WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
China’s military spending surpasses $100
billion
சீனாவின் இராணுவ செலவினம் 100 பில்லியன் டாலரை
கடக்கின்றது
By John Chan
19 March 2012
தேசிய மக்கள் காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட இவ்வாண்டின் சீன
இராணுவத்திற்கான செலவு 670 பில்லியன் யுவான் (106.4 பில்லியன்
அமெரிக்க டாலர்கள்) ஆகின்றது. இது 2011லிருந்து 11.2 சதவீத
அதிகரிப்பாகவும் 2006லிருந்து இரண்டுமடங்கும் ஆகும்.
இதன் விளைவாக,
அமெரிக்காவுக்குப் பிறகு,
100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பாதுகாப்பு செலவினை கொண்ட
இரண்டாவது நாடாகவும்,
2011ல் 61.2 பில்லியன் டாலர் செலவழித்த சரியாக மூன்றாவது
இடத்தில் இருக்கும் பிரான்சுக்கு முன்னதாக, சீனா மட்டுமே
இருக்கிறது. அது.
IHS Janeன்
படி,
நான்காண்டுகளில் சீனாவின் இராணுவ செலவுகள்
“ஜப்பானையும்
இந்தியாவையும் மிகப் பின்னுக்கு தள்ளி
”
ஏனைய ஆசிய நாடுகள் அனைத்தினதும் மொத்த தொகையை கடந்துவிடும்.
மேற்கத்திய ஊடகம்,
குறிப்பாக அமெரிக்காவில்,
இவ்எண்ணிக்கையை சீனாவின் இராணுவ அச்சுறுத்தலுக்கான மேலதிக
ஆதாரமாக பிடித்துள்ளது. உதாரணமாக,
நியூயோர்க் டைம்ஸ்,
எழுதியது:
“சீனாவின்
அதிகரித்துவரும் இராணுவ செலவினங்களுக்கும் அந்த
பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட ஏனைய
நாடுகளின் குறைகின்ற செலவுகளுக்கும் இடையேயான அதிகரித்துவரும்
இடைவெளி இருக்கும் பொழுது,
புதிய (சீன) வன்பொருள்கள் காட்டப்படுகின்றன. சீனாவின் இராணுவ
செலவினங்கள் அதிகரித்துவருகையில்,
ஆசிய-பசிபிக்
பிராந்தியத்தில் அமெரிக்கா தனிப்பட்ட ஆதிக்க சக்தியாக
இருக்கமுடியாது என்பதை இவ்விடைவெளி
வலியுறுத்திக்காட்டுகின்றது.
சீன முதலாளித்துவத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை
பாதுகாத்துக்கொள்வதற்காக பெய்ஜிங் தனது இராணுவத்தை
விரிவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவால் குறிப்பாக
ஒபாமா நிர்வாகத்தின் கீழ் எடுக்கப்பட்ட, சீனாவை நோக்கிய
கடுமையான நிலைப்பாடு இந்த ஆயுதப்போட்டிக்கான முதன்மையான
உந்துசக்தியாக இருக்கிறது. வாஷிங்டனின் நட்பு நாடுகளை
பலப்படுத்துதல் மற்றும் ஆசியப் பகுதி முழுவதுமான கூட்டு,
மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இராணுவத்தை குவித்தல் ஆகியவை
சீனாவை
சுற்றிவளைப்பதற்கான
அச்சுறுத்தலாகும்.
