World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

In wake of Afghan massacre, tensions mount between US and its puppet Karzai

ஆப்கானிஸ்தான் படுகொலைகளையடுத்து, அமெரிக்காவிற்கும் அதனுடைய கைப்பாவை கர்சாய்க்கும் இடையே அழுத்தங்கள் அதிகரிக்கின்றன

By Bill Van Auken
17 March 2012
Back to screen version

வெள்ளியன்று வெளியிட்ட பொது அறிக்கைகளில், ஜனாதிபதி ஹமித் கர்சாய் கடந்த ஞாயின்று 16 குடிமக்கள் கொலை செய்யப்பட்டது குறித்து அமெரிக்க இராணுவத்தை கண்டித்தார்; ஆனால் ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு தொலைபேசி உரையாடலில் கர்சாயியுடைய கோரிக்கையான பாதுகாப்பை ஆப்கானிய படைகளிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என்பதை ஏற்கும் விருப்பம் வாஷிங்டனுக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.

ஆப்கானிய ஜனாதிபதியின் முரண்பாடான நிலைப்பாடுகள் அவர் செய்து கொண்டிருக்கும் சமநிலைப்படுத்தலை பாதுகாத்தல் என்பது பெருகிய முறையில் இடர்களை கொண்டுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது; ஒருபுறம் அவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் அமெரிக்க-தலைமையிலான ஆக்கிரமிப்பு குறித்து வெகுஜன சீற்றத்தில் எழும் அலையுடன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளவேண்டும்; அதே நேரத்தில் அவர் தன்னுடைய கைப்பாவை ஆட்சி கவிழ்க்கப்படாமல் தடுக்கப்படுவதற்கு வெளிநாட்டுத் துருப்புக்களைத்தான் முற்றிலும் நம்பி இருக்க வேண்டும்.

வாஷிங்டனுக்கும் காபூல் ஆட்சிக்கும் இடையேயுள்ள அழுத்தங்கள் இப்படுகொலையையொட்டித் தீவிரமாக அதிகரித்துள்ளன; குறிப்பாக அமெரிக்க துருப்புக்கள் அனைத்தும் கிராமப்புறப் பகுதிகள், கிராமங்களிலிருந்து பெரிய தளங்களுக்குத் திருப்பிப் பெறப்பட வேண்டும், அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஆப்கானிய துருப்புக்களிடம் 2013 ல் ஒப்படைக்கப்பட வேண்டும், பென்டகன் மற்றும் நேட்டோ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள அவகாசத்திற்கு ஓராண்டு முன்னதாக என்னும் கர்சாய் உடைய கோரிக்கையையொட்டி இது அதிகரித்துள்ளது.

வெள்ளியன்று ஆப்கானிய ஜனாதிபதி ஒரு படி மேலே சென்று, அமெரிக்க இராணுவமானது அரசாங்கம் படுகொலை குறித்து உத்தரவிட்டுள்ள விசாரணையில் ஒத்துழைக்க மறுப்பதற்காக அமெரிக்க இராணுவத்தை கண்டித்துள்ளார்; இப்படுகொலை ஆப்கானிஸ்தானில் தெற்கு காந்தகார் மாநிலத்தில், பஞ்சவி கிராமத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் 2 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் ஆவர்.

கடந்த ஞாயிறன்று கொல்லப்பட்ட 16 பேருடைய குடும்ப உறுப்பினர்களுடன் அழுத்தம் தரும் பேச்சுக்களை நடத்தியபோது கர்சாய் உடைய குற்றச்சாட்டு வெளிவந்தது. செய்தி ஊடகத் தகவல்கள் தப்பித்துவிட்ட உறவினர்கள் வெளிப்படையாக ஆப்கானிய ஜனாதிபதி மீது சீற்றம் கொண்டுள்ளனர் என்பதைக் குறிக்கின்றன. ராய்ட்டர்ஸ் தகவல்படி, கூட்டத்தில் சிலர் உரக்கக் கூவினர், சிலர் விடைகளை நாடினர், ஆனால் அனைவரும் இதில் தொடர்புடைய எந்தவொரு சிப்பாயும் தண்டிக்கப்பட வேண்டும் என்றனர்.

 “எனக்கு ஒன்றும் இழப்பீடு தேவையில்லை. எனக்கு ஒன்றும் பணம் வேண்டாம். எனக்கு ஒன்றும் மெக்காப் பயணம் வேண்டாம். எனக்கு ஒரு வீட்டில் விருப்பமில்லை. எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு முற்றிலும் தேவையானது அமெரிக்கர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான். இதுதான் என் கோரிக்கை, என் கோரிக்கை, என் கோரிக்கை மற்றும் என் கோரிக்கை என்று ஒரு கிராமவாசி--படுகொலையில் அவருடை சகோதரர் கொல்லப்பட்டிருந்தார்கூறியதாகும்.

