World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Afghanistan massacre: The product of a criminal war

ஆப்கானிஸ்தானிய படுகொலை: ஒரு குற்றம் சார்ந்த போரின் விளைவு

Bill Van Auken
20 March 2012
Back to screen version

கடந்த வெள்ளியன்று 16 ஆப்கானிய குடிமக்களைப் படுகொலை செய்த சிப்பாயின் பெயர் வெளியிடப்பட்டதிலிருந்து செய்தி ஊடகம் இந்தக் கொடூரக் குற்றத்தை, புரிந்து கொள்ளக்கூடிய முறையில் போரின் குற்றவியல் தன்மையை தெளிவாகப் புறக்கணித்த நிலையில்,  உத்தியோகத்தரான சார்ஜென்ட் ரோபர்ட் பேல்ஸின் வரலாறு, சொந்தப் பிரச்சினைகளைத் தேடி எடுத்துக் கொடுத்துள்ளது.

கன்சாஸ், போர்ட் லெவன்வொர்த்திலுள்ள அமெரிக்க இராணுவச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேல்ஸ், தெற்குக் காந்தகார் மாநிலத்தில் மார்ச் 11 அதிகாலையில் தன்னுடைய பஞ்சவி புறச்சாவடியில் இருந்து புறப்பட்டு அருகில் இருந்த இரு கிராமங்களுள் நுழைந்து துப்பாக்கிச் சூடு, வெட்டுதல் மற்றும் ஆப்கானியர்களை கொலை செய்தல் என்ற குற்றச்சாட்டைச் சுமக்கிறார்; இறந்தவர்களில் 9 பேர் குழந்தைகள். ஒரு வீட்டில் அவர் இறந்தவர்களின் சடலங்களை அடுக்கி வைத்து அவற்றிற்குத் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இப்பொழுது அவர் எல்லா இடங்களிலும் ஒரு அயோக்கியச் சிப்பாய் என்று விவரிக்கப்படுகிறார். ஜனாதிபதி பராக் ஒபாமா, வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தளபதி ஜெனரல் ஜோன் ஆலென் ஆகிய அனைவரும் முறையான அறிக்கைகளை வெளியிட்டு பேல்ஸின் செயல்கள் அமெரிக்க இராணுவத்தின் மதிப்பீடுகளையும் மனப்பான்மையையும் பிரதிபலிக்கவில்லை என்று உறுதியளித்துள்ளனர். இந்த உத்தியோகபூர்வ கதையின்படி, விடையளிக்கப்பட வேண்டிய ஒரு வினா இதுதான்: அவரை எது நிதானத்தை இழக்கச் செய்தது?

இக்கதையின் உண்மை அடிப்படை ஆப்கானிய கிராம மக்கள், நாட்டின் அமெரிக்கக் கைப்பாவை ஜனாதிபதி ஹமித் கர்சாய் மற்றும் ஆப்கானிய பாராளுமன்றத்தின் கீழ் பிரிவு நியமித்துள்ள விசாணைக் குழு ஒன்று ஆகியோரால் வினாவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே இக்கொலை வெறி ஒற்றைத் துப்பாக்கிதாரரின் செயல் அல்ல கிட்டத்தட்ட 15 முதல் 20 துருப்புக்கள் வரை ஈடுபட்டிருந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றர். தன் முடிவுகளை வார இறுதியில் பாராளுமன்றக் குழு கொடுத்துள்ளது; அதில் கொல்லப்பட்ட இரு பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உட்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் இவ் இரத்தக்களரி குறித்த கூறல் உண்மை என நிரூபிக்கப்பட்டாலும், பேல்ஸ் தனி நபராகத்தான் செய்திருந்தார் என்றாலும், ஆப்கானிய மக்களிடையே பெரிதும் பரவியுள்ள கருத்து பல அமெரிக்கச் சிப்பாய்கள் இக்குருதி கொட்டுதலில் தொடர்பு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒன்றும் ஒரு பைத்தியக்காரனுடைய செயல் அல்லது ஒரு போக்கிரியின் செயல் என்று அவர்கள் காணவில்லை என்பது தெளிவு; மாறாக ஒரு தசாப்தமாக நடந்துவரும் போரில் ஒரு வாடிக்கையான நிகழ்வு, ஆக்கிரமிப்பு பல்லாயிரக்கணக்கான ஆப்கானியக் குடிமக்களின் உயிர்களை பறித்துள்ளது என்றுதான் காண்கின்றனர்.

