WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
ஒபாமா நெத்தென்யாகு ஈரான் போர் விருப்பத் தேர்வுகள் குறித்து விவாதிக்கின்றனர்
By Patrick Martin
6 March 2012
use
this version to print | Send
feedback
அமெரிக்க
ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகுவும்
திங்களன்று வெள்ளை மாளிகையில் ஓர் இரண்டுமணி நேரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்;
இதில் ஒரு அரை மணி நேரம் ஒருவரோடு ஒருவர் உரையாடல், உதவியாளர்கள் எவரும் இன்றியும்,
அடங்கியிருந்தது. அவர்களுடைய பேச்சுக்கள் கூட்டு அமெரிக்க இஸ்ரேலிய உந்துதல், ஈரானை
பொருளாதாரப் போர் மற்றும் இராணுவத் தாக்குதலுக்கு உந்துலாகக் கொள்வது பற்றியும்
குவிப்பு கொண்டிருந்தது.
AIPAC
எனப்படும் அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகாரங்கள் குழு மாநாட்டில் ஞாயிறன்று ஒபாமா
தோன்றியதிற்குப் பின் இக்கூட்டம் நடைபெற்றது. அக்குழு இஸ்ரேல் சார்புடைய முக்கிய
செல்வாக்குச் செலுத்தும் குழுவாகும்; அங்கு அவர் தெஹ்ரானுடன் எந்த வருங்கால இராணுவ
மோதலும் இருந்தால் இஸ்ரேலுக்கு உதவி என்னும் அசாதாரண உறுதிமொழியைக்
கொடுத்திருந்தார்.
தன்னுடைய
நிர்வாகம்
“அமெரிக்கச்
சக்தியின் கூறுபாடுகளை அனைத்தையும் பயன்படுத்தி ஈரான் மீது அழுத்தம் கொடுத்து அதை
அணுவாயுதம் பெறாமல் தடுக்க”
உறுதி கொண்டுள்ளது
என்று ஒபாமா கூறினார். இச்சூத்திரம் அனைத்தையும் முழுதும் கூறாத தன்மையைக்
கொண்டுள்ளது. “அனைத்துக்
கூறுபாடுகளும்”
என்பது பொருளாதாரத்
தடைகள் மற்றும் தெஹ்ரானின் தெருக்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று
மட்டுமில்லாமல்—கடந்த
மூன்று ஆண்டுகளில் அது ஒரு கூறுபாடாக இருக்கிறது—சிறப்புப்
படைகளின் செயற்பாடுகள், வான் தாக்குதல்கள், தரைத்துருப்புக்கள, ஏன் அணுவாயுதங்கள்
கூட எனக் குறிக்கும்.
AIPAC
உரைக்கு விடையிறுக்கும்
வகையில் அறிக்கை ஒன்றைக் கொடுத்த நெத்தென்யாகு,
“ஒபாமாவின்
நிலைப்பாடான ஈரான் அணுவாயுதங்களைப் பெற அனுமதிக்கக்கூடாது, அனைத்து விருப்பத்
தேர்வுகளும் மேசை மீது உள்ளன என்பது குறித்துத் தான் பெரிதும் பாராட்டுவதாகக்”
கூறினார்.
ஒபாமா
நிர்வாகத்திற்கும் நெத்தென்யாகுவிற்கும் இடையே இருப்பதாகக் கூறப்படும்
வேறுபாடுகளைக் குறைக்கும்வகையில், ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் ஒரு கூட்டுப்
புகைப்பட நிகழ்விற்கும் செய்தி ஊடகத்திற்காக ஏற்பாடு செய்திருந்தது, கூட்டத்தில்
சுருக்கமான அறிக்கைகளையும் விடுத்தனர்; இது வழக்கமாக செய்திக் குழுவிற்கு
விவாதங்களுக்குப் பின் வந்து அதைப்பற்றிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு மாறாக
அமைக்கப்பட்டது.
