WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French social democratic
unions, NGOs promote right-wing Social Pact
பிரெஞ்சு சமூக ஜனநாயகத் தொழிற்சங்கங்கள் அரசு சாரா அமைப்புக்கள் வலதுசாரி சமூக ஒப்பந்தத்தை ஊக்குவிக்கின்றன
By Kumaran Ira
12 March 2012
பிரெஞ்சு
தொழிற்சங்கங்களும் அரசு சாரா அமைப்புக்களும் வார இறுதியில் கூடி ஒரு புதிய
“சமூக
உடன்பாடு”
குறித்து விவாதித்தன. சமூக
ஜனநாயக தொழிற்சங்கங்களான
CFDT (பிரெஞ்சு
ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு,
PS
என்னும் சோசலிஸ்ட்
கட்சிக்கு நெருக்கமாக இருப்பது),
UNSA
(தேசியத் தன்னாட்சித் தொழிற்சங்கங்களின் ஒன்றியம்) மற்றும் பல மாணவர் குழுக்கள்,
அரசு சாரா அமைப்புக்கள் ஆகியவற்றால் இது கையெழுத்திடப்பட்டது.
அவர்கள்
வெளியிட்ட அறிக்கை,
பரந்த மக்களின்
அதிருப்தியின் மத்தியில் அடுத்த மாதம் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்கள்
வரவிருக்கையில், அரசியல் நடைமுறை பற்றிய போலித் தோற்றங்களை உயர்த்தும் நோக்கத்தைக்
கொண்டுள்ளது. தொழிலாளர்கள் இன்னமும்கூட முதலாளித்துவத்தின்கீழ் சமூக
சீர்திருத்தங்களைப் பெறலாம் என்ற கருத்தைக் கூற அவை முற்படுகின்றன—அதுவும்
ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்கள் கடந்த காலத்தில் தொழிலாள வர்க்கம் வெற்றிபெற்று
அடைந்துள்ள சமூக தேட்டங்களை அழிக்கும் வகையில் சிக்கன நடவடிக்கைகளை
செயல்படுத்தும்போது.
இந்த ஆவணம்
இக்கொள்கைகள் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களையும் ஜனநாயக உரிமைகளையும்
குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பதை சுருக்கமாக ஒப்புக் கொள்வதோடு
ஆரம்பிக்கிறது.
“நம்
வளர்ச்சி மாதிரி ஒரு நீடித்த நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது, அது சமத்துவமின்மையையும்,
சமூக ஒதுக்குதலையும் அதிகரித்துவருகிறது.... இக்காரணி ஜனநாயகத்தை வலுவிழக்கச்
செய்வதுடன், ஜனரஞ்சக அரசியல் தளத்திற்கும் ஆதரவாக உள்ளது.”
என்று அது
எழுதுகிறது. ஆனால் தொழிற்சங்கங்களும், அரசு சாரா அமைப்புக்களின்
அதிகாரத்துவத்தினரும் தங்கள் வாசகர்களிடம்
”ஜனாதிபதி
மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஜனநாயகத்தின் உயர்ந்த நிலை என்பதில் மனத்திருப்தி
அடையவேண்டும்”
என்று கேட்டுக் கொள்ளுகிறது.
உண்மையில்,
தொழிலாள வர்க்கம் தற்போதைய தேர்தலில் முற்றிலும் வாக்கிழந்து நிற்கிறது: இத்தேர்தல்
ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடிக்கு நடுவே வருகிறது; இதில் ஐரோப்பியப் பகுதி கடன்
நெருக்கடியும் அடக்கமாகும். இரு முக்கிய வேட்பாளர்களான தற்போதைய கன்சர்வேடிவ்
ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியும் அவருடைய முக்கிய போட்டியாளரான
PS
ன் பிரான்சுவா
ஹோலண்டும் வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்கள், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல், நேட்டோவின்
ஏகாதிபத்திய போர்களில் பங்கு என்ற தளத்தில்தான் பிரச்சாரத்தை நடத்துகின்றனர்.
தேர்தலில் எவர் வெற்றிபெற்றாலும், அவர் இக்கொள்கைகளை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக
இன்னும் ஆக்கிரோஷத்துடன் செயல்படுத்துவார்.
இந்த
அறிக்கையை முன்வைக்கும் குட்டி முதலாளித்துவ அதிகார வர்க்கத்தினரே உள்நாட்டின் சமூக
பிற்போக்குத் தனத்திற்கு எதிரான தொழிலாளர் போராட்டங்களை நசுக்கும் சமூகப்
பின்விளைவின் முக்கிய முகவர்கள் ஆவர்.
2010ல்
CFDT, UNSA
உட்பட தொழிற்சங்கங்கள் ஓய்வூதியக் குறைப்புக்களை சுமத்துவதில், ஓய்வூதிய வயதை 60ல்
இருந்து 62 என உயர்த்தியது, 42 ஆண்டுக்கால வேலை வரைகாலத்தை முடிக்காதவர்களுக்குக்
கடுமையான அபராதம் விதித்தல் ஆகியவற்றை அடக்கியதில், சார்க்கோசியுடன் ஒத்துழைத்தன.