பேல்ஸ் பற்றிய இத்தகவல், இதுவரை வெளிப்பட்டுள்ளவை, பல மன அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளைக் காட்டுகின்றன. இவர் இராணுவத்தில் 2001ல் சேர்ந்தார்; அதாவது செப்டம்பர் 11 தாக்குதல்ளைத் தொடர்ந்த சில வாரங்களுக்குள். அதே நேரம் பங்குச் சந்தையில் குறுகிய காலத்திற்கு இவர் நிதி முதலீட்டாளராக இருந்த நிலையும் சரிந்து போன நேரம் ஆகும்.

கடந்த ஆண்டு, ஏற்கனவே மூன்று முறை போர்க்கால அனுப்பல்களுக்குப்பின், ஒரு போர்ப் பகுதிக்கு அனுப்பப்படமாட்டாது என்ற நம்பிக்கை அளிக்கப்பட்டபின், இவர் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட்டுள்ளார். உத்தியோக உயர்வில் இவர் கடக்கப்பட்டிருக்கிறார், கணிசமான நிதிப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்; அவற்றுள் ஒன்று மிக அதிகக் கடனால், தன் வீட்டைக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலையும் அடங்கும். ஈராக்கில் அவர் அதிர்ச்சிக்குப் பின் விளைவுகளினால் வரும் அழுத்தங்களினால் அவதியுற்றிருக்கிறார்: இது அவர் வழக்கை எதிர்கொள்ளும்போது ஒரு பிரச்சினையாகும்.

இக்கூறுபாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் அனைத்து தன்னார்வ இராணுவத்தின் நூறாயிரக்கணக்கான உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளைக் குறிக்கும் காரணிகள் ஆகும்; இது ஒரு தசாப்தத்தில் ஒரே நேரத்தில் மத்திய கிழக்கு, தெற்கு ஆசியாவில் போர்களை நடத்தும் காலத்தில் வந்துள்ளது. அரசியல் ஸ்தாபனமும் மற்றும் இரு பெரிய கட்சிகளும் வாடிக்கையாக மக்களை நம் துருப்புக்களுக்கு ஆதரவு கொடுங்கள்என்று மக்களுக்கு உத்தரவிடுகையில், வெளிநாட்டில் நடத்தப்படும் ஏகாதிபத்தியப் போருக்கு ஒப்புதலைப் பெறும் வழிவகை என்ற முறையில், இத்துருப்புக்கள் ஆளும் உயரடுக்கால் எளிதில் உதறப்படக்கூடிய பொருட்கள் என்று கருதப்படுவதுதான் உண்மை ஆகும்.

பேல்ஸிற்கு கூறப்படும் பிரச்சினைகள் ஒன்றும் தனித்தன்மை வாய்ந்தவை அல்ல; எனவே இவர் மீது சாட்டப்பட்டுள்ள இழிந்த நடவடிக்கைகள் ஒன்றும் சர்வசாதாரணமாக ஒரு மனமுறிவின் விளைவு எனக் கூறுவதற்கில்லை.

ஆப்கானிய பாராளுமன்ற விசாரணையாளர்களின் கருத்துப்படி, கிராமவாசிகள் இப்படுகொலையில் ஒரு தெளிவான உந்துதலைக் கண்டனர்பழிவாங்குதல். அமெரிக்கத் துருப்புக்கள் அவர்களுக்கு பல சிப்பாய்களைக் காயப்படுத்திய குண்டுவெடிப்புக்களுக்கு பதிலடியை எதிர்பார்க்கலாம் என்று எச்சரித்தன என்று அவர்கள் சாட்சியமளித்துள்ளனர். பேல்ஸின் வக்கீல் கருத்துப்படி, அவருடைய நண்பரான உத்தியோகத்தர் சார்ஜன்ட் இன் கால்கள் படுகொலைக்கு முதல் நாள் குண்டுத் தாக்குதலில் இழக்கப்பட்டுவிட்டன.

இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டினால் எதிர்பார்க்கப்படாமல் இல்லை. போன மாதம்தான் குர்ரான் பிரதிகள் எரிப்பு தூண்டிவிட்ட வெகுஜன எழுச்சிகளுக்கு இடையே, தளபதி அலென் ஒரு அமெரிக்கத் தொலைக்காட்சியில் படைகளின் முன்னணித்தளமான கிழக்கு நங்கர்ஹர் மாநிலத்தில், அமெரிக்கத் துருப்புக்களிடம் பேசியது காட்டப்பட்டது; அங்கு முந்தைய தினம் இரு அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டிருந்தனர். இது ஒன்றும் பழிவாங்குவதற்கான நேரம் இல்லை. பழிக்குப்பழிக்கான நேரமும் இல்லை என்று தளபதி அவர்களிடம் கூறினார்.

துருப்புக்கள் சீற்றம் மற்றும் பதிலடி கொடுக்கும் விருப்பத்தின் பிடியில் இருக்கின்றனர் என்பதை ஒப்புக் கொண்ட அலென் நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டை நினைவிற் கொள்ள வேண்டும், உங்கள் பணியை நினைவிற் கொள்ள வேண்டும். நீங்கள் யார் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் என்றார்.

இச்சொற்கள் ஒன்றும் அக்கறையின்றி தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஜெனரல் அலெனும் அமெரிக்க உயர் கட்டுப்பாட்டின் பிற அதிகாரிகளும் அமெரிக்கத் துருப்புக்கள் பழிதீர்க்கும் கொலைவெறிச் செயல்களைச் செய்யக்கூடும் என்னும் அச்சுறுத்தல், ஒன்று அல்லது மற்றொரு நபருடைய மனப்பாதிப்பால் வரவில்லை, மாறாகப் போரின் தன்மையை ஒட்டியே விளைகின்றன என்பதை அறிந்துள்ளனர்: அதாவது காலனித்துவ வகையானஆக்கிரமிப்புக்கு பெருகும் மக்கள் எதிர்ப்பிற்கு மத்தியில் அமெரிக்க இராணுவத்தால் தோற்கடிக்கமுடியாது என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில்

இத்தகைய பழிவாங்கும் செயல்கள்மற்றும் கணக்கிலடங்காத, பல நேரமும் இன்னும் கொடூரமான குண்டுத் தாக்குதல்கள், இரவுநேரப் படுகொலைகள் மற்றும் கொலைச் செயல்கள்புஷ் நிர்வாகம் தொடக்கிய, ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் தொடரும் ஏகாதிபத்திய போர்களின் தவிர்க்க முடியாத கூறுபாடு ஆகும்.

பெருநிறுவனச் செய்தி ஊடகம், இப்போர்களை நியாப்படுத்த பொய்களைப் பிரச்சாரம் செய்வதில் முக்கிய பங்கு கொண்டது, இப்பொழுது போரைப் பற்றி இச்சமீபத்திய படுகொலை என்ன கூறுகிறது என்பதைப் பகுப்பாய்வதில் அக்கறை காட்டவில்லை. அரசாங்கத்தைப் போல் இதனுடைய முக்கிய கவலையும் இத்தகைய குற்றங்களை மூடிமறைத்தல் அல்லது அது முடியவில்லை என்றால், அவற்றின் பொதுநிலை முக்கியத்துவத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்புதல் என்று உள்ளது.

உத்தியோகத்தர் சார்ஜென்ட் பேல்ஸ் மற்றும் காந்தகார் கொலைவெறியாட்டத்தில் தொடர்பு கொண்டிருந்த வேறு எந்த அமெரிக்கச் சிப்பாயும் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அப்படிக்கூறினாலும், புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களில் இவர்களை அங்கு கொல்லவும் கொல்லப்படவும் பொய்களின் அடிப்படையில் நடக்கும் போர்களுக்கு அனுப்பி வைப்பவர்கள் இன்னும் பெரிய குற்றவாளிகள் என்பது உணரப்பட வேண்டும்.

அக்குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவது, அது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் மற்றும் அதற்கு அடிப்படையான முதலாளித்துவ இலாப முறை ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தின் பாகமாக தொழிலாள வர்க்கத்தின் பணி ஆகும்.