WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
Athens
steel strike enters fifth month
களத்தில் இருந்து
அறிக்கை
ஏதென்ஸ்
எஃகு வேலைநிறுத்தம் ஐந்தாம் மாதத்தில் நுழைகிறது
By our reporters
13 March 2012
use
this version to print | Send
feedback
ஹெலெனிக்
எஃகு
வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்டிருப்பவர்கள்
ஏதென்ஸின்
புறநகர்ப் பகுதியில் ஒரு தொழிற்சாலைகள் நிறைந்த ஹாலிவௌர்ஜியா என்னும் இடத்தில்
குளிர் நிறைந்த வசந்த காலத்தில் ஹெலெனிக் எஃகு ஆலையைச் சேர்ந்த பதினைந்து
தொழிலாளர்கள் வெப்பச் சூடேற்றப்பட்டுள்ள கலத்தைச் சுற்றி உட்கார்ந்திருக்கின்றனர்.
சாலையில் எதிர்பக்கத்தில் ஹுலிப்ஸ் சிமென்ட் ஆலை உள்ளது. இப்பொழுது அது வாரத்திற்கு
ஒரு நாள் மட்டுமே செயல்படுகிறது.
உலக
சோசலிச
வலைத்
தளத்தின்
நிருபர்
குழு
வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்டவர்களுடன்
அன்றைய
தினத்தைக்
கழித்தனர்.
இம்மாதம்
தொழிலாளர்கள் தங்கள் கடுமையான வேலைநிறுத்தத்தின் ஐந்தாம் மாதத்தில் நுழைந்தனர்.
ஹெலெனிக் எஃகு ஜோன் மனசெஸிற்குச் சொந்தமானது. இது கிரேக்கத்தில் எஃகு உற்பத்தியைக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் மூன்று நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த
வேலைநிறுத்தம் அக்டோபர் 31ல் தொடங்கியது. 400 பேரை நியமித்துள்ள ஆலையின்
தொழிலாளர்கள் பணி நேரத்தை நிர்வாகம் எட்டு மணியில் இருந்து ஐந்து மணிநேரமாகக்
குறைக்கும், ஊதியங்களை 40% குறைக்கும் திட்டங்களை தொழிலாளர்கள் நிராகரித்தபோது
வேலைநிறுத்தம் தொடங்கியது.
டிமிட்ரியோஸ்
ஆலையில் 17
ஆண்டுகளாக வேலை செய்யும் டிமிட்ரியோஸ் மாதம் ஒன்றிற்கு 1,100 யூரோக்கள்தான்
சம்பாதிக்கிறார். ஒரு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் தொழிலாளி
“மாதம்
ஒன்றிற்கு 650 யூரோக்கள்தான் சம்பாதிக்கிறார், ஆனால் புதிய குறைந்தப்பட்ச ஊதியம்
நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து அது 550 யூரோக்களாக குறைந்துவிட்டது.”
“வேலை நிறுத்தத்தில்
ஈடுபடுவதை விட எங்களிடம் வேறு ஆயுதம் ஏதும் இல்லை”
என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்
திட்டங்கள் எதிர்ப்பிற்குட்பட்டதால், நிறுவனம் ஒருதலைப்பட்சமாக தொழிலாளர்களை
பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. ஹெலெனிக் எஃகு ஊழியர்களில் ஐந்து சதவிகிதத்தினரைப்
பணிநீக்கம் செய்ய அனுமதிக்கும் புதிய சட்டத்தை பயன்படுத்திய முதல் முக்கிய நிறுவனம்
ஆகும். முன்பு வரம்பு 2% தான் நீக்கப்படலாம் என இருந்தது. வேலைநிறுத்தம்
தொடங்கியதில் இருந்து, நிறுவனம் 93 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. மொத்தம்
180 பேரை நீக்குவதற்கான திட்டங்களை அது கொண்டுள்ளது.
சமூக ஜனநாயக
கட்சியான
PASOK
இன் அரசாங்கம் அக்டோபர்
2009ல் இருந்து கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்த ஆரம்பித்ததில் இருந்து,
கிரேக்கத்தில் நடக்கும் அனைத்து வேலைநிறுத்தங்களிலும், எஃகுத் தொழிலாளர்களுடைய
போராட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. ஆனால் தங்கள் வேலைகள், வாழ்க்கை ஆகியவற்றைக்
பாதுகாத்துக் கொள்ளுவதற்கு தொழிலாளர்களின் போராளித்தனமான போராட்டம்
இருந்தபோதிலும்கூட,
POEM
எனப்படும் உலோகத்
தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்தே போராட்டத்தைத் தனிமைப்படுத்தி
நாசப்படுத்துவதற்குத்தான் முயன்று வருகிறது.
