WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
ஜேர்மனிய அரசாங்க ஆய்வு
குடியேறும் சமூகங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை
ஊக்குவிக்கிறது
By Martin
Kreickenbaum
14 March 2012
use
this version to print | Send
feedback
பெப்ருவரி
மாதக் கடைசியில் ஜேர்மனியின் உள்துறை அமைச்சரகம்
“ஜேர்மனியில்
இளம் முஸ்லிம்கள்”
என்ற தலைப்பில் ஓர்
ஆய்வை வெளியிட்டது. இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது ஜேர்மனியில் குடியேறும்
சமூகங்களுக்கு எதிரான பிரச்சாரம் புதுப்பிக்கப்படுவதற்கு ஒரு வாய்ப்பாகிவிட்டது.
பரபரப்பு செய்தித்தாளான
Bild
ஆய்வு முடிவகள் குறித்த
சிதைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு,
“முஸ்லிம்கள்
ஒருங்கிணைவதை எதிர்க்கின்றனர்”
என்று முத்திரையிட்டதுடன், அவர்களை ஜனநாயகத்திற்கு விரோதிகள் என்று
பழிசுமத்தி, அவர்கள் பயங்கரவாதத் திறன் உடையவர்கள் என்று உட்குறிப்பாகவும்
காட்டியுள்ளது.
Bild “அதிர்ச்சி
தரும் ஆய்வு”
ஒன்றைப் பற்றிக்
குறிப்பிட்டு, புள்ளி விவரங்களை மேற்கோளிடுகிறது; இதன்படி முஸ்லிம்களில் 22%,
ஜேர்மனிய கடவுச்சீட்டு உடையவர்கள், ஒருங்கிணைவதை நிராகரித்து தங்கள் சொந்த
பண்பாட்டு மூலங்களை வலியுறுத்துகின்றனர். ஒரு ஜேர்மனிய கடவுச்சீட்டு இல்லாத
முஸ்லிம்களில் கிட்டத்தட்ட 48% த்தினர்
“தனியே
பிரிந்து செல்லும்”
போக்குகளைத்தான்
வலுவாக வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் ஜேர்மனியர் அல்லாத முஸ்லிம்களில்
கால்வாசிப்பேர், இந்த ஆய்வின்படி, மிகவும் சமயப்பற்று நிறைந்து, மேலைப் பண்பாட்டை
வெறுத்து, வன்முறையை ஏற்று, ஒருங்கிணைவுக்கும் ஆதரவு கொடுப்பதில்லை.”
முற்றிலும்
பொருத்தமில்லாத வகையில் எடுக்கப்பட்ட இப்புள்ளிவிவரங்களை தொடர்ந்து உள்துறை மந்திரி
Rans-Peter Friedrich
(Christian Social Union CSU)
வின் கருத்துக்களும்
வந்துள்ளன. அவர் செய்தி ஊடகத்திடம்:
“ஜேர்மனி
அதன் குடியேறுபவர்களின் பண்பாட்டு அடையாளங்களை மதிக்கிறது. ஆனால் சர்வாதிகார
முறையிலான, ஜனநாயக விரோத, வெறித்தன சமயக் கருத்துக்களை நாங்கள் ஏற்பதற்கு இல்லை.
சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை எதிர்ப்பவர்களுக்கு இங்கு வருங்காலம் இல்லை. இதைத்
தெளிவாக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும்.”
கிறிஸ்துவ
ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் செய்தித்தொடர்பாளர்
Hans-Peter Uhl (CSU)
இதன்பின்
Neuen Osnabrucker
உடைய கருத்துக்களைச் சேர்த்துக் கொண்டார்:
“ஒருங்கிணைவதை
நிராகரித்தல் என்பதுதான் வெறித்தனம், பயங்கரவாதம் ஆகியவற்றை வளர்ப்பதற்கு
தளமாகிறது.”
இத்தகைய
அரசியல் பிரச்சாரம் வேண்டுமென்றே ஆய்வின் கண்டுபிடிப்புக்களை தீவிர இனவெறி உணர்வு
பரவுவதற்குத்தான் பயன்படுத்தப்படுவதோடு வரம்பு கட்டப் பார்க்கிறது. உண்மையில் 750
பக்க அறிக்கை இன்னும் கூடுதலான நயத்தை உடைய பொருட்களைத் தந்துள்ளது. ஆய்வாளர்கள்
அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புக் கொள்கையை பற்றிக் குறைகூறியுள்ளது கம்பளத்தின் கீழே
மறைக்கப்பட்டுவிட்டது.
