WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
பிரித்தானியாவில்
உள்ளூராட்சிச் செலவு வெட்டுக்களுக்கான
இரண்டாவது சுற்று
தயாராகிறது
By
Robert Stevens
7 March 2012
use
this version to print | Send
feedback
ஐக்கிய
இராச்சியம் முழுவதும் உள்ளூராட்சி அதிகாரங்களால் நூற்றுக்கணக்கான மில்லியன்
பவுண்டுகள் செலவுக் வெட்டுக்கள் பற்றிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
2012/2013
வரவு-செலவுத் திட்டங்கள் பல்லாயிரக்கணக்கான வேலை இழப்புக்கள் மற்றும் முக்கியமாக
தேவைப்படும் பொதுப்பணிகளையும் தகர்க்க வழி செய்யும்.
அக்டோபர்
2010ல், கன்சர்வேட்டிவ்/லிபரல் டெமக்ராட் கூட்டணி உள்ளூராட்சிக் குழுக்களின்
வரவு-செலவுத் திட்டங்களை 28% குறைத்தது; ஒவ்வொரு ஆண்டும் 2014 வரை உள்ளூராட்சி
அரசாங்க நிதியில் 7.1% குறைப்பும் ஏற்பட்டுள்ளது.
இதன்
விளைவாக, தேசிய புள்ளிவிபரங்கள் அலுவலகக் கருத்துப்படி, ஐக்கிய இராச்சியத்தில்
பொதுத்துறை வேலைகள் கடந்த செப்டம்பரில் முடிவுற்ற ஆண்டில் 4.4% குறைக்கப்பட்டது;
269.000 வேலைகள் இழக்கப்பட்டுவிட்டன. உள்ளூராட்சி அரசாங்கத்தில் இது 6.7%
குறைந்தது, அதாவது 195,000 வேலைகள் என; இது மொத்த இழப்புக்களில் மிக அதிக பகுதியைக்
கொண்டுள்ளது.
சமீபத்திய
வெட்டுக்கள் இவற்றையொட்டி ஏற்படுகின்றன. உள்ளூராட்சி சபைகள் ஏற்கனவே சிக்கனமான
வரவு-செலவுத் திட்டங்களை இயற்றியுள்ளன; அவற்றில் கீழ்க்கண்டவை உள்ளன:
* லண்டனில்
தொழிற் கட்சியின் கீழுள்ள
Lambeth
இல் வெட்டுக்களில் 29
மில்லியன் பவுண்டுகளை சுமத்தியுள்ளது. இதில் இளைஞர் பணிகள் பற்றிய 6 மில்லியன்
பவுண்டுகளும் அடங்கும். லாம்பெத்தின் வெட்டுக்களில் பத்து சதவிகிதம்
இயலாதவர்களுக்கான பணிகளை இலக்கு கொண்டுள்ளன.
Lewisham
இல் 23 மில்லியன்
பவுண்டுகள் வெட்டுக்கள் இயற்றப்பட்டன;
Southwark
இல் 18 மில்லியன்
பவுண்டுகள்,
Brent
இல் 14 மில்லியன் பவுண்டுகள் ஆகியவை 2014ல் வெட்டப்பட இருக்கும்
104 மில்லியன் பவுண்டுகளில் ஒரு பகுதியாகும்.
ஐக்கிய
இராச்சியத்தின் இரண்டாவது பெரிய நகரான
Birmingham,
கன்சர்வேடிவ்/லிபரல் கூட்டணியின் ஆட்சியில் இருப்பது, இந்த ஆண்டு செலவுக்
குறைப்புக்களாக 100 மில்லின் பவுண்டுகளைச் சுமத்தியுள்ளது.