தங்கள்
ஆரம்ப பகிரங்கக் கருத்துக்களில் ஒபாமாவோ, நெத்தென்யாகுவோ நிலைப்பாட்டில் இருந்து
எதையும் மாற்றிக் கொள்ளவில்லை. மிகவும் உற்சாகத்துடன் ஒபாமா,
“அமெரிக்க
மக்களும் இஸ்ரேலிய மக்களும் நாங்கள் இதைவிட நெருக்கமான விவாதங்களைக்
கொண்டிருக்கிறோம் என்பது குறித்து நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஒருங்கிணைப்பு
மற்றும் ஆலோசதனைகள் என இரு இராணுவங்கள், உளவுத்துறைப் பிரிவு ஆகியவற்றிற்கு இடையே
உள்ள தரங்களும், இப்பிரச்சினை மட்டும் இல்லாமல், பரந்த பிரச்சினைகளில்,
முன்னோடியில்லாத தன்மையைக் கொண்டுள்ளது. அத்தகைய நிலைப்பாடு வரவிருக்கும் கடினமான
மாதங்களில், 2012ல் தொடரும் என்பதை நான் உறுதிபடுத்துகிறேன்.”
“இஸ்ரேலும்
அமெரிக்காவும் ஒன்றாக உள்ளன”
என்று விடையிறுத்த
நெத்தென்யாகு, அதே நேரத்தில்
“இஸ்ரேல்
அமெரிக்கக் கவலைகள் இருந்தாலும், தாக்கும் உரிமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது”
என்று அறிவித்தார்.
“இஸ்ரேலின்
பாதுகாப்பு என்று வரும்போது, இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது, இறைமை உரிமை தன் சொந்த
முடிவுகளை எடுப்பதற்கு உள்ளது”
என்றார் அவர்.
“என்
தலையாய பொறுப்பு, பிரதம மந்திரி என்னும் முறையில், இஸ்ரேல் அதன் விதியின் முழுப்
பொறுப்பையும் கொள்ளும் என்பதுதான்”
என்று சேர்த்துக் கொண்டார்.
வாஷிங்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தந்திரோபாய வேறுபாடுகள் உள்ளன; உண்மை அரசியல்
வேறுபாடுகள் குறித்து என்பதைத்தவிர,
வெளியே புலப்படும்
மோதல்கள் “நல்ல
பொலிஸ், மோசமான பொலிஸ்”
போன்ற வாடிக்கையான நிலைப்பாட்டைக் கொண்டு ஈரானிய ஆட்சியில்
இருக்கும் பிளவுகளைப் பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கலாம்.
ஈரான்
அனைத்து அணுச் செறிவுபடுத்தல் திட்டத்தையும் நிறுத்த வற்புறுத்தப்பட வேண்டும்,
அதேபோல் அணுவாயுதங்களைத் தயாரிக்கும்
“திறனையும்”
இழக்க வேண்டும்
என்பதுதான் இராணுவ நடவடிக்கைக்கான
“சிவப்புக்
கோடு”என்ற
கருத்தை நெத்தென்யாகு முன்வைத்தார்—இத்தகைய
கோரிக்கை உண்மையில் வலியுறுத்தப்பட்டால், அதை நிறைவேற்றுவதற்கு பெரும்பாலான ஈரானிய
இயற்பியல் வல்லுனர்களும் ஏவுகணை பொறியியல் வல்லுனர்களும் தேவைப்படுவர்.
ஈரானுக்கும்
P5+1
நாடுகளுக்கும்
(ஐ.நா.பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு (அதாவது சீனா,
பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா) உடன் ஜேர்மனி) இடையே பேச்சுக்களைத்
தடுக்கும் முயற்சி என்று ஒபாமா இதை நிராகரித்துவிட்டார்; தன்னுடைய சொந்த
“சிவப்புக்
கோடாக”
ஈரானிய அரசாங்கம்
அணுவாயுதத்தைத் தயாரிக்கிறது என்பது குறித்த சரிபார்க்கக்கூடிய முடிவை
நிர்ணயித்துள்ளார். இந்த முடிவு அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகளால்
“சரிபார்க்கப்படும்”
என்பதால், அது போரைத் தூண்டிவிடவும், போலிக் காரணங்களை
தயாரிக்கவும், அவ்வாறு வாஷிங்டன் விரும்பினால் செய்வதற்கு, கணிசமாக இடமளிக்கும்.
