WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Europe’s trade union heads meet with Merkel
ஐரோப்பிய தொழிற்சங்கத் தலைவர்கள் மேர்க்கெலை
சந்திக்கின்றனர்
Chris Marsden
24 March 2012
ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஐரோப்பா
முழுவதிலும் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களுடன் வியாழன் அன்று
யூரோப்பகுதி கடன் நெருக்கடி குறித்து பேச்சுக்களை நடத்தினார்.
தொழிற்சங்கத் தலைவர்கள் செய்தி ஊடகத்திற்கு ஒரு
“சமூக
ஐரோப்பா தேவை”,
மற்றும் பொருளாதாரங்கள் சரிவை எதிர்கொள்வதைக் காப்பதற்கு
“சமூகப்
பிணையெடுப்பு நிதி”
தேவை என்று வலியுறுத்திய அறிவிப்புக்கள்
மட்டுமே வந்துள்ளதை தவிர என்ன கூறப்பட்டது என்பது பற்றிய
அறிக்கைகள் எதுவும் இல்லை.
இந்த நெருக்கடி
“வருங்காலத்திற்கு
சரியான பாதையை நிர்ணயிக்கும் ஒரு வாய்ப்பு”,
“ஐரோப்பாவில்
வளர்ச்சி மற்றும் வேலைகிடைத்தலை நிரந்தரமாக வலுப்படுத்தும்”
என்றும் மேர்க்கெலின் உத்தரவாதம் திரைக்குப்
பின்னார் என்ன விவாதிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடுகிறது.
மிருகத்தனமான வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளில்
இருந்து பின்வாங்கல் இல்லை என்று மேர்க்கெல் தொழிற்சங்கத்
தலைவர்களிடம் கூறியிருக்க வேண்டும், மற்றும் அதிகரிக்கும்
எதிர்ப்பை மீறி அவர்கள் எப்படியும் சீர்திருத்தங்களை
செயல்படுத்த வேண்டும், அதுதான் தொழிலாளர்களை பணிநீக்கம்
செய்வதையும், ஊதியங்களைக் குறைப்பதையும் எளிதாக்குவதை
வடிவமைக்கும் சீர்திருத்தங்களை அவர்கள் செய்யவேண்டும் என்றும்
கூறியிருக்க வேண்டும்.
தொழிற்சங்கத் தலைவர்கள் மேர்கெலுடன்
தனிப்பேச்சுக்களை நடத்த கிடைத்த சந்தர்ப்பத்திற்கு பரிதாபமான
முறையில் நன்றியுணர்வுடன் இருந்தனர்.
“இப்பேச்சுக்கள்
நடைபெற்றதே முக்கியத்துவமானதுதான்”
என்றார் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் -DGB-
தலைவரான மிகைல் சொம்மர்.
“என்னுடைய
பார்வையில், இது நம்பிக்கைத்தன்மையை கட்டமைக்க தேவையானது,
இன்னும் இதுபோல் நடக்க வேண்டும்”.
பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் தொழிற்சங்க
அதிகாரிகளுடன், ஸ்பெயின், கிரேக்கம், இத்தாலி, செக் குடியரசு
மற்றும் அயர்லாந்தில் இருந்த தொழிற்சங்க அதிகாரிகளுடன் சொம்மர்
இணைந்திருந்தார்.
இந்த நாடுகள் கடும் வெட்டுக்கள் சுமத்தப்பட்டதை
எதிர்கொண்டுள்ளன, அப்படியும் ஸ்பெயினின்
UGT
தொழிற்சங்கத்தின் தலைவர் அந்தோனியோ பெரர் எதிர்ப்பு
வார்த்தைஜாலத்துடன்,
“ஆம்,
நாங்கள் அழைக்கப்பட்டது குறித்து நன்றியுடன் உள்ளோம், அதே
நேரத்தில் சான்ஸ்லர் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்தால்
நடாத்தப்படும் கொள்கைகள் குறித்த வேறுபாடுகளை
வெளிப்படுத்தினோம்.”
என்றுதான் அறிவிக்க முடிந்தது.
