WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
லிபியா சுயாட்சி பற்றிய
அறிவிப்பு உள்நாட்டுப் போர் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது
By Bill
Van Auken
8 March 2012
use
this version to print | Send
feedback
சுயாட்சி குறித்து பழங்குடியினரும் போராளித் தலைவர்களும் எண்ணெய்
வளமுடைய கிழக்கு லிபியாவில் அறிக்கை ஒன்றைக் கொடுத்த பின், திரிப்போலியை தளமாகக்
கொண்ட தேசிய
இடைக்கால
குழுவானது (NTC)
நாடு பிராந்திய வகைகளில் பிரிவினையை தடுக்க
“வலிமையைப்”
பயன்படுத்த உள்ளதாக அச்சுறுத்தல் கொடுத்துள்ளது.
லிபியாவின் முன்னாள் தலைவர் கேர்னல் முயம்மர் கடாபி ஒரு குழுக்
கூட்டத்தினால் உதையுண்டு கொலை செய்யப்பட்டுக் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப்
பின்னர், ஆட்சி மாற்றத்திற்கான அதன் போரில் வெற்றிபெற்றுவிட்டதாக நேட்டோ
அறிவித்தபின், திரிப்போலி மற்றும் சுயாட்சி குறித்த முடிவு எடுக்கப்பட்ட கிழக்கு
நகரான பெங்காசிக்கும் இடையே உள்நாட்டுப் போர் என்னும் கொடூர மோதலாக
உருவெடுத்துள்ளது.
புதனன்று மிஸ்ரடாவிலிருந்து தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய
NTC
யின் தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலில் சுயாட்சி முயற்சியை உறுதியாக
நிராகரித்தார்.
“நாங்கள்
லிபியாவைப் பிரிக்கத் தயாராக இல்லை. அவர்கள் கடாபி ஆட்சியிலிருந்து வந்து
ஊடுருவியவர்கள் மற்றும் எஞ்சியிருப்பவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள
இப்பொழுது உள்ளனர் என்பதை அறிய வேண்டும்; நாங்கள் அவர்களை தேவையானால் வலிமையைப்
பயன்படுத்தி எதிர்க்கத் தயாராக உள்ளோம்”
என்றார் அவர்.
திரிப்போலியில் பெயரிடப்படாத அரபு அரசுகள்தான் லிபியாவில்
“தேசத்
துரோகத்திற்கு”
நிதி அளிப்பதாக ஜலில் குற்றம்சாட்டினார்.
“துரதிருஷ்டவசமாக
சில சகோதர அரபு நாடுகள் கிழக்கே நடத்தப்படும் இத்துரோகத்திற்கு ஆதரவையும்
நிதியையும் தருகின்றன”
என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
கடாபி அரசாங்கத்தில் முன்னாள் நீதித்துறை மந்திரியாக இருந்த ஜலில்,
NTC “லிபிய
மக்களுடைய ஒரே நெறியான பிரதிநிதித்துவ அமைப்பு”
மற்றும்
“திரிப்போலிதான்
லிபியாவின் மாற்றமுடியாத தொடரும் தலைநகர்”
என்றும் அறிவித்தார்.
முன்னதாக
NTC
யின் இடைக்காலப் பிரதம மந்திரி அப்தெல் ரஹிம் அல்-கிப்பும் லிபியாவில் கூட்டமைப்பு
அரசாங்கம் என்ற கருத்தை நிராகரித்து
“நாம்
ஒன்றும் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டிய தேவையில்லை”
என்று அறிவித்தார்.
இதில் கூறப்படாத குறிப்பு மன்னர் இட்ரிஸின் ஊழல் மிகுந்த,
பிற்போக்குத்தன ஆட்சி பற்றியது ஆகும்; அதுதான் நசரத்வாதிகள் ஊக்கம் கொடுத்த
சுதந்திர அதிகாரிகள் இயக்கத்தினால், கடாபி தலைமையில் அகற்றப்படும் வரை லிபியாவை
ஆண்டு வந்தது. இட்ரிஸ் அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக
பணிபுரிந்து வந்தார்; இரு நாடுகளுக்கும் லிபியாவில் இராணுவத் தளங்களைக்
கொடுத்திருந்தார்; அதில் மாபெரும்
Wheelus
அமெரிக்க விமானத் தளம் மேற்கு லிபியாவில் இருந்ததும் அடங்கும்.
எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டபின், இட்ரிஸ் பெரும் அமெரிக்க எண்ணெய்
நிறுவனங்களின் வளைந்துகொடுக்கும் கருவியாகச் செயல்பட்டார்; அவைகள்தான் நாட்டின்
பெட்ரோலிய சட்டங்களை எழுதின; கிட்டத்தட்ட தடையற்ற உரிமைகள் அவைகள் நாட்டைச்
சுரண்டுவதற்கு வழங்கப்பட்டன. அதிகாரத்திற்கு வந்தபின், அமெரிக்க, பிரிட்டிஷ்
தளங்களை மூடி, நாட்டில் செயல்பட்டுவந்த அனைத்து வெளிநாட்டு எண்ணெய்
நிறுவனங்களின்மீது கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கடாபி தேசியமயமாக்கினார்.
இட்ரிஸ் ஆட்சிக்கும் கிழக்கே நடக்கும் பிரிவினை இயக்கத்திற்கும்
இடையேயுள்ள தொடர்பு மிக நேரடியானது ஆகும். முன்னாள் அரசர் ஒரு கூட்டாட்சி முடியரசை
ஆண்டுவந்தார்; அதில் ஏகாதிபத்திய சக்திகளும் வெளிநாட்டு நிறுவனங்களும் மேலாதிக்கம்
கொண்டிருந்தன. கிழக்கே சிரெனைகா, மேற்கே திரிபோலிடானா மற்றும் தெற்கே பெஜன் என்று
இத்தாலிய பாசிச ஆட்சி, அதற்கும் முன்னால் ஓட்டோமன் பேரரசில் இருந்து தொடர்ந்து
வந்திருந்த நிலப்பகுதி அதிகார வரம்புகளைக் கொண்ட மாநிலங்கள் மத்திய அரசாங்கத்தைப்
போலவே அதிகாரங்களைக் கொண்டிருந்தன. இட்ரிஸே பெங்காசியில் வசித்து வந்ததுடன், தன்னை
முதலாவதும் முக்கியமானதுமான நிலையில் சிரெனைக்காவில் ஆட்சியாளர் என்றுதான் கருதிக்
கொண்டார்.
பெங்காசியில் 3,000 பேர் அடங்கியிருந்த பழங்குடி, போராளிகள் மற்றும்
அரசியல் பிரதிநிதிகள் சபையில், அவர்களுடைய தலைவராக, ஒரு புதிய இடைக்கால சிரெனைக்கா
அல்லது பர்க்கா என்று அரபு மொழியில் அழைக்கப்படும் பகுதியின் தலைவராக ஷேக் அஹ்மத்
ஜுபைன் அல்-செனுசி வெளிப்பட்டுள்ளார். புதிய குழுவின் கூறப்பட்டுள்ள இலக்கு
இட்ரிஸின் கீழ் சுமத்தப்பட்டிருந்த 1951 அரசியலமைப்பைப் புதுப்பிப்பது ஆகும்.
NTC
யிலும்
உறுப்பினராக இருக்கும் அலப்-செனுசி, பதவியில் இருந்து கீழிறக்கப்பட்ட மன்னரின்
சகோதரரின் பேரன் ஆவார். சுயாட்சி அறிக்கை என்பது
“தேசத்
துரோகம்”
அல்ல என்று வலியுறுத்திய அவர், பெங்காசிக் குழுவிற்கு நாட்டின்
கொடியையோ, தேசிய கீதத்தையோ மாற்றும் எண்ணம் கிடையாது என்றும் திரிப்போலியிடம்
நாட்டின் வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்த அனுமதிக்கும் என்றும்
வலியுறுத்தினார்.
ஆனால்
CNN
க்குப் பெங்காசியில் இருந்து கொடுத்த பேட்டி ஒன்றில், அல்-செனுசி
“சமூக
விஷயங்கள்”
உள்ளூர் அரசாங்கங்களின் பொறுப்பில் விடப்பட வேண்டும், அதில்
சுகாதாரம், கல்வி ஆகியவை அடங்கியிருக்கும் என்றும் கூறினார்.
கடாபி ஆட்சியின் கீழ், நாட்டின் எண்ணெய் வளத்தின் கணிசமான பங்கு
எல்லா லிபியர்களுக்கும் இலவச சுகாதாரம் மற்றும் கல்வி என்பதற்கு
ஒதுக்கப்பட்டிருந்தது. இப்பிரிவுகளை லிபியாவிற்குள் இருக்கும் பிராந்திய
அதிகாரிகளுக்கு மாற்றும் திட்டம் பெரும்பாலான மக்களின் நலன்களுக்கு நேரடி
அச்சுறுத்தலைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக ஒரு கிழக்கு லிபிய சுயாட்சி இயக்கத்
திட்டத்தின் கீழ் வனப்புரையாக இடம் பெற்றிருக்கும் நிலையில்.
