World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Lutte Ouvrière mounts nationalist French presidential election campaign                   

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் Lutte Ouvrière தேசியவாதப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது

By Anthony Torres 
26 March 2012
Back to screen version

Arlette Laguiller இற்கு பின்னர் Lutte Ouvrière இன் (தொழிலாளர் போராட்டம்-LO-Workers Struggle) ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் நிற்பதற்கு Nathalie Arthaud இற்கு தேவையான 521 நகரசபைத் தலைவர்களின்  கையெழுத்துக்களை Lutte Ouvrière மார்ச் 7ம் திகதி, அரசியலமைப்புச் சபையிடம் அளித்துள்ளது. இப்பெண்மணிதான் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பட்டியலில் உத்தியோகபூர்வமாக முதல் நபராக உள்ளார்.

Nathalie Arthaud ஒரு தேசியவாத வேலைத்திட்டத்தை கொண்டுள்ளார்; இது ஏகாதிபத்தியக் குற்றங்களை மூடிமறைக்கிறது, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்திற்கான ஒரு கருவியாக மாற்றப்படலாம் என்னும் நப்பாசைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது.  தன்னை இடது என்று காட்டிக் கொள்ள முற்படுவதற்காக இப்பெண்மணி, வர்க்கப் போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாத முற்றிலும் வெறுமையான ஒரு அருவமான ஒன்று என காட்ட போலித்தனமான மார்க்சிச சொல்லாட்சியை பயன்படுத்துகிறார்.
 

கையெழுத்துக்களை அளித்த பின்னர், Nathalie Arthaud, Le Nouvel Observateur  இடம் கூறினார்: செல்வந்தர்கள், சக்தி வாய்ந்தவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கொள்கைகளையும் மற்றும் பெருவணிகங்களை தொழிலாளர்களுக்கான கொள்கைகளுடன் எதிர்கொள்ளுதல் என்ற பிரச்சினைதான் எப்பொழுதும் உள்ளது என்றார்.

தன் பிரச்சாரத்தை அறிவிக்கும் அறிக்கையில் Lutte Ouvrière பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது; இவற்றில் பெரும்பாலானவை வரலாற்றளவில் தொழிலாளர்கள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவைஊதியத்தரங்கள் சரிவது குறித்து, பணிநீக்கம், ஊதியக் குறைவுகள் சட்டப்படி கூடாது என்பது பற்றி, இறுதியாக தொழிலாளர்களும் மக்களும்  வணிகங்களைக் கட்டுப்படுத்துதல் குறித்து. LO வின் இவ் வேலைத்திட்டம் போராட்டத்தின் மூலம்தான் செயற்பாட்டிற்கு வரமுடியும் என்று விளக்குகிறது. ஆனால் Nathalie Arthaud எத்தகைய முன்னோக்கில் இத்தகைய போராட்டம் செயல்படுத்தப்படும் என்பதைப் பற்றிக் கூறவில்லை.

இப்படிக் கூறாததின் மூலம், முதலாளித்துவத்தின் கீழ், தொழிற்சங்கங்களின் உதவியுடன் ஒரு வருங்கால அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில்,  அத்தகைய முன்னேற்றங்களை தொழிலாளர்கள் அடையமுடியும் என்ற நப்பாசைகளை LO வளர்க்க முற்படுகிறது; சாத்தியமானவகையில் சோசலிச கட்சியினுடைய (PS) வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்டின் மூலம்.

PS ஒரு வலதுசாரி வேலைத்திட்டத்தைத்தான் கொண்டுள்ளது என்பதை LO நன்கு அறியும். ஹோலண்டிற்கும் தற்பொழுள்ள ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கும் இடையே, அரசியல் வேறுபாடுகள் மிகக் குறைந்தவை, நெருக்கடி பற்றிய கொள்கைகளின் அடிப்படைப் பிரச்சினை குறித்து என்று அது சுட்டிக்காட்டியுள்ளது. ஆயினும்கூட, LO வின் முன்னோக்கு PS க்குக் கிட்டத்தட்ட வெளிப்படையான ஆதரவை, அதன் தொழிலாள வர்க்க விரோதப் போக்கையும் மீறிக் கொடுத்தல் என்று 2007ல் கொடுத்தது போல் இருக்க வேண்டும் என்று உள்ளது; அந்த ஆண்டில் Arlette Laguiller, PS ன் ஜனாதிபதி வேட்பாளர் Ségolène Royal க்கு சார்க்கோசிக்கு எதிரான இரண்டாம் சுற்றில் வாக்களிக்குமாறு கூறினார்.