GSEE
எனப்படும் கிரேக்கப் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான
அயோனிஸ் பனகொபௌலோஸ் இடையறா வரிஉயர்வுகள், ஊதியக் குறைப்புக்கள்
மற்றும் வேலை இழப்புக்களின்
“பேரழிவு
விளைவுகளைப்”
பற்றிப் பேசினார். ஆனால் பின்பு இந்த
வசந்தக்காலத்தில் மேர்க்கெலுடன் ஒரு கூட்டத்தை உறுதி செய்வதை
இது தடுத்துவிடவில்லை.
இக்கூட்டத்தில் உரையாடல் ஏதும்
இருந்திருக்காது, மேர்க்கெல்தான் சட்டத்தை உரைத்திருப்பார்.
இதற்கு முதல்நாள் அவர் யூரோப்பகுதியின் நெருக்கடி
“இன்னும்
முடிந்துவிடவில்லை”,
“அதன்
பல கட்டங்களில் ஒன்றாக உள்ளது”
என்றார். மத்திய கேள்வி,
“நிலைமைகள்
எப்படி உள்ளன, முதலீட்டாளர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான்
ஆகியவற்றில் இருப்பவர்கள் தங்கள் பணத்தை இந்த யூரோப்பகுதி
நாடுகளில் முதலீடு செய்வதில் எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளனர்
மற்றும் அப்பணத்தை மீண்டும் அவர்கள் பார்ப்பரா என்பதுதான்”.
இதற்கு விடை தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும்
மிருகத்தனத் தாக்குதல்கள்தான். ஜனவரி மாதம் மேர்க்கெல்
வலியுறுத்தியபடி,
“சீனா,
பிரேசில் போன்ற எழுச்சி பெற்று வரும் சக்திகளுடனான சர்வதேசப்
போட்டியில் ஐரோப்பா ஜேர்மனியை போன்ற போட்டித்தன்மையைக்
கொண்டிருந்தால்தான் வெற்றிபெற முடியும்.”
சீனாவுடன் போட்டித்தன்மையைக் கொள்வதற்காக
தேவைப்படும் வெட்டுக்களின் அளவு கண்களில் நீரை வரவழைக்கும்.
25 அரசாங்கத் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ள
நிதிய உடன்பாட்டிற்கு எல்லா 17 யூரோப்பகுதி நாடுகளும் தங்கள்
பற்றாக்குறைகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 முதல் 1%
என்று குறைக்க ஒரு நிதியஉடன்பாடு ஓராண்டிற்குள்
நடைமுறைப்படுத்தப்படவேண்டும்; அல்லது அவை பாரிய அபராதங்களை
எதிர்கொள்வதுடன் மற்றும் எவ்விதமான ஐரோப்பிய மத்திய வங்கி
நிதிக்கும் அணுகவும் முடியாது. தற்பொழுது ஸ்பெயின் 5.3% உள்ள
பற்றாக்குறைய சமாளிக்கத் திணறுகிறது, அயர்லாந்தோ 8.6%
பற்றாக்குறையைக் கொண்டுள்ளது.
மேலும் வெட்டுக்களுக்கான தற்போதைய கோரிக்கைகள்
2008க்குப் பின் வந்தது போன்ற ஐரோப்பிய, உலகப்
பொருளாதாரங்களுக்கு இன்னும் பேரழிவுதரும் வீழ்ச்சியை
அனுபவிக்காது என்ற முன்கருத்துக்களின் அடிப்படையில் உள்ளன.
இப்பொழுது, அனைத்துக் குறிப்புக்களும் இது ஒரு நிரந்தரமான
அதிகரிக்கும் அச்சுறுத்லைப் போல் என்று காட்டுகின்றன.
பில்லியன்கள் ஏற்கனவே பொதுச் செலவுகள் நிதியில்
குறைக்கப்பட்டுவிட்டன. இவை வேலையின்மையை, வறுமை ஆகியவற்றை
அதிகரித்து, அந்த வழிவகையில் ஐரோப்பியப் பொருளாதாரங்களை ஒரு
கீழ்நோக்குச் சரிவில் விரைவாகத் தள்ளிவிட்டன. இதுவரை
அயர்லாந்து, கிரேக்கம், பெல்ஜியம், போர்த்துக்கல், இத்தாலி,
நெதர்லாந்து மற்றும் ஸ்லோவானியா ஆகியவை உத்தியோகபூர்வமாக
மந்தநிலையில் உள்ளன, பிரித்தானியா, பிரான்ஸ், ஏன் ஜேர்மனியில்
கூட வளர்ச்சி இல்லாதுள்ளது.