POEM
முக்கிய தனியார்
தொழிற்சங்கமான
GSEE
எனப்படும் கிரேக்கப் பொதுத் தொழிலாளர்களின் கூட்டமைப்புடன்
இணைந்துள்ளது.
ஹாலிவௌர்ஜியா ஆலையில் இருக்கும் தொழிலாளர்கள் நிறுவனத்தின் மற்றும் இரு ஆலைகள்,
வோலோஸ் நகரத்தில் இருக்கும் ஆலைகளின் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுவதை
தடுப்பதற்குத்தான்
POEM
செயல்பட்டு வருகிறது. அந்த
ஆலைகளில் POEM இதே
விதிகளான ஹாலிவௌர்ஜியா ஆலையில் நடத்தப்பட்டுள்ள குறைந்த ஊதியம், குறைக்கப்பட்ட
பணிநேரங்களை ஏற்றுள்ளது. வோலோஸில் உள்ள
GSEE/POEM
ஆகியவற்றின் துரோகத்திற்கு போலி இடது
SYRIZA
கூட்டணியும்
துணை நின்றுள்ளது. அது தொழிலாளர்கள் வோலோஸில் உள்ள தொழிலாளர்களுடன் சேர்ந்து ஒரு
கூட்டு வேலைநிறுத்தத்தை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறது.
பனக்ளோடிஸ்
31
ஆண்டுகளாக ஆலையில் வேலை பார்த்துவரும் பனக்ளோடிஸ் தொழிலாளர்கள்
GSEE
யிடம் பொதுவாக
விரோதப் போக்கைக் கொண்டுள்ளனர் என்றும் தொழிற்சங்கம் செய்துள்ளது குறித்துத் தனக்கு
வியப்பு ஏதும் இல்லை என்றார்.
“உத்தியோகபூர்வத்
தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் போலித்தனமானவை”
என்று அவர்
WSWS
இடம்கூறினார். “அவர்கள்
ஆலைப்பக்கம் வருவதே இல்லை. பொது வேலைநிறுத்தங்கள் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட
நடவடிக்கைகளுக்கு அவர்கள் அழைப்பு கொடுப்பதற்குக்காரணம் தாங்கள் ஏதோ செய்கிறோம்
என்ற போலித் தோற்றத்தைக் காட்டிக் கொள்வதற்குத்தான். நிறைய வேலைநிறுத்தங்கள்
இருந்தால்தான் நாம் வெற்றிபெற முடியும். ஓரே ஒரு பறவை என்பது கோடைகாலம் வருவதை
குறித்துவிடாது.”
போட்டித்
தொழிற்சங்கமான
General Steel Workers
Union,
PAME
எனப்படும் அனைத்துப்
போராளித்தனத் தொழிலாளர்கள் முன்னணியுடன் இணைந்துள்ளது. இது ஸ்ராலினிச கம்யூனிஸ்ட்
கட்சியின் (KKE)
தொழிற்சங்கக்
கூட்டமைப்பு ஆகும்.
PAME,
GSEE
யின் அப்பட்டமான காட்டிக்
கொடுப்பைப் பயன்படுத்தித் தன்னை ஒரு போராளித்தன மாற்றீடு எனக் காட்டிக்கொள்ள
முயல்கிறது. உலோகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் செய்யும்
தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிறுஉதவி கூட செய்யவில்லை என்று கண்டிக்கும் வகையில்
PAME
ஹாலிவௌர்ஜியாத் தொழிலாளர்களுடைய செல்வாக்கைப் பெற முடிந்துள்ளது.
நவம்பர்
16ம்திகதி ஹெலினிக்கி ஹாலிவௌர்ஜியா எஃகுத் தொழிலாளர்கள் பொது மன்றத்தில்
இயற்றப்பட்ட தீர்மானம் ஒன்று
PAME
உடைய பங்கை ஏற்கும் வகையில்,
“PAME
எங்கள் பக்கம் உள்ளது”
என்று கூறியது.
இத்தீர்மானம்
Metal Workers Federation
ஐத் தாக்கியது: “ஒரு
ஐக்கியத்திற்கான பிரச்சாரத்தை நடத்தக்கூட ஒரு கூட்டத்திற்கு இதை அழைப்புவிடவில்லை”
என்று அது கூறியுள்ளது.
