WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்
ஸ்டீஃபன்
டேல்ட்ரியின்
Extremely Loud & Incredibly Close:
உண்மையில்
9/11 பற்றிய ஒரு திரைப்படம் அல்ல,
வேறெதுவாக வேண்டுமானாலும் அது இருக்கக்கூடும்.
By
Joanne Laurier
25 February 2012
use
this version to print | Send
feedback
Directed by Stephen Daldry, screenplay by Eric Roth, based on the novel by
Jonathan Safran Foer
இத்திரைப்படம் ஸ்டீஃபன் டேல்ட்ரியால் இயக்கப்பட்டது,
எரிக் ராத் திரைகதை
எழுதியது,
ஜொனாத்தன்
சஃப்ரான் ஃபோயரின் நாவலை அடிப்படையாகக் கொண்டது.
பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர் ஸ்டீஃபன் டேல்ட்ரியின் நான்காவது திரைப்படமான
Extremely Loud & Incredibly Close-அதிகமான
சத்தமும் நம்பமுடியாதளவு நெருக்கமும்- என்னும் திரைப்படம் செப்டம்பர் 11,
2001 தாக்குதலின் விளைவான சிதறிப்போன குடும்ப இழப்பினை சித்தரிக்கிறது.
Billy Elliot (2000), The Hours (2002)
மற்றும்
The Reader (2008)
படங்களின் இயக்குனர்,
தனது புதிய திரைப்படத்தில், உயிர்தப்பிய உறவினர்கள் மீண்டு எப்படி மறுபடியும்
இணைகிறார்கள் என்கிற கதையைச் சொல்கிறார்.
Extremely Loud & Incredibly Close
திரைப்படத்தை விவரிப்பவர் ஒரு பதினொரு வயதான நியூயோர்க்வாசியான
ஆஸ்கார்
ஷெல் (Thomas
Horn)
ஆவர். அவரது தந்தை,
தாமஸ் ஷெல் (Tom
Hanks)
9/11 அன்று காலையில் உலக வர்த்தக மையத்தில் இருந்தார். ஆஸ்கார் அழைப்பதைப் போல அந்த
“மோசமான
தினத்துக்கு”
ஒரு வருடத்திற்கு பின்னர் மகனுக்கும் அவனின் தாயாரான லிண்டாவிற்கும்
(Sandra
Bullock),
இடையே அதிக தொடர்பு இருக்கவில்லை. ஷெல்லின் தொலைபேசி பதிவுசாதனத்தில் அவனது
தந்தையின் கடைசி ஆறு செய்திகளைக் கேட்டபின்னர்,
ஆஸ்கார் அவனது படுக்கைக்கு அடியில் மறைந்துகொள்கிறான்,
(குடும்பம்
அநேகமாக அது முன்னிருந்ததின் வெறும்
“ஓடாக”
மட்டும் இருக்கிறது?)
அவனது
அம்மாவிற்கு பதியப்பட்டுள்ள செய்தியை பற்றி ஒன்றும் தெரியாததால்,
வெளிப்படையாக ஆஸ்காருக்கு உதவ முடியாதிருந்தார். ஏனெனில் அவளே கடும் துயரத்தில்
இருப்பதால் மட்டுமல்ல,
ஏனெனில் ஆஸ்காருக்கும் அவனது தந்தைக்கும் இடையே இருக்கும் உறவினை அவளால் ஒருபோதும்
மேம்படுத்த முடியாது இருந்ததுதான் காரணம்.