வெட்டுக்களுக்கு மக்கள் எதிர்ப்பு, ஒரு தேசிய எண்ணெய்த்துறையில் வேலைநிறுத்தம்
உட்பட தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்டு முறிக்கப்பட்டன. பர்க்கா
அணிதலுக்குத் தடை, ரோமாக்களை மொத்தமாக வெளியேற்றியது, இன்னும் ஜனநாயக உரிமைக்ளமீது
நடத்தப்பட்ட தாக்குதல்களை அவை எதிர்க்கவில்லை.
மேலும்
அறிக்கை தெளிவாக்குவது போல், குட்டி முதலாளித்துவ அதிகார வர்க்கத்தினர், பிரான்சின்
தொழிற்சங்கங்கள், அரசு சாரா அமைப்புக்களை வழிநடத்துபவர்கள், தேர்தல் முடிந்ததும்
இன்னும் அத்தகைய தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்குத் தயாரிப்புக்களை நடத்தி
வருகின்றனர்.
“சமூகம்
இயங்கினால்தான், ஒவ்வொரு குடிமகனும் ஈடுபாடு கொண்டிருக்கிறேன் என்று
உணர்ந்தால்தான், ஆழ்ந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட முடியும். நாம் எதிர்கொள்ளும்
மகத்தான சவால்களுக்கு உண்மையான ஜனநாயகப் புத்துயிர்ப்பு தேவையாகும். சிவில்
சமூகத்தின் அனைத்துச் சக்திகளும் தங்களை இதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.”
இந்த ஆவணம்
எத்தகைய
“ஆழ்ந்த
மாற்றங்கள்”
தயாரிக்கப்படுகின்றன
என்று எடுத்துக் கூறவில்லை. தெளிவற்ற நடவடிக்கைகள் பற்றி சலவை அலுவலகப் பட்டியல்
போல் ஒன்றைக் கொடுத்துள்ளது; இவற்றில் எதுவும் புதிதல்ல, அனைத்துமே இவற்றிற்கு
விலைகொடுக்கத் தேவையில்லாத எந்த முதலாளித்துவ அரசியல் வாதியாலும் பாராட்டப்படும்—அதில்
கல்விக்கு வசதி செய்தல், சுற்றுச் சூழல் பிரச்சினை, சுகாதாரம் வீடுகள் என்று
அனைத்தும் அடங்கியுள்ளன.
ஆனால் இது
வெளிப்படையாக ஹோலண்ட் முன்வைக்கும், ஐரோப்பாவில் 2008ம் ஆண்டு உலக நெருக்கடி
தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு சமூக ஜனநாயக அரசாங்கமும் செயல்படுத்தும் வரவு-செலவுத்
திட்ட
வெட்டுக்களுக்கு ஒப்புதல்
கொடுக்கிறது. “பொருளாதாரப்
போட்டித்தன்மைக்கு”
வாதிடும் இது, அதே
நேரத்தில் “பொதுப்
பணிகளால் உத்தரவாதம் அளிக்கப்படும் சமூக ஒழுங்கைக் காப்பாற்றுவதற்கான வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்களையும் ஆதரிக்கிறது.”
இத்தகைய
வரவு-செலவுத்
திட்ட
வெட்டுக்களின் பேரழிவு
தரும் பாதிப்புக் குறித்து ஆவணம் மௌனமாக உள்ளது; ஐரோப்பிய ஒன்றியம்
EU,
மற்றும்
IMF
கிரேக்கம், போர்த்துக்கல்,
ஸ்பெயின் இன்னும் அப்பாலும் அந்த வெட்டுக்களைச் செயல்படுத்தியவற்றைக் குறித்து.
கிரேக்கத்தில் மக்கள் எதிர்ப்பு ஆழ்ந்திருக்கையில், ஐரோப்பிய ஒன்றியமும்,
கிரேக்கத்தின் சமூக ஜனநாயக
PASOK
கட்சியும்
தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தைகள் நடத்தியபின் கடுமையான வெட்டுக்களைச் சுமத்தின—அவற்றில்
20 முதல் 40% ஊதியக் குறைப்புக்கள், ஓய்வூதியங்கள், போனஸ்கள் ஆகியவை வெட்டப்பட்டது,
அரச சொத்துக்கள் தனியார்மயமாக்கப்பட்டது, பொதுத்துறை ஊழியங்களை தகர்த்தது ஆகியவை
அடங்கும். இக்கொள்கை கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தை திவாலாக்கிவிட்டது.
இந்த
அறிக்கை
“சீர்திருத்த”
நோக்கம்
கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், சீர்திருத்தப்பட முடியாதது. ஏனெனில் அது நிதியத்
தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனக் கருவி ஆகும். ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு
ஒரே செயல்படும் கொள்கை பரந்த அரசியல் போராட்டங்களை தொடக்குவதுதான்; அப்பொழுதுதான்
அது தன் சமூக உரிமைகளை,
முதலாளித்துவ தன்னலக்குழு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அகற்றுவதின்
மூலம் பாதுகாக்க முடியும். இதற்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டு, ஐக்கிய
ஐரோப்பிய சோசலிச அரசுகளை ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில்,
நிறுவுதல் இன்றியமையாததாகும்.