2009ன்
முற்பகுதியில், முன்னாள் உள்துறை மந்திரியான
Wolfgang Schäuble
இனால்
(CDU)
இந்த ஆய்வு ஏற்பாடு
செய்யப்பட்டது. ஜேர்மனியில் முஸ்லிம்கள் மிகவும்
தீவிரமயமாகும்
போக்கை
கொண்டுள்ளனர் என்ற கவலைகளை ஒட்டி இது ஆணையிடப்பட்டது. அது அரசியல் வாதிகளும் செய்தி
ஊடகமும் ஜேர்மனியில் உள்ள பல துருக்கியக் குடிமக்கள்,
துருக்கியக்
குற்றவாளிகள் அல்லது தீவிர இஸ்லாமிய வாதிகளுடன் தொடர்பு உடையவர்கள் என்று கூறப்பட்ட
கருத்துக்களுடன் பிணைக்கப்பட்டது. உண்மையில், இக்கொலைகள் புதிய பாசிசக்
கூட்டத்தினரான
“Sauerland group”
இனால்
நடத்தப்பட்டன என்பது வெளிப்பட்டது. அது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதன்
குற்றங்களைச் செய்துவருகிறது; இக்குழு பற்றியும் அதன் நடவடிக்கைகள் பற்றியும்
ஜேர்மனிய உளவுத்துறைப் பிரிவுகள் நன்கு அறிந்துள்ள நிலையிலும் இது நடக்கிறது.
Schäuble
ஐ
பொறுத்தவரை,
ஆய்வின் நோக்கம் இயல்பாகவே முஸ்லிம்கள் பயங்கரவாதத்திறன் உடையவர்கள்,
ஆதலால்
“ஜனநாயகமுறை
அற்றவர்கள்”,
தீவிர அடிப்படைவாதிகள் என்ற ஆய்விற்கு வாதங்களை அளிப்பதுதான் முக்கியமாகும்.
குழுவிற்குக் கொடுக்கப்பட்ட உத்தரவின்படி அது முஸ்லிம்களின் மனப்பான்மையைத்தான் காண
வேண்டுமே ஒழிய, சமூக நிலைமகளைக் கருதக்கூடாது; இதைத்தான் ஆய்வின் ஆசிரியர்களில்
ஒருவரான
Klaus Bohnke,
Cicero
இதழின் ஆன்லைன் பதிப்பில் கூறியுள்ளார்.
Jena,
Breman, Linz, Weimar
ஆகிய
இடங்களில் இருந்து வந்துள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு இறுதியில் உள்துறை
அமைச்சரகத்தின் பணியை ஏற்க உத்தரவிடப்பட்டவர்கள், தொடர்பு மற்றும் சமூக உளவியல்
வல்லுனர்கள் ஆவர்; இவர்களுடைய முந்தைய அறிவியல் ஆய்வுகள் பயங்கரவாதம், மத
வெறித்தனம், அரசியல் தீவிரவாதம் ஆகியவை பற்றி இருந்தன, ஆனால் குடியேற்றம், சமூக
சமத்துவம் ஆகியவை குறித்து ஆய்வு அனுபவம் எதையும் பெற்றிருக்கவில்லை.
இதையும் விட
வியப்பானது,
Jena
பல்கலைக்கழகத்தின் பேராசரியர் வொல்ப்காங் பிரிண்ட் ஒரு பரந்த வழிவகை அணுகுமுறையைக்
கையாண்டு பகிரங்க விவாதங்களை முஸ்லிம்களின் பல தலமுறைகளைக் கொண்ட இல்லங்களில், பல
முஸ்லிம் சமூகங்களிலும் நடத்தியதுதான். ஆனால் தரம் சீரமைக்கப்பட்ட தொலைபேசி அளவை,
இப்பொழுது செய்தி ஊடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை, ஆய்வின் பொருள்
குறித்து முற்றிலும் இயைந்துள்ளது.
