WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
மாஸ்டர்
லொக்
தொழிற்சாலையில்
ஒபாமா:
மலிவு
உழைப்பினை
“நாட்டிற்குள்
கொண்டுவருதல்”
By Niles
Williamson
5 March 2012
use
this version to print | Send
feedback
சமீப
வாரங்களில்,
மத்திய
மேற்கு
நகரமான
மில்வாகியில்
உள்ள
மாஸ்டர்
லொக்
தொழிற்சாலையில்
வேலைகள்
“நாட்டிற்குள்
கொண்டுவருதல்”
முறையில்
வெற்றிகரமாக
செயல்படுத்தப்பட்டிருப்பதாக
ஜனாதிபதி
ஒபாமா
தொடர்ந்து
குதூகலித்து
வருகிறார்.
குறைந்த
ஊதியத்தில்
அதிக
உற்பத்தித்
திறனை
அளிக்கக்
கூடிய
தொழிலாளர்
படையின்
மூலமாக
உற்பத்தித்
துறை
வேலைகளை
மறுபடியும்
அமெரிக்காவை
நோக்கித்
திரும்பச்
செய்யும்
தனது
திட்டத்திற்கு
இந்தத்
தொழிற்சாலை
ஒரு
முன்மாதிரி
என்று
ஜனாதிபதி
கூறியிருக்கிறார்.
சென்ற
மாதம்
மாஸ்டர்
லொக்
தொழிற்சாலையில்
பேசும்போது
ஒபாமா
பின்வருமாறு
கூறினார்: “இன்னும்
கூடுதலான
நிறுவனங்களின்
கவர்ச்சிகரமான
வேலைகளை உள்நாட்டினுள் கொணடுவருவம் முடிவைச்
செயல்படுத்துவதற்கு
நம்மால்
இயன்ற
அனைத்தையும்
செய்வதே
ஒரு
தேசமாக
நமது
கடமையாகும்”.
தொழிலாளர்களின்
வாழ்க்கைத்
தரங்களை
எல்லா
முனைகளிலும்
கீழிறக்குகின்ற
அதே
சமயத்தில்
பெருநிறுவன
வரிகளைக்
குறைப்பதற்கு
ஒன்றுசேர்ந்து
குரல்கொடுப்பதும்
இதன்
அர்த்தமாய்
இருக்கிறது.
வாகனத்
துறை
பிணையெடுப்பின்
வெற்றி
என்று
கூறி
ஜனாதிபதி
தன்னைத்
தானே
தட்டிக்
கொடுத்துக்
கொண்டார்:
“தொழிலாளர்களும்
வாகனத்
தயாரிப்பு
நிறுவனங்களும்
தமது
முரண்பாடுகளை
தீர்த்துக்
கொள்ளச்
செய்திருக்கிறோம்.
இத்துறை
மறுசீரமைப்புறச்
செய்திருக்கிறோம்.
இன்று
அமெரிக்க
வாகனத்
தயாரிப்புத்
துறை
மீண்டு
திரும்புகிறது.”
வாகனத்
தயாரிப்புத்
துறை
மறுசீரமைப்பு
என்பது
பெருநிறுவனங்களுக்கு
சாதனைமிக்க
இலாபங்களை
அளித்துள்ள
அதே
சமயத்தில்
வாகனத்
தயாரிப்புத்
தொழிலாளர்களின்
முதுகில்
பெரும்
சுமையை
ஏற்றியது.
இத்தொழிலாளர்கள்
தமக்கான
நலன்கள்
வெட்டப்பட்டதைக்
கண்டதோடு
புதிதாய்
பணியமர்த்தப்படுவோருக்கான
ஊதியங்களில்
50 சதவீத
குறைப்பு
நேர்ந்ததையும்
கண்டனர்.
இந்தச்
சூழ்நிலையில்
“டெட்ராயிட்டில்
நடந்திருப்பது
மற்ற
துறைகளிலும்
நடைபெற
முடியும்”
என்கிறதான
அறிவிப்பை
அனைத்து
தொழிலாளர்கள்
ஒரு
அச்சுறுத்தலாகவே
காண
வேண்டும்.
மிலுவாகி
நகரின்
பெரும்பகுதியை
அழித்து
விட்டிருக்கும்
சமூக
மற்றும்
பொருளாதார
நெருக்கடி
பற்றி
ஒபாமாவின்
பேச்சில்
எந்தக்
குறிப்பும்
இல்லை
என்பது
தெரிந்ததே.
நகரில்
பொருளாதார
மந்தநிலையாலும்
தொழிற்துறைமய
அகற்றத்தினாலும்
கடுமையாகப்
பாதிக்கப்பட்ட
ஒரு
பகுதியில்
இந்த
மாஸ்டர்
லொக்
தொழிற்சாலை
அமைந்துள்ளது.