தன்னுடைய எட்டு குழந்தைகள், மனைவி, சகோதரர், சகோதரருடைய மனைவி அனைவரையும் இப்படுகொலையில் இழந்துவிட்ட ஹாஜி அப்துல் சமத் அகா, ஆப்கானிய ஜனாதிபதிக்கு சீற்றத்துடன் கூறினார்: எங்கள் குடும்பங்கள் அழிந்துவிட்டன. எங்கள் வீடுகள் அழிந்து விட்டன. ஏன் இப்படி நடக்கிறது? திரு. ஜனாதிபதி அவர்களே, ஏதேனும் விடை கொடுக்க முடியுமா?

இல்லை. என்னால் கூறமுடியாது என்று கர்சாய் விடையிறுத்தார்.

ஒரு அமெரிக்க சிப்பாயைத் தவிர கூடுதலானவர்களும் படுகொலையில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்னும் கிராம மக்களின் குற்றச்சாட்டை கர்சாய் ஏற்றது போல் தோன்றியது. அவருடைய குடும்பத்தில், நான்கு அறைகளில் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர், குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டனர் என்றார் கர்சாய். அதன்பின் அவர்கள் அனைவரும் ஓர் அறைக்குக் கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டனர். இவை அனைத்தும் ஒரு நபரால் செய்யப்பட்டிருக்க முடியாது.

அமெரிக்க இராணுவம் இப்படுகொலை ஒரு அயோக்கிய இராணுவ சார்ஜேன்ட்டால் செய்யப்பட்டது, அவருக்கு மனம் பேதலித்துவிட்டு இருந்தது என்று வலியுறுத்துகிறது. பெயரிடப்படாத பென்டகன் அதிகாரிகள் வெள்ளியன்று அந்தச் சிப்பாய் ரோபர்ட் பேல்ஸ் என்று அடையாளம் காட்டினர். முன்னதாக பென்டகன் அவரை அடையாளம் காண மறுத்துவிட்டது; அவருடைய குடும்பத்தின் பாதுகாப்புக் குறித்த அச்சங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சியாட்டலிலுள்ள பேல்ஸின் வக்கீலான ஜோன் ஹென்ரி பிரௌன், இந்தச் சிப்பாய் வெள்ளியன்று கன்சாசிலுள்ள லெவன்வொர்த் கோட்டை என்னும்  மிக அதிகப் பாதுகாப்புடைய இராணுவச் சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட உள்ளார் என்று கூறினார். PTSD  எனப்படும் பெரும் அதிர்ச்சிக்கு பிந்தைய ஒழுங்கீனம் என்னும் வாதத்தின் தளத்தைத் தான் கொள்ளக்கூடும் என்றும் அவர் கூறினார்; இந்த நிலையில் கிட்டத்தட்ட 75,000 அமெரிக்கத் துருப்பினர் இருப்பதாகவும் அந்த எண்ணிகையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலுள்ள கிட்டத்தட்ட 225,000  மூத்த வீரர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு  இருக்கலாம் என்ற முன்கணிப்பு உள்ளது.

ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்படுவதற்கு முன் பேல்ஸ் மூன்று முறை ஈராக்கில் போர் நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தார். பிரௌனின் கருத்துப்படி அவரும் அவருடைய குடும்பத்தினரும் நான்காம் முறை அவர் அனுப்பப்பட மாட்டார் என்று நம்ப வைக்கப்பட்டனர்; ஆனால் திடீரென அவர் ஆப்கானிஸ்தானிற்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டார். படுகொலைக்கு முந்தைய தினம் தன்னுடைய நண்பர்களில் ஒருவருடைய கால்கள் சிதறுண்டு போனதை பேட்ஸ் பார்த்தார் என்றும் வக்கீல் கூறினார்.

வெள்ளியன்று கர்சாய் உடன் நடத்திய பேச்சுக்களில், ஆப்கானிய இராணுவ தலைமைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் முகம்மது கிரமி அமெரிக்க இராணுவ அதிகாரிகள் படுகொலை பற்றி விசாரிக்கும் தன் முயற்சிகளை புறக்கணித்துத், தடைக்கு உட்படுத்தினர் என்றும், ஆப்கானிய அதிகாரிகள் பேல்ஸைப் பேட்டி காண விரும்புவதைத் தடை செய்துவிட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்; வீரர் அமெரிக்க சட்டத்தின் கீழ் மௌனமாக இருக்கும் உரிமையைக் கொண்டுள்ளார் என்றும் மேற்கோளிட்டார்.