ஐரோப்பா முழுவதும் செயற்படுத்தப்படவுள்ள
நடவடிக்கைகளுக்கு பரிசோதனைக்களம் போல் கிரேக்கம்
பயன்படுத்தப்படுகிறது. அதற்குச் சமீபத்தில் கொடுக்கப்பட்ட
€130
பில்லியன், உண்மையில் வங்கிகளுக்கும், பிற
முதலீட்டாளர்களுக்கும் கொடுக்கப்படுவதற்காக
ஒதுக்கப்பட்டுள்ளது; ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா,
பிரித்தானியா ஆகியவை முக்கிய ஆதாயம் பெறுபவற்றில் உள்ளன.
இதற்கு முற்றிலும் மாறாக, தொழிலாளர்களுக்கு
வழங்கப்படுவது முடிவில்லா, அதிகரிக்கும் வேதனைதான்.
இப்பொழுது ஜேர்மனி வடக்குக் கிரேக்கத்தில்
“தடையற்ற
வணிகப் பகுதிகள்”
நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளது. அங்கு
குறைந்தப்பட்ச ஊதியம்
€500ல்
இருந்து
€300
என குறைக்கப்படும், பெருநிறுவன வட்டி 20% க்குப் பதிலாக 2% என
இருக்கும்.
தனது ஐந்தாம் ஆண்டு மந்த நிலையின் போதும்
இன்னும் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு கிரேக்கம்
உறுதியளித்துள்ளது. இதை ஒட்டி குறைந்தப்பட்ச ஊதியம்
வெட்டப்படும், ஓய்வூதிய நலன்கள், சுகாதாரப் பாதுகாப்பு நிதி
ஆகியவை குறைக்கப்படும். உத்தியோகபூர்வ வேலையின்மை ஏற்கனவே 23%
என்று உள்ளது. இளம் தொழிலாளர்களில் 50%க்கும் மேலானவர்கள்
வேலையில் இல்லை. அப்படியும் ஏதென்ஸ் அடுத்த தசாப்தம் வரை
ஒவ்வொரு ஆண்டும் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு
உத்திரவிடப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் பொதுத்துறை வேலைகளையும்
ஊதியத்தையும் குறைப்பதுதான் இச்சிறு நாடு
€3.1
பில்லியனை அதற்குக் கடன் கொடுத்தவர்களுக்குத்
திருப்பிக்கொடுக்கும் ஒரே அடித்தளம் ஆகும். இது 2023 வரை
நடக்கும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% கொடுக்கப்பட
வேண்டும். அதைத்தவிர வட்டி செலுத்தமதிகள் அனைத்துக்காலத்திலும்
உயர்வானதாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதி மற்றும்
ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றால் இந்த மாதம் கடன்
மறுக்கப்பட்ட முதல் நாடான ஹங்கேரியில் குடும்பங்கள் ஏற்கனவே
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%க்கும் மேலாக கடனுக்கான
வட்டிக்குச் செலவழிக்கின்றன.
ஸ்பெயினில் வேலையின்மை தரங்கள் கிட்டத்தட்ட
கிரேக்கத்தில் இருப்வற்றைப்போல்தான் உள்ளன. இத்தாலியில் 18
முதல் 24 வயதுவரை இருப்பவர்களில் 30%க்கும் மேலானவர்கள்
வேலையில்லாது உள்ளனர். 57% இத்தாலியர்கள்தான் வேலையில்
உள்ளனர். ஸ்பெயின் அரசாங்கம் சிறிதும் பொருட்படுத்தாமல் 24
அரசநிறுவனங்களை மூடுகிறது. நெருக்கடி நிலை ஏற்கனவே 200,000
நிறுவனங்களைத் திவால்தன்மையில் தள்ளிவிட்டது.