பெங்காசியை தளமாகக் கொண்ட அரேபிய வளைகுடா எண்ணெய் நிறுவனம்
(AGGO),
சிரெனைகா நிலப்பகுதியில் லிபிய எண்ணெய் இருப்புக்களில் முழுமையாக முக்கால் பகுதி
உள்ளது. புதிய குழுவை பெங்காசியில் தோற்றுவிப்பது
AGGO
செயல்படும் முறையை எவ்வகையிலேனும் மாற்றுமா என்று ராய்ட்டர்ஸால் கேட்கப்பட்டதற்கு,
நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அழுத்தம் திருத்தமாக
“இதுவரை
அப்படி இல்லை”
என்று விடையிறுத்தார்.
பெங்காசியில் சுயாட்சி அறிக்கை பிராந்தியத்தில் எரிசக்தி
செல்வத்தின் மீது கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஒரு படி என்றுதான்
பரந்த அளவில் காணப்படுகிறது. இது லிபியாவின் எஞ்சிய பகுதிகளில் எண்ணெய் ஆதாரங்களை
நெரித்துவிடும் தன்மையைக் கொண்டுள்ளது.
பெங்காசியைத் தளமாகக் கொண்ட சுயாட்சி அரசாங்கத்தைத் தோற்றுவிக்கும்
நடவடிக்கை லிபியாவை பிராந்திய வகையில் சிதைக்கும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதி
ஆகும். நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மற்றும் நகரத்தை தளமாகக்கொண்ட போராளிகள்—இப்படையினருக்குத்தான்
நேட்டோ ஆயுதங்கள், ஆலோசகர்கள் மற்றும் வான்தாக்குதல்கள் மூலம் கடாபியை அகற்றும்
போரில் ஆதரவு கொடுத்தது—நாட்டின்
பெரும்பகுதி மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் நேட்டோவினால்
உத்தியோகப்பூர்வ அரசாங்கமாக நிறுவப்பட்டுள்ள
NTC
தலைநகரான திரிப்போலி மீது கூட கட்டுப்பாட்டைக்கொள்ளும் திறன்
அற்றதாக உள்ளது; அங்கு முக்கிய விமான நிலையமும், அரசாங்கக் கட்டிடங்களும்
போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ்த்தான் உள்ளன.
NTC
யின் ஜலில்,
லிபியாச் சிதைவை அச்சுறுத்தும் செயலுக்கு பெயரிடப்படாத அரபு
ஆட்சிகள் மற்றும் கடாபி சார்புடைய ஊடுருவியவர்கள் மீதும் மாறி மாறிக் குற்றம்
சாட்டியிருக்கையில், இன்னும் வெளிப்படையான குற்றவாளிகள் அமெரிக்கா, நேட்டோ மற்றும்
மேற்கு ஐரோப்பிய சக்திகள்தான். கடந்த ஆண்டு அவர்கள் நடத்திய ஏழு மாத காலப் போர்
லிபிய அரசாங்கத்தை அழித்து நாட்டின் உள்கட்டுமானம் பெரும்பாலானதை அழித்து,
பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களையும் குடித்துவிட்டது.
இந்த ஏகாதிபத்திய தலையீட்டின் நோக்கம் அரை நூற்றாண்டிற்கு
கடிகாரத்தைப்பின் தள்ளி, இட்ரிஸ் மன்னர் காலத்திய நிலைமைகளைக் கொண்டுவந்து,
நாட்டின் எண்ணெய் வளத்தின் மீது தடையற்ற அதிகாரத்தைச் சுமத்தி, மீண்டும் லிபியாவை
அப்பிராந்தியம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட இருக்கும் ஏகாதிபத்தியத் தலையீடுகளுக்கு
தளமாகச் செய்வது ஆகும்.
லிபியாவை பிராந்திய வகையில் சிதைப்பது, நவ காலனித்துவ
நோக்கங்களுக்கு உதவியளிக்கும். இது ஒரு உள்நாட்டுப் போர் வெடித்துப்
புதுப்பிக்கப்படுவதையும் அச்சுறுத்துகிறது; குடிமக்களின் உயிர்களைக் காத்தல்
என்னும் போலிக்காரணத்தைக் காட்டி நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புப் போரின் விளைவாக
தோன்றிய இரத்தக் களரி மீண்டும் ஏற்படும். |