”நான்
இந்த உலகை ஒரு பரிசாகவே பார்க்கின்றேன்”,
என்று மருட்சியின் எல்லையில் இருக்கும் மற்றும் தீவிர புத்திசாலி சிறுவனுக்கு
அடிக்கடி அவனது தந்தையால் சொல்லப்பட்டிருந்தது. அவனது வழக்கத்திற்கு மாறான பெற்றோர்
நியூயோர்க்கின் ஆறாவது மாநிலத்தின் இழப்பிற்கான சாட்சிகளை
”முன்னாய்வு
நடவடிக்கைகள்”,
தகவல்கள் சேகரித்தல் மற்றும் அட்லாண்டிஸ் ஆர்வாளர்களால் உந்தப்பட்ட ஆய்வுகள் மூலம்
தேடுகிறார்கள். இவை பயத்தில் பீடிக்கப்பட்டிருக்கும்,
அவனது சாகசங்களில் ஒரு
“விளையாட்டுத்தனமான”
அமைதிவாதியாக,
கண்டுபிடிப்பாளராக மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கின்
(Stephen
Hawking)
ரசிகனாக இருக்கும் ஆஸ்காருக்கு உதவி செய்யும் நோக்கத்தை கொண்டவை. அவனது தம்புராவை
அசைப்பதன் மூலம் சிறுவன் அவனது நீடித்த அழுத்தத்திலிருந்து விடுபடுகிறான்.
”மோசமான
தினத்தினை”
புரிந்துகொள்ள முயற்சிப்பது,
அவனது தந்தையின் அலமாரியில்,
“Black”
என்று குறிப்பிடப்பட சிறு உறையிலுள்ள ஓர் மர்மமான சாவியை நோக்கி ஆஸ்காரை
செலுத்துகிறது. அவனது தந்தையுடன் அவனை இணைத்து வைக்கப் போகிற இன்னொரு நோக்கமாக
அதைப் பார்ப்பதிலிருந்து,
பிறகு அவன் அந்த சாவி எதைத் திறக்கப்போகின்றது என்ற வேட்கையைத் தீவிரமாக
ஒழுங்கமைக்கிறான்.
அவனது
பாட்டியால் (Zoe
Caldwell)
அவனுக்கு கொடுக்கப்பட்ட தம்புரா மற்றும் ஒரு வாயு முகமூடியுடன்,
அவன் நடந்து பார்வையிட ஆரம்பிக்கிறான் - சுரங்கங்கப் பாதைகள் அவனை
பயப்படவைக்கின்றன- நகரத்தின் 400க்கும் மேற்பட்ட மக்களும்
Black
என்று
பெயரிடனர். முன்னதாக,
ஆஸ்கார் அவனது பாட்டியின் அடுக்குவீட்டில் வாடகைக்கிருந்த,
ஒரு முதியவருடன்(Max
von Sydow)
சேர்ந்து கொள்கின்றான். இரண்டாம் உலகப் போரில் ட்ரேஸ்டன் நகர் மீதான குண்டுவீச்சு
கொடூரங்களால் அவர் மவுனமாக்கப்பட்டதாக ஆஸ்காருக்கு கூறப்பட்டிந்தது.
ஆஸ்காரின் விசித்திர பயணம் ஒரு நோய் நீக்கியாக இருக்கிறது. திரைப்படம் ஒரு
நேர்த்தியான இறுதிக் காட்சியுடன்,
அதன் போக்கில் சில உணர்ச்சியூட்டப்பட்ட விளக்கங்களுடன் முடிவடைகிறது.
சிறுவர்களுக்கான கேள்வி பதிலை நிகழ்ச்சி பரிசை அவர் வென்றபோது கண்டுபிடிக்கப்பட்ட
தொழில் சார்ந்திராத,
ஹார்னின் வியக்கவைக்கும் நடிப்பினை
Extremely Loud,
அதிகமாக சார்ந்திருக்கிறது. இந்த நீண்ட திரைப்படத்தில் அவர் எங்கும்
நிறைந்திருக்கிறார்,
மேலும் அதி-தீவிர மற்றும் சிக்கலான வரிகளில் அவரது தேர்ச்சி குறிப்பிடத்தகுந்தது,
குறிப்பாக சொல்லப்பட்ட,
ஒரு இளைய நடிகருக்கு தேவையான பரந்த மற்றும் ஆழ்ந்த உணர்ச்சி எல்லை. ஹேங்க்ஸ்,
புல்லொக்,
வான் சிடௌ,
ஜான் குட்மேன்,
வயோலா டேவிஸ் (The
Help)
மற்றும் ஜெஃப்ரி ரைட் போன்றோரின் சிறந்த நடிப்பும் ஹான்னிற்கு உதவுகின்றது.