2012ல் (ஆஃப்கானிஸ்தானில் இருப்பது போன்று அடிப்படை செலவு
மற்றும் போர் செலவுகள்) அமெரிக்க இராணுவ செலவுகள் 707.5
பில்லியன் டாலராக இருக்கும் என திட்டமிடப்படுகிறது. இது
ஏறக்குறைய சீனாவினுடையதில் ஏழுமடங்காகும். அமெரிக்க பாதுகாப்பு
வரவு-செலவு திட்டம் அடுத்த 10 பெரும் இராணுவ சக்திகளின்
கூட்டுத்தொகையைவிட மிக அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவின் அதிக
இராணுவ செலவினம், உலகின் மிகப்பெரிய போர்த்திற அணுவாயுத
சக்திகளை கொண்டிருப்பதிலிருந்து அநேகமாக ஒவ்வொரு
இராணுவத்துறையிலும் மற்றும் உலகைச் சுற்றிலும் உள்ள அதனுடைய
750 இராணுவ தளங்களும் சீனாவிற்கு மேலான அதனது பாரிய மேம்பட்ட
நிலையை உறுதி செய்கிறது.
உலக அரசியலில் இன்று ஸ்திரமின்மையை உருவாக்கும் முதன்மையான
காரணியாக அமெரிக்க இராணுவம் இருக்கிறது. பொருளாதார சரிவைச்
சந்தித்தலில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தான் மற்றும்
ஈராக் படையெடுப்புகள் போன்ற கொள்ளையடிக்கும் போர்களில்
ஈடுபட்டுள்ளதன் மூலம் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள தனது
போட்டியாளர்களை கட்டுபாட்டினுள்வைத்திருக்க, அதிக அளவில்
தன்னுடைய இராணுவ பலத்தை பயன்படுத்தியிருக்கிறது. லிபியா மீதான
நேட்டோ போர் சீன முதலீடுகளின் பில்லியன் கணக்கான டாலர்கள்
அளவிலான இழப்புகளுக்கு நேரடியாக இட்டுச்சென்றது. சிரியா
மற்றும் ஈரானுக்கெதிரான அமெரிக்கா மற்றும் அதனுடைய நட்பு
நாடுகளின் இராணுவ அச்சுறுத்தல்கள் சீனாவின் நலன்களை மேலும்
கீழறுக்கின்றன.
ஒபாமா ஆட்சியின் கீழ், ஆசிய பகுதிகள் முழுதும் சீனாவின்
ஆதிக்கத்தை குழிபறிப்பதில் அமெரிக்கா கவனம்
செலுத்திக்கொண்டிருக்கிறது. நவம்பரில் கான்பெர்ராவில்
பேசுகையில், ஆசிய பசிபிக்கில் பாதுகாப்பு செலவினங்களில்
குறைப்பு இருக்காது என்று அமெரிக்க அதிபர் உறுதியளித்தார்.
பெண்டகனின் புதிய மூலோபாய வழிகாட்டுதல்களான, ஜனவரியில்
வெளியிடப்பட்ட, “உலகளவில் அமெரிக்காவின் தலைமையை தக்கவைத்தல்:
21ம் நூற்றாண்டு பாதுகாப்புக்கான முன்னுரிமைகள்”, ஆசியாவை
நோக்கி “ஒரு மறுசமன்படுத்தலையும்”
மற்றும் சிறப்பாக சீனாவை மையப்படுத்தியதுமான, அதனுடைய
குற்றம்சாட்டப்பட்ட இராணுவ வெளிப்படைத்தன்மையின்மையை” நோக்கி
மையப்படுத்தியது.
பெண்டகன் கடந்த ஆண்டு சீனாவுக்கெதிராக இயக்கப்படுகின்ற
வான்/கடல் யுத்தத்தின் புதிய மூலோபாய கொள்கைக்கான ஓர்
அலுவலகத்தை உருவாக்கியது. எந்த உத்தியோகபூர்வமான ஆவணங்களும்
வெளியிடப்பட்டிருக்கவில்லை, ஆனால் இது அமெரிக்க மூலோபாய
சிந்தனைக்கூடங்களில் வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறது.
