சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama hails jobs report despite nearly 13 million unemployed

கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்கள் வேலையின்மையில் இருந்தபோதிலும்கூட, ஒபாமா வேலைகள் பற்றிய_அறிக்கையை பாராட்டுகிறார்

By Patrick Martin 
10 March 2012

use this version to print | Send feedback

தொழில்துறையின் BLS  எனப்படும் தொழில்துறை புள்ளிவிவர அலுவலகம் வெள்ளியன்று காலைவெளியிட்ட பெப்ருவரிமாத வேலைகள் பற்றிய அறிக்கையை ஒபாமா நிர்வாகம் பாராட்டியுள்ளது. 227,000 புதிய நிகர வேலைகள் அமெரிக்காவில் பெரும்படையென உள்ள கிட்டத்தட்ட 13 மில்லியன் வேலையற்றோர் எண்ணிக்கையில் சிறு மாறுதலைத்தான் கொடுத்துள்ளது, 6 மாதத்திற்கும் மேலாக 5.5 மில்லியன் மக்கள் வேலையின்மையில் உள்ளார்கள் என்றாலும் இந்த நிலைப்பாடு காணப்படுகிறது.

நிகர வேலைகளைத் தோற்றுவித்தல் இந்த வேகத்தில் இருந்தால், 125,000 பேர் வேலைச் சந்தையில் ஒவ்வொரு மாதமும் நுழைகையில், இன்னும் 130 மாதங்கள் கிட்டத்தட்ட 11 வருடங்கள்தற்பொழுது வேலையின்மையில் உள்ளவர்கள் அனைவரையும் மீணடும் பணியில் அமர்த்துவதற்குப் பிடிக்கும். இது வருங்காலப் பொருளாதார அதிர்ச்சிகள் அமெரிக்காவிலும், உலக நிதிய முறையிலும் எப்படி இருக்குமோ என்பது குறித்து கணக்கெடுக்காமல்.

வேலைகள் பற்றிய அறிக்கையை விரிவாக ஆராய்தல் என்பது பொருளாதாரம் மீட்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுவதில் நலிந்த தன்மையைத்தான் காட்டுகிறது. மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலான விரிவாக்கம் இரு பிரிவுகளில் உள்ளதுதற்காலிக வேலைகள் (45,000) உணவுத்துறை, பானப் பிரிவுகள் (41,000); இவை பொதுவாகக் குறைவூதியம் கொடுக்கும் பிரிவுகள் ஆகும். சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக உதவித் துறைகளில் 61,000 அதிக வேலைகள் ஏற்பட்டன; இப்பிரிவில் செவிலியர் இல்லங்கள், மருத்துவ மனைகளில் இருக்கும் குறைவூதியப் பணிகளைப் போல்தான் எண்ணிக்கை உள்ளது. உற்பத்தித்துறை 31,000 புதிய வேலைகளைத் தோற்றுவித்திருக்கையில், கட்டமைப்புத்துறை உண்மையில் 13,000 பேர் பணிநீக்கம் பெற்றுவிட்டதைத்தான் காட்டுகிறது.

வேலைகள் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும், வேலையின்மை விகிதம் மாறாமல் 8.3 சதவிகிதமாக உள்ளது; இதற்குக் காணம் தொழிலாளர் தொகுப்பில் புதிய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுதான்.  இல்லங்களைப் பற்றிய ஒரு தனி தொழில்துறை அளவை, பெப்ருவரி மாதம் வேலை கிடைத்தோரின் எண்ணிக்கை 428,000 உயர்ந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது, ஆனால் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் 48,000 உயர்ந்து விட்டது என்று கூறுகிறது; ஏனெனில் மொத்தத் தொழிலாளர் தொகுப்பின் எண்ணிக்கை 476,000 உயர்ந்துவிட்டது.

BLS அறிக்கையில் உள்ள இந்த எண்ணிக்கை கடந்த வாரம் பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்ததை விடச் சிறிதளவு சிறப்பானது ஆகும், தனியார் துறை வேலைகள் 233,000 அதிகமாயின, அதே நேரத்தில் பொதுத்துறை  நிறுவனங்கள் 6,000 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தனர். BLS அதன் டிசம்பர் மற்றும் ஜனவரி எண்ணிக்கைகளை முறையே 203,000 ல் இருந்து 233,000 என்றும் 243,000ல் இருந்து 284,000 உயர்த்திவிட்டது.

744,000 என்னும் மொத்த எண்ணிக்கைதான் எந்த மூன்றுமாத காலத்திற்கும் 2006ல் இருந்து மிக அதிகமாக இருந்துள்ளது; இது மீட்பு என்பதின் இரத்தச்சோகையை குறித்த அடையாளம் ஆகும். ஒப்புமையில் செப்டம்பர் 2008 வோல் ஸ்ட்ரீட் சரிவைத் தொடர்ந்த நிதிய நெருக்கடியின் மோசமான காலத்தில் அமெரிக்கப் பெருநிறுவனங்கள் மாதம் ஒற்றிற்கு 744,000 வேலைகளை ஒவ்வொரு மாதமும் அழித்தன.