ஆய்வின்
இப்பகுதி அப்பட்டமான குறைபாடுகளைக் காட்டுகிறது; இவை ஆய்வுத்திட்டமான
“Heymet”,
என்னும் பேர்லின்
Humboldt
பல்கலைக்கழகத்தால்
வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டத்தில், இன்னும் விவரமாக ஆராய்ச்சியாளர்கள்
இளைஞர்களிடையே “தீவிரமயம்”
என்ற சொல்லைப் பயனபடுத்தியது குறித்துக் கருத வேண்டியது
முக்கியமாகும். அவர்கள் அதைக் கீழ்க்கண்டவாறு வரையறை செய்துள்ளனர்.
“(முஸ்லிம்)
நபர்கள் அல்லது அமைப்புக்கள் தீவிரமயப்பட்டவர்கள் என்று கருதப்படலாம்—அவர்கள்
ஆழ்ந்த சமூக, அரசியல் மாற்றங்களை ஜேர்மனியில் காணவேண்டும் என்று கருதும்போது; ஆனால்
குறைந்தபட்சம் அவர்கள் தற்போதைய அரசியல் மற்றும் சட்ட முறையை கூட்டாட்சிக்
குடியரசில் (ஜேர்மனியில்) மதிக்க வேண்டும்; அவர்கள் எத்தகைய சட்டவிரோத
நடவடிக்கைகளையோ, வன்முறையிலோ ஈடுபடக்கூடாது, அவற்றிற்கு ஒப்புதலும் தரக்கூடாது.”
“ஆழ்ந்த
மாற்றங்களுக்கு”
விருப்பம், அதே
நேரத்தில் “அரசியல்
முறைக்கு மரியாதை”
ஆகியவற்றிற்கு இடையே
உள்ள முரண்பாட்டைத் தவிர, இத்தகைய வரையறை,
மக்களில்
பெரும்பாலானவர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடும். ஆனால் இந்த
“தீவிரமயத்தனம்”
எப்படி
தொலைக்காட்சிப் பேட்டிகளில் கைப்பற்றப்பட்டது? விடையிறுப்பவர்களுக்கு அறிக்கைகள்
கொடுக்கப்பட்டன, அவற்றில் அவர்கள் உடன்பாடு காணலாம், அல்லது நிராகரிக்கலாம்.
உதாரணமாக இந்த அறிக்கை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது:
“மேலை
உலகம் மற்ற மக்களை சுரண்டுகிறது அல்லது அவர்களை நசுக்கும்வரை, உலகில் சமாதானம்
இருக்காது”.
எப்படி இக்கருத்திற்கு உடன்படாமல் எவரும் இருக்க முடியும் என்பதைக் காண்பது
கடினம்தான்.
இஸ்ரேலைக்
குறைகூறினாலோ,
“இஸ்ரேல்
மட்டுமே மத்திய கிழக்கில் பூசல்கள் வெளிப்படுவதற்கும் அவை தொடர்வதற்கும் குற்றம்
சாட்டப்பட வேண்டும்”
என்ற கருத்திற்கு உடன்பட்டாலோ, விடையிறுப்பவர்கள் செமிட்டிய
எதிர்ப்பாளர்கள் என்று முத்திரையிடப்பட்டனர். ஒரு கேள்விகூட தற்பொழுதுள்ள
பிரச்சினைகளான கல்வி, வருமானம், வாழ்க்கை, பணி நிலைமைகள், வசிக்கும் அந்தஸ்து
அல்லது அரசாங்க அதிகாரிகளால் காட்டப்படும் பாகுபாடு ஆகியவை குறித்து இல்லை.
இங்கு
ஆய்வாளர்கள் உள்துறை அமைச்சரகம் கொண்டுள்ள கருத்துக்களை அப்படியே ஏற்றுள்ளனர்.
ஆய்வில் இத்தகைய பத்திகள்தான்
Bild
செய்தித்தாளிடம் கொடுக்கப்பட்டு, பின்னர் அமைச்சரகத்தின் பொதுமக்களுக்கான செய்திக்
குறிப்பிலும் அளிக்கப்பட்டது.