மிகப்
பொருத்தமான மற்றும் சுவாரஸ்யமாக திரைப்படத்தின் முதல்பகுதி இருக்கிறது,
அது ஆஸ்காருக்கும் அவரது தந்தைக்குமான உறவை நிலைநாட்டுகிறது. எவ்வாறாயினும்,
ஆஸ்காரின் பாதி வலியிழுக்கும் நோயானால், மேலும் அதனால் தம்புராவை தட்டுவது (மற்றும்
பார்வையாளர்களின் நரம்புகளை தட்டியெழுப்பும்),
நகரம் முழுதுமான சுற்றுப்பயணம் மிகவும் சுவாரஸ்யமற்று இருக்கிறது.
டேல்ட்ரியின் திரைப்படத்தில் உறுதியாக பேசுகின்ற மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள்
இருக்கின்றன. அத்தகைய ஒரு காட்சியில்,
ஏற்கெனவே புகைந்துகொண்டிருக்கின்ற மற்றும் கூடுதலாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
உலக வர்த்தக மையத்தின் உருக்குலைந்து கொண்டிருக்கின்ற கட்டிடத்தின் 105வது மாடியில்
இருக்கும் தனது கணவருடன் அவளது உயர்ந்த அலுவலக சன்னலிலிருந்து தொலைபேசியில் பேசும்
போது
புல்லொக்கின் கதாப்பாத்திரம் கவனிக்கிறது.
மேலும்,
குடும்பத்தின் பதிவு இயந்திரத்தில் நம்பிக்கையிலிருந்து அவநம்பிக்கைக்கு நகரும்
தாமஸ் ஷெல்லின் இறுதி செய்தி மீதானவை எல்லாம் முரண்படுகின்றன. இந்த திரைப்படத்தில்
இடைவெளிகளில் யதார்த்தத்தினை விஞ்சிய விழுகின்ற உடல்களின் உருவங்கள்
தவிர்க்கமுடியாதவகையில் மிகப்பொருத்தமாக உள்ளது.
எவ்வாறாயினும்,
Extremely Loud & Incredibly Close
அடிப்படையில், செப்டம்பர் 11, 2001ல்
நடந்ததைப் பற்றிய மேலும் அதன்பிறகு என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு திரைப்படம்
அல்ல, குறைந்தபட்சம், அந்த நிகழ்ச்சியின் அல்லது அதனுடைய தாக்கங்களை நாம்
புரிந்துகொள்வதற்கு இந்த திரைப்படம் சிறிது உதவுகின்றது. உண்மையில், பெற்றோர்கள்
பற்றிய அருவமான “பிரபஞ்ச”
கருத்துக்களை உருவாக்குவது, வயதானவர்களின் அறிவு மற்றும் ஒத்திசைவுக்கான தேவை போன்ற
மற்ற விஷயங்களில் அதிக சுவாரஸ்யமுள்ள ஒரு திரைப்படத்தில், 9/11ஐப் பயன்படுத்துவது
பொருத்தமில்லாததாக இருக்கிறது. கிட்டத்தட்ட எந்த தீவிர துயரகாட்சியும் இந்த
திரைப்படத்திற்கு ஓரளவு சுவாரஸ்யமற்ற கருத்துக்கான ஒரு மேடை போல போதுமானதாக
இருந்திருக்கும்.