பெரும்பாலான பொருளாதார கணிப்பாளர்கள் கடந்த சில மாதங்களாக அறிவிக்கப்படும் புள்ளிவிவரங்கள் குறித்து ஓர் எச்சரிக்கையான அணுகுமுறையை ஏற்றுள்ளனர்; இதற்கு ஓரளவு காரணம் புள்ளிவிவரங்களே சந்தேகத்திற்கு உரியவை, மற்றும் ஓரளவு அவை சரியாக இருந்தாலும், 2012ல் வேலை தோற்றிவிப்பிற்கு உயர்ந்த கட்டமாக இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வேலையின்மை குறித்த வாராந்திரப் புள்ளி விவரங்கள் கடந்த மூன்று மாதங்களில் உண்மையில் உயர்ந்து 350,000 க்கு மேல் உள்ளன; இந்த அளவு ஒரு தொழிலாளர் சந்தை கணிசமான நெருக்கடியில் இருப்பதைத்தான் காட்டுகிறது.  Challenger, Gray & Christmas Challenger, Gray & Christmas என்னும் உலகத்தில் வெளியே கொடுக்கப்படும் பணிகளுடன் இணைத்துப் பார்க்கும் நிறுவனம் வேலைக்குறைப்புக்களை பற்றி இணைத்துக் கூறுகையில், ஜனவரியில் இருந்து பெப்ருவரி வரை சற்றே குறைவாக 53,486ல் இருந்து 51,728 என்றுதான் உள்ளது, அதாவது பெப்ருவரி 2011 ஐ விட அது 2% அதிகம் என்று கூறியுள்ளது.

முதலீட்டு நிறுவனமான கோல்ட்மன் சாஷ்ஸ் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பருவகாலத்தை ஒட்டி வேலையின்மை எண்ணிக்கை சரிசெய்யப்படுவது முடிவுகளைத் தவறாக்குகிறது என்று கூறியுள்ளது; இதற்குக் காரணம் 2008-2009 ல் பேரழிவு கொடுத்த குளிர்காலத்துடன் எத்தைகைய ஒப்புமையில் தவிர்க்க முடியாமல் தற்பொழுதைய உச்சக் கட்டத்தை உண்மையில் இருப்பதை விட அதிகமாகக் காட்டும் என்பதுதான்.

வங்கிக்கு ஒரு பொருளாதார வல்லுனராக இருக்கும் ஆண்ட்ரூ டில்டன் ராய்ட்டரஸ் இடம் கூறினார்; கடந்த சில மாதங்களில் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது அடித்தள முன்னேற்றத்தை அதிகரித்துக் கூறுகிறது என நாங்கள் நினைக்கிறோம். முன்னேற்ற விகிதம் முன்னேறிச் செல்லவில்லை என்பதை நீங்கள் காணமுடியாது. இந்த வங்கி இப்பொழுது வேலையின்மை விகிதம் ஆண்டு முழுவதும் எஞ்சியுள்ள பகுதியில் மாறாமால், 2012 முடிவில் 8.2 சதவிகிதம் என முடியும் என்று எதிர்பார்க்கிறது.

மற்ற பொருளாதார வல்லுனர்கள், பெடரல் ரிசேர்வ் குழுவின் தலைவர் பென் பெர்னன்கே உட்பட, அமெரிக்காவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 3% க்குச் சற்று குறைவாக இருப்பது, வேலையின்மை விகிதம் 9% என்று போன இலையுதிர்காலத்தில் இருந்து இப்பொழுது 8.3% எனக் குறைந்துள்ள தீவிரத்திற்கு பொறுப்பு ஆகமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நியூ யோர்க் டைம்ஸின் பொருளாதார விமர்சகர் டேவிட் லியோன்ஹர்ட் வெள்ளியன்று, மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்ணிக்கையை மட்டும் கருத்திற்கொண்டால், வெளிப்படையான முடிவு வேலை வளர்ச்சி வரவிருக்கும் மாதங்களில் மெதுவாகத்தான் இருக்கும் என்று எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் தனியார் துறை மொத்த வேலைகள் 2012ல் 2000த்தில் இருந்த நிலை அல்லது அதற்குக் குறைவாக உள்ளது; இந்த உண்மை அமெரிக்க முதலாளித்துவம் நீடித்த காலத்தில் தோல்வியுற்றதை நிரூபிக்கிறது; இது குடியரசு மற்றும் ஜனநாயகத் தலைவர்களின்கீழ் நடந்துள்ளது. BLS  அறிக்கை அதிர்ச்சிதரும் வகையில் 23.5 மில்லியன் மக்கள் வேலையின்மை அல்லது குறைந்த வேலைத்தன்மையில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளதுஅதாவது அவர்களுக்கு முழுநேர வேலை தேவைப்படும்போது பகுதி நேரம் மட்டுமே கிடைத்து உழைக்கின்றனர் என.