குடியிருப்போரன்றி
அநாதரவாய்
பராமரிப்பின்றி
இருக்கும்
வீடுகள்
முழுக்க
நிரம்பியமைந்த
சுற்றுப்புறப்
பகுதிகள்
வீட்டு
அடமான
நெருக்கடியின்
மவுனமான
சாட்சியாய்
இருக்கின்றன.
ஒபாமா
விஜயம்
செய்த
தொழிற்துறை
வளாகப்
பகுதியிலேயே
மாஸ்டர்
லொக்
தொழிற்சாலை
தவிர்த்து
மற்ற
தொழிற்சாலைகள்
எல்லாம்
கைவிடப்பட்டு
அழிந்து
கொண்டிருக்கும்
நிலையில்
தான்
இருக்கின்றன.
ஒருகாலத்தில்
நன்கு
ஊதியமளிக்கும்
வேலைகள்
இருந்ததை
இங்கு
வசிப்பவர்களுக்கு
துயரமான
வகையில்
நினைவூட்டிக்
கொண்டிருப்பவையாக
இவை
இருக்கின்றன.
விஸ்கான்சின்
பல்கலைக்கழக
மிலுவாகி
பொருளாதார
அபிவிருத்திக்கான
மையம்
சென்ற
மாதத்தில்
வெளியிட்ட
ஒரு
அறிக்கை
வேலைவாய்ப்பு
எண்ணிக்கையின்
மிகக்
குறைந்த
அளவுகளைச்
சுட்டிக்
காட்டியது.
பெருநகரப்
பகுதியில்
உழைக்கும்
வயதிலான
கறுப்பின
ஆண்களில்
வேலைவாய்ப்பு
விகிதமானது
2010ல்
தேசத்திலேயே
மிகக்
குறைந்த
அளவாக
44.7 சதவீதமாக
இருந்தது.
2010 ஆம்
ஆண்டு
கணக்கெடுப்பின்
படி,
நகரின்
இளையோரில்
ஏறக்குறையப்
பாதிப்
பேர்
வறுமையில்
வாழ்கின்றனர்,
கால்வாசிக்
குடும்பங்கள்
வறுமையில்
வாழ்கின்றன.
இதுபோன்ற
அவநம்பிக்கையற்ற
நிலைமைகளை
பெருநிறுவனங்களும்
அரசாங்கமும்
ஒரு
அற்புதமான
வாய்ப்பாக
எடுத்துக்
கொள்கின்றன.
1921
ஆம்
ஆண்டில்
உருவான
இந்த
மாஸ்டர்
லொக்
நிறுவனம்
இணைந்தபூட்டுகள்,
சாதாரணபூட்டுக்கள்
மற்றும்
இது தொடர்புபட்ட
பிற
பாதுகாப்பு
சாதனங்களைத்
தயாரிக்கிறது.
செயல்பாட்டு
தலைமையகத்தை
நகரில்
தான்
பராமரித்து
வருகிறது.
இந்த
நிறுவனத்தை
1969ல்
அமெரிக்கன்
பிராண்ட்ஸ்
(பின்னர்
ஃபார்ச்சூன்
பிராண்ட்ஸ்
என்று
பெயர்மாற்றம்
பெற்றது)
வாங்கியது.
2011 இல்
ஃபார்ச்சூன்
பிராண்ட்ஸில்
இருந்து
பிரிக்கப்பட்ட
ஃபார்ச்சூன்
பிராண்ட்ஸ்
ஹோம்
அண்ட்
செக்யூரிட்டி
நிறுவனம்
தான்
மாஸ்டர்
லொக்
தொழிற்சாலையை
தற்போது
இயக்கி
வருகிறது.
1999ல்
ஃபார்ச்சூன்
பிராண்ட்ஸ்
மாஸ்டர்
லாக்
உற்பத்தியை
மெக்சிகோவுக்கும்
சீனாவுக்கும்
நகர்த்தி
மிலுவாகி
ஆலையில்
உற்பத்தியை
வெகுவாகக்
குறைத்து
விட்டது.
இது
ஐக்கிய
வாகனத்
தயாரிப்புத்
துறை
தொழிலாளர்
சங்கத்தில்
(UAW)
உறுப்பினர்களாய்
இருந்த
ஏறக்குறைய
1,154
தொழிலாளர்களுக்கு
வேலையில்லாமல்
செய்து
விட்டது.
2009ல்
UAW Local 469 ஒரு
ஐந்து
வருட
ஒப்பந்தத்திற்கு
ஒப்புக்
கொண்டு
மிலுவாகி
தொழிற்சாலைக்கு
மீண்டும்
வேலைகளை
“நாட்டிற்குள்
கொண்டுவரும்”
நிகழ்முறையைத்
தொடக்கியது.
