WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French Socialist Party presidential candidate falls behind Sarkozy in polls
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கருத்துக் கணிப்புக்களில்
சார்க்கோசிக்குப் பின்தான் நிற்கிறார்
By
Alex Lantier
19 March 2012
கடந்த வாரம் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்கள் பற்றிய கருத்துக்
கணிப்புக்கள் செல்வாக்கற்ற தற்பொழுது பதவி வகிக்கும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி
சோசலிஸ்ட் கட்சி (PS)
வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்டுக்குச் சமமாக அல்லது முன்னேறிய
நிலையில் இருப்பதாகக் காட்டுகின்றன. ஏப்ரல் 22 நடைபெறும் முதல் சுற்றுத்
தேர்தல்களில் ஹோலண்ட் சார்க்கோசியைவிடக் குறைந்த வாக்குகளைப் பெறுவார், ஆனால்
இரண்டாம் சுற்றில் சார்க்கோசியை வெற்றிகொண்டுவிடுவார் என்று கருத்துக் கணிப்புக்கள்
குறிக்கின்றன.
மார்ச் 12ம்
Ifop
கருத்துக்கணிப்பு ஒன்று சார்க்கோசி 28.5% வாக்குளையும் ஹோலண்ட் 27% வாக்குளையும்
பெறக்கூடும் என்று காட்டுகிறது. ஒரு பிந்தைய
CSA
கருத்துக்கணிப்பு இருவரும் 28 சதவிகதம் பெறுவதைக் காட்டுகிறது.
CSA
கருத்துக் கணிப்பு ஹோலண்ட் இரண்டாம் சுற்றில் 54% வாக்குகளுடன்
வெற்றி பெறுவார் எனக் கூறுகிறது; இது முந்தைய அளவை விட இரு புள்ளிகள் குறைவாகும்.
ஹோலண்டின் ஆதரவாளர்கள் ஒரு போட்டி
TNS Sofres- iTélé
கருத்துக் கணிப்பைக் காட்டுகின்றனர்; இது ஹோலண்ட் சார்க்கோசியின் 26%க்கு பதிலாக
30% கொண்டிருப்பதைக் காட்டி முன்னிலையில் இருப்பதைக் கூறுகிறது. செய்தித்தாள்கள்
உடனே இந்த முரண்பாடு குறித்தப் பல விளக்கங்களைக் கொடுத்துள்ளன.
Le Monde
,”இரு
அமைப்புக்களிலும் இருக்கும் மூலத் தகவல்களிலுள்ள இடைவெளி”,
“இப்புதிய
மூலத் தகவல்களைத் தளமாகக் கொண்டு திருத்தப்பட்டவற்றிலுள்ள வேறுபாடுகள்”
என்று கூறுகிறது.
இச்செய்தித்தாள் எத்தனை முறை, எத்தகைய ஆக்கிரோஷத்துடன், கருத்துக்
கணிப்புக்கள்
“திருத்தமுற்றன”
என்பதைத் தெளிவாக்கவில்லை. ஆனால் கருத்துக் கணிப்புக்களுக்கு அரசியல் ஸ்தாபனத்தின்
விடையிறுப்பு ஒன்றைத் தெளிவாக்கியுள்ளது: கருத்துக் கணிப்புக்கள்
PS
உடைய சுலபமான வெற்றி, ஜனாதிபதி சார்க்கோசிக்கும் அவருடைய கொள்கைகளான ஏகாதிபத்திய
எதிர்ப்பு, சமூகச் சிக்கன
நடவடிக்கை
இவற்றிற்கான எதிர்ப்பை ஒட்டி வாக்காளர்கள் எதிர்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கைகளைச்
சிதற அடித்துள்ளன.
ஹோலண்ட் பிரச்சாரத்தின் உத்தியோகபூர்வ அதிகாரி
Stéphane Le Foll
கூறினார்:
“எதுவும்
முடிந்துவிடவில்லை என்பதைத்தான் அனைவருக்கும் இது நினைவுபடுத்துகிறது....
எதிர்பார்த்ததைவிட இது கடுமையான போட்டியாக இருக்கும்.”
பெயரிட விரும்பாத
PS
அதிகாரி கூறினார்:
“இது
ஒரு வெற்றுத் தடத்தில் நடக்கிறது... அவருடைய குழு அவர் தேர்தலில்
வெற்றிபெற்றுவிட்டார் என்ற கோட்பாட்டில் உள்ளது, அவர் அதிகம் செய்யவேண்டியதில்லை
என்று நினைக்கிறது. பிரான்சுவா பிரச்சாரம் நடத்துவது போல் காட்டிக் கொள்கிறார்.
அவர் பிரான்சுவா ஹோலண்டைப்போல்தான் நடந்து கொள்கிறார்.”
