WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரான்ஸின் ஒல்னேயிலுள்ள கார்
ஆலையில் தொழிற்சங்க ஒன்றுகூடலினுள்
By our reporters
27 March 2012
use
this version to print | Send
feedback
பாரிஸிற்கு
வடக்கே ஒல்னேயிலுள்ள
PSA கார் ஆலையினுள்
பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT)
ஏற்பாடு செய்திருந்த
ஆர்ப்பாட்ட எதிர்ப்பிற்கு, மார்ச் 22 அன்று
WSWS
நிருபர்கள்
சென்றிருந்தனர்.
மறுகட்டமைப்புத் திட்டங்களையும்
GM
உடன் இணைப்பு என்பதற்காக
மூடிவிடத் திட்டமிடப்பட்டுள்ள பாரிஸ் பெருநகரப் பகுதி ஒல்னே ஆலையில் அதன் உள்ளூர்த்
தொழிற்சங்கத்தினரை ஒரு நாள் எதிர்ப்புக்கள் நடத்துமாறு
CGT
அழைப்பு
விடுத்திருந்தது.
“PSA
ஆலைமூடலுக்கு வேண்டாம் என்போம்”
என்று பதாகையில் எழுதப்பட்டுள்ளது
ஆலை
மூடல்களுக்குப் பரந்த எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட,
CGT
இன்
எதிர்ப்பு ஒன்றுகூடலில் ஒரு சில நூறுபேர்தான் கலந்துகொண்டனர்; இது தொழிற்சங்கங்கள்
ஏற்பாடு செய்யும் போராட்டங்கள பற்றி பரந்த மக்கள் அதிருப்தி, ஏமாற்றம் ஆகியவற்றைப்
பிரதிபலிக்கிறது. பல தொழிற்சங்க அதிகாரிகள் மேடையைச் சூழ்ந்திருந்தனர்; அதே
நேரத்தில் பல நிறுவனங்களில் இருந்து வந்திருந்த தொழிலாளர் பிரதிநிதிகளும் ஒரு சில
ஒல்னே தொழிலாளர்களும் அருகே இருந்த குன்று ஒன்றில் ஒலிபெருக்கியை அவ்வப்பொழுது
கேட்ட வண்ணமும் இருந்தனர்.
CGT
அதிகாரத்துவத்தினர் தங்கள்
கருத்துக்களை கூற இருக்கையில் மேடைக்கு அருகே இருந்து ஒரு சிறிய இசைக்குழு சர்வதேச
கீதத்தை (Internationale)
இசைத்தது. சர்வதேச
தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கான புரட்சிகரப் பாடலின் ஒலி உத்தியோகபூர்வ
பேச்சுக்களில் இருந்து முற்றிலும் மாறான தன்மையைக் கூறியது. இவர்களுடைய உரைகள்
பாரிஸ் அரசின் கொள்கைகளைக் குறித்த
CGT
உடைய
திட்டங்களைப் பற்றியதாகவே இருந்தன.
அமெரிக்கக்
கார்த் தொழிலாளர்கள் மீது பேரழிவுதரும் 50% ஊதியக் குறைப்புக்களை ஏற்படுத்தியபின்
GM
உடைய
ஐரோப்பிய செயற்பாடுகளின் மறுசீரமைப்பில் விளைவினால் வந்துள்ள வெட்டுக்களை
எதிர்கொள்ளும் வகையில் ஸ்பெயின், பிரிட்டன், ஜேர்மனி மற்றும் பிரான்ஸிலுள்ள
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் ஒல்னே தொழிலாளர்களும் ஒரேமாதிரி உள்ளனர் என்பது
அறியப்பட்டிருக்க முடியாது.
மாறாக
CGT
அதிகாரிகள் மற்றொரு
பிராந்தியப் போராட்டத்திற்கான தயாரிப்பை நாடினர்—அடிப்படையில்
ஒல்னே ஆலையைத் தனிமைப்படுத்திய வகையில். இத்தகைய குறைந்த வரம்புடைய போராட்டங்கள்
கார்த் தொழிலின் சிறிய, தொடர்ச்சியான போராட்டங்களை, ஆலை மூடல்களுக்கு எதிராக
பிரான்ஸின் கார்த் தொழிலில் 2009ல் இருந்து
New Fabris,
Continental, Sodimatex,
ஆகிய நிறுவனங்களில்
நடப்பதைத் தனிமைப்படுத்தி, நசுக்கிவிட அனுமதிக்கின்றன. தங்கள் மூலோபாயம் இத்தகைய
விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்த
CGT
உயர்மட்ட அதிகாரிகள் தங்கள்
தோல்வி அடையும் கொள்கைகளுக்கு ஓர் இழிந்த
“போராளித்தன”
வெற்று முத்திரையையும் கொடுக்க முற்படுகின்றனர்.