”அறிவுக்கு
ஏற்ற
ஊதியம்”
(“pay for knowledge”)
என்கிற
ஒரு
திட்டத்தை
இந்த
ஒப்பந்தம்
நிறுவியது.
அதாவது
உள்ளூர்
மிலுவாகி
பகுதி
தொழில்நுட்பக்
கல்லூரியின்
மூலமாக
எந்திரஉற்பத்தித்
திறன்
நிர்ணயச்
சான்றிதழ்
பயிற்சியில்
(Manufacturing Skill Standards Certification)
இருக்கும்
நான்கு
பயிற்சிக்
கட்டங்களில்
ஒவ்வொரு
கட்டத்தை
முடிப்பதற்கும்
மணிக்கான
ஊதியக்
கணக்கீட்டில்
50 சென்டுகள்
ஊதிய
உயர்வாக
தொழிலாளர்களுக்குக்
கிடைக்கும்.
அதாவது
அவர்கள்
நான்கு
கட்டங்களையும்
வெற்றிகரமாக
முடித்தால்
மணிக்கு
2 டாலர்
ஊதிய
உயர்வை
அவர்கள்
காணலாம்.
மிலுவாகி
மாஸ்டர்
லாக்
தொழிற்சாலையில்
ஒரு
மணிநேரத்திற்கான
சராசரிக்
கூலி
2008ல்
19.65 டாலராக
இருந்தது.
13 டாலர்
என்பது
தொழிலாளர்
பெற்ற
மிகக்
குறைந்த
கூலியாக
இருந்தது,
வாரத்துக்கு
40 மணி
நேரம்
வேலை
செய்தால்
நான்கு
பேர்
கொண்ட
குடும்பத்தை
வறுமைக்
கோட்டுக்கு
சற்று
மேலே
பராமரிக்கப்
போதுமானதாய்
அது
இருந்தது.
மாஸ்டர்
லொக்
போன்ற
இடங்களில்
புதிதாகப்
பணியமர்த்தப்படுபவர்களுக்கு
இந்த
வறுமைக்கோட்டுக்கு
அண்மித்த ஊதியங்களை
கொடுப்பதன்மூலம்தான் வேலைகளை நாட்டினுள் கொண்டுவருவதற்கான ஒபாமாவின்
முன்னெடுப்பு
சாத்தியமாக்கப்படுகிறது.
மிலுவாகி
தொழிற்சாலையில்
கணிசமான
வேலைகள்
மீண்டும்
கொண்டுவரப்பட
இருப்பதாக
2011 ஆரம்பத்தில்
மாஸ்டர்
லொக்
மற்றும்
UAW விடம்
இருந்து
ஆரவாரமான
அறிவிப்பு
வந்தது.
ஒபாமா
நிர்வாகம்,
குறைந்த
ஊதியத்தில்
அதிக
உற்பத்தித்
திறனை
அளிக்கக்
கூடிய
அமெரிக்கத்
தொழிலாளர்
படை
குறித்த
தனது
இலட்சியப்
பார்வையை
விளங்கப்படுத்துவதற்கான
ஒரு
வாய்ப்பாக
இதனைப்
பற்றிக்
கொண்டது.
ஒபாமா
விஜயம்
செய்த
நாளில்,
மிலுவாகி
தொழிற்சாலை
முழுத்
திறனில்
412 தொழிலாளர்களுடன்
இயங்கியது,
இந்த
எண்ணிக்கை
1999ல்
வேலை
செய்த
தொழிலாளர்
எண்ணிக்கையில்
50 சதவீதத்துக்கும்
குறைவு.
2008
மாஸ்டர்
லொக்
ஒப்பந்தத்தில்
ஊதியத்தைக்
குறைக்கும்
சலுகைகள்
எதுவும்
இருக்கவில்லை
என்று
உள்ளூர்
UAW தலைமை
கூறிக்
கொள்கிறது,
ஆனால்
ஒப்பந்தத்தின்
துல்லியமான
விவரங்கள்
அளிக்கப்படவேயில்லை.
ஒபாமா
நிர்வாகம்
கட்டளையிட்டவாறான
2009 வாகனத்
துறை
பிணையெடுப்புத்
திட்டத்தில்
அமைந்த
ஊதியங்கள்
மற்றும்
நல
உதவிகளிலான
வெட்டுகள்
2013ல்
ஐந்து
வருட
மாஸ்டர்
லொக்
ஒப்பந்தம்
முடியும்போது
நிச்சயம்
பிரதிபலிக்கும்.
“நாட்டிற்குள்
கொண்டுவருதல்”
மற்றும்
“அமெரிக்க
உற்பத்தியாளர்களுக்கு
உலகளாவிய
போட்டித்
தளத்தை
சமப்படுத்தித்
தருவது”
ஆகியவற்றுக்கான
ஒபாமாவின்
முயற்சிகளை
UAW தலைவர்
பாப்
கிங்
புகழ்
பாடினார்.
