சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Pentagon prepares war plans for Syria

சிரியாவில் போருக்காக பென்டகனின் திட்டங்கள்

By Bill Van Auken
9 March 2012

use this version to print | Send feedback

புதன்கிழமையன்று செனட் குழுவில் சாட்சியம் அளித்த பென்டகனின் சிவிலிய மற்றும் சீருடை அணிந்த தலைவர்கள் ஒபாமாவின் வெள்ளை மாளிகை கொடுத்துள்ள வேண்டுகோளின்படி சிரியாவிற்கு எதிரான போர்த் திட்டங்களைத் தயாரித்து வருவதாகக் கூறினர்.

பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா மற்றும் கூட்டுப் படைகளின் தலைவரான தளபதி மார்ட்டின் டெம்சே ஆகியோரின் அறிக்கைகள் வாஷிங்டனும் அதன் முக்கிய ஐரோப்பிய நட்பு நாடுகளும், சௌதி அரேபியா மற்றும் கட்டாரிலுள்ள வலதுசாரி முடியாட்சிகளுடன் இணைந்து சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கமுடைய இரகசியத் தலையீட்டை விரிவாக்கிக் கொண்டிருக்கினற்றன எனப் பெருகிய சான்றுகளுக்கு இடையே வந்துள்ளன.

புதன்கிழமை செய்தி ஊடகத்தின் அதிக தகவல்கள், குழுச் சாட்சியம் பற்றியவை, குடியரசுக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான அரிஜோனாவின் செனட்டர் ஜோன் மக்கெயினின் தேச வெறித்தன்மை படைத்த தலையீட்டைப் பற்றிக் குவிப்பைக் காட்டின. சிரியாவிற்கு எதிராக அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் தேவை என்றும், மேற்கத்தைய ஆதரவுடைய ஆயுதமேந்திய குழுக்கள் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை அகற்றுவதற்கு இராணுவத் தயாரிப்புக்களுக்கு உதவும் வகையில் பாதுகாப்புப் புகலிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோருகிறார்.

நாங்கள் முன்வைக்கும் வகையிலான இராணுவ நடவடிக்கைகள் அசாத் படுகொலை செய்வதைத் தடுத்து,  அவரை வெளியேற்றுவதற்கு முன் தேவை என்று உங்களை நம்பவதற்கு இன்னும் எத்தனை குடிமக்களுடைய உயிர்கள் இழக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று பானெட்டாவிடம் மக்கெயின் கேட்டார்.

இங்கு நம்மிடையே பிளவு ஏதும் இல்லைஎன உறுதியளித்த வகையில் பாதுகாப்பு மந்திரி விடையிறுத்தார். அசாத் ஆட்சியின் வீழ்ச்சியை விரைவுபடுத்துவதற்கு, தேவையானால் இராணுவ நடவடிக்கைகள் திறன் உட்பட அனைத்துக் கூடுதலான நடவடிக்கைகளும் செய்யப்படுவது குறித்து பென்டகன் ஆய்வு கொண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

ஜெனரல் டெம்சே சிரியாவில் ஓர் அமெரிக்கத் தலையீடு லிபியாவில் நேட்டோப் போரை விடக் கடினமாக இருக்கும், ஏனெனில் இந்நாட்டின் மாறுபட்ட மக்கள் தொகுப்பு, இன, மதக் கலப்புக்கள் இருக்கும் தன்மையில்என்று எச்சரித்தார். ஆனால் செனட் குழுவிடம் அவர் அமெரிக்க நலன்களைக் காக்க நாங்கள் உத்தரவிடப்பட்டால், தயாராக இருப்போம்என்று உறுதியளித்தார். கூட்டுப் படைகளின் தலைவர் எடுக்கப்பட இருக்கும் இராணுவ நடவடிக்கைகளில், பறக்கக் கூடாத பகுதி சுமத்தப்படல், மனிதாபிமானத் தாழ்வாரங்கள், சிரியக் கடலோரங்கள் கடற்படையினால் முற்றுகையிடப்படல், மற்றும் வான் தாக்குதல்கள் ஆகியவற்றை அடக்குவது பரிசீலனையில் உள்ளது என்று சேர்த்துக் கொண்டார்.

பானெட்டாவும் டெம்சேயும் முந்தைய தினம் வெள்ளை மாளிகைச் செய்தி ஊடகத்திற்கு ஒபாமா கொடுத்த தகவலான இராணுவ நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக எடுத்தல் ஒரு தவறாகிவிடும் என்ற கருத்தை எதிரொலித்தனர்.

ஆனால் இருவரில் ஒருவரும் ஐ.நா.பாதுகாப்புச் சபைத் தீர்மானம் ஒன்று சிரியாவில் அமெரிக்க இராணுவக் குறுக்கீட்டிற்கு ஒரு முன்னிபந்தனை என்பது குறித்து எதுவும் கூறவில்லை.