ஆயினும்கூட, வெள்ளை மாளிகை வேலை எண்ணிக்கைகளை ஒபாமாவின் மறுதேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு ஏற்றம் தரும் செயல்போல் கொண்டாடுகிறது; ஜனாதிபதி வர்ஜீனியாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க்கில் புதிய ரோல்ஸ் ராய்ஸ் எஞ்சின் கட்டுமான ஆலைக்குச் சென்று முன்னேறிவிட்டதாகக் கருதப்படும் பொருளாதார் குறித்துத் தம்பட்டம் அடித்துக் கொண்டார்.

ஒபாமா தன்னுடைய அரசியல் பிரச்சாரத்தில் அமெரிக்க உற்பத்தித்துறை புதுப்பிக்கப்படல் என்பதை மையக் கூறுபாடாகச் செய்துள்ளார். அதே நேரத்தில் இப்புதுப்பித்தல் என்பது, அமெரிக்கப் பெருநிறுவனங்கள் ஊதியக் குறைப்புக்கள், நலன்கள் அழிப்புக்கள், சுகாதார, பாதுகாப்பு தரங்கள் செயல்படுத்துவதைக் குறைத்தலை, சுற்றுச் சூழல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதின் காரணமாக தொழிலாளர் துறையில் செலவினங்களை குறைக்கப்பட்டதை தளமாகக் கொண்டது என்னும் உண்மையை மறைத்துவிட்டார்.

பீட்டர்ஸ்பர்க்கில் கொடுத்த கருத்தக்களில், பொருளாதாரம் பற்றி சமீப உரைகள் எல்லாவற்றிலும் இருப்பதைப் போலவே, ஒபாமா கார்த்தயாரிப்புத் தொழிலுக்குக் கொடுக்கப்பட்ட பிணை எடுப்பை ஒரு பெரிய வெற்றி என்று பாராட்டினார். ஆனால் அவர் கார்த்தயாரிப்பு ஆலைகளில் புதிதாக வேலைக்குச் சேருபவர்களின் ஊதியங்கள் 50% குறைக்கபட்டுவிட்டன, இந்நிலை இப்பொழுது அமெரிக்க உற்பத்தித்துறை முழுவதும் பரவிவருகிறது, இதையொட்டி அமெரிக்க நிறுவனங்கள் ஐரோப்பா, ஆசியாவில் உள்ள தங்கள் போட்டியாளர்களுடன் இன்னும் கூடுதலான போட்டித்தன்மையை அடைந்துள்ளன என்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

இந்த நடவடிக்கைகள் முழு அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின்மீதும் பாதிப்பைக் கொண்டுள்ளன. BLS வெள்ளியன்று கொடுத்துள்ள அறிக்கைப்படி சராசரி மணிநேர வருமானங்கள் பெப்ருவரிமாதம் மூன்று சென்ட்டுகள் மட்டுமே உயர்ந்து $23.31 ஒரு மணிக்கு என்று போயின; இது ஓராண்டிற்கு முன்பு இருந்ததைவிட 1.9%தான் கூடுதல் ஆகும்; பணவீக்கத்தைவிட இது மிகவும் குறைந்தது ஆகும். சராசரித் தொழிலாளரின் ஆண்டு வருமானத்தில் அதிகம் என்பது இன்று சாதாரணமாக வீட்டில் இருந்து வேலைக்குச் செல்லும் இடத்திற்கான தூரத்தை அடைவதற்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை உயர்வைக் கொடுக்கக்கூட போதுமானதாக இருக்காது.

இளந் தொழிலாளர்களை பொறுத்தவரை, நிலைமை இன்னும் மோசமாகும். பொருளாதாரக் கொள்கை உயர்கூடம் இந்த வாரம் முன்னதாக வெளியிட்ட அறிக்கை ஒன்று, நுழைவிடத்தரத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியங்கள் சட்டென்று 2000 முதல் 2011க்குள் சரிந்துவிட்டது, கல்வி, பயிற்சித்திறன் என்று தொழிலாளர்கள் பெற்றிருப்பதைப் பொருட்படுத்தாமல் இந்நிலை உள்ளது என்று கூறுகிறது.

ஆண் தொழிலாளிகளுக்கு நுழைவிட ஊதியங்கள் என்பது 2011ம் ஆண்டில் மணிக்கு $12.82 என்பதில் இருந்து மணிக்கு $11.68 எனக் குறைந்துவிட்டது; அதே நேரத்தில் பெண் தொழிலாளர்களின் ஊதியங்கள் மணிக்கு $10.93 என்பதில் இருந்து இதே காலத்தில் மணிக்கு $9.92 எனச் சரிந்தது.