*
Sheffield
இலுள்ள தொழிற் கட்சி உள்ளூராட்சி சபையின் தலைமை 55 மில்லியன்
பவுண்டுகளை வெட்டுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது; இதில் 550 ஊழியர்கள் பதவி இழப்பும்
உண்டு. மார்ச் 9ம் திகதி சபையின் முழுக் கூட்டம் இத்திட்டத்தை இயற்றும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
*
மான்செஸ்டர் பெருநகரப் பிரிவின் பகுதிகளான பத்து சபைகள் கிட்டத்தட்ட 133 மில்லியன்
பவுண்டுகள் வெட்டுக்களைச் சுமத்தியுள்ளன. தொழிற் கட்சி கட்டுப்பாட்டின் கீழ்
இருக்கும் சல்போர்டில் செலவுக்குறைப்புக்கள் 24 மில்லியன் பவுண்டுகள் என்பது கடந்த
ஆண்டு சுமத்தப்பட்ட 40 மில்லியன் பவுண்டுகளைத் தொடர்ந்து வந்துள்ளன. 2011 முதல்
2015 வரை, மொத்தம் 94 மில்லியன் பவுண்டுகள் அதன் செலவுகளிலிருந்து குறைக்கப்பட
உள்ளன. இதில் 1,000 வேலை இழப்புக்கள் என மொத்தத்தில் பத்தில் ஒரு பங்கும் அடங்கும்.
கடந்த ஆண்டு மான்செஸ்ட்ர் நகரவை 170 மில்லியன் பவுண்டுகள் வெட்டுக்களை
இரண்டாண்டுகளுக்குள் செயல்படுத்தும் வகையில் சுமத்தியது. இதில் கிட்டத்தட்ட 2,000
வேலைகள் இழக்கப்படுகின்றன, பல பணிகள் குறைக்கப்பட்டுவிட்டன. இன்னும் 80 மில்லியன்
பவுண்டுகள் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் 2013/2014, 2014/2015 ஆண்டுகளில்
எதிர்பார்க்கப்படுகிறது.
*
இங்கிலாந்தில்
Yorkshire
ல் மூன்று உள்ளூராட்சிகள்
115 மில்லியன் பவுண்டுகள் வெட்டுக்கள் கொண்ட வரவு-செலவுத் திட்டங்களை
இயற்றியுள்ளன. தொழிற் கட்சி தலைமைக் கூட்டணி நடத்தும்
Leeds
ல் 55.4 மில்லியன்
பவுண்டுகள் வெட்டுக்கள் இயற்றப்பட்டுள்ளன; 2015 ஐ ஒட்டி இருக்கும் 2,500 வேலைகளில்
400 தகர்க்கப்பட்டுவிடும்.
Rotherham
ல் 20.4 மில்லியன்
பவுண்டுகள் வெட்டுக்கள் இயற்றப்பட்டன—இதில்
200 வேலைகள் இழப்பும் அடங்கும்.
Kirklees
ல் 40
மில்லியன் பவுண்டுகள் வெட்டுக்களும், 680 பணிநீக்கங்களும் செய்யப்பட்டுள்ளன.
*கன்சர்வேடிவ்கள் கீழிருக்கும்
Nottinghamshire
நகர்ப்பிரிவுச் சபை 180
மில்லியன் பவுண்டுகள் வெட்டுக்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தும்
திட்டத்தைக் கொண்டுள்ளது. நகரவை ஏற்கனவே 2,500 பணிநீக்கங்களைச் செய்துள்ளது. தொழிற்
கட்சி ஆட்சி நடத்தும்
Nottingham
நகரவைச் சபை வரவிருக்கும் ஆண்டில் 20 மில்லியன் பவுண்டுகள் வரவு-செலவுத் திட்ட
வெட்டுக்களைக் கொள்ளும்; இதில் 195 வேலைகள் இழப்பும் அடங்கும்.
*
Bristol
இல் லிபரல் டெமக்ராட் பொறுப்பில் இருக்கும் நகரவை சபை 27 மில்லியன்
பவுண்டுகள் வெட்டுக்களை பணிகள் பிரிவில் செய்துள்ளது; இதில் 350 வேலைகள் இழப்பு
அடங்கும். நகரவை 2014க்குள் மொத்தம் 70 மில்லியன் பவுண்டுகளைக் குறைக்கும்
திட்டங்களைக் கொண்டுள்ளது.