9/11ன்
சிறிதளவும் தொடக்க வாசகம், அதனுடைய சொந்த உணர்ச்சிகர சலனத்தையும்
எதிர்பார்ப்புகளையும் உருவாக்கும் நோக்கில் அமைந்திருப்பது போல, ஒரு நாசகரமான
சம்பவம் குறித்த எந்த தீர்மானமான மற்றும் குறிப்பிட்ட பகுத்தாய்வையும் கொடுக்காமல்
தன்னால் எடுத்துச் செல்ல முடிந்தது என்பதை டேல்ட்ரி வெளிப்படையாக உணர்ந்தார்.
சுருக்கமாக,
Extremely Loud
ஒரு மட்டத்திலான சூழ்ச்சிகையாள்கை, நனவை அல்லது வேறுவழியில் உள்ளடக்குகிறது.
Indiewire
உடனான நேர்முகம் ஒன்றில்,
”ஒவ்வொருவரும்
9/11 குறித்த அவர்களின் சொந்தக் கதைகளைக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொருவரும்
அதைத் தங்களது சொந்த கண்ணோட்டத்தின் வழியில் பார்க்கிறார்கள்... இது சில மக்களுக்கு
மிகவும் அதிகமாக இருக்கலாம், மேலும் ஏனைய மக்கள் இதை கடினமானதாக கண்டுகொள்ளலாம்,
ஆனால், அதற்கு தனிப்பட்ட பொறுப்பு இருக்கவேண்டும்.”
என்று கூறினார். இது மிகவும் உதவிகரமாக இல்லை.
உண்மையில் கடந்த பதினொன்றரை வருட காலகட்டத்தில் 2001 தாக்குதல் முடிவில்லாத
போர்களுக்கும் போலிஸ் அரச நடவடிக்கைகளுக்குமான உத்தியோகபூர்வமான போலிச்சாட்டாக
இருந்திருக்கையில் ”ஒவ்வொருவருடைய...
தனிப்பட்ட பொறுப்புகள்”
இருக்கின்றது என கூறுவது உண்மையானதாக இருக்கவில்லை.
சம்பவத்தின் புறநிலைரீதியான உண்மையை கண்டுகொள்வது கலைஞனுடைய பணியாக இருக்கிறது.
அவன் அல்லது அவளுக்கு சில பொறுப்புகள் இருந்திருக்கலாம், 9/11க்கு அமெரிக்க அரசின்
நாசகரமான “பொறுப்பை”யும்
மற்றும் அதனுடைய விளைவுகளையும் எந்த தீவிர ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக ஒருவர்
நினைக்கக்கூடும். டேல்ட்ரியின் பதினொரு வயது மையக் கதாப்பாத்திரத்தால் தொடர்
நிகழ்வுகளைப் பற்றி பொதுமைப்படுத்த முடியவில்லை என்பது, அவர் செய்ய
விரும்புவதுபோல், இயக்குனரை பொறுப்புகளிலிருந்து அகற்றிவிடவில்லை.
டேல்டர்லி தனது தொழிற்துறையில் கவனமாக உருவாக்கப்பட்ட, புத்திசாலித்தனமான மற்றும்
புரிந்துகொள்ளக்கூடிய மைய நோக்கு திரைப்படங்களின் இந்த கருத்தில்
மேன்மையடைந்திருக்கிறார். அவர் திறமையான நடிகர்களை தேர்ந்த முயற்சிகளில்
ஒருங்கிணைத்துக் கொண்டுவருகிறார். இவை தற்கால நிலைமைகளில், பல்வகை தொழிற்துறை
மற்றும் ஊடக பரிசுகளை குறிப்பாக அமெரிக்காவில், வெல்வதற்காக வடிவமக்கப்பட்டதாகத்
தோன்றுகிற வகையான திரைப்படங்கள். இவரது
Extremely Loud,
உள்ளிட்ட திரைப்படங்கள் நான்கும், அகாடெமி விருது பரிந்துரைகளைப் பெற்றிருக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக, ஹாலிவுட்டில் சமீபத்தில் வெற்றியை அறிந்திருக்கிற பிரிட்டிஷ்
சமகாலத்தவர்களுடன், ஒப்புநோக்கில் டேல்ட்ரியின் கலைத்திறன் நழுவிச்செல்வதாக
இருந்திருக்கிறது. அவர் அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்க தீர்மானித்திருப்பதாக
தெரிகிறது. பலவற்றின் முன்னிலையில், தேசியங்களை இணைக்கிற முயற்சியில், பாலியல்
நிலைநோக்குகளில், அரசியல் மிகையுணர்ச்சி மற்றும் அவ்வாறானவற்றின் மதிப்புயர்ந்த
அர்த்தங்களைத் தேடுகின்ற முயற்சி செய்வதாய்த் தோன்றுகிறார். அவர் சமரசப்படுத்தல்,
துயரமான சமுதாய மோதல்கள் மற்றும் முரண்பாடுகளை இல்லாதொழிக்க போதிக்கிறார்.