கிரேக்கம், ஸ்பெயின், இத்தாலி மற்றும்
போர்த்துக்கல்லில் ஒரேவித தொழிற்சட்டங்கள் சுமத்தப்படுகின்றன;
இதன் பொருள் இன்னும் வேலைக்குறைப்பு மற்றும் ஊதிய வெட்டுக்கள்
என்பதாகும்.
ஐரோப்பாவின் பெருநிறுவனங்களும் அவற்றின்
அரசாங்கங்களும் இவற்றைச் செய்துவிட்டுத் தப்ப முடிகிறது
என்றால் இதன் பொறுப்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம்தான்
உள்ளது. இந்த வாரம் மேர்க்கெலைச் சந்தித்த வசதியான
தொழிற்சங்கச் செயலர்கள் ஆளும் உயரடுக்கின் சிக்கன நடவடிக்கைகள்
செயற்பட்டியல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவாதம்
அளிப்பதில் உறுதியாக உள்ளனர்.
தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க
முடியாத நிலையில், அவை பயனற்ற ஒருநாள் எதிர்ப்புக்களை—இதற்கு
ஏராளமான உதாரணங்களைக் காட்டமுடியும்—சம்பந்தப்பட்ட
தொழிலாளர்களை தளர்வுறச் செய்து, எதுவும் செய்வதற்கில்லை என
அவர்களை நம்பவைக்கப்படுவதற்கு நடத்துகின்றன.
இதை செய்வதுகூட இந்த அழுகிய அமைப்புக்களுக்கு
அதிகமாகத் தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்படாத மரியோ மோன்டியின்
அரசாங்கத்திற்கு முழு ஆதரவைக் கொடுக்கும் இத்தாலியின்
CSIL
போன்றவற்றிற்கும் அல்லது அதேபோல் போர்த்துக்கல்லில் சோசலிஸ்ட்
கட்சியுடன் இணைந்துள்ள
UGT
என்னும் பொதுத் தொழிலாளர் தொழிற்சங்கமும் ஆதரவைத்தான்
கொடுக்கிறது. இது வியாழன் அன்று புதிய தொழில்துறை சட்டத்திற்கு
எதிராக நடந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு பெற
மறுத்துவிட்டது. ஜேர்மனியத் தொழிற்சங்கங்களும் நடைமுறையில்
மேர்க்கெலின் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிகள்போல் நடந்து
கொள்கின்றன. பிரித்தானியாவில்
Trades Union Congress
இரண்டு பொதுத்துறை வேலைநிறுத்தங்களை மட்டுமே
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆதரித்துள்ளது. இன்னொன்று எழும்
முயற்சிகளை காட்டிக்கொடுத்து சேதப்படுத்தியது.
ஐரோப்பியத் தொழிலாளர்கள் இன்னும் பெரிய சமூக
அழிவிற்குள் இழுக்கப்படுகின்றனர். வேலையின்மை, வீடின்மை ஆகியவை
தொற்றுநோய்போன்று பரவியுள்ளன. சமூகசேவைகள் குப்பையில்
போடப்பட்டு, தனியார்மயமாக்கப்படுகின்றன. முடிவில்லா வறுமை
மற்றும் வேலை பாதுகாப்பு இன்மை என்பது அன்றாட
நடைமுறையாகிவிட்டன. முதலாளிகள் சாட்டையைக் கையில் எடுத்துக்
கொண்டு, தொழிலாளர்களை வேலையில் இருந்து நினைத்தபோது பணியில்
இருந்துவது, நீக்குவது ஆகியவற்றைச் செய்கின்றனர்.
இப்பொழுது கண்டிப்பாக நடத்தப்பட வேண்டிய
போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் எதிரிக்கான பணியைத்தான்
தொடர்ந்து செய்யும். ஐரோப்பிய தொழிலாளர்ளை,
தொழிலாளர் அதிகாரத்திற்கும் சோசலிசத்திற்குமான
ஐக்கியப்பட்ட தாக்கதலுக்கு வழிநடத்த புதிய வர்க்கப் போராட்ட
அமைப்புக்களும், புதிய கட்சியும் கட்டமைக்கப்பட வேண்டும். |