WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரான்சில் துலூசில் கொலைகளைப் பற்றிய பொலிசாரின் செயல்பாடு குறித்து வினாக்கள்
எழுகின்றன
By
Alex Lantier
24 March 2012
use
this version to print | Send
feedback
மார்ச் 11ல் இருந்து மார்ச் 19 வரை துலூஸ் பகுதியில் தொடர்ச்சியான
கொலைகளை செய்ததாகக் கூறப்படும் முஹமட் மேரா பற்றி வெளிவரும் விவரங்கள் பிரெஞ்சு
உளவுத்துறை மற்றும் பொலிஸ் அமைப்புக்களின் செயற்பாடு குறித்துத் தீவிர கேள்விகளை
எழுப்பியுள்ளன.
மார்ச் 11 அன்று துலூசில்ஒரு பாராசூட் படையினனை கொன்றதாகவும்,
அருகிலுள்ள மொந்தபானில் மார்ச் 15ம் திகதி இரண்டு பாரசூட் துருப்பினரை கொன்றார்
என்றும் ஒரு தகப்பனாரையும் சில குழந்தைகளையும் ஒரு யூத பாடசாலையில் மார்ச் 19 அன்று
கொன்றார் எனவும் கூறப்படுகிறது. வியாழன் அன்று அவருடைய வீட்டில் நடைபெற்ற
பொலிசுடனான மோதலில், வீட்டு மாடியிலிருந்து விழுகையில் தலையில் குறிவைத்து
சுடுவோரால் சுடப்பட்டு அவர் கொலையுண்டார்.
DCRI
எனப்படும் உள்துறை உளவுத்துறை மத்திய தலைமையகம் மற்றும் பொலிஸிற்கு
நன்கு தெரிந்துள்ள மேரா ஒரு வாரத்திற்கும் மேலாகக் கண்டுபிடிக்கப்படவில்லை, ஏன்
இப்பொலிஸ் செயற்பாட்டில் அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை அதிகாரிகள் குழப்பத்துடன்
விவரிக்க முயல்கின்றனர்.
Europe1
வானொலியிடம் வியாழனன்று பேசிய வெளியுறவு மந்திரி அலன் யூப்பே,
“ஒரு
பிழை நடந்ததா இல்லையா என ஏன் சிலர் கேட்கின்றனர் என்பதை நான் உணர்கிறேன். ஒரு பிழை
இருந்ததா என்பது பற்றி எனக்கே தெரியாததால், எத்தகைய பிழை என நான் கூறுவதற்கில்லை,
ஆனால் இதுபற்றி நாம் நன்கு அறியவேண்டும்”
என்று ஒப்புக் கொண்டார்.
மேராவைக் கொன்ற உயரடுக்குப் பொலிசுக்கு போட்டியான ஒரு பயங்கரவாத
எதிர்ப்பு பிரிவான
GIGN
எனப்படும் தேசிய பொலிஸ் தலையீட்டுக்குழுவின் நிறுவனரான
Christian Prouteau
நேற்று தாக்குதலைக் குறைகூறினார். மேராவின் இறப்பில் இந்த மோதல் முடிவுற்றது
குறித்து அவர் தான் வியப்புற்றதாகக் கூறினார்.
“ஓர்
ஒற்றை தனிநபரைச் சிறந்த பொலிஸ் பிரிவு எவ்வாறு கைதுசெய்யமுடியாமல் போனது?
கண்ணீர்ப்புகைக் குண்டின் மூலம் அவரைத் தாக்கியிருக்கலாம். மாறாக அவர்மீது அதிகமான
கைக்குண்டுகளை வீசியுள்ளனர். இதன் விளைவு தன்னுடைய
‘போரைத்’
தொடர்வதற்கான மனநிலைக்கு குற்றவாளி தள்ளப்பட்டார்.”
அவர் மேலும் கூறினார்:
“சற்றே
தேவையற்றுக் கூறுவது போல் இருக்கும், ஆனால் என் கட்டுப்பாட்டின்கீழ் நடந்த 64
GIGN
நடவடிக்கைகளில் ஓர் இறப்புக் கூட ஏற்படவில்லை”.
உள்ளூர் துலூஸ் பொலிஸின் கருத்துக்களை எதிரொலித்த
Prouteau
ஏன் பொலிசார் மேராவின் வீட்டிற்கு வெளியே காத்திருந்து, வீட்டை
விட்டு வெளியேறும்போது அவரைக் கைது செய்யவில்லை என்றார்; இவ்வாறான செயல்முறை பல
நேரமும் பாஸ்க் தேசிவாதிகள் மற்றும் மாபியா நபர்களுக்கு எதிராகவே
பயன்படுத்தப்படுகிறது.
