WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
அமெரிக்காவின்
“மனித உரிமைகள்”
மோசடி
Bill Van Auken
27
March 2012
use
this version to print | Send
feedback
”சுதந்திரம்,
ஜனநாயகம்,
உலகளாவிய மனித உரிமைகள்
ஆகியவற்றுக்கான மக்களின் அபிலாசைகளின் பக்கம் நம்மை நிறுத்திக் கொண்டு வரலாற்றின்
சரியான பக்கத்தில் நாம் நிற்கிறோம் என்றே நான் கருதுகிறேன்”
என்று அமெரிக்க வெளியுறவுச்
செயலரான ஹிலாரி கிளிண்டன் எகனாமிஸ்ட் இதழுக்கு அளித்த ஒரு சமீப நேர்காணலில்
அறிவித்தார்.
உலகில் அமெரிக்காவின் பாத்திரத்தை
விபரிக்கையில் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்:
“
நாங்கள் எழுந்து நின்று உரைக்கிறோம்,
நாங்கள் உலகளாவிய
மதிப்புக்களின் பக்கம் நிற்கிறோம் என்று,
அவை அமெரிக்க
மதிப்புக்களுடன் ஒத்திசைபவையாக
உள்ளன.”
சுதந்திரத்தை
ஊக்குவிப்பது மற்றும் உண்மையில்
“உலகளாவிய
மதிப்புக்களாக”த்
திகழ்கின்ற “அமெரிக்க
மதிப்புக்களை”
ஏற்றுமதி செய்வது இவை தான் உலகில்
அமெரிக்காவின் பாத்திரம் என்பதாகக் கூறும் இத்தகைய கருத்தாக்கங்கள் எதுவும் புதிது
கிடையாது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரவேசம்
மற்றும் 19
ஆம் நூற்றாண்டின் நிறைவிலான ஸ்பானிய
அமெரிக்கப் போர் வரை இந்தக் கருத்தாக்கங்கள் பின்நோக்கி காணத்தக்கவை.
இப்போது போல,
அப்போதும் அவை அமெரிக்க நிதி
மூலதனத்தின் நலன்களின் பேரில் ஆக்கிரமிப்புப் போர்களை,
இராணுவக் கவிழ்ப்பு
நடவடிக்கைகளை மற்றும் ஒடுக்குமுறையை நடத்துவதற்கான ஒரு வழக்கமான தத்துவ
முகத்திரையாகத் தான் சேவை செய்திருக்கின்றன.
ரஷ்யப் புரட்சியாளரான
லியோன் ட்ரொட்ஸ்கி
1924ல் மிகக் கடுமையுடன்
குறிப்பிட்டதைப் போல,
“அமெரிக்கா
எப்போதும் யாரையாவது விடுதலை செய்து கொண்டே இருக்கிறது.
அதன் வேலையே அது தான்.”
கடந்த வாரத்தில்,
சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக்
கொண்டு வருவதை நோக்கமாய்க் கொண்டு உள்நாட்டுப் போரைத் தூண்டிவிடுவதற்கான ஒரு
சாக்காகவும்,
ஈரானுக்கு எதிராய் போருக்குத்
தயாரிப்பு செய்வதற்கான முகாந்திரமாகவும்,
வட கொரியா மற்றும் சீனாவுடன்
இராணுவப் பதட்டங்களை மேலும் அதிகப்படுத்துவதற்கான ஒரு காரணமாகவும் ஒபாமா நிர்வாகம்
“மனித
உரிமைகளை”க்
கையிலெடுத்தது.
உலகளாவிய மனித
உரிமைகளின் பாதுகாவலனாய் அமெரிக்க அரசாங்கம் காட்டிக் கொள்வதென்பது ஒரு அப்பட்டமான
மோசடி.
மற்ற ஏதேனும் ஒரு நாட்டில்
சுதந்திரம் ஜனநாயகம் எல்லாம் மீறப்படுவதில் அது கோபமடைவதாகக் கூறிக் கொள்வதெல்லாம்
அதிகமான இரட்டை வேடமாகும்.
சிரியாவை எடுத்துக்
கொள்ளுங்கள்.
ஆசாத்தை அகற்றி விட்டு
டமாஸ்கஸில் கூடுதல் இணக்கமான,
ஈரான்-விரோதமான
ஆட்சியை நிறுவ வேண்டுமென்பதற்காக,
அமெரிக்கா துருக்கி உடன்
நெருங்கி வேலை செய்து வருகிறது.
