவு பற்றி
ஓர் அப்பட்டமான அலகு 2011 மூன்றாம் காலாண்டில் அமெரிக்க மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் பெருநிறுவன இலாபங்களின் பங்கு என்பது 1960களில் இருந்து, மிக
அதிகமாக10.3% எனப் போயிற்று: ஊதியங்களுக்குச் செல்லும் பங்கு என்பது அதன் மிகவும்
குறைவான (45.3%) என்று போயிற்று.
உத்தியோகபூர்வமான
AFL-CIO
ஆகியவற்றின் ஆதரவை இந்த
மாதம் முன்னதாக ஒபாமாவின் மறுதேர்தலுக்கு அறிவிக்கையில், தொழிற்சங்கக்
கூட்டமைப்பின் தலைவர் ரிச்சர்ட் ட்ரும்கா குடியரசு வேட்பாளர் நியமனத்தில்
முன்னணியில் இருக்கும் மிட் ரோம்னீயைக் கண்டிக்கும் வகையில்,
“அவர்
செய்துள்ளது அனைத்தும் 1% மக்களுக்குத்தான் உதவும்”
என்று கூறினார்.
மார்ச் 15
அன்று வெளிவந்த
ராய்ட்டர்ஸ் கட்டுரை ஒன்று உயர்மட்ட
ஒரு சதவிகிதத்தினருக்கு உதவுதல் என்று வரும்போது, அதுவும் மற்றவர்கள் அனைவருடைய
இழப்பில், ஒபாமா எவருக்கும் சளைத்துப் பின்னே நிற்கவில்லை என்பதற்கான புள்ளிவிவர
நிரூபணத்தைக் கொடுக்கிறது. இக்கட்டுரை அமெரிக்க வருமானங்கள், ஒபாமாவின்
“மீட்புக்காலத்தில்”
1934ல் பெருமந்த நிலையில் இருந்துடன் ஒப்பிடுகையில் தீவிரமான குறைவாக உள்ளன என்று
குறிப்பிடுகிறது.
1934
மறுதிருப்பத்தின்போது அதிகமான வருமான ஆதாயங்கள் கீழ்மட்ட 90% வருமானம்
உடையவர்களுக்கு இருந்தது, மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு (உயர்மட்ட 0.01%) ஒரு
சரிவு காணப்பட்டது. 2010ம் ஆண்டில் நிலைமை முற்றிலும் எதிரிடையானது ஆகும். பெரும்
செல்வந்தர்களின் வருமானம் (சராசரியாக $23.8 மில்லியன் என்பது) 21.5% முந்தைய
ஆண்டைக் காட்டிலும் உயர்ந்தது. அதேநேரத்தில் கீழ்மட்ட 90% வருமானக்காரர்களுக்கு 0.4
சதவிகிதம் குறைந்தது.
தேசிய
வருமானம் மொத்தத்தில் 2010ல் அதிகரித்தது. ஆனால் அனைத்து ஆதாயங்களும் உயர்மட்டப்
பத்துச் சதவிகிதத்தினருக்குத்தான் சென்றன. 15,600 மிகப் பெரிய செல்வந்தர்கள் முழு
தேசிய ஆதாயத்திலும் வியத்தகு வகையில் 37% ஐ விழுங்கினர். இக்கட்டுரை உயர்மட்ட 1%
இனரின் உண்மையான வருமானத்தில் பங்கு ஒவ்வொரு பொருளாதார விரிவாக்கத்தின்போதும், அது
ஜனநாயக அல்லது குடியரசு என்று எந்தக் கட்சி வெள்ளை மாளிகையிலும் இருந்தாலும்,
அதிகரித்தது எனக் கூறுகிறது.
உயர்மட்ட 1%
இனர் கிளின்டன் சகாப்த வருமான வளர்ச்சியில் 45% கைப்பற்றினர், புஷ்
சகாப்தக்காலத்தில் 65% கைப்பற்றினர், ஒபாமா சகாப்த காலத்திலோ 2010 முழுவதும் 93%
கைப்பற்றினர்.
இந்த
உண்மைகள் அமெரிக்காவில் ஒரு சிறு தன்னலக்குழு ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக்
கட்சியினர் மற்றும் முழு அரசியல் ஆளும்தட்டினரையும் கட்டுப்படுத்துகிறது என்பதை
நிரூபிக்கிறது. இதன் மரணப்பிடி தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும்
சோசலிசத்திற்காகவும் போராட்டத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல்
இயக்கத்தின் மூலம்தான் முறிக்கப்பட முடியும். |