*
Southampton
நகரவையில் ஆளும் கன்சர்வேடிவ் சபை கிட்டத்தட்ட 14 மில்லியன்
பவுண்டுகள் வெட்டுக்களை இயற்றியுள்ளது; இதில் 250 வேலைகள் இழப்பும் அடங்கும்.
*
Merseyside
இலுள்ள செயின்ட் ஹெலென்ஸில், 100,000த்திற்கு சற்று அதிகம் என்று
மக்கட்தொகை இருக்கையில், தொழிற் கட்சி நடத்தும் நகரவை 8 மில்லியன் பவுண்டுகள்
வெட்டுக்களை இயற்றியது: தவிர உள்ளூராட்சிப் பிரிவில் 2 சதவிகிதம் வரி உயர்வையும்
கொண்டுவந்துள்ளது. கடந்த ஆண்டு 28.1 மில்லியன் பவுண்டுகள் வெட்டுக்கள் ஏற்பட்டதை
அடுத்து இது வந்துள்ளது; இதில் 741 வேலை இழப்புக்களும் அடங்கும். 2015க்குள்
மொத்தம் 50 மில்லியன் பவுண்டுகள் செலவுகளில் குறைக்கப்பட உள்ளது.
வெட்டுக்களுக்கு எதிர்ப்புக் காட்டும் கட்சி என்று தன்னைக் காட்டிக் கொள்ளும்
பசுமைக் கட்சி பிரைட்டன் நகரில் ஒரு சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை இயற்றியுள்ளது;
இங்கிலாந்தில் அது ஒரு நகரவையைத்தான் ஆளுகிறது. இவ் வரவு-செலவுத் திட்டத்தில் 17
மில்லியன் பவுண்டுகள் குறைப்புக்களுடன் நகரவை வரிவிதிப்பில் 3.5% அதிகரிப்பும்
உண்டு. இந்த நடவடிக்கை தொழிற் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் உறுப்பினர்களால்
எதிர்த்து வாக்களிக்கப்பட்டது. இதன்பின் மூன்று கட்சிகளும் இணைந்து மொத்த
வரவு-செலவுத் திட்டத்தை 53-1 என்ற பெரும்பான்மையில் இயற்றின; இதில் 23 பசுமைக்
கட்சி உறுப்பினர்களில் 22 பேர் இருந்தனர்.
“லிவர்ப்பூலில்
பசுமைக் கட்சியின் வசந்தக்கால மாநாட்டிற்கு முன் வரும் இந்த வரவு-செலவுத் திட்ட
வாக்களிப்பு,
கட்சி பக்குவம்
பெற்றுள்ளது என்பதின் முக்கிய மைல்கல் ஆகும். மத்தியதர வர்க்கம், இடது சார்பு,
சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதரவு என்று நிறைய ஆதரவாளர்களைக் கொண்டுள்ள இக்கட்சி
இப்பொழுது கடுமையான முடிவுகளை எடுக்கும் சோதனைக்கு உட்பட்டுள்ளது”
என்று இண்டிபென்டன்ட் எழுதியுள்ளது.
பிரைட்டன்
உள்ளூர்
Argus
செய்தித்தாள்,
“ஆயிரக்கணக்கான
மக்களுக்கு வேலைகள் இல்லை, நம்பிக்கையும் இல்லை, குறைந்த வருமானம்தான் என்ற நிலையை
இது ஏற்படுத்தும். இந்த அரசியல்வாதிகள் குழுவின் தலைமையில் இருப்பது பசுமைக் கட்சி
ஆகும்.”
அயர்லாந்தில் இருக்கும் பசுமைக் கட்சியினர், பியன்னா பைலுடன் கூட்டணி கொண்டு
தொடர்ந்து நான்கு சிக்கன வரவு-செலவுத் திட்டங்களை 2008 ல் இருந்து 2011 வரை
இயற்றியுள்ளது—இது
பொதுச் செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% என, அதாவது 25 பில்லியன்
பவுண்டுகளை குறைத்துள்ளது.