சிரியாவில் தொடர்ச்சியாய்
பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வந்திருக்கிற ஆயுதமேந்திய
“கிளர்ச்சி”க்
குழுக்களுக்கு “மரணஅபாயமளிக்காத”
உதவியை வழங்க இவ்விரு
அரசாங்கங்களும் சேர்ந்து செயல்பட்டு வருவதாக திங்களன்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கை
ஒன்று தெரிவிக்கிறது.
சிரியாவில் மனித
உரிமைகளின் பாதுகாவலனாய் தன்னை முன்நிறுத்திக் கொள்ளும் துருக்கி,
தனது மக்கள்தொகையில்
20 சதவீதத்திற்கும் அதிகமாய்
இருக்கும் சிறுபான்மையினரான துருக்கிய குர்துக்களுக்கு எதிராக குருதி பாயும்
ஒடுக்குமுறைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
குர்து பிரிவினைவாதக் குழுவான
PKK இன் முகாம்கள் என்று
சந்தேகப்படுகிற முகாம்கள் மீது துருக்கிய ஜெட் போர் விமானங்கள் அடிக்கடி குண்டு
வீசுகின்றன,
இதில் தொடர்ந்து அப்பாவி மக்கள்
பலியாகி வருகின்றனர்.
சென்ற வாரத்தில் குர்து புத்தாண்டின்
துவக்கத்தை ஒட்டி நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை போலிசார் தண்ணீர்
பீரங்கிகளையும்,
கண்ணீர் புகை குண்டுகளையும் மற்றும்
லத்திகளையும் கொண்டு நடத்திய ஒடுக்குமுறையின் மூலம் எதிர்கொண்டனர்.
1984 முதலான இந்த மோதலில்
சுமார் 40,000
பேர் தங்கள் உயிரைப் பலி
கொடுத்திருக்கின்றனர்,
ஆனால் குர்துக்களின் தலைவிதி
பற்றி அமெரிக்கா எந்தத் தெளிவான அக்கறையையும் வெளிப்படுத்தியதில்லை.
சிரியாவில் மனித
உரிமைகளுக்காய் நடக்கும் புனிதப் போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக இருக்கும்
மற்றொரு முக்கிய நாடு சவுதி அரேபியா.
இது கத்தாருடன் சேர்ந்து கொண்டு
சுதந்திர சிரிய இராணுவம் மற்றும் சிரிய தேசியக் கவுன்சில் போன்ற அமைப்புகளுக்குப்
பணமும் ஆயுதமும் வழங்கிக் கொண்டிருக்கிறது.
சிரியாவிலான ஒடுக்குமுறைக்கு
நீலிக்கண்ணீர் வடிக்கும் உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடும் அமெரிக்காவின்
முக்கியமான மூலோபாயக் கூட்டாளியுமான சவுதி அரேபியாவின் சர்வாதிபத்திய முடியாட்சி
தனது ஷியா இனத்தவர் அதிகம் வசிக்கும் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியை நசுக்க
ஈவிரக்கமற்ற ஒரு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது.
சக்திவாய்ந்த மத ஸ்தாபகத்தின்
தலைவரான
சவுதி முப்தி ஆட்சிக்கு எதிரான
எவரொருவரின் தலையையும் வெட்டிக் கொண்டு வருவதற்கு சமீபத்தில் பத்வா அளித்தார்.
முன்னதாய்,
அவர் ஷியா கிளர்ச்சியாளர்கள்
சிலுவையிலறையப்பட ஆலோசனையளித்திருந்தார்.
அண்டையில் யுஎஸ்
ஐந்தாம் படைவரிசை
(US Fifth Fleet)
அமைந்திருக்கும் பஹ்ரைனில்,
சவுதி ஆட்சியானது,
அமெரிக்காவின் ஆதரவுடன்,
நாட்டின் ஷியா
பெரும்பான்மையினரை ஆட்சி செய்வதோடு அவர்களுக்கு எதிராய் கடுமையான பாகுபாடு காட்டி
வரும் சர்வாதிகார சுன்னி முடியாட்சிக்கு சவால் விடுக்கும் ஒரு மக்கள் இயக்கத்தை
வன்முறை மூலம் ஒடுக்குவதற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
“உலகளாவிய”
அமெரிக்க மதிப்புக்கள் இங்கே
பொருந்துவதில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இதற்கிடையில்,
எகிப்தின் இராணுவக் குழு
மிருகத்தனமான அடக்குமுறைகளைத் தொடர்ந்து வரும் நிலையில்,
வெளியுறவுச் செயலரான ஹிலாரி
கிளிண்டன்,
எகிப்தின் இராணுவ உதவிக்கு அந்நாடு
ஜனநாயகத்தை நோக்கிய முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்றிருக்கும் அமெரிக்க
நாடாளுமன்றத்தின் நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலன்கள்
என்பதைக் கையிலெடுத்திருக்கிறார்.