முதல்
பேச்சாளர், பாரிஸ் பிராந்திய இயக்குனர் பஸ்கால் ஜோலி, ஜனாதிபதி நிக்கோலா
சார்க்கோசியின் பாரிஸ் பகுதியில் நகரமயமாக்கும் திட்டங்களைக் குறைகூறிப் பேசினார்.
மற்றொரு
CGT
அதிகாரி
PSA
நிர்வாகி
Frédéric St Geours
உலோகத் தொழில்களின்
சங்க தொழில்வழங்குனர் கூட்டமைப்புத் (UIMM)
தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்; இது 2007ம் ஆண்டு தொழிற்சங்கங்களுக்கு
சட்டவிரோதமாகப் பணம் அளித்த வகையில் பெரும் ஊழலில் தொடர்பைக் கொண்டிருந்தது.
CGT
அதிகாரி ஊழலைப் பற்றி ஏதும்
கூறவில்லை; தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பற்றி அது என்ன சொல்லுகிறது என்பதைப்
பற்றியும் கூறவில்லை; எப்படியும்
CGT
போராளித்தனப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றுதான் கூச்சலிட்டார்.
CGT
பொதுச் செயலாளர் பேர்னார்ட்
தீபோ அறிமுக உரைகளின்போது கற்சிலை போன்ற முகத்துடன் உட்கார்ந்திருந்தார். அவர்
பேசியபோது கார்த் தொழில் குறித்த பொதுக் கொள்கையை விவாதித்து, தங்கள் பணியிடங்களில்
போர்க்குணம் மிகுந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கமாறு தொழிலாளர்களிடம்
கூறினார். அதையொட்டி அரசியல் மூலோபாயம் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படலாம்”
என்றார்.
ஒன்லே ஆலைத்
தொழிலாளர்களான பௌட்சர் பிரஹிம், மௌடௌகில் லாஹௌசின் மற்றும் அஜரியோ அப்டெல்அசிஸ்
WSWS
நிருபர்கள்
SNCF (பிரெஞ்சு
தேசிய ரயில்வேக்கள்) குழுவின் தொழிலாளர் பிரதிநிதியிடம் ஒன்றுகூடலில் பேசினர்.
அவர்கள் கிட்டத்தட்ட 3,100 தொழிலாளர்களைக் கொண்டுள்ள ஒல்னே ஆலை
“அப்பகுதியில்
வேலைகளுக்கான மைய ஆதாரம்”
என்றனர்—மற்ற
பெரிய நிறுவனங்கள் பாரிஸ் நோர்ட் கடைகள் மையம் மற்றும் சார்ல்ஸ் டு கோல் விமான
நிலையமும் ஆகும். இந்த ஆலை மூடப்படுவது ஒல்னேயை பேரழிவிற்கு உட்படுத்தும், பாரிஸின்
வடகிழக்குப் புறநகரப்பகுதிகளையும் பேரழிவிற்கு உட்படுத்தும்.
SNCF
லுள்ள நிலைமைகளைப் பற்றிப்
பேசுகையில், அவர்கள் தனிப்பட்ட முறையில் அதிக பாதிப்பைக் கொண்டிருக்கவில்லை, ஆனால்
கணிசமான ஊதியக் குறைப்புக்களுக்கான தயாரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன என்றனர்.
1982ல் இருந்து கிட்டத்தட்ட 250,000 வேலைகள் தகர்க்கப்பட்டுவிட்டன,
SNCF
தொழிலாளர்
தொகுப்பு இப்பொழுது 150,000 ஐயும் விடக் குறைந்த எண்ணிக்கையைத்தான் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கத்தால் (UAW)
பேச்சுவார்த்தைகள்
நடத்தி முடிக்கப்பட்ட ஆழ்ந்த ஊதிய வெட்டுக்கள் ஐரோப்பிய கார்த் தொழிலாளர்களை
எப்படிப் பாதிக்கும் என்று கேட்கப்பட்டதற்கு, அவர்கள் அத்தகைய ஒப்பந்தம் எதையும்
பிரான்ஸில் CGT
எதிர்க்கும்
என்றனர். “அத்தகைய
ஒப்பந்தத்திற்கு
CGT ஒப்புதல்
கொடுக்கவே கொடுக்காது”.