ஆனால்
புறக்கணிக்கப்பட்டது, ஆய்வாளர்கள் குடியேறியவர்களுடன் நடத்திய வெளிப்படையான
விவாதங்கள் மூலம் பெற்ற முடிவுகள் ஆகும்; இவை அறிக்கையில் மேற்கோளிடப்பட்டுள்ள
புள்ளிவிவரங்களுக்கு முற்றிலும் முரணானவை ஆகும். உதாரணமாக தரவு சேகரிப்பின்
நடுவில், 2010 கோடைக்காலப் பிற்பகுதியில், வலதுசாரி
Thilo Sarrazin
எழுதிய நூல் ஒன்றைக்
குறித்து விவாதம் ஒன்று எழுந்தது; அது ஆய்வாளர்களுக்கு சந்தேகத்திற்குரிய
அதிருஷ்டமான முஸ்லிம் குடியேறியவர்கள் மீதான விளைவுகளை எடுத்துக் கொள்ளும்
வாய்ப்பைக் கொடுத்தது. இந்த விவாதம் ஒருங்கிணைப்பிற்கு சிறிதும் பயனற்றது என்ற
முடிவு பற்றி அவர்கள் மிகவும் தெளிவடைந்தனர்; இது ஜேர்மனிய ஒருங்கிணைப்பு ஆணையர்
Maria Bohmer
(CDU)
வினாலேயே கூறப்பட்டது; ஆனால் முஸ்லிம்களால் எதிர்க்கப்பட்டது,
அவர்கள் தாங்கள் தேவையற்றவர்கள் என்பதாக உணர்ந்து அச்சத்தையும் ஏமாற்றத்தையும்
வெளிப்படுத்தினர்.
இறுதிக்
கொள்கை பரிந்துரைகளில் அறிவியலாளர்கள் வெளிப்படையாக குடியேறுபவர்களுக்கு சம
உரிமைகள் கொடுக்கும் கட்டுமான நிலைமைகளை தோற்றுவிப்பதற்கு ஆதரவாகப் பேசுகின்றனர்.
ஒருங்கிணைப்பு என்பது குடியேறுபவர்களுக்கு ஒரு கட்டாயம் அல்ல, ஆனால்
“பிரதான
சமூகத்திற்கு ஒரு சவால் ஆகும்.”
நிரந்தரமான
பாகுபாடுகள், இஸ்லாமை பயங்கரவாதத்துடன் சமமாகப் பாவிப்பது, ஒதுக்கி வைக்கப்படுதல்,
சேர்த்துக் கொள்ளுவது மறுக்கப்படுதல் ஆகியவை முஸ்லிம் இளைஞர்களிடையே மற்றவகை
அடையாளங்களுக்கு முயல வைக்கும்
—சமய,
சர்வாதிகாரக் கருத்துக்களை நாட வைக்கும்.
இந்த
அறிக்கைகளின் அடிப்படையில், அறிக்கையின் ஆசிரியர்கள் பொதுவாக ஆய்வு வெளிப்பட்டபின்,
புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
Klaus Bohnke
கருத்துப்படி இந்த ஆய்வு ஏற்கனவே முடிந்து அமைச்சரகத்திற்கு 2011 கோடையில்
கொடுக்கப்பட்டுவிட்டது. நவம்பர் 2011ல் அமைச்சரகம் ஒரு கூட்டுச் செய்தியாளர்
கூட்டத்தை அறிவித்தது. அது பின்னர் பெப்ருவரி 27, 2012ல் திடீரென இரத்து
செய்யப்பட்டது.
இரண்டு
நாட்களுக்குப் பின்,
Bild தன்
கட்டுரையை “அதிர்ச்சி
தரும் ஆய்வு”
என்ற தலைப்பில்
வெளியிட்டது; இதில் உள்துறை அமைச்சர்
Friedrich
உடைய
உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றும் இருந்தது. அப்பொழுது இந்த ஆய்வு பொதுவில்
கிடைக்கக்கூடியதாக இருந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான பரபரப்பு மிகுந்த
பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் வகையில் ஆய்வின் துல்லியமான முடிவுகள் பரபரப்பு
ஏட்டிற்கு கசிய விடப்பட்டது.
சமூக
ஜனநாயகக் கட்சி (SPD)
மற்றும் பசுமை
வாதிகள், கூட்டணி அரசாங்கத்தில் உறுப்புக் கட்சியாக இருக்கும்
FDP
எனப்படும் சுதந்திர
ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் அரசியல் வாதிகள் ஆய்வு வெளியீடு குறித்து குறைகளை
வெளிப்படுத்தினர். அதன் வழிமுறைகள், காரணத் தொடர்பு ஆகியவற்றை அவர்கள் வினாவிற்கு
உட்படுத்தி
Friedrich
ஐ ஜனரஞ்சகத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால்
SPD
யின் ஒருங்கிணைப்பு ஆணையர்
Aydan Ozugus
உடைய கூற்றான,
“பிரிவினை,
வன்முறை ஆகியவற்றின் காரணங்கள் தீவிரமாக கட்டுப்படுத்தப்படும்”
என்னும் கூற்றோ,
அல்லது பசுமைக் கட்சியின்
Volker Beck
உடைய கருத்தான முஸ்லிம்கள்
“பாதுகாப்பு
விடயங்களைப் பொறுத்து மட்டுமே மதிப்பிடப்படுகிறார்கள்”
என்பவை கரிசனை மிக்கவையல்ல.