பெயரிடப்படாத ஒரு மூத்த பாதுகாப்புத் துறை அதிகாரி CNN இடம் ஐ.நா. தீர்மானம் ஒன்றும் தவிர்க்க முடியாத தேவை என நினைக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்இதுவரை அத்தகைய தீர்மானத்தை ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை தடுத்துள்ளன; இவை இரண்டும் பாதுகாப்புச் சபையில் தடுப்புதிகாரத்தைக் கொண்டவை. பிராந்திய அமைப்பிலிருந்து ஒருவிதக் கோரிக்கை இதற்குப்போதும்என்று அதிகாரி குறிப்புக் காட்டினார்; அல்லது அமெரிக்கத் தலையீட்டிற்கு ஒரு பன்முக மறைப்பு, புஷ் நிர்வாகம் ஈராக் போரின்போது திரட்டிய விருப்பமுடையோர் கூட்டணி போல் இருந்தால் போதும் என்றும் அவர் கூறினார்.

இவ்வகையில் துருக்கி முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது; இதுதான் இம்மாதம் சிரிய நண்பர்களின்மாநாட்டை நடத்த உள்ளது. பிராந்தியத்திற்கு வெளியே இருந்துஎந்த இராணுவ சக்தியின் இராணுவத் தலையீட்டையும் முறையாக எதிர்த்தாலும், துருக்கி அசாத் விழ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன், சிரியாவில் மனிதாபிமான உதவித் தாழ்வாரங்கள் திறக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது.

இதேபோல் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு 90 நாள் அவசரக்கால நெருக்கடித் திட்டம்ஒன்றைத் தயாரித்துள்ளது: இது சிரியக் குடிமக்களுக்கு உணவு வழங்குவதற்கான திட்டம் ஆகும். அமெரிக்க வெளிவிவகார செயலகம் திட்டம் பற்றி செயல்பட்டு, சிரியாவில் எல்லாப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும், உடனடியான, பாதுகாப்பான, தடையற்ற அணுகல் தேவை என்று கோரியுள்ளது.

இதை எதிர்கொள்கையில் சிரிய வெளியுறவு மந்திரி வலிட் அல்-முவல்லெம் தன் அரசாங்கம் எத்தகைய வெளிநாட்டுத் தலையீட்டையும் எதிர்க்கும் என்றார். மனிதாபிமான தாழ்வாரங்கள் என்றால் இராணுவத் தாழ்வாரங்கள் என்று பெயர்என்றார் அவர். இராணுவப் பாதுகாப்பு இல்லாமல் நீங்கள் ஒன்றும் மனிதாபிமான தாழ்வாரங்களை நிறுவமுடியாது.

சாட்சியம் அளிக்கையில் பானெட்டாவிடம் அசாத் அரசாங்கத்தைக் கவிழ்க்க விரும்பும் ஆயுதமேந்திய குழுக்களுக்கு தொலைத்தொடர்புக் கருவிகளை அமெரிக்க கொடுக்குமா என்று கேட்கப்பட்டது. இதைப்பற்றி மூடிய கதவுகளுக்குப் பின் விவாதிப்பதைத் தான் விரும்புவதாகபானெட்டா பதில் கூறினார். அதே நேரத்தில் நிர்வாகம் தீவிர ஆபத்தை விளைவிக்காத ஆயுதங்களைக் கொடுக்கும் வகையில் பல உதவிகளை நிர்வாகம் கருத்திற்கொண்டுள்ளது என்றார்.

உண்மையில், பல தகவல்கள் அமெரிக்க நிர்வாகம் ஏற்கனவே இவற்றிற்கெல்லாம் அப்பால் சென்றுவிட்டதைத்தான் குறிப்புக் காட்டுகின்றன.

செவ்வாயன்று கொடுத்த அறிக்கை ஒன்றில், Foreign Policy, தேசியப் பாதுகாப்புச் சபையிலுள்ள குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் மூத்த நிர்வாக அதிகாரிகள் ஏற்கனவே சிரியச் செயற்பாட்டாளர்களுடன் அமெரிக்கா தொடர்பை விரிவுபடுத்தக் கொள்ள வேண்டும், அவர்கள் ஒழுங்குற அமைக்கப்படுவதற்கு அனைத்தையும் செய்யவேண்டும் என்ற கொள்கையை ஏற்றதாக மேற்கோளிட்டுள்ளது.

அமெரிக்கக் கொள்கை இப்பொழுது எதிர்த்தரப்பு அசாத் ஆட்சியை அகற்றுவதற்கு உதவும் வகையில் பிணைந்துள்ளதுஎன்று ஏட்டிடம் ஒரு அதிகாரி கூறினார். நம் சிரியக் கொள்கையில் இது முக்கிய மாற்றத்தைக் காட்டுகிறது.