சாதாரணமாக, மேற்கு பசிபிக்கில் அமெரிக்க தளங்கள் மீதான சீன
தாக்குதல் தொடர்பான பெயரளவிலான ஒரு பாதுகாப்பு மூலோபாயம், ஒரு
மூர்க்கமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு அமெரிக்க
எதிர்தாக்குதல் என்றழைக்கப்படுவது, முதலாவதாக சீன கண்காணிப்பு,
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை “குருடாக்குதல்”,
சீன குறுந்தூர மற்றும் கண்டம்விட்டுப்பாயும் ஏவுகணைகளை
அழித்தல், அத்துடன் அதனுடைய கடற்படை மற்றும் நீர்மூழ்கி
கப்பல்களை அழிப்பது சீனா மீதான முழு-அளவிலான போரை உள்ளடக்கும்.
வான்/கடல் யுத்தத்தின் கொடூர குணாதிசயம், அதனுடைய இலக்கான சீனா
அதனுடைய
DF-21D
கப்பலுக்கெதிரான கண்டம்தாவும் ஏவுகணைகள் போன்ற “நுழைவு
மறுப்பு”
தகமைகளை
செயல்படுத்திக்காட்டப்படுகின்றது. அமெரிக்க மூலோபாய
இலக்கியத்தில் வெகுவாக மிகைப்படுத்தப்பட்ட - சீன கடற்கரைக்கு
அருகில், நுண்மையான நீர்வழிப் பகுதியில் அமெரிக்க
போர்க்கப்பல்களை தடையில்லாத ஊடுருவலிலிருந்து
தற்காத்துக்கொள்வதற்காக இந்த ஏவுகணைகள் ஒரு தடுப்புக் கருவியாக
அபிவிருத்திசெய்யப்பட்டன. இந்த ஏவுகணைகளை தாக்குவதற்காக
அமெரிக்கா
X-47B
என்ற புதிய ஆளற்றயுத்தவிமானத்தை மேம்படுத்திக்
கொண்டிருக்கிறது.
மலாக்கா நீரிணைப்பு போன்ற ”நுழைவு வாயில்களை” அடைப்பதன் மூலம்,
மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிற்கான சீனாவின் முக்கிய கப்பல்
வழிகளை வெட்டுவதும் இந்த வான்/கடல் யுத்தத்தின் மற்றொரு
நோக்கமாக இருக்கிறது. இதன் விளைவாக, சீனப் பொருளாதாரம்
இறக்குமதி செய்யப்பட்ட எரிசக்தி மற்றும் மூலப்பொருட்கள்
பற்றாக்குறையினால் திண்டாடும். இதுபோன்ற முரண்பாடு ஜப்பான்
மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்க நட்புநாடுகளை இயல்பாகவே
அணு ஆயுத போருக்கு துரிதமாக உட்படுத்தும்.
சமீபத்திய வருடங்களில் ஜப்பானுடனான கண்டந்தாவும்
ஏவுகணைக்கெதிரான ஓர் இணைந்த பாதுகாப்பு அமைப்பை
மேம்படுத்துவதற்கான வாஷிங்டனின் உந்துதல், சீனாவை இலகுவாக
கண்டுபிடிக்கத்தக்க வகையிலான நடமாடும் நில மற்றும்
நீர்மூழ்கியிலிருந்து இயக்கும் அணு ஆயுத ஏவுகணைகளை பிரயோகிக்க
தூண்டியிருக்கிறது. ஏவுகணைப் பாதுகாப்பு கேடயம் அமெரிக்காவை
இருக்கிற மற்ற எந்த சீன ஏவுகணைகளை நடுநிலைப்படுத்துவதைவிட,
சீனாவின் ஒப்பிடத்தக்க வகையிலான சிறிய அணு ஆயுத சக்திக்கெதிரான
முதல் தாக்குதலைத் துவக்க அனுமதிக்கும் என்ற அக்கறை
பெய்ஜிங்கில் இருந்தது. போர் ஒன்று வருமானால், அமெரிக்காவின்
கண்காணிக்கும் திறமையை குறைப்பதற்காக செயற்கைகோளுக்கெதிரான
ஏவுகணைகளை மேம்படுத்துவதன் மூலம் சீனாவும் பதில்
கொடுத்திருக்கிறது. பதிலுக்கு இந்த செயற்கைக் கோளுக்கெதிரான
ஏவுகணைகள் அமெரிக்காவின் வான்/கடல் யுத்தக் கொள்கைகளின்
முதன்மையான இலக்காக ஆகியிருக்கிறது.