WSWS
நிருபர்கள் அவர்களுடைய
கருத்துக்களை இப்பொழுது
UAW,
CGT
இன்னும் பிற ஐரோப்பிய
தொழிற்சங்கங்கள் இடையே கார்த்தொழில்துறை மறுகட்டமைப்பு குறித்து நடத்தும்
பேச்சுக்களைப் பற்றிக் கேட்டபோது, தலைமை ஊழியர்கள் அத்தகைய அறிக்கைகள் பற்றிய
தகவல்கள் பொய் என்றுதான் கூறினர்
(see: “French
unions prepare to back cuts in PSA-GM tie-up”).
WSWS
நிருபர்கள் ஒல்னேத்
தொழிலாளர்கள் குழு ஒன்றிடம் பேசினர். ஆலையில் நிலைமைகள்
“மிகவும்
கடினமாகத்தான்”
உள்ளன என்று அவர்கள் விளக்கினர்; மேலும் ஆலையினுள் இருக்கும்
தொழிலாளர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் கூறினர். ஒரு ஒருங்கிணைப்புப் பட்டறை
2007ல் இருந்து மூடப்பட்டுவிட்டதாகவும் இரவு நேரப் பணி அகற்றப்பட்டுவிட்டது என்றும்
கூறினர். மேலும் ஆலை நிர்வாகம் படிப்படியாக கருவிகளை வெளியே எடுத்துச் சென்று
ஒல்னேயிலுள்ள இயந்திரத் தொகுப்புக்களைக் குறைக்கின்றன என்றும் இது ஆலையை மூடுவதற்கு
எளிதாகிவிடும் என்றும் கூறினர்.
கடந்த
தசாப்தத்தில் ஆலை கிட்டத்தட்ட 7,000 தொழிலாளர்களைக் கொண்ட நிலையில் இருந்து
இப்பொழுது 3,000 தொழிலாளர்கள்தான் என்ற நிலைமைக்கு வந்துள்ளது; தொழிலாளர்கள்
உற்பத்தியைத் தக்கவைக்கக் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. மேலும் தற்காலிகத்
தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. முழு நேரப் பணிக்கு அவர்களுக்கு
மாதம் ஒன்றிற்கு 900 முதல் 1,200 ஈரோக்கள் கிடைக்கிறது
($1,200
to $1,600)
–அது
தற்காலிகத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதும் அரிது. முழுநேரத் தொழிலாளர்கள் மாதம்
ஒன்றிற்கு 100 முதல் 150 ஈரோக்கள் வரை குறைக்கப்படும் மணித்தியால உழைப்பினால்
இழப்புக்களை எதிர்கொள்கின்றனர்.
தொழிற்சங்கங்களைப் பற்றிக் கேட்கப்பட்டதற்கு ஒரு தொழிலாளி கூறினார்:
“அவற்றில்
பெரும்பாலானவை, தொழிலாளர்களுடனான அவர்களுடைய உறவுத் தரங்களைப் பொறுத்தவரை,
முதலாளிகளின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளனர். இது
“உறுப்பினர்
கட்டணம் செலுத்துபவர்கள்”
(3,100 ல் 300 தொழிலாளர்கள்தான்) மற்றும்
“செலுத்தாதவர்கள்”
என்ற பிரிவினையை
ஏற்படுத்தியள்ளது.
CGT
ஒல்னே
ஆலையில் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவுள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதில்லை
என்றும் குறிப்பிட்டார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதும் தொழிலாளர்களுக்கு கடினமாகும்; ஏனெனில்
CGT
பலநேரமும் வேலைநிறுத்த நலன்களைக் கொடுப்பதில்லை: அதாவது 2007ல் ஆறு வாரகால
வேலைநிறுத்தம் கணிசமான இடர்களைக் கொடுத்தது; பல தொழிலாளர்கள் அந்த
வேலைநிறுத்தத்தின்போது வாங்கிய கடனை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.
|