World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

The uncertain future of Pompeii’s extraordinary ruins

பொம்பியின் ஆச்சரியம்மிக்க சிதைவுகளின் நிச்சயமயற்ற எதிர்காலம் 

By Mark Church
6 March 2012
Back to screen version

உலகின் மிக முக்கிய தொல்பொருள் இடங்களில் ஒன்றான, நேபிள்ஸின் தெற்கில் இருக்கும் பொம்பி, பழமையான ரோமானியர்கள் வாழ்க்கை பற்றிய தனித்தன்மைவாய்ந்த ஒரு கண்ணோட்டத்தைத் தருகிறது. அருகிலிருக்கும் பகுதிகளுடன், ஒட்டுமொத்த நகரமும் கி.மு 79ல் சில மீட்டர் சாம்பலுக்கடியிலும், வெசுவியஸ் மலையின் வெடிப்பிலும் புதைக்கப்பட்டதில், ஒரு உண்மையான காலப் பேழையை உருவாக்குக்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்து, 1749லிருந்து பொம்பி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டி எடுக்கப்பட்டது, ரோமானியர்களின் உலகம் பற்றிய புதிய புரிதலை ஆரம்பித்துவைக்கின்றது. எவ்வாறாயினும், இந்த இடத்தின் எதிர்காலம் பேராபத்தில் சிக்கியுள்ளது. பல வருட குறைந்த நிதியளிப்பு மற்றும் அதிக சுரண்டலில் அதன் உச்சகட்டத்தை அடைந்திருப்பது, பரந்த கெடுதிக்கும்  சிதைவின் பலபகுதிகளின் உடைவிற்கும்கூட இட்டுச் செல்கின்றது.

கிட்டத்தட்ட 20,000ஐ நெருங்கிய மக்கள் தொகையுடன்கூடிய ஒரு நகரத்தை பொம்பி பகுதி உள்ளடக்குகிறது. இதன் பரப்பளவு 163 ஏக்காராக இருக்கிறது, 109 ஏக்கர் தோண்டி எடுக்கப்பட்டதுடன், மேலும் நகரின் மற்ற மூன்றில் ஒருபகுதி இப்பொழுதும் புதைந்துள்ளது. பராமரிப்பு தரம் இணையில்லாதிருக்கிறது. கலை வேலைப்பாடுகள், சிற்பங்கள் மற்றும் கரியாக்கப்பட்ட papyri சுருள்கள்கூட (ஓலைச்சுவடி) தொடப்படாதுள்ளன. வடிவமைப்பு முழுமையாக இருப்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் பார்வையாளர்களும், 2,000 வருடப் பழமையான ஒரு நகரின், உண்மையிலேயே தொடப்படாத சிதைவுகளை ஆராய்வதற்கு அனுமதிக்கிறது. பாம்பி, நவீனக் கலையிலும் திரைப்படங்களிலும் மற்றும் ரோமானியர்களின் கலாச்சார சித்தரிப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற, ஒரு பரந்த கலாச்சார மற்றும் வரலாற்று உரிமையை அதன்பின்னால் விட்டுச் சென்றுள்ளது. பழமை உலகின் சிறப்பான பராமரிப்பினால், இவ்விடம் 1997ல் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடத்தை பெற்றுள்ளது.  

இதனுடைய வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் இருந்த போதிலும், நகரம் மெதுவாக சிதைய விடப்பட்டிருக்கிறது. இந்த இடத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளின் நோக்கங்களினதும் மற்றும் போதுமான நிதிக்குறைவின் பற்றாக்குறைவாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, இத்தாலி அரசாங்கங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் பொம்பியை, ஒரு வருமானத்திற்கான ஆதாரமாக தொடர்ச்சியான சுரண்டுகிற ஆசைகளால் பிரச்சினை வேரூன்றுகின்றது. அதிகார சிவப்பு நாடா, பலவீனமான தொல்பொருள் முறைகள், பொருத்தமற்ற மறுசீரமைப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்கை அரிப்பு போன்றவை மற்ற முக்கிய விடயங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. எவ்வாறாயினும், நகரத்தை வியாபார நோக்கிற்காக அதிகமாக சுரண்டுவது, பெரும் ஆபத்தாக இருக்கிறது.