“எஃகுத்
தொழிலாளர்களுக்கு அனைத்துவித ஆதரவும் கொடுக்கப்பட வேண்டும்”
என்று இத்தீர்மானம்
அழைப்புவிடுகிறது.
“தீர்மானங்கள்,
தொழிற்சங்கங்களில் இருந்து செய்திக் குறிப்புக்கள், குடியிருப்பு குழுக்களின்
பங்கு, இளைஞர், மற்றும் மகளிர் அமைப்புக்கள் ஆலைக்கு வெளியே கூடுதல், நிதிய உதவி
மற்றும் உணவு வசூலித்துத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்படுதல்”
ஆகியவை இதில் அடங்கும்.
ஆனால்
PAME
வேலைநிறுத்தத்தை
விரிவாக்குவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை; அதனிடம் 400,000
உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறினாலும், நிலைமை இப்படித்தான் உள்ளது. நவம்பர் 27ம்
திகதி எஃகுத் தொழிலாளர்களுடன் ஒற்றுமை காட்டும் வகையில் தேர்ந்தெடுத்த இடங்களில்
நான்கு மணி நேரப் பிராந்திய வேலைநிறுத்தங்களுக்கு அது ஆதரவைக் கொடுத்தது.
PAME
ஆதரிக்கும்
கூடுதலான வேலைநிறுத்தங்கள் டிசம்பர் 12, ஜனவரி 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
பிந்தைய
வேலைநிறுத்தம் குறித்து ஒரு
PAME
அறிக்கை கூறியது:
“ஜனவரி
17ம் தேதி ஒற்றுமையை நிலைநாட்டும் வேலைநிறுத்தத்தைச் செயல்படுத்துவதற்கான தயாரிப்பு
PAME
உறுப்பினர்களால்
மேற்கொள்ளப்பட்டது.”
ஆனால் இந்த
வேலைநிறுத்தம் ஒன்றும்
PAME
அழைப்புவிடுத்த சுயாதீன
நடவடிக்கை அல்ல. அது பெருகிய முறையில் இழிவுற்றிருக்கும்
GSEE, ADEDY (பொதுத்துறை)
தொழிலாளர் சங்கக் கூட்டமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த சமீபத்திய பொது, பெயரளவு
வேலைநிறுத்தங்களின் ஒரு பகுதிதான்.
ஹாலிவௌர்ஜியா ஹெலெனிக் எஃகு நிறுவனத்தின் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் கிரேக்கம்
முழுவதும் தனியார் துறையில் ஊதியங்கள், வேலைகள் மீது நடத்தப்படும் தாக்குதலைத்தான்
குறிக்கின்றன. முந்தைய ஆண்டில் அக்டோபர் 2011 வரை, தனியார் துறைகளில் 250,000
க்கும் மேற்பட்ட வேலைகள், நாடு ஐந்தாம் ஆண்டு மந்த நிலையில் நுழைந்தபோது,
இழக்கப்பட்டுவிட்டன. வேலைநிறுத்தம் செய்பவர் ஒருவர் வீதிக்கு எதிரே உள்ள சிமென்ட்
ஆலையில் பணிநேரங்கள் ஐந்து நாட்களில் இருந்து வாரத்திற்கு ஒரு நாள் என்று
குறைக்கப்பட்டுவிட்டது, தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு 200 யூரோக்களை மட்டுமே
வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர் என்று கூறினார்.
ஹாலிவௌர்ஜியா ஆலையின் தொழிலாளர்களிடையே ஒரு பொது விளக்கவுணர்வு உள்ளது. தங்கள்
ஆலையில் நடத்தப்படும் ஊதிய, பணிநிலைமைகள் மீதான தாக்குதலுக்கு அப்பால் ஒரு
போராட்டத்தில் தாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்பதே அது.
PAME
உட்பட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை மட்டுப்படுத்த முற்படுகையில்,
WSWS
இடம்
பேசிய தொழிலாளர்கள் கிரேக்கத்தில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு
அரசியல் தீர்வு தேவை என்றனர்.
பனஜியோடிஸிற்கு 28 வயது மகளும், 29 வயது மகனும் உள்ளனர். இருவருமே ஏதென்ஸை விட்டு
நீங்கி வேலைதேட முற்படுகின்றனர்.
“கிரேக்கத்தில்
வேலைகள் இல்லை”
என்றார் அவர்.
“என்னுடைய
குழந்தைகளுடைய வருங்காலம் எனக்கு மிகவும் முக்கியமானது”
என்று கூறினார்.