ஈரானிய
இலக்குகளுக்கு ஓரளவு சேதம் மட்டுமே விளைவிக்கும் இராணுவ சக்தியைத்தான் இஸ்ரேல்
கொண்டுள்ளது; அதன் தலைவர்கள் பல மில்லியன் ஈரானியர்களை இஸ்ரேலின் அணுச்சக்தி
ஆயுதங்கிடங்குகளைப் பயன்படுத்திப் படுகொலைகள் செய்யத் தயாராக இருந்தால் ஒழிய.
அதற்குக் குறைவாகவே அவர்கள் அமெரிக்காவுடன் இணைந்த நடவடிக்கையைத்தான் எடுக்க
வேண்டும்; அமெரிக்கா அதன் படைகளை பேர்சிய வளைகுடாப் பகுதியிலும் மற்ற இடங்களிலும்
நிலைநிறுத்தி ஈரானிய அணுச்சக்தி உலைக்கூடங்கள், செறிவுபடுத்தல் நிலையங்கள் மீது
பலமுறை நீடித்துத் தாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
ஈரானுக்கு
எதிரான ஒரு முழுப்போர் என்பது, ஈராக்கிய மக்களைவிட மும்மடங்கு அதிக மக்களைக்
கொண்டுள்ள, மூன்று முறை பெரிய நிலப்பகுதியைக் கொண்டுள்ள நாட்டிற்கு எதிராக என்பது,
அமெரிக்க இராணுவத்திரட்டை முழுமையாகக் கொள்ள வேண்டும் என்ற பொருளைத் தரும்; அதில்
நூறாயிரக்கணக்கான புதிய, விருப்பமற்ற சிப்பாய்களைக் கட்டாயமாக மீண்டும்
இராணுவத்தில் சேர்க்கும் முறையும் அடங்கும்.
இரு
அரசாங்கங்களும், இஸ்ரேல், அமெரிக்கா என, எந்த அளவிற்கு இரு நாடுகளிலும் போருக்கு
எதிர்ப்பு பரந்துள்ளது என்பதை மீறிச்செயல்பட முனைவதுதான் பெரும் வியப்பு ஆகும்.
மேரிலாந்து
பல்கலைக்கழகம் போன மாதம் நடத்திய இஸ்ரேலியர்களிடையேயான கருத்துக் கணிப்பு ஈரான்
மீது ஒருதலைப்பட்ச இஸ்ரேலிய தாக்குதலுக்கு 19 சதவிகிதத்தினர் மட்டுமே ஆதரவு
கொடுப்பதாகக் கண்டறிந்துள்ளது; 42 சதவிகிதத்தினர் அமெரிக்காவுடன் சேர்ந்த இராணுவ
நடவடிக்கையை ஆதரிக்கின்றனர்.
அமெரிக்காவில் பல கருத்துக் கணிப்புக்கள் பரந்த மக்கள் ஆதரவை மற்றொரு மத்திய
கிழக்குப் போரில் அமெரிக்கா ஈடுபடுவதை எதிர்ப்பதாகக் காட்டுகின்றன. மார்ச் 1ம்
திகதி
Hillnewspaper
நடத்திய
கருத்துக் கணிப்பு 21 சதவிகிதத்தினர்தான் ஈரான் மீது அமெரிக்கத் தாக்குதலுக்கு
ஆதரவு கொடுக்கின்றனர் என்பதையும் 20 சதவிகிதத்தினர் ஓரளவு ஆதரவு என்பதையும், 52%
ஓரளவு அல்லது பெரிதும் எதிர்க்கின்றனர் என்பதையும் காட்டுகிறது. இக்கருத்துக்
கணிப்பு 57% எத்தகைய அமெரிக்கத் தலையீடும் ஈரானின் முக்கிய நட்பு நாடான சிரியாவில்
நடக்கும் உள்நாட்டுப் போரில் கூடாது எனக் கூறுவதையும் காட்டுகிறது.