அழிவானது பல வீடுகளின் தளங்களிலும் சுவர்களிலும் வரிசையாகவுள்ள  சித்திரங்கள் மற்றும் பதிக்கப்பட்ட கற்களில் சிதைவையும், மங்குதலையும் உள்ளடக்கிநுள்ளது.  அவை சில நேரங்களில் தாமாக பெயர்ந்து விழுகின்றன அல்லது கும்பல்களினால் நாசமாக்கப்படுகின்றன. சில அதி-ஆபத்தான பகுதிகளை தற்போது பொது மக்கள் பார்வையிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இவ்விடத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவது விவாதிக்கப்பட வேண்டியதாக இருந்தாலும், ஆனால் சிறந்த பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணி ஆகியவை அடிக்கடி முக்கிய பிரச்சனைகளாக எழுப்பப்படுகின்றன. 

நிலைமையின் தீவிரம் யுனெஸ்கோவையும் (United Nations Environmental, Scientific and Cultural Organization- UNESCO) ஐரோப்பிய ஒன்றியத்தையும்(EU) கடந்த நவம்பர் மாதம் பொம்பியை பாதுகாக்க உதவுவதில் துரிதப்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியம்  தெற்கு இத்தாலி முழுவதுமான, பாரம்பரிய இடங்களுக்கான உதவித்தொகையான 1 பில்லியனில் ஒரு பகுதியாக, 105 மில்லியன் டாலரை ஒதுக்கியது. ஆனால், இந்தப் பணம், இறுதியாக முழுமையாக கொடுக்கப்பட்டாலும், இடத்தைப் பாதுகாப்பதற்கு மதிப்பிடப்பட்ட செலவுக்கு போதுமானதாக இருக்காது.

யுனெஸ்கோ இத்தாலிய அரசாங்கத்துக்கு உதவுவதாக ஒரு உடன்பாட்டை  அறிவித்தது. ஆனால் இது தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதைவிட சற்று அதிகமாக இருந்தது. ஜனவரியில், இத்தாலிய அரசாங்கத்துடனான தொனியை நம்பிக்கையிலிருந்து வெறுப்பாக இந்த அமைப்பு மற்றியிருந்தது. யுனெஸ்கோவிற்கான இத்தாலிய தேசிய குழுவின் தலைவரான ஜொவானி பக்லிசி, ஊடகங்களுக்கு: இங்கு நிதி இருக்கிறது. பணி இடங்கள் திறக்கப்பட வேண்டி இருக்கிறது. நிர்வாகிகளுடன் சுற்றி விளையாடியது போதும். அவசர வேலை தொடரப்படவில்லையெனில், பொம்பியை ஆபத்தில் உள்ள ஒரு இடமாக குறிப்பிடுவது- உலக பாரம்பரியப் பட்டியலிலிருந்து பொம்பியை நீக்குவதற்கு வழி வகுக்கும் என்று அவர் மேலும் அச்சுறுத்தினார். பட்டியலிருந்து நீக்குவது ஒரு சுற்றுலாத்தளம் என்ற தரத்திலிருருந்து அகற்றுவதாக இருக்கும்.

பொம்பியின் எதிர்காலம் குறித்த அக்கறைகள் தொடகின்ற விஷயமாக இருந்தாலும், ஒரு பாரம்பரிய இடமாக, அழிவிற்குள்ளாகிவரும் தீவிர ஆபத்தில் இருப்பதாக உலக நினைவுச் சின்ன நிதியில் பொம்பி பட்டியலிடப்பட்ட பொழுது, 1996ல் முக்கிய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டன, ரோமனோ புரோடியின் இத்தாலிய அரசாங்கம், 1997ல் சுற்றுலா வியாபாரத்திலிருந்து ஈட்டப்படும் வருவாய் முழுதும், பொம்பி நிர்வாகத்தின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு, அவ்விடத்தில் மறுமுதலீடு செய்யப்படும் என்று அறிவித்த்தன் மூலம் பதிலளித்தது.

ஒவ்வொரு வருடமும் 25 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பொம்பியை பார்வையிட வருகின்றனர். பார்வையாளர்கள் தொடுவதன் மூலம் கலைப்பொருட்களை எதிர்பாராவிதமாக சேதப்படுத்துவதோ அல்லது விஷமத்தனமான நபர்கள் சிறு ஞாபகப் பொருட்களை எடுத்துக்கொள்வதோ அல்லது கிறுக்கிச் செல்வதோ, வழக்கத்திற்கு மாறானது இல்லை. வருடத்திற்கு 20 மில்லியன் டாலருக்கும் அதிகமாக அனுமதிச்சீட்டு விற்பனை இருந்தாலும், பெரும் மக்கள் கூட்டத்துடன்கூடிய இது போன்று ஒரு இடத்தைத் துல்லியமாக கண்காணிப்பதற்குப் போதுமான பாதுகாவலர்கள் இல்லை.   