இந்த
வெட்டுக்கள் வரவிருக்கும் பெரும் அளவில் ஒரு சிறிய அளவை மட்டும்தான் காட்டுகின்றன.
ஒரு சமீபத்திய ஆய்வில் நிதிய ஆய்வுக்கூடம் அரசாங்கத்தின் மொத்த வெட்டுக்களில்
80%க்கும் மேலானவை இனித்தான் செயல்படுத்தப்பட உள்ளன என்று எச்சரித்துள்ளது.
இந்த மாதம்
வரவிருக்கும் வரவு-செலவுத்திட்டத்திற்கு முன்னதாக, அரசாங்கம் பல பில்லியன்களை
செலவுகளில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளது. கருவூலத்தின் சிறப்புக் குழுவின்
கன்சர்வேடிவ் தலைவர் ஆண்ட்ரூ டிரி, கடந்த மாதம் நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்னைச்
சந்தித்து வரவு-செலவுத் திட்டத்தை பயன்படுத்தி அரசாங்கம் பொதுச் செலவினங்களை மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 40% க்குக் கொண்டவர உள்ளது என அறிவிக்குமாறு கோரினார்.
இப்பொழுது அச்செலவு
GDP
யில்
43% என்று
உள்ளது.
கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் ரப்ளி, கருவூலக் குழுவிலும் உறுப்பினராக
இருப்பவர்,
“இன்னும்
நிறைய கொழுப்பு கரைக்கப்படலாம் என்று நினைக்கிறேன்”
என்று அறிவித்தார்.
இத்தகைய
மிருகத்தன நடவடிக்கைகள் நடத்தப்பட முடியும் என்பதே,
வெட்டுக்கள்
அனைத்திற்குமான எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் உறுதிகுலைத்ததில் முக்கிய பங்கு
வகித்ததால்தான். முந்தைய தொழிற் கட்சி அரசாங்கத்துடனும் அவைகள் இணைந்து பெரும்
வெட்டுக்களை 2008ல் 1 டிரில்லியன் பவுண்டுகளை வங்கிப் பிணை எடுப்பிற்கும், பெரும்
செல்வந்தர்களைக் காப்பாற்றுவதற்கும் செயல்பட்டதுபோல்,
2010ல்
கன்சர்வேடிவ்/லிபரல் கூட்டணி அதிகாரத்திற்கு வந்தபோதும், அவர்களுடைய சிக்கன
நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் இப்பொழுதும் எதையும் செய்யவில்லை.
மிக முக்கிய
பொதுப் பணிகளில் தகர்ப்பு என்னும் நிலை பெருகுகையில், நூறாயிரக்கணக்கான உள்ளூராட்சி
வேலைகளும் இழக்கும் நிலையில், தொழிற்சங்கங்கள் எத்தகைய தேசியப் பிரச்சாரத்தையும்
எதையும் எதிர்க்கும் வகையில் செய்யவில்லை. மாறாக, மிக வெற்றுத்தன நடவடிக்கைகள்தான்
எடுக்கப்பட்டுள்ளன; ஒரு சில தொழிற்சங்க செயலர்கள் மூலம்; இவற்றில் போலி இடது
குழுக்களான சோசலிச தொழிலாளர் கட்சி, சோசலிஸ்ட் கட்சி ஆகியவைகள் தீர்மானங்கள்
இயற்றப்படும்போது அவைக்கு வெளியேதான் இருந்தன.
Unison
எனப்படும் முக்கியப் பொதுத்துறை தொழிற்சங்கங்கள் 1.3 மில்லியன்
உறுப்பினர்களை நாடு முழுவதும் கொண்டவை, தன் வலைத் தளத்தில் இப்பேரழிவு தரும்
சமீபத்திய சுற்றுக்களில் இருக்கும் வெட்டுக்களைப் பற்றிக் குறிப்பிடக் கூட இல்லை. |