உண்மையில்
PS
ஒரு பெரிய வலதுசாரித் தேர்தல் பிரச்சாரத்தைத்தான் நடத்தியுள்ளது.
ஹோலண்டின் தூண்டுதல் தரும் சைகைகளைத் தொடர்ந்து, ஏராளமான மக்கள் ஹோலண்டும்
சார்க்கோசியைப்போல அதே பிற்போக்குத்தன நலன்களைத்தான்
பிரதிநிதித்துவப்படுத்துகின்றார் என்ற முடிவிற்கு வந்துவிட்டனர்.
இத்தகைய உணர்வுதான் பரந்த முறையில் ஐரோப்பா முழுவதும் ஐரோப்பிய
அரசாங்கக் கடன்நெருக்கடி வெடித்தபின் சமூக ஜனநாயகவாதிகளுடைய கொள்கைகளுக்கு மக்கள்
விடையிறுப்பைப் பிரதிபலிக்கிறது. சமூக ஜனநாயக பிரதம மந்திரிகள் போர்த்துக்கல்லின்
ஜோஸ் சாக்ரடிஸ், ஸ்பெயினின் ஜோஸ் லூயி சாபாத்தேரோ மற்றும் கிரேக்கத்தின் ஜோர்ஜ்
பாப்பாண்ட்ரூ ஆகியோர் ஆழ்ந்த வெட்டுக்களைச் செயல்படுத்தி தொழிலாள வர்க்கத்தை வறிய
நிலையில் தள்ளிவிட்டனர். பிரான்ஸின் கார்த் தயாரிப்பு உற்பத்தி கடந்த ஆண்டு 20%
குறைந்து விட்ட நிலையில், வணிகப் பற்றாக்குறை 75 பில்லியன் யூரோக்கள் ($99
பில்லியன்) என்று மிக அதிக அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், ஹோலண்டும் பிரான்ஸில்
ஒரு பொருளாதார
“அதிரச்சி
வைத்தியத்தைச் சுமத்த முற்படுவார்”
என்ற உணர்வுதான் பெருகியுள்ளது.
பெப்ருவரி 27ம் திகதி, ஹோலண்டின் பிரச்சாரம் அவர் சார்க்கோசியின்
மிகச் செல்வாக்கற்ற கொள்கைகளை திருத்தமாட்டார் என அறிவித்துள்ளது: அதாவது ஓய்வூதிய
“சீர்திருத்தங்கள்”
கட்டாய பணிக்காலத்தை 41 ஆண்டுகளாக உயர்த்தியிருப்பது, பர்க்காத்
தடை, ரோமாக்களை ஏராளமாக வெளியேற்றியிருப்பது, பொதுத்துறையில் சம்பள வெட்டுக்கள்,
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவு பிரான்ஸின் நேட்டோ கட்டுப்பாட்டில்
மறுபடியும் இணைந்தது ஆகியவற்றில் மாற்றம் இராது. நேட்டோ கட்டுப்பட்டின் கீழ்
மீண்டும் வந்தபின் பிரான்ஸ் இகழ்வுற்ற அமெரிக்கத் தலைமையிலான போர்களில் குறிப்பாக
ஆப்கானிஸ்தானிலும் லிபியாவிலும் பங்கு பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உடனேயே ஹோலண்ட் தான் செல்வந்தர்கள் மீது
75% வரிவிதிக்கப் போவதாகக் கூறினார். இது ஒரு பொய் என்று பரந்த அளவில் உணரப்பட்டது.
பெயரிட விரும்பாத ஒரு வங்கியாளர், ஹோலண்டிற்கு ஆதரவு கொடுப்பவர், இந்த சைகையை
“ஜனரஞ்சகச்
செயல் என்றார்; ஆனால் தான் ஹோலண்டின் வருங்காலக் கொள்கைகள் குறித்து கவலைப்படவில்லை
என்றார்.
குறைந்தப்பட்ச ஊதியம் பொருளாதார வளர்ச்சிப் புள்ளிவிபரங்களுடன்
இணைக்கப்பட முடியுமே ஒழிய பணவீக்கத்துடன் அல்ல என்ற கருத்தையும் ஹோலண்ட்
முன்வைத்துள்ளார். சரியும் பொருளாதார வளர்ச்சி, பெருகும் விலை உயர்வுகள் இவற்றிற்கு
இடையே, இது தொழிலாளர்களின் வாங்கும் திறன்களில் ஆழ்ந்த வெட்டுக்களுக்கு உணவுத்
தயாரிப்புமுறை பட்டியல் போல் ஆகும்.