ஒரு சிப்பாயிக்கு மேலாகப் படுகொலையில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்னும் ஆப்கானிஸ்தானிலுள்ள பரந்த நம்பிக்கை உறுதி செய்யப்பட்டால், அதன் விளைவு இன்னும் பேரழிவைத்தான் தரும்.

கிராமவாசிகள் படுகொலைக்கு தாங்கள் எதிர்ப்புக் காட்டவில்லை என்றும் அதற்குக் காரணம் இது வாடிக்கையாக நடக்கும் அமெரிக்கச் சிறப்புப்படைகளின், அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பை எதிர்க்கும்  தாலிபன் ஆதரவாளர்களை வேட்டையாடுதல், கொலை செய்தல், அல்லது கைப்பற்றும் முயற்சிகள் என்று நடத்தப்படும் இரவுச் சோதனைகளில் ஒன்று எனக் கருதியதாகத் தெரிவித்தனர்.

கர்சாயே இரவுச் சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி தேவை என்று கோரியுள்ளார். அமெரிக்க இராணுவம் தான் பதவியில் இருத்திய ஆட்சியின் விருப்பத்திற்கு உட்படத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது. அதேபோல் ஆப்கானிஸ்தான் முழுவதும் சீற்றத்தைத் தோற்றுவித்துள்ள இரவுச் சோதனைகளானது எழுச்சி எதிர்ப்பு மூலோபாயத்திற்கு ஓர் அடிப்படைக்கருவி அவை என்று வலியுறுத்திவிட்டது.

வாஷிங்டனும் நேட்டோவும் ஆக்கிரமிப்புத் துருப்புக்கள் முக்கிய தளங்களுக்குத் திருப்பப்பட வேண்டும், பாதுகாப்புச் செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் ஆப்கானியர்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்னும் கர்சாய் உடைய அழைப்புக்களைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ABC நியூஸ் பென்டகன் இக்கோரிக்கைகளை  வீம்புப் பேச்சு என்று பென்டகன் உதறித்தள்ளிவிட்டதாகக் கூறியுள்ளது.

ஜனாதிபதி ஒபாமா நள்ளிரவிற்கு பிந்தைய அசாதாரணத் தொலைப்பேசி அழைப்பை வெள்ளியன்று கர்சாய்க்கு விடுத்தார்; ஆப்கானிய ஜனாதிபதிக்கு ஒரு குழந்தை பிறந்திருப்பது குறித்துத் தன் பாராட்டைத் தெரிவித்தார் என்று வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் வெள்ளை மாளிகை உரையாடல் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ஒபாமாவும் கர்சாயும் நம் பகிர்ந்து கொள்ளப்படவுள்ள உறுதிப்பாடு, ஆப்கானியப் படைகள் அதிகார மாற்ற வழிவகையை முடித்தல், 2014ல் நாட்டின் பாதுகாப்பு முழுவதற்கும் பொறுப்பை ஒப்படைத்தல் ஆகியவை குறித்து பேச்சுக்கள் இருந்தன என்று தெரிவிக்கின்றனர்.

ஆனால் கர்சாயைப் பொறுத்தவரை, அமெரிக்கப் படைகள் மீண்டும் தங்கள் தளத்திற்குள் திருப்பிப்பெறப்பட வேண்டும் என்ற அழைப்பை பொறுத்தவரை, நீங்கள் இதை அறிவித்தீர்களா? என்று கேட்டதாகவும் தான் ஒபாமாவிடம் அவ்வாறு அறிவித்ததாக அவரிடம் கூறியதாகத் தெரிவித்தார். ஆப்கா னிய ஜனாதிபதி ஒபாமாவிடம் ஏற்கனவே நாட்டின் பாதுகாப்புப் படைகளிடம் 2014 முடிவில் பாதுகாப்புச் செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், அது ஓராண்டுக்கு முன்னரே செய்துவிடப்படலாம் என்றும் கூறினார்.