இந்த வினாக்கள் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி இத்துன்பத்தை
பரந்த பொலிஸ் அரசாங்க அதிகாரங்களை மேம்படுத்துவதற்கும், தன்னுடைய சட்டம் மற்றும்
ஒழுங்கு குறித்த நம்பிக்கைச் சான்றுடைய தோற்றத்தையும் அடுத்த மாத ஜனாதிபதித்
தேர்தல்களில் விரிவாக்கும் முயற்சியில் ஈடுபடுகையில், எழுகின்றன.
துப்பாக்கிச் சூடுகளுக்குப்பின் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய
CSA
கருத்துக்கணிப்பு, சார்க்கோசி தன்னுடைய வாக்குத்தளத்தை அதிகரித்து முதல் சுற்றுத்
தேர்தல்களில் 30% பெறுவார், இது சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹோலண்டின் 28% க்கு
எதிரானது என்றும் காட்டுகிறது. ஆனால் இரண்டாம் சுற்றில் ஹோலண்ட் வெற்றிபெறுவார் என
எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில்
UMP
வாக்குத்தளத்திற்கு வெளியே சார்க்கோசிக்குச் செல்வாக்கு அதிகம்
இல்லை என்பதால்.
வியாழன் அன்று நிகழ்த்திய ஒரு தொலைக்காட்சிப் பேச்சில், சார்க்கோசி
“பயங்கரவாதம்”,
அல்லது
“வெறுப்புணர்வை”
வளர்க்கும் வலைத்தளங்களைப் படிப்பவர்களுக்கு
“குற்றவியல்
தண்டனை”
கொடுக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதபோல் வெளிநாட்டிற்கு
“மூளைச்
சலவை”,
“தீவிரவாத
கருத்தியல்களை”
பாதுகாத்தல், சிறைக்குள் அவற்றை வளர்த்தல் போன்றவற்றில்
ஈடுபடுவோருக்கும் அத்தகைய தண்டனை தேவை என்றார். இத்தகைய திட்டங்கள், பரந்த வகையில்
இயற்றப்பட்டு அரசாங்கத்தை எந்த எதிர்ப்பு அரசியலையும் கிட்டத்தட்ட குற்றத்தன்மை
உடையதாக ஆக்கிவிடும், தடையற்ற பேச்சு, பயணம் ஆகிய அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை
மிதித்தும் விடும்.
நீதிபதிகள் சங்கத்தின் அதிகாரி
Marie-Blanche Regner,
சார்க்கோசியின் அழைப்பு
“ஓர்
அரசியல் தந்திர உத்தி”
என்றார். நவபாசிச
வேட்பாளர் மரின் லு பென்னை, (இவருடைய வாக்காளர்களை சார்க்கோசி ஆக்கிரோஷமாக புலம்பெயர்ந்தோர்
எதிர்ப்பு வார்த்தைஜாலங்கள் மூலம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்) அப்பட்டியலில்
சேர்ப்பாரா என்றும் கேட்டுள்ளார்.
சோசலிஸ்ட்
கட்சி,
கம்யூனிஸ்ட் கட்சி
–PCF-
மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவை சார்க்கோசியின்
“தேசிய
ஐக்கியத்துக்கான”
அழைப்புக்களுக்கு சவால் விடாத நேரத்தில், விசாரணை குறித்த பெரும்பாலான
எதிர்ப்புக்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு வல்லுனர்களிடம் இருந்துதான் வந்துள்ளது.
ஆனால் ஏற்கனவே வெளிவந்துள்ள விவரங்கள் மேரா உண்மையில் கொலைகாரர்தான் என்றால்,
இந்தக் கொலைகளை,
அவர் பிரெஞ்சு பொலிஸ் மற்றும் உளவுத்துறைச் செயற்பாடுகள்
குறிப்பிடத்தக்க அளவில் நிலைகுலைந்த நிலைமையால்தான் நடத்தியிருக்க முடியும்.
இக்கொலைகள் பற்றி சார்க்கோசி தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில்
இருக்கும் பாரிய அரசியல் பணயங்களுக்கு மத்தியில், உளவுத்துறையின் நிலைகுலைவிற்கும்
வரவிருக்கும் தேர்தல்களில் தன் வாய்ப்புக்களைக் காப்பாற்ற முற்படும் சார்க்கோசியின்
முயற்சிகளுக்கும் இடையே ஏதேனும் உறவு உள்ளதா என்று கேட்பது தர்க்கரீதியானதுதான்.
மார்ச் 15 மொந்தபான் கொலைகளைக்குப் பின், அதிகாரிகள் இக்கொலைகளில்
தாங்கள் அனைத்து
“சந்தேகப்படக்கூடியவர்களையும்”
ஆய்வு செய்துவருவதாகத் தெரிவித்தனர். நாளேடான லிபரேஷனின் கருத்துப்படி
துலூஸ் பொலிசார் விசாரணையாளர்களுக்கு துலூஸ் பகுதியில் இருந்த இஸ்லாமியவாதிகளின்
“தீவிரவாதிகள்”
பட்டியல் ஒன்றைக் கொடுத்தபோது, அதில் ஆறு பெயர்கள்தான் இருந்தன;
மேராவின் பெயர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. எனவே மேரா பொலிசாரால் நன்கு
அறியப்பட்டிருந்தார்.