2008 ஆண்டு நகரசபைத் தேர்தல்களில் LO உள்ளூர் உடன்பாடுகளை பிற முதலாளித்துவ இடது கட்சிகளுடன் கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. LO வின் தலைவர் Georges Kaldy, “நாங்கள் PS க்கு எங்கள் சேவைகளை அளிக்கவில்லை, ஆனால் இடது, வலதை அகற்றி, ஒரு நகரவையை வெல்ல முடியும் என்றால், அது பற்றி நாங்கள் விவாதிப்போம். நம் வாக்குகள் வலதிற்கு ஆதரவாகப் போவதை விரும்பவில்லை என்று விளக்கினார். அவர்கள் ஏன் 2007ல் PS ஐ ஆதரித்தனர் என்று விளக்குமாறு கேட்கப்பட்டதற்கு கல்டி கூறினார்: 2001ம் ஆண்டு, அதிகாரத்தில் இடதிற்கு ஆதரவைக் கொடுக்க விரும்பவில்லை. சார்க்கோசியின் தேர்வு மற்றும் பொதுவாக தொழிலாளர்களுக்கு எதிரான அவருடைய தாக்குதல் நிலைமையை மாற்றிவிட்டது என்றார்.

Vaulx-en-Velin இளைஞர் துறைக்குப் பொறுப்பான நகரவைக்குழு உறுப்பினராக Nathalie Arthaud உள்ளார். அங்கு அவர் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இருந்த ஒரு பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்தப்பட்டியலில் குடிமக்கள்  முன்முயற்சி (Citizens’ Initiative) மற்றும் மாற்றீட்டாளர்கள் (The Alternatives - அனார்க்கிஸ்டுகள்) ஆகிய குழுக்களும் அடங்கியிருந்தன.

Nathalie Arthaud  மற்றும் LO வானது தொழிற்சங்கங்கள் (குறிப்பாக GGT, தொழிலாளர் பொதுக்கூட்டமைப்பு என்னும் PCF  க்கு நெருக்கமாக இருப்பது) தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது குறித்து முற்றிலும் மௌனம் சாதிக்கின்றனர். அவர்களுடைய மனப்பான்மையில் குறிப்பாக அப்பட்டமாக இருப்பது, 2010ல் இலையுதிர்காலத்தில் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆகும். ஓய்வூதியக் குறைப்புக்கள் இயற்றப்பட்ட நேரத்தில் அந்த வேலைநிறுத்தம் பொலிசாரால் நசுக்கப்படும்போது, தொழிற்சங்கங்கள் ஒதுங்கிநின்று பரந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பை சார்க்கோசிக்கு எதிராகத் அணிதிரட்ட மறுத்துவிட்டன.

2010 நவம்பர் மாதம் வெளியான செப்டம்பர் 7 இயக்கத்தின் இருப்புநிலைக் குறிப்பு என்னும் கட்டுரையில், LO வானது தொழிற்சங்கங்கள் ஒரு பொதுவேலைநிறுத்தம் என்னும் முன்னோக்கிற்கு விரோதப் போக்கைக் கொண்டுள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ளது; சீர்திருத்தங்களுக்கு எதிரான ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தைப் பற்றிக் கூறத் தேவையில்லை. ஆனால் ஓய்வூதிய வெட்டுக்களைக் குறித்து சார்க்கோசியுடன் தொழிற்சங்கங்களின் பங்கு குறித்த எந்த விமர்சனத்தையும் அவர்கள் தாக்குகின்றனர்.

கட்டுரை கூறுகிறது: தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் அழைப்புக்களை விடாதது குறித்துக் கண்டிப்பது சிறுபிள்ளைத்தனமானது. எப்படியும், CGT, CFDT, இரண்டும், SUD (Solidarity, Unity, Democracy) ஐப்போல் ஒருவிதத்திலும், FO  ஐப்போல் இன்னொருவிதத்திலும், பிரயோசனமானது என்று அவர்கள் கூறிக்கொள்வதை செய்யத்தேவையான வலிமையோ, ஆளுமையோ இல்லாது அதற்கு தீவிர வார்த்தைகளை கொடுத்துக்கொண்டிருந்தன. ஒரு பொதுவேலை நிறுத்தத்திற்கு தயாரிப்புசெய்யும் விருப்பம் அவற்றிடம் இல்லை என்பது தெளிவு. ஆனால் போராட்டத்தை நிறுத்த அவர்கள் முயலவில்லை, ஏனெனில் நிறுத்துவதற்கு ஒன்றும் இல்லை.

எனவே LO வை பொறுத்தவரை அங்கு இயக்கம் ஏதும் இல்லை, பாட்டாளி வர்க்கத்திடம் வெட்டுக்களைப் பற்றிய புறநிலையான எதிர்ப்பு ஏதும் இல்லை. தொழிற்சங்கங்கள் தீவிரத்தனமாக இல்லை என்பது போதும். LO கருத்துப்படி, இத்தவறு, பாட்டாளி வர்க்கத்திடம்தான் உள்ளது. ஏனெனில் அது தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பின்பற்றுவதில்லை. இத்தகைய விளக்கம், தவறானதும் ஆழமான மனத்தளர்ச்சியானதும்கூட: அதாவது தொழிலாளர்கள் ஆழ்ந்த முறையில் சீர்திருத்தத்திற்கு எதிராக இருந்தனர், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மில்லியன் கணக்கானவர்களை ஈர்த்தன.