பொம்பியை மீட்க 260 மில்லியன் டாலர் தேவைப்படுவதாக 2010ன் மதிப்பீடுகள் குறிக்கின்றன, அது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிமொழியைவிட இருமடங்காக உள்ளது. விற்பனைச் சீட்டு பணத்திலிருந்து அதிக சதவிகிதம் பாதுகாப்புமுறைகளில்  முதலீடு செய்யப்படவில்லை, ஆனால் அதிக விற்பனை சீட்டு மையங்கள், பாதுகாப்பு அம்சங்கள், விளம்பரப் பிரச்சாரங்கள், மீண்டெழுந்த திறந்தவெளித் திரையரங்குகளில் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் திருத்தப்பட்ட வீடுகளில் விரிவான பல்ஊடகப் உருவக்காட்சிகள் போன்ற பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் செலவீடுகளில் சென்றது.

ஆனால் சில அரசியல்வாதிகள் ஆனால் வியாபாரச் சுரண்டலின் மற்ற அமைப்புக்களை ஊக்குவிக்கும் பொருட்டாக மட்டுமே இவ்வெண்ணிக்கையை குறைக்கவேண்டும் என முன்வைத்திருக்கிறார்கள். 2008ல், கம்பானிய பிராந்திய பாரம்பரிய கலாச்சாரங்களுக்கான ஆளுனரும், பிரதம மந்திரி மாசிமோ டி அலேமாவின் முன்னாள் அரசியல் நண்பரான கிளவ்டியோ வெலார்டி ஊடகத்தில், பொம்பியை கூகுள் அல்லது மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்திக் கொள்வதை அனுமதிப்பதற்காக, சுற்றுலாவாசிகளை  குறைப்பதை ஊக்குவிப்பதாக கூறினார். பிக்சார் அல்லது வார்னர் பிரதர்ஸ் போன்ற திரைப்பட அரங்குகளுக்காக ஒரு பெரும் கட்டணத்துக்காக இந்த இடத்தில் திரைப்படம் எடுப்பதற்காக, பொம்பியை திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.  

பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால், அது சிதைவுகளுக்குள் பணம் சம்பாதிக்க வியாபாரிகளை அனுமதிப்பதற்கும் கலாச்சாரப் பழமையின்  தடையின்றி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் எளிதாக இருக்கும்  என வெலார்டி கூறினார்.  

வெலார்டியின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், பொம்பி ஏற்கெனவே தனியார் நிகழ்ச்சிகளுக்கு திறந்திருக்கிறது. பொம்பியில் இருக்கும் பேலஸ்ட்ராவும், திறந்தவெளித் திரையரங்கமும், குறிப்பாக, தனியார் நிகழ்ச்சிகளுக்காக அல்லது உள்ளூர் அரசியல்வாதிகளின் தேர்தலுக்கு முந்தைய விருந்துகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  

மேலதிக உதவியினால் அல்லது இத்தாலி அரசாங்கத்திடமிருது பெறப்படுகிற குறைந்த நிதியுதவியை ஈடு செய்யும் பொருட்டு தனியார் முதலீடுகள் துரிதப்படுத்தப்படுகின்றன. ஐரோப்பாவின் நெருக்கடிக்கு முன்பும், பாம்பியின் நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிற இத்தாலிய கலாச்சார அமைச்சகம், ஏற்கெனவே அதனுடைய வரவுசெலவுத்திட்டத்தில் வருடாந்த வெட்டுக்களை செய்திருந்ததுடன், அது தற்போது அரசாங்க செலவீட்டில் 0.18 சதவீதம் மட்டுமே ஒதுக்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், அமைச்சகத்தின் நிதியளிப்பு 603 மில்லியன் டாலரிலிருந்து 340 மில்லியன் டாலருக்கு குறைந்துள்ளது மேலும் இத்தாலியின் கடன் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்னும் குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது.  