அதாவது எகிப்தின் ஒடுக்குமுறை
எந்திரத்திற்கு 1.3
பில்லியன் டாலர் அமெரிக்க உதவி சென்று
சேர இருக்கிறது.
இந்த உதவி கடைசியாய் யாரது கஜானாவை
நிரப்பவிருக்கிறதோ,
அந்த ஜெனரல் டைனமிக்ஸ் மற்றும்
லாக்ஹீட் மார்டின் போன்ற பெருநிறுவனங்களின் இலாபங்கள்
“உலகளாவிய”
மதிப்புக்களை எளிதாய்
பறைசாற்றுகின்றன என்று நிர்வாக அதிகாரிகள்
பணிவுடன் ஒப்புக் கொள்கின்றனர்.
மனித உரிமைகளுக்கான
இந்த உறுதிப்பாடு உண்மையிலேயே உலகளாவியதாக இருக்குமாயின்,
அது சொந்தநாட்டின் அருகில் தான்
சக்திவாய்ந்த வெளிப்பாட்டை கொண்டிருக்கும் என்று தான் எவரொருவரும் எதிர்பார்ப்பார்.
ஆனால் அமெரிக்கா தனது
“சொந்த
கொல்லைப் புறம்”
என்று வெகு காலமாய் கருதி வந்திருக்கக்
கூடிய ஹோண்டுராஸில் அடிப்படை உரிமைகள் பற்றிய அமெரிக்காவின் அலட்சியத்தின் ஒரு
அப்பட்டமான சாட்சியமாக ஹோண்டுராஸ் நிலவரம் இருக்கிறது.
2009
இல் ஜனாதிபதி மானுவேல்
ஸெலாயாவின் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தைக் கவிழ்த்த இராணுவக் கவிழ்ப்புக்கு ஓசையின்றி
தனது ஆதரவை அளித்திருந்த ஒபாமா நிர்வாகம்,
வந்த ஆட்சி ஏழை விவசாயிகளுக்கு,
பத்திரிகையாளர்களுக்கு,
மனித உரிமை ஆர்வலர்களுக்கு
மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தி வருகின்ற தொடர்ச்சியான கொலை,
சித்திரவதை,
சட்டவிரோதக் கைது மற்றும்
வன்முறை நடவடிக்கைகளுக்கு கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது.
இராணுவக் கவிழ்ப்பு ஆட்சியின்
மேற்பார்வையில் நடந்த ஒரு சட்டவிரோத தேர்தலின் மூலம் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி
போர்ஃபிரியோ லோபோஸ் அரசாங்கத்திற்கு அமெரிக்காவின் தொடர்ந்த ஆதரவை வாக்குறுதியளிக்க
இந்த மாதத்தின் ஆரம்பத்தில்
துணை ஜனாதிபதி ஜோசப் ஃபிடேன்
டெகுசிகல்பாவிற்கு அனுப்பப்பட்டார்.
பிராந்தியத்தில் பெண்டகனின்
மிகப்பெரிய தளத்தைக் கொண்டமைந்திருக்கும் ஹோண்டுராஸ் நாட்டில் இராணுவ
ஒப்பந்தங்களுக்காகச் செலவிடும் தொகையையும் அந்நாட்டிற்கான இராணுவ உதவியையும்
அமெரிக்கா அதிரடியான அளவில் அதிகரிப்பு செய்திருக்கிறது.
வெளிநாடுகளில்
போர்களையும் ஸ்திரம் குலைப்பதையும் நியாயப்படுத்துவதற்குக் கையிலெடுக்கப்படுகிற
இந்த உலகளாவிய அமெரிக்க மதிப்புக்கள் என்று சொல்லப்படுவன அமெரிக்காவிற்குள்ளும்
செயலாக்கம் பெறுகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.
அமெரிக்கக் குடிமக்களை
விசாரணையின்றி காலவரையற்ற இராணுவக் காவலில் வைப்பதற்கும்,
ஜனாதிபதி பார்த்து அவர்களை
“பயங்கரவாதிகள்
என்ற சந்தேகத்துக்குரியவர்கள்”
என்று சொன்னால் அவர்களைக்
கொல்வதற்கும் கூடவுமான உரிமையை ஒபாமா நிர்வாகம் கோரியிருக்கிறது.