ஆனால், மொந்தபான்
கொலைகளுக்குப்பின், மேரா அடையாளம் காணப்படவில்லை என்பது தெளிவு. அவருடைய தாயாரின்
கணனி இலக்கம் -IP-
பொலிசாரின் கணினிப் பட்டியலில் மார்ச் 11 பாதிப்பாளருடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள்
பற்றி இருந்தபோதிலும்கூட. இப்பட்டியல் கவனத்துடன் விசாரணையாளர்களால் ஆராயப்பட்டது.
பின்னர் மேராவைக் கைப்பற்றுவதில் ஒரு பங்கை வகித்தது. ஆனால் விசாரணையாளர்கள்
இப்பட்டியலை ஓசார் ஹதோரா பாடசாலைக் கொலைகள் நடந்தபின் மார்ச் 19 திங்கள்வரை,
இஸ்லாமியவாத அடிப்படையாளர்களுடன் இணைத்துப் பரிசீலிக்கவில்லை என்பது தெளிவு.
பாதுகாப்புத்துறை வல்லுனர்
François Heisbourg
லிபரேஷனிடம்.
“ஆப்கானிஸ்தானிற்கு
ஒரு சில டஜன் பிரெஞ்சுக்காரர்கள்தான் சென்றுள்ளனர். ஒரு சில பிரிவுகள்தான் மத்திய
பிரனே பகுதியில் (துலூசைச் சுற்றி) உள்ளன. ஏன் இவரைப் பற்றி எவரும் கவனம் எடுத்துக்
கொள்ளவில்லை என்பது வியப்பை அளிக்கிறது!
துலூஸ் மற்றும்
மொந்தபான் கொலைகளைக்கு முன்னால் என்றால் இது ஒருவேளை புரிந்துகொள்ளப்பட முடியும்.
ஆனால் அதற்கு பின்பு என்றால்? இதன்பொருள் தொடர்புடைய பிரிவுகள் முற்றிலும்
விவரமற்றவர்கள் அல்லது தங்கள் வேலையை அவர்கள் செய்யவில்லை என்பதுதான்.”
என்றார்.
“பாரிஸ்
மற்றும் துலூஸ் அரசாங்க வக்கீல்கள் சந்தேகத்திற்குரியவர்களின் முகவரி தங்களிடம்
இல்லை என்பதைக் கேட்கும்போது எனக்குத் திகைப்பு ஏற்படுகிறது.
DCRI
மேராவை இலையுதிர்காலத்தில் விசாரித்து அவர் ஆபத்தான நபர் இல்லை என்ற முடிவிற்கு
வந்தது. அப்படியானால் அவர்களிடம் ஏன் அவருடைய முகவரி இல்லை?”
இவருடைய நேரத்தில் பெரும்பகுதியை ஒரு திருத்துநகராக செலவழித்த
நிலையில் எப்படி ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானுக்கு இருமுறை செல்ல முடிந்தது என்பது
குறித்து ஒரு துப்பாக்கிதாரியாக மேரா பயிற்சி பெற்றது குறித்தும்
Heisbourg
வினாக்களை எழுப்பியுள்ளார்.
“இந்த
‘ஒற்றை
ஓனாய்’
செயல்பட்ட விதம் மிகவும் அனுபவமுடைய மாபியாக்காரர் கூடத் தைரியமாகச்
செய்யமுடியாதது. செயற்பாட்டை இவரே நடத்தி, கொலைகளை முன்னோடியில்லாத அளவில்
முற்றிலும் கணித்து, எந்தவித பதட்டமும் இல்லாமல் செய்துள்ளார். செப்டம்பர் 11
தாக்குதல் நடத்தியவர்கள்கூட சற்றே பதட்டமடைந்து
போயிருந்தனர். எனவே இவர் முதல்தரப் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். எவர்,
எவ்வாறு அப்பயிற்சியைக் கொடுத்தது?”
உண்மையில் மேரா ஒரு கொலையாளியா என்பது பற்றிய வினாக்கள் இன்னும்
விடை காணப்படவில்லை.
மொந்தபான்
துப்பாக்கிச்சூட்டின்போது நேரில் பார்த்த சாட்சியங்கள் கொடுத்த விவரங்களுடன்
அவர் ஒத்திருக்கவில்லை. அவர்கள் ஒரு பருமனான மனிதன், பச்சை குத்தியிருத்தவர்,
இடது கன்னத்தில் ஒரு தழும்பைக் கொண்டிருந்தவரைப் பற்றித் தெரிவித்தனர். இதற்கு
மாறாக மேரா ஒல்லியானவர், முகத்தில் எந்தவிட அடையாளங்களும் இல்லை.
|