தொழிற்சங்கங்களும் அரசு சாரா அமைப்புக்களும்
“சமூக
உடன்பாட்டை”
வளர்ப்பதின் நோக்கம்
இதற்கு மாறாக தொழிலாள வர்க்கத்தை வழிதடுமாறச் செய்து, அரசாங்கத்துடன் தொடர்ந்த
வெட்டுக்களுக்கு நடத்தும் பேச்சுக்களை மறைப்பதும், அதற்காக
“சமூக
ஒழுங்கு”
குறித்த வெற்று உறுதிமொழிகளைக் கூறுவதும் ஆகும்.
“பொருளாதார
மற்றும் சமூக விருப்பத் தேர்வுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று நாம்
விரும்புகிறோம்; அவற்றைத் தொடர்ந்து வரும் விதிகள், ஒழுங்குமுறைகள் விரிவாக்கப்பட
வேண்டும், இதையொட்டி அவை பரந்த பேச்சுக்களின் கனிந்த விளைவாக இருக்கும்; தேவையான
ஒருமித்த உணர்வை நடைமுறை அடைவதற்கு அனுமதிக்கும்”
என்று அவர்களுடைய ஆவணம் முடிக்கிறது.
அதாவது,
குட்டி முதலாளித்துவ அதிகாரத்துவங்கள் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் உலகளாவிய
போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கு தேவையான வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்களுக்காக, அரசு மற்றும் முதலாளிகளுடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என
விரும்புகின்றன. வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்கும் அவை, தொழிலாளர்களின் வர்க்கப்
போராட்டங்கள் வெளிப்படக்கூடும் என்றும் அஞ்சுகின்றன; ஏனெனில் அவை போலித்தன தொழிலாள
வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் குறித்துக்கூறப்படும்
“ஒருமித்த
உணர்வு”
என்பதைச் சிதைத்துவிடும்.
“சமூக
உடன்பாடு”
தனக்கென நிர்ணயித்துள்ள
தற்போதைய இலக்கு
—முதலாளித்துவத்திற்கும்
தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் இடையே ஒருமித்த உணர்வைக் கட்டமைப்பது என்பது,
தொழிலாளர்களின் சமூக, ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல்களுக்குத் தயாரிப்பு
நடத்தும்போதே, வர்க்கப் போராட்டங்களை நசுக்க முற்படுவது—
ஆழ்ந்த பிற்போக்குத்தன்மையை கொண்டுள்ளது. அதன் அடிப்படைக்
கருத்தாய்வில், அது 1941ம் ஆண்டு விஷியின் ஆட்சியின் ஒத்துழைப்பாளர்
பிரகடனப்படுத்திய தொழிலாளர்துறை பட்டயத்திற்கு நெருக்கமாக உள்ளது; இரண்டாம் உலகப்
போருக்குப் பின் பொருளாதார ஏற்றத்தை வழங்கிய சமூகச் சீர்திருத்தங்களைவிட.
விஷியின்
தொழிலாளர் துறை மந்திரியாக விளங்கிய ஒரு தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரான
Rene Belin இயற்றிய
தொழிலாளர் பட்டயம் முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர் பிரிவிற்கும் இடையே சமூக
அமைதியை நிறுவும் நோக்கம் கொண்டுள்ளது; இதில் பல விரிவான சமூக நலன்கள்
விவிரக்கப்பட்டுள்ளன; நிர்வாகம்-தொழிலாளர் ஒத்துழைப்பிற்காக ஒரு சிக்கல் நிறைந்த
அதிகாரத்துவத்தை நிறுவியது. வேலைநிறுத்தங்களை இது சட்டவிரோதம் ஆக்கியது. இதன்
தலைப்பே பீல்ட் மார்சல் பிலிப் பெத்தான்
“தொழிலாளர்
வர்க்கத்தின் நிலைகுறித்த அநீதி”
பற்றி பிரலாபித்ததின் இழிந்த மேற்கோள்தான். அதே நேரத்தில் அது
தோற்றுவித்த அதிகாரத்துவம் விஷியின் கீழ் தொழிலாளர்களின் வாழ்க்கத்தரங்கள் முறையாக
அழிக்கப்பட்டதைத்தான் மேற்பார்வையிட்டது.
இன்று
தொழிலாளருக்கு எதிரான வெட்டுக்களை ஒரு மோசடித்தன
“சமூக
உடன்பாடு”
என்பதை தளம் கொண்டு எப்படியும் இயற்ற முற்படுவது தொழிலாள வர்க்கத்திற்கும் குட்டி
முதலாளித்துவ அதிகாரவர்க்கத்தினருக்கும் இடையே போராட்டங்களை வெடிப்புத்தன்மையில்
கொண்டுவருவதற்கான தளத்தைத்தான் அமைக்கும். |