உள்நாட்டில் ஒற்று வேலை என்பது
கூர்மையாக தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது,
அத்துடன் கியூபாவில்
குவாண்டானோமோ வளைகுடாவில் இருக்கும் சட்டவிரோதமான சிறை முகாம் இன்னும்
திறந்திருக்கவே செய்கிறது.
நிதிச் சிலவர்களது ஆட்சிக்கு
பொதுமக்களிடம் இருந்து எழும் சவால்கள் போலிஸ் வன்முறை கொண்டு எதிர்கொள்ளப்பட்டதை
வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டங்கள் எடுத்துக் காட்டின.
அமெரிக்காவிடம் இருந்து
முடிவில்லாத
“மனித
உரிமை”த்
தாக்குதல்களை எதிர்கொண்டு களைத்துப் போன சீனா அமெரிக்காவின் மீதான தனது சொந்த
வருடாந்திர மனித உரிமை விமர்சனத்தை களமிறக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் சிறைகளில்
2.3 மில்லியன் பேர் இருப்பது,
உலகில் அதிகமான விகிதத்தில்
மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை,
ஒவ்வொரு நாளும் போலிஸின்
கொலைகள் மற்றும் அடக்குமுறை,
மற்றும் மில்லியன் கணக்கான
அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு,
வீட்டு வசதி மற்றும் சுகாதாரப்
பராமரிப்பு ஆகிய அடிப்படையான சமூக மற்றும் பொருளாதார உரிமைகளும் கூட மறுக்கப்படுதல்
ஆகியவற்றை இது சுட்டிக் காட்டியுள்ளது.
”அமெரிக்கா
தனது சொந்த முக்கியமான மனித உரிமைப் பிரச்சினைகளை அலட்சியம் செய்கிறது,
மாறாக மற்ற நாடுகளின்
பிம்பத்திற்கு அவதூறு தெளித்து தனது சொந்த மூலோபாய நலன்களை முன்னெடுக்க முனைவதற்கான
ஒரு அரசியல் கருவியாக மனித உரிமைகளைக் கையிலெடுத்துக் கொள்ளும் பொருட்டு
‘மனித உரிமை இராஜதந்திரம்’
என்பதான ஒன்றை ஆலோசனையளிப்பதில்
ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறது”
என்று பெய்ஜிங்கால்
விநியோகிக்கப்பட்ட ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
”இந்த
உண்மைகள் எல்லாம் மனித உரிமைகள் விடயத்தில் இரட்டை வேடம் போடும் அதன்
கபடநாடகத்தையும்,
அத்துடன் மனித உரிமைகள் என்கிற பேரில்
தனது மேலாதிக்கத்தைப் பின்தொடர்வதற்கான அதன் துஷ்டநோக்கம் கொண்ட வடிவத்தையும்
முழுமையாக அம்பலப்படுத்துகின்றன.”
கொள்ளையிடும் அமெரிக்க
ஏகாதிபத்திய நலன்களை முன்நிறுத்த
“மனித
உரிமைகளை”
மொத்தமாய்ப் பயன்படுத்துவதென்பது
1930களில் ஹிட்லர் ஜேர்மன்
மக்களுக்கு எதிரான சூறையாடும் நடவடிக்கைகளை நிறுத்தவே தனது நடவடிக்கைகள் என்று
கூறியதையும்,
அல்லது முசோலினி எத்தியோப்பியாவின் ஒரு
“மிருகத்தனமான
ஆட்சி”க்கு
எதிரான ஒரு போரை நிகழ்த்திக் கொண்டிருப்பதாகக் கூறியதையும் விட வேறெதனை
நினைவுக்குக் கொண்டு வர முடியும்.
அன்றிருந்த அதே
மட்டத்திற்குத் தான் இன்றைய நிலையும் இருக்கிறது,
மனித உரிமைகளை இரட்டை
வேடத்துடனும் தெரிவுடனும் கையிலெடுப்பது சிரியாவில்,
ஈரானில் அல்லது பூமிப்பந்தின்
வேறெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் உண்மையான உரிமைகளையும் நலன்களையும் உறுதி
செய்வதற்காக அல்ல,
மாறாக மில்லியன்கணக்கான மக்களின்
வாழ்க்கையையும் நலன்களையும் அச்சுறுத்தும் புதிய போர்களுக்குத் தயாரிக்கும்
முகமாகத் தான்.
|