சமீபத்தில் சிரியத் தேசியக் குழு அமைத்துள்ள இராணுவக் குழுவை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன; இதை வாஷிங்டன் சுதந்திர சிரிய இராணுவத்தைவிட அதிக நம்பிக்கை கொள்ளக்கூடிய கைப்பாவைச் சக்தி எனக் கருதுகிறது என்று அதிகாரி மேலும் கூறினார். எதிர்த்தரப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்கள் கொடுப்பது தேவை என்ற உணர்வு உள்ளது, ஆனால் இப்பொழுதில்லை என்றார் அவர்.

ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள மின்னஞ்சல் ஒன்று, தனியார் அமெரிக்க உளவுத்துறையான ஸ்ராட்போரின் உள் ஆவணங்களின் ஒரு பகுதியாக உள்ளது, பல மாதங்களாகவே அத்தகைய ஆபத்தை விளைவிக்கும் ஆயுத உதவி நடைபெற்று வருகிறது என்ற குறிப்பைக் காட்டுகிறது.

டிசம்பர் 2011 மின்னஞ்சல் ஸ்ட்ராட்போரின் பகுப்பாய்வு இயக்குனர் ரேவா பல்லாவிடம் இருந்து வெளிப்பட்டது ஆகும். பென்டகனிலுள்ள இராணுவ உளவுத்துறை அதிகாரிகள் கூட்டம் ஒன்றைப் பற்றி அது கூறுகிறது. அமெரிக்க விமானப் படையின் மூலோபாய ஆய்வுக் குழுவில் ஒரு பகுதியான இந்த அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கை படைகள் (SOF) ஏற்கனவே களத்தில் இருப்பவை முன் ஆய்வுப்பணி மற்றும் எதிர்த்தரப்புச் சக்திகளுக்குப் பயிற்சி ஆகியவற்றில் குவிப்பைக்காட்டுகின்றன என்று தெரிவித்தனர்.

பல்லாவின் கூற்றுப்படி, இந்த அதிகாரிகள் சிறப்புப் படைகளின் நோக்கம் கெரில்லாத் தாக்குதல்களை நடத்துவது, படுகொலை முயற்சிகளை மேற்கொள்ளுவது, அலவைட் படைகளின் முதுகை முறிப்பது, உள்ளிருந்தே ஆட்சிச் சரிவை ஏற்படுத்துவது என உள்ளது.

பானெட்டா மற்றும் டெம்சே செனட் ஆயுதப் படைக் குழுவில் தோன்றுவதற்கு முதல் நாள் மரைன் தளபதி ஜேம்ஸ் மாட்டிஸ், அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் (சென்ட்காம்) தலைவர், மத்திய கிழக்கிலுள்ள அனைத்து அமெரிக்கப் படைகளின் தலைவர், இதே குழுவிடம் சாட்சியம் அளித்து சிரியாவில் அமெரிக்க நோக்கங்கள் பற்றிய வெளிப்படையான மதிப்பீட்டைக் கொடுத்தார்.

 “அவை என்ன என்றாலும், நாம் விருப்பத் தேர்வுகள் அளிக்க வேண்டும் என்றால், அசாத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்துவதற்கு, அது தெஹ்ரானில் பெரும் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்று மாட்டிஸ் சாட்சியம் அளித்தார்.

 இப்பிராந்தியத்தில் மிக முக்கியமான அச்சுறுத்தல் ஈரான்என்று அறிவித்த மாட்டிஸ் அசாத் வீழ்ச்சியுற்றால் ஈரானுக்கு ஒரு இருபது ஆண்டுகளில் இல்லாத பெரும் மூலோபாயப் பின்னடைவாக இருக்கும் என்று மாட்டிஸ் சேர்த்துக் கொண்டார்.

சிரியாவிலுள்ள குடிமக்களைப் பாதுகாப்பதாக, வாஷிங்டனின் அனைத்துக் காட்டிக்கொள்ளும் முயற்சிகளுக்குப் பின்னே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான வழிவகைகளும் நோக்கங்களும் தெளிவாக வெளிப்படத் தொடங்கிவிட்டன. சிரியாவில் ஒரு பயங்கரவாத நடவடிக்கையை அது மேற்கொள்வது, இன்னும் நேரடியான இராணுவ நடவடிக்கைக்கு தயாரிப்புத்தான்.

மனித உரிமைகள் அல்லது ஜனநாயகத்தின் மீதான எந்த அக்கறையினாலும் அது ஒன்றும் அசாத்தின் வீழ்ச்சியை நாடவில்லை. மாறாக, பேர்சிய வளைகுடா, மத்திய ஆசியா என எண்ணெய் வளமுடைய பிராந்தியங்களின் தன் மேலாதிக்கத்தை உறுதிபடுத்துவதற்கு முக்கிய தடையாக இருக்கிறது என்று வாஷிங்டனால் கருதப்படும் சிரியாவின் நட்பு நாடான ஈரானை வலுவிழக்கச் செய்வதின் மூலம் தன் மூலோபாய நலன்களை முன்னேற்றுவிக்க வேண்டும் என்பதே அது.