உண்மையில் வாஷிங்டனுக்கு ஆப்கானிய இராணுவம் அல்லது பொலிஸ் சக்திகள் அமெரிக்க ஆதரவுடை ஆட்சியை 2014க்குப் பின்னரும் பாதுகாக்கும் என்பதில் நம்பிக்கை கிடையாது. அமெரிக்க அதிகாரிகள் ஒரு நீண்டகால மூலோபாயப் பங்காளித்துவம் குறித்து பேச்சுக்களை நடத்துகின்றனர்; இதன்படி ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்கள் காலவரையற்று நாட்டில் பெறப்படும் நிரந்தர இராணுவத் தளங்களிலேயே இருப்பர். கடந்த மாதம் அமெரிக்க இராணுவச் சிப்பாய்கள் குர்ரானை எரித்தது, ஜனவரி மாதம் அமெரிக்க மரைன்கள் கொல்லப்பட்ட ஆப்கானியர்களின் சடலங்கள் மீது சிரித்து, சிறுநீர் கழித்தது குறித்த புகைப்படங்கள் வெளிவந்தபின், ஏற்பட்டுள்ள சீற்றத்திற்குப் பின் வந்துள்ளதும் இப்பேச்சுக்களைக் கணிசமாக சிக்கல்களில் கொண்டுவிட்டுள்ளன.

பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜோர்ஜ் லிட்டில் வியாழனன்று அமெரிக்க இராணுவம் கர்சாயியின் ஒரு முழு, சுதந்திர இறைமை பெற்ற ஆப்கானிஸ்தான்பால் செல்லும் வலுவான ஆர்வத்தை நன்கு உணர்ந்துள்ளதாகவும், இது மிகவும் பொறுப்பான முறையில் செய்யப்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ஒரு அரைக் காலனித்துவகையில் அமெரிக்க ஆட்சியின்கீழ் உள்ளது என்பதற்கு இதைவிடத் தெளிவான அறிக்கை இருக்க முடியாது.

வெள்ளியன்றே, ஒரு இராணுவ ஹெலிகாப்டர் காபூலில் ஒரு வீட்டின் மீது விழுந்ததில் குறைந்தப்பட்சம் அதில் இருந்த 12 துருக்கியத் துருப்பினரும் வீட்டில் இருந்த இரு பெண்களும் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் எழுச்சிச் செயல்கள் ஏதும் இல்லை என்றும் ஹெலிகாப்டர் விபத்திற்குக் காரணம் விசாரிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் 22 கடற்படை சீல் கமாண்டோக்கள் உட்பட 30 அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டதற்குப் பின் இது மோசமான நிகழ்வு ஆகும்.

வெள்ளியன்று இருந்த அதன் சிப்பாய்களில் ஒருவர் கிழக்கு ஆப்கானிஸ்தானில் சாலையோரக் குண்டுத் தாக்குதலில் பெற்ற காயங்களினால் மரணமடைந்தார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

போரில் அமெரிக்க இறப்புக்கள் 1,912 என்று உயர்ந்துள்ளதுஇதில் பாதிக்கும் மேலே, 965 பேர் டிசம்பர் 2009ல் ஒபாமா தன் விரிவாக்த்தை அறிவித்ததிலிருந்து நடந்துள்ளது.

அமெரிக்கச் சிப்பாய்களுக்கு போரின் செலவு என்பது இம்மாதம் இராணுவ தளத்தில் தயாரிக்கப்படும் வெடிக்கருவிகளின் பாதிப்பைக் குறித்த ஆய்வு ஒன்றை அது அமைத்திருந்த பணிப் பிரிவு ஒன்று வெளியிட்டதின் மூலம் நன்கு தெரியவந்துள்ளது. தங்கள் காயங்களினால் உடல் உறுப்புக்களை வெட்டும் கட்டாயத்திற்கு உட்பட்ட அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு 2011 என உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது; அதில் குறைந்தப்பட்சம் 240 பேராவது ஒரு கையையோ, ஒரு காலையோ இழந்துவிட்டனர்

இந்த எண்ணிக்கை ஈராக்கில் புஷ் நிர்வாகத்தின் கீழ் 2007 ல் இராணுவத் தாக்குதலின் உச்சக்கட்டத்தில் ஏற்பட்ட எண்ணிகையையும் கடந்துவிட்டது; அப்பொழுது 205 சிப்பாய்களும், மரைன்களும் போரில் உறுப்புக்களை இழந்தனர். ஆர்மி டைம்ஸ் குறிப்பிட்டது போல், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிவரும் காயங்களில் மிகவும் வியத்தகு மாற்றங்கள் முழங்காலுக்கும் மேலாக இரு கால்களும் துண்டிக்கப்படுதல், மூன்று, நான்கு முறைத் துண்டிக்கப்படுதல், இவற்றையொட்டி பிறப்புறுப்புக் காயங்கள் என்று செயற்பிரிவு கூறியுள்ளது.