“என்
மனைவி மாதம் 580 யூரோக்கள் மட்டுமே சம்பாதிக்கிறார். அவர் ஒரு மழலையர் பள்ளியில்
வேலை பார்க்கிறார். இங்கு இருக்கும் சமூக நிலைமைகளை நான் நம்ப முடியவில்லை.
என்னுடைய அண்டை வீட்டுக்காரர்கள் சிலர் வாடிக்கையாக ஒரு கூடையுடன் மற்றவர்களை உணவு
கேட்டுச் சுற்றிவருகின்றனர்.”
வாழ்க்கைத்
தரங்களில் ஏற்பட்டுள் சரிவின் தன்மை மிகக் கடுமையாக இருப்பதால், பனஜியோடிஸ்,
“நிலைமை
சர்வாதிகாரத்தின்கீழ் இருந்ததைவிட மோசமாக உள்ளது”
என்றார்.
கிரேக்கத்திற்கு என்ன நடக்கும் என்று அவர் எதிர்பார்கிறார் என்று கேட்கப்பட்டதற்கு,
“சமீபத்திய
ஆண்டுகளின் அரசியலப் சமூக வெடிப்பு ஒன்றிற்கு வழிவகுக்கும். இந்த வெடிப்போடு
ஒப்பிட்டால், எகிப்தின் நிகழ்வுகள் ஒரு தேனீர் விருந்துபோல் இருக்கும்”
என்று அவர் பதில் கூறினார்.
ஜானிஸ்
இந்த
ஆலையில் ஜானிஸ் ஒன்பது ஆண்டுகள் உழைத்துள்ளார். முக்கூட்டு எனப்படும் சர்வதேச நாணய
நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திவங்கி ஆகியவற்றின் சார்பில்
பாராளுமன்றத்தில் சுமத்தப்பட்ட கடந்த வரவு-செலவுத்
திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்
“பல
தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை வைத்துக் கொண்டு ஓரளவு வாழமுடிந்தது. ஒரு
குடும்பத்தையும் காப்பாற்ற முடிந்தது. ஆனால் இப்பொழுது அது முடிவிற்கு
வந்துவிட்டது.
“செல்வந்தர்களுக்கும்
ஏழைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மிகப் பெரிய அளவில் வந்துவிட்டன.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை இன்னும் கடினமாகப் போய்விட்டது, ஆனால் செல்வந்தர்கள்
தங்க கரண்டிகளில் உணவு உட்கொள்ளுகின்றனர். இதை நீங்கள் அன்றாட வாழ்வில் காணலாம்.
மக்களோ குப்பையில் ஏதெனும் உணவு கிடைக்குமா என்று தேடுகின்றனர்.”
“PAMD
மற்றும்
KKE
உடைய போராளித்தன வார்த்தைஜாலங்கள் ஒருபுறம் இருக்க, அவை அடிப்படையில் உத்தியோகபூர்வ
தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களுடன் ஒத்துழைப்பதற்கு ஒரு போலி இடது கவசத்தைத்தான்
கொடுக்கின்றன. கூட்டாக அவை கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கிரேக்க மக்கள்மீது
ஓர் சமூக எதிர்ப்புரட்சியைத்தான் சுமத்தியுள்ளன.
தொழிலாள
வர்க்கம் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும்,
அரசாங்கத்தை வீழ்த்தி தொழிலாளர் அரசாங்கத்தை உருவாக்கி சோசலிசக் கொள்கைகளை
நடைமுறைப்படுத்தும் தொழிலாளர் அரசாங்கம் அமைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும் ஒரு
புதிய முன்னோக்கின் அடிப்படையில் போராட வேண்டும். அனைத்து தொழிற்சங்க
அதிகாரத்துவத்தின் பிரிவுகளிடம் இருந்து சுயாதீனமாக செயல்படும் நடவடிக்கை குழுக்கள்
ஒவ்வொரு பணியிடத்திலும், சமூகத்திலும் அமைக்கப்ப்பட வேண்டும்
கிரேக்கத்தில் இருக்கும் தொழிலாளர்கள் சிக்கன நடவடிக்கை, திவாலாக்குதல்
ஆகியவற்றிற்கு எதிரான தங்கள் போராட்டங்களை, ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்களுக்கு
எதிராக நடத்தப்படும் சமூகத் தாக்குதுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் பகுதி என்று
கருதி கண்டத்தில் இருக்கும் இதேபோன்ற போராட்டத்தை எதிர்கொள்ளும் அனைத்துத்
தொழிலாளர்களுடைய ஆதரவையும் பெற முயல வேண்டும்.
கட்டுரையாளர்கள் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கின்றனர்
How the Greek Communist Party covers for
Papandreou’s cuts |