LO மேலும் கூறுவதாவது: ஆயினும்கூட ஒரு வரம்பிற்குள் இந்த இயக்கம் தொழிலாளர்ளுக்கே ஒரு வெற்றி ஆகும்; ஏனெனில் அவர்கள் தலையை உயர்த்தி, அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற உண்மையைக் காட்டினர் என்பதால்.

இவ்வகையில் LO, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோல் கிடங்குகளின் மீது CRS கலகப்பிரிவுப் பொலிஸ் கட்டுப்பாட்டைக் கொள்ளுவது, மீண்டும் உற்பத்திக்காக தொழிலாளர்கள் சுத்திகரிப்பு ஆலைக்குத் திரும்புமாறு வலியுறுத்தப்படுவது மற்றும் சமூக இயக்கமானது எதிர்ப்புரட்சி  தொழிற்சங்கங்களிடம் இருப்பது ஆகியவை வெற்றியாகும் என்று நினைப்பது வெளிப்படை.

இதற்குக் காரணம் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக கட்டிப் போட்டுவைப்பதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளதை LO ஆதரவளிக்கிறது. Clairoix நகரில் உள்ள கான்டினென்டல் ஆலையைக் காப்பாற்றும் போராட்டத்தை LO எதிர்த்தது. Clairoix ஆலைத் தொழிற்சங்கத் தலைவர் மற்றும் LO ஆதரவாளர் Xavier Mathieu போல் LO பணிநீக்கத்திற்கான நஷ்ட ஈடுகளை வழங்குமாறு முன்வைத்தது. -பொதிகளுக்கான விதிகளைத்தான் அளித்தது- அதற்கு ஈடாக தொழிற்சங்கத்தின் ஆதரவுடன் ஆலையை மூடுவதை ஒரு வெற்றி எனக் காட்டியது.

வேலைகள், சமூக நலன்களைப் பாதுகாத்தல் என்பதற்கு தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளுடன் முறித்துக்கொண்டு, அதிகாரத்தை தொழிலாளர்களே பெறுவதற்கு சுயாதீன போராட்டத்தை நடத்துவதன்மூலம்தான் முடியும். இத்தகைய முன்னோக்கிற்கு LO விரோதப் போக்கைத்தான் காட்டுகிறது.

பிரெஞ்சு ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைப் பிரச்சினையை பொறுத்தவரை, ஒரு சொல்கூட கிடையாது இது NPA மற்றும் பிற அமைப்புக்களுக்கு இராணுவத் தலையீடுகள் மற்றும் பிரான்ஸ், நேட்டோ ஆகியவை வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு ஆகியவற்றில் போருக்கான தயாரிப்புக்களை மேற்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆதரவை கொடுக்கும் பங்கைக் கொடுத்துவிடுகிறது.

போர்களையும்  மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் அவற்றின் விளைவுகளைப் பற்றியும் LO வின் இந்த பொருட்படுத்தா தன்மை இதை ஒரு தொழிலாளர்கள் அமைப்பு அல்ல என்றுதான் வரையறை செய்கிறது; அதுவும் குறிப்பாகத் தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவங்கள் என மத்தியதர வகுப்பின் ஒரு அடுக்கின் அமைப்பாக இருக்கிறது. நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் என்று இப்போர்களில் இறந்தவர்கள் அல்லது இறக்கக் கூடியவர்களைப் பற்றி LO ஏதும் குறிப்பிடவில்லை. பிரான்ஸிலுள்ள தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, அது பிரான்ஸ் ஒரு புதிய போர்களின் அலைக்குப் பணம் செலவுசெய்ய நேரிடும் பட்சத்தில், கிரேக்கத் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் போன்றவற்றைத்தான் முகங்கொடுக்க நேரிடும்.

பிரான்சின் சிக்கனத் திட்டங்களும், இராணுவ தலையீடுகளும் தொழிலாளர்களுடைய விரோதப்போக்கு இருந்தாலும் மீண்டும் வரும்; எனவேதான் பிரெஞ்சு முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளைத் தாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுபர்க்கா மீது தடைச் சட்டம், ரோமாக்கள் வெளியேற்றுதல், ஆலைச் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் இயக்கம், ஓய்வூதியத்திட்டத்தின் போது நடந்ததை நசுக்கியது ஆகியவை.  அவைகளைப் பற்றியும் LO ஏதும் கூறவில்லை; இது அக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் பற்றி அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

பிற தீவிர இடது என்று அழைக்கப்படும் கட்சிகளைப் போல், தொழிலாள வர்க்கம், பிரெஞ்சு முதலாளித்துவத்தின்  தேசிய மற்றும் சர்வதேசிய கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக முயல்கிறது. LO மற்றும் Nathalie Arthaud அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் சோசலிச, சர்வதேசிய மரபுகளுடன் எதையும் பொதுவாகக் கொண்டிருக்கவில்லை.