ஓரளவிற்கு ஹோலண்டின் சரியும் கருத்துக்கணிப்பு எண்ணிக்கை அவருடைய
வாக்காளர்கள்
Jean-Luc Mélenchon —ஒரு
முன்னாள்
PS மந்திரியும்
இப்பொழுது இடது முன்னணயின் (ஒரு குடை அமைப்பு
PCF
எனப்படும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது) வேட்பாளருமாக
நிற்பவரிடம் சிறிது நகர்ந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.
Jean-Luc Mélenchon
க்கு ஆதரவு அதிகரிப்பு என்பது பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள் (7.5% முதல்
9.3%வரை), மற்றும் நடுநிலை மேலாளர்கள் (9.7%) ஆகியோரிடம் உள்ளது—PCF
ற்கு தேர்தல் ஆதரவில் இரு முக்கியத் தளங்கள் இவைகள்.
இன்னும் அதிக வாக்காளர்கள்
Jean-Luc Mélenchon
க்கு நகரவில்லை என்பது முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதும் உள்ள பரந்த விரோதப்போக்கு
மற்றும் சீற்றத்தைப் பிரதிபலிக்கிறது. உழைக்கும்
மக்கள் இடது முன்னணியோ, குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சிகளான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியோ ஓர் அரசியல்
மாற்றீட்டைக் கொடுக்கும் என்று நினைக்கவில்லை. இச்சக்திகள் உண்மையில்
சார்க்கோசிக்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை, உட்குறிப்பாக அக்டோபர் 2010ல்
அவருடைய ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான எண்ணெய் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்புத்
தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டதற்கு ஆதரவையும் அளித்தன.
தொழிலாளர்களுக்கும் அரசியல் ஸ்தாபனத்தில் அனைத்துச் சக்திகளுக்கும்
இடையே பெருகிவரும் பிளவுகள்—முதலாளித்துவ
மற்றும் குட்டி முதலாளித்துவ
“இடது
கட்சிகள்”
உட்பட—2012
தேர்தல்களுக்குப்பின் வரவிருக்கும் வெடிப்புத்தன்மை நிறைந்த சமூகப்
போராட்டங்களுக்கு முன்னிழலைக் காட்டுகின்றன. ஏனெனில் ஆளும் வர்க்கம் இன்னும் ஆழ்ந்த
செல்வாக்கற்ற வெட்டுக்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது, தொழிலாள வர்க்கத்தின் பரந்த
எதிர்ப்பையும் மீறி புதிய போர்களில் ஈடுபடுகிறது.
ஒரு மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியம் (UMP)
என்னும் சார்க்கோசியின் கட்சி,
“இடது”
கட்சிகளின் திவால்தன்மையை எதிர்கொள்ளும் வகையில் பலமுறையும் ஹோலண்டை
தாக்கி, சார்க்கோசிக்கு ஆதரவை உயர்த்தும் வகையில், ஹோலண்ட் ஒன்றும் அவர் தன்னை
காட்டிக் கொள்வதுபோல் நடக்கும் மனிதர் அல்ல என்னும் மக்களின் உள்ளுணர்வை
பயன்படுத்துகிறது.
கன்சர்வேடிவ் பிரதம மந்திரி பிரான்சுவா பியோன் ஒரு முழுப் பக்கப்
பேட்டி ஒன்றை வலதுசாரி நாளேடு
Le Figaro
விற்கு வெள்ளியன்று கொடுத்தார்; அதில் ஹோலண்டை
“பொறுப்பற்றவர்”
என்றும்
“பயனற்ற
திட்டங்களை முன்வைக்கும்”
திறனை உடையவர் என்றும் தாக்கியுள்ளார்.
ஹோலண்டுடன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில்
UMP
கட்சியின் தலைவரான
Jean-François Copé
பலமுறை ஹோலண்டை
UMP
க்கு ஆதரவுகொடுக்கும் வலதுசாரிக் கொள்கைகளுக்கு வாதிடுவதற்காக கேலி செய்தார்.
அவருடைய பொலிஸ் மற்றும் குடியேற்றப் பிரச்சினைகள் குறித்து
Jean-François Copé
ன்
விடைகளுக்குப் பதிலளிக்கையில், ஹோலண்ட் இன்னும் கூடுதல் சிறைகள் கட்டப்பட வேண்டும்
என்றும் சட்ட விரோதமாகக் குடியேறுபவர்கள் எதிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்;
இதற்கு உடனே
Jean-François Copé
கூறினார்:
“நீங்கள்
நாங்கள் செயல்படுத்த விரும்பும் கொள்கைகளைத்தான் துல்லியமாக முன்வைக்கிறீர்கள்.”
ஹோலண்டை
“அனைவர்
சொல்லுவதையும் கேட்கும், அவர்கள் விரும்புவதையும் கேட்கும் விலாங்கு”
என்று
Jean-François Copé
அழைத்தார்.
|