இதே போன்று ஆனால் பொம்பிக்கு அருகிலுள்ள சிறிய இடமான Herculaneum, கலிஃபோர்னியாவை அடித்தளமாகக்கொண்ட Packard Humanities Institute பாதுகாப்புத் திட்டங்களுக்காக நன்கொடையாக வழங்கிய 15 மில்லியன் டாலர் உள்ளிட்ட, போன்ற சில தனியார் நிதியளிப்பைப் பெற்றிருந்தது. இவ்வமைப்பின் நிறுவனரான டேவிட் பேகார்ட், ஏனைய நிறுவனங்கள் பொம்பியைப் பெற நினைப்பதைப் போலல்லாமல், Herculaneumல் ஒரு தனிப்பட்ட ஆர்வம் கொண்டிருந்தார்.  

 2010 நவம்பரில், பொம்பியினுடைய School of the Gladiators இன் உருக்குலைவு, அவ்விடத்தின் தனியார்மயமாக்கலுக்கான அதிக வெளிப்படையான அழைப்புகளை ஊக்குவித்தது. தொடக்கத்தில், பொம்பியை விளம்பரப்படுத்துதலுக்காகவும் வர்த்தகத்துக்காகவும் பதிலுக்கு நகர பராமரிப்புக்கு உதவுகிற நிதி பெறுவதற்காக, வழங்க அங்கு ஒரு ஆலோசனை இருந்தது. இத்தாலிய வியாபார செய்தித்தாளான Il Sole 24 Ore மற்றும் Wall Street Journal இரண்டும், சில நேரங்களில் இதுபோன்ற கருத்துக்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தன.

Gladiator Schoolன் சீரழிவினை தொடர்ந்த சிதைவின் மற்ற வெளிப்படையான குறிகள், தற்காப்பு காட்சிகளை சித்தரிக்கிற முக்கியமான சுவர் சித்திரங்களை உள்ளடக்கியது. சில வாரங்கள் கழித்து, House of the Moralist அருகில் ஒரு பகுதி சுவர் விழுந்தது. விமர்சனங்களுக்கு பதிலாக, கலாச்சார அமைச்சர் சாண்ட்ரோ பொண்டி, Corriere della Sera விடம் செப்டம்பர் 2003க்கும் பிப்ரவரி 2010க்கும் இடையில் பொம்பியில் 16 சிதைவுகள் ஏற்பட்டிருந்ததாகக் கூறினார். அந்த இடத்தை திறமின்றி நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டதன்பேரில், பின்பு அவர் ராஜினாமா செய்தார்.  

ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளாக பொம்பியின் ஒட்டுமொத்த பராமரிப்புக்காக ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் இருந்ததில்லை. 2011ன் பிற்பகுதியில், அந்த நகரம் முழுவதுக்குமாக வெறும் ஐந்து பராமரிப்பு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதிகாரத் தாமதங்களும், பிரச்சினைகளும் குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், நிதிப் பற்றாகுறையே முதன்மையான பிரச்சினையாக இருக்கிறது.

கட்டிடகலைகளுக்கான இத்தாலிய தேசிய அமைப்பு (The Italian National Association of Architects) சமீபத்தில்: House of the Gladiatorsன் உடைவிற்கு ஒரு வருடம் கழித்து, எந்த கட்டுமானமும் செய்யப்படவில்லை... சாதாரண பராமரிப்பின் குறைபாடு தொடர்ச்சியாக இருக்கிறது, இந்த இடத்தைப் பாதுகாப்பதற்கு அதுதான் ஒரே வழி. வரும் மாதங்கள் இன்னும் அடுத்தடுத்த மற்றும் முக்கியமான நிகழ்வுகளை சந்திப்பது  என்பது நமது அச்சமாக இருக்கிறது என்று எச்சரித்திருக்கிறது.

மனித வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் எந்த பார்வையும் இலாப அமைப்பின் நயவஞ்சகமான நடவடிக்கைகளின் இயக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இல்லை. எதிர்கால தலைமுறைகளுக்காக பாதுகாக்கப்படுவதை விட, இந்த ஈடுசெய்யப்படமுடியாத தொல்பொருள் இடம், அரசாங்கத்தின் புறக்கணிப்பு மற்றும் வியாபார சுரண்டல், அதிகரிக்கிற சிதைவு மற்றும் மதிப்பிழப்பை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றின் தாக்கத்தின் கீழ் இருக்கிறது.