இதையும்விட
குறிப்பிடத்தக்கது
Pew Research Center
பெப்ருவரி மாதம் நடத்தியக் கருத்துக் கணிப்பில் ஈரானுக்கும்
இஸ்ரேலுக்கும் இடையே ஒரு போர் ஏற்பட்டால் அதில் அமெரிக்கா நடுநிலை வகிக்க வேண்டும்
என்று ஒரு குறுகிய பெரும்பான்மை விரும்புவதைக் கண்டறிந்துள்ளது. 40%க்கும்
குறைவானவர்கள் அமெரிக்க இஸ்ரேலுடன் சேரவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்; 100
சதவிகிதப் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் மற்றும்
ஜனநாயக, குடியரசு அரசியல்வாதிகள் 100% கிட்டத்தட்ட அத்தகைய போரில் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்க நினைக்கையில், இது வியப்பிற்குரிய எண்ணிக்கை ஆகும்.
AIPAC
யில் ஒபாமாவின் உரை
அமெரிக்க செய்தி ஊடகத்தில் ஆணித்தர விடையிறுப்பைப் பெற்றது. பொதுவாக வெள்ளை மாளிகை
பற்றிய தீவிர வலதுசாரிக் குறைகூறலை வெளியிடும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
“ஒபாமாவின்
பருந்து போன்ற ஈரானியப் பார்வை”
என்ற தலைப்பில் ஒரு
தலையங்கத்தை ஒபாமாவைப் பாராட்டி வெளியிட்டது. இந்த உரையை அது புகழ்ந்து
“ஈரான்
பற்றிய வலுவான உரை பார்வையாளர்களை பரபரப்புடன் நிற்க வைத்தது”
என்று குறிப்பிட்டு
அதே நேரத்தில் ஒரு இஸ்ரேலிய அதிகாரி நெத்தென்யாகு-ஒபாமா பேச்சுக்கள்
“ஒரு
முடிவெடுப்பதற்குமுன் நேருக்கு நேர் பேசும் கடைசிப் பேச்சாக இருக்கும்”
எனத் தீயமுறையில் குறிப்பிட்டதையும் தெரிவித்துள்ளது.
தாராளவாத
நேஷன் ஏடு ரோபர்ட் ட்ரைபஸ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது; அதில்,
“ஜனாதிபதி
ஒபாமாவின் தேர்தல் உந்துதலினால் வந்துள்ள அமெரிக்க இஸ்ரேலியக் கூட்டு பற்றிய
வனப்புரை இருந்தாலும், அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகாரங்கள் குழுக் கூட்டத்தில்
ஜனாதிபதி உரை இது பற்றி நிறைந்து இருந்தது என்றாலும், ஈரான் மீது இஸ்ரேல்
தாக்குவதையோ, ஈரான் மீது அமெரிக்கா தாக்குவதையோ ஒபாமா ஒப்புதல் கொடுப்பார்
என்பதற்கு பூஜ்ய நிலை வாய்ப்புத்தான் உள்ளது, இது 2012 அல்லது அதற்குப் பின்னும்கூட
எனக் கொள்ளப்படலாம்”
என்று கூறப்பட்டுள்ளது.
பெரும்
செல்வந்தர்களின் அரசியல் குரல் ஒபாமா விருப்பத்திற்கு ஏற்ப நடப்பார் அல்லது
ஒபாமாவிற்கு ஊக்கம் அளிக்கும் தாராளவாதத் தலைவர்கள் தங்கள் பார்வையாளர்களை
ஏமாற்றும் வகையில் போர் இராது என உறுதியளிக்கின்றனர். வெவ்வேறு வழிகளில், இரு
திறத்தாரும் உலக வரலாற்றில் மிகப் பெரிய குற்றங்களில் ஒன்றை தொடக்கினால், அமெரிக்க
ஜனாதிபதிக்கு ஆதரவுதரத் தயாரிப்புக்களை கொண்டுள்ளனர்—அதுவும்
80 மில்லியன் மக்கள் கொண்ட நாட்டின்மீது தூண்டுதலற்ற போரை நடத்துவதற்கு. |