தான்
பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் தொழிலாளர்களது
வாழ்க்கைத்
தரங்களைப்
பாதுகாப்பதைப்
பற்றி
கிங்
எதுவொன்றும்
சொல்லவில்லை.
வாகனத்
தயாரிப்பு
நிறுவனங்கள்
இலாபத்தில்
இயங்குவதற்கு
“என்னவெல்லாம்
அவசியமோ
அவற்றைச்
செய்வதற்கான
விருப்பமும்
திறனும்”
UAW விடம்
உள்ளதாக
கிங்
தெரிவித்திருந்தார்.
கிங்
தொடங்கி
அவரின் கீழமைந்த
UAW நிர்வாகிகள்
எல்லாருமே
தொழிலாளர்களுக்குக்
கிடைத்துவரும்
நல
உதவிகளையும்
ஊதியங்களையும்
பேரத்தில்
விட்டுக்
கொடுக்க
சேவை
செய்கின்றனர்.
அதேசமயத்தில்
நிலுவைத்தொகை
வருவாயாக
அவர்களுக்கு
தாராள
வருவாய்
கிடைக்கிறது.
2008 வாகனத்
துறை
பிணையெடுப்பில்
UAW அதிகாரத்துவம்
உடந்தையாக
இருந்தமையானது
அது
இனியும்
தொழிலாள
வர்க்கத்தின்
நலன்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தவில்லை
தன்னை
பெருநிறுவனத்தின்
தொழிலாளர்
நிர்வகிப்பு
கருவியாக
உருமாற்றிக்
கொண்டு
விட்டிருக்கிறது
என்பதையே
தெள்ளத்
தெளிவாக
காட்டியிருக்கிறது.
குடியரசுக்
கட்சியை
சேர்ந்த
விஸ்கான்சின்
ஆளுநர்
ஸ்காட்
வாக்கர்
போன்றவர்கள்
தொழிற்சங்கங்களை
முற்றுமுதலாய்
அகற்றுவதன்
மூலமாக
மலிவு
ஊதிய
தொழிலாளர்
படையை
உருவாக்க
நம்பிக்கை
கொண்டுள்ளனர்.
ஒபாமாவும்
ஜனநாயகக்
கட்சியினரும்,
அதற்கு
நேரெதிராய்,
தொழிற்சங்க
அதிகாரத்துவத்தின்
உதவியுடன்
தொழிலாளர்களை
வறுமை
ஊதியங்களை
ஏற்கச்
செய்வது
தான்
சிறந்த
வழி
என்று
வாதிடுகின்றனர்.
விஸ்கான்சினில்
சென்ற
வசந்த
காலத்தில்,
வேலைகள்,
ஊதியங்கள்
மற்றும்
நல
உதவிகளில்
வாக்கர்
நடத்திய
வெட்டுகளையும்
வேலையிட
உரிமைகள்
மீது
அவரது
அரசாங்கம்
தொடுத்த
தாக்குதலையும்
எதிர்த்து
பல
பத்து
ஆயிரக்கணக்கில்
தொழிலாளர்கள்
மற்றும்
மாணவர்கள்
ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
தொழிற்சங்கங்களில்
இருந்து
சுயாதீனப்பட்ட
வகையில்
வெடித்த
இந்த
ஆர்ப்பாட்டங்களை
ஜனநாயகக்
கட்சிக்குப்
பின்னால்
திசைதிருப்பிவிட்டு
இறுதியாக
அவற்றை
கலைத்து
விடுவதற்கு
ஜனநாயகக்
கட்சியினரும்
தொழிற்சங்க
நிர்வாகிகளும்
கூட்டுச்
சேர்ந்து
வேலை
செய்தனர்.
தன்னிச்சையாக
வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்ட
ஆசிரியர்களை
வேலைக்குத்
திரும்புமாறு கூறிய
தொழிற்சங்கத்
தலைவர்கள்
ஒரு
பொதுவேலைநிறுத்தத்திற்கான மக்கள் விருப்ப அழைப்புகள்
விடுப்பதற்கும்
ஊக்கமளிக்கவில்லை.
ஊதியங்களிலும்
நல
உதவிகளிலும்
சில
குறைப்புகள்
செய்வதற்கு
ஆதரவாகக்
குரல்
கொடுக்கவும்
கூட
செய்தனர்.
இந்தப்
போராட்டத்தை
கூட்டுப்
பேச்சுவார்த்தைக்கான
உரிமை
பற்றிய
பிரச்சினை
என்கிற
அளவில்
மட்டும்
மட்டுப்படுத்திய
தொழிற்சங்கங்கள்
தொழிலாளர்களின்
அரசியல்
உறுதிப்பாட்டை
மறுதேர்விற்கான பயனற்ற
பிரச்சாரங்களுக்குள்
மாற்றின. |