1993ல்
SPD
தான் கிறிஸ்துவ
ஜனநாயகவாதிகளுடன் தஞ்சம் குறித்த சமரசம் என்று அழைக்கப்பட்டதற்கு உடன்பட்டனர்;
இதன்படி அகதிகள் பொறுப்பற்ற முறையில்
“சமூகநல
முறைக்காக ஜேர்மனிக்குக் குடியேறியுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டனர்.
SPD
பசுமை வாதிகளின் கூட்டணி
அரசாங்கம்தான் செப்டம்பர் 11, 2001 தாக்குதலக்குப் பின் குடியேறியவர்களுடைய ஜனநாயக
உரிமைகளை முறையாகக் குறைத்தனர், முஸ்லிம்களை பயங்கரவாதத்திறன் உடையவர்களாக கண்டனர்.
சமீபகாலம் வரை பேர்லினில் ஆளும்
SPD-
இடதுகட்சி நகர அரசாங்கம்
அது முறையாக “குற்றம்
சார்ந்த அயல்நாட்டினரை”
நாடுகடத்திவிட்டதாக பெருமை பேசிக்கொண்டது.
இக்கட்சிகள்,
சமூகத்தின் இழிந்த
உறுப்பினர்களை,
பேரினவாதம், இனவெறி
ஆகியவற்றைத் தூண்டி திரட்டும் நோக்கத்தைக் கொண்ட அரசாங்கக் கொள்கை ஒன்றிற்கு
ஆதரவைக் கொடுக்கிறது.
Friedrich
இப்பொழுது தீவிர வலதில்
இருந்து பாராட்டுக்களைப் பெறுகிறார் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. தீவிர வலது
Republikaner
கட்சியின் தலைவரான
Rolf Schlierer
அமைச்சரை
கீழ்க்கண்டவாறு பாராட்டினார்:
“பல
வாரங்கள் செயற்கையான
“வலதிற்கு
எதிரான”
வெறித்தனக்
கூச்சலுக்குப்பின், உள் ஒழுங்கிற்கும் அமைதியான இணக்க வாழ்விற்கும் நம் நாட்டில்
ஏற்பட்டிருக்கும் உண்மையான அச்சுறுத்தல் அரசியல் செயற்பட்டியலில் கடைசியாக
சேர்க்கப்படுவது தேவையாகும்.”
ஜேர்மனிய_அரசியல் நடைமுறையில் தலைவர்கள் பகிரங்கமாக
Zwickau வில்
இருக்கும் புதிய பாசிச பயங்கரவாதக் குழுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
பரிவுணர்வை பகிரங்கமாக வெளிப்படுத்தி ஒரு வாரம்தான் ஆகிறது. இந்த
நவ-நாஜிஸ்ட்டுக்களின்
செயல்கள் பல ஆண்டுகளாக இரகசிய உளவுத்துறை மற்றும் சட்டத்தை செயல்படுத்தும்
பிரிவுகளின் பார்வையில்,
ஒருவேளை அவற்றின் தீவிர ஆதரவோடுகூட, நடந்து வருகின்றன; இவற்றின் எஜனமானர்
கூட்டாட்சியின் உள்துறை மந்திரி ஆவார். ஆனால் பொலிஸ் மற்றும் உளவுத்துறை
அமைப்புக்களின் ஜனநாயக விரோத, சர்வாதிகார வழிமுறைகள் பொது விவாதத்தில் இருந்து
அகற்றப்படுகின்றன. மாறாக சந்தேகத்திற்கு உரிய ஒரு அறிவியல் ஆய்வு மீண்டும்
ஒருங்கிணைப்பு குறித்து ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது; இது ஜேர்மனியில் வசித்து
உழைக்கும் குடியேறுபவர்களுக்கு எதிரான ஒரு கறைபடியவைக்கும் பிரச்சாரத்தை தவிர
வேறொன்றும் அல்ல.
|