இதுவரையில், சீனா அமெரிக்காவுடனான எந்த எதிர்ப்புகளையும்
தவிர்க்கும் சந்தர்ப்பத்தில் அதனுடைய இராணுவ செலவுகளை
அதிகரித்திருக்கிறது. சீனா உலக முதலாளித்துவப்
பொருளாதாரத்திற்குள் மலிவான கூலிக்கான ஒரு உழைப்புமேடையாக
இணைக்கப்பட்ட பொழுது, 1980 களில் தொடங்கிவைக்கப்பட்ட அதனுடைய
உத்தியோகபூர்வமான கொள்கையாக “அமைதியாக எழுவது” இருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அளவிடுகையில், சீனாவின்
இராணுவ செலவுகள் 2006இல் 1.4 சதவீதத்திலிருந்து, கடந்த வருடம்
1.3 சதவீதமாக குறைந்தது. ஒப்பிடுகையில், அமெரிக்க எண்ணிக்கை
2001ல் 3.1 சதவீதத்திலிருந்து 2011ல் 4.7 சதவீதமாக
அதிகரித்திருக்கிறது. மற்றைய முதன்மையான இராணுவ சக்திகளான
ரஷ்யாவின் 4.3 சதவீதம், பிரான்சின் 2.5 சதவீதம் மற்றும்
இங்கிலாந்தின் 2.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் சீனாவின் செலவினமும் குறைவாக
இருக்கிறது.
சீனாவின் அதிகரிக்கப்பட்ட இராணுவ செலவுகளின் பெரும் பகுதி,
அமெரிக்காவுக்கு இணையான உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை
உருவாக்குவதில் ஒதுக்கப்படுகிறது. தன்னுடைய துல்லிய வழிகாட்டி
ஆயுதங்களுக்காக, சீனா வருடக் கடைசியில் தன்னுடைய சொந்த, ஆசிய
பசிபிக் பகுதிகளை உள்ளடக்குகிற, அமெரிக்க
GPS
அமைப்பிற்கு (செயற்கைக் கோள் வழிகாட்டி) நிகரானதை, நிறுவுவதை
நோக்கமாக கொண்டுள்ளது. இதன் விளைவாக, அது கடந்த இரண்டு
ஆண்டுகளில் அமெரிக்காவைவிட அதிக செயற்கைக்கோள்களை ஏவியது.
அமெரிக்காவின் ஒரு
F-35க்கான
131 மில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில், சீனாவின் இரகசிய
போர்விமானம்
J-20
பிரிவு, ஒவ்வொன்றும் 110 மில்லியன் டாலர் விலையுடையதாக
இருக்கிறது. பெய்ஜிங்கும், விமான தாங்கி உள்ளிட்ட பெரும்
செலவுடைய ஆழ்கடல் கடற்படையில் அதிகமாக முதலீடு
செய்துகொண்டிருக்கிறது.
ஆசியாவில் அமைதியை உறுதி செய்வதற்கப்பால், சீனா நோக்கிய ஒபாமா
நிர்வாகத்தின் போர்க்குணம், நடப்பு இராணுவ செலவுகள் “மிகக்
குறைவாக” இருக்கிறது என்றும் மேலும் சீனாவின் நலன்களை
பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை கோரி நீண்டகாலமாக
விவாதித்துவரும் பெய்ஜிங் ஆட்சியின் கடும்போக்குடைய
பிரிவினரின் கைகளை பலப்படுத்திக்கொண்டிருக்கிறது. இதன் விளைவு,
உலகின் போரைத் தூண்டக்கூடிய சாத்தியமுள்ள எண்ணற்ற
பகுதிகளுக்கு பெயர்போன ஒரு பிராந்தியத்தில்
பதட்டங்களை அதிகரிக்கும். |