டேல்ட்ரியின் கருத்துப்படி, 9/11 போன்ற ஒரு சம்பவத்துக்கு பிரதிபலிப்பு,
”மெயின்
ஸ்ட்ரீட் மற்றும் வால் ஸ்ட்ரீட் இரண்டிற்குமாக குணப்படுத்துவது மற்றும் பரிகாரம்
செய்வதாக இருக்க வேண்டும். இந்தத் திரைப்படம் தொழிலாளர் வர்க்கம் மற்றும் உயர்
நடுத்தர வர்க்க பிரதிநிதிகள் இணைந்து வருவது காட்டுகின்றது.
டேல்ட்ரியின் சொல்லும்திறம் வரலாற்று மற்றும் சமுதாயப் பிரச்சினைகளில் ஆர்வமுடையதாக
இருப்பினும், ”உணர்வுகரமான
சிலரை”
நோக்கிய
சகிப்புத்தன்மைக்கான வேண்டுகோளையே அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் சித்தரித்து
சுற்றி வருகின்றன. ஓர் விசித்திரம் பற்றி, பிரிட்டனின் நொடித்துக் கொண்டிருக்கின்ற
நிலக்கரி சுரங்க சமுதாயத்தின் நடனமாடும் குழந்தையைப் (பில்லி எலியாட்) பற்றி, லாஸ்
ஏஞ்சல்சில் போருக்குப் பிந்தைய காலத்தின் துயரத்திலிருக்கிற ஒரு மனைவி பற்றி
(The
Hours),
நாசி பெண்மணியுடனான நட்பை வைத்துக்கொள்கிற ஒரு ஜெர்மன் வாலிபன் பற்றி
(The
Reader),
அல்லது
9/11ஐ சந்திக்கிற ஓரு விந்தையான சிறுவனின் துயரம், என்று டேல்ட்ரியின்
தாராளவாத-நோக்கிலான திரைப்படங்கள் பொதுவாக அகமகிழ்வை அடிவயிற்றில்
கொண்டிருக்கின்றன. அவருடைய கரங்களில் முக்கிய இடங்களும் காலமும் வெறும் உண்மையாக
பெருமளவுக்கு குறைக்கப்படுகின்றன.
சிலவேளை
டேல்ட்ரியின் திறமைக்கு இல்லாவிடினும் அவரில் மேலெழுந்தவாரியான கலைப்படைப்பிற்கு
நன்றிகூறும்விதமாக லண்டன் ஒருங்கிணைப்புக் குழு தம்மை ஊக்குவித்துக்கொள்ளவும்,
ஊகிக்கக்கூடிய விதத்தில் ஒரு ஜனரஞ்சகவாத-தேசியவாத வர்ணத்துடன் அந்த நகரில் 2012
ஒலிம்பிக் விழாவினை பற்றிய முக்கிய தயாரிப்புக்கு அவரை இணைத்து டேல்ட்ரிக்கு நன்றி
தெரிவித்துள்ளது. |