WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பா முழுவதற்குமான சிக்கன நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ஏற்கிறது
By Peter Schwarz
3 March 2012
use
this version to print | Send
feedback
வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில்
நடந்த உச்சிமாநாட்டில்
“நிதிய
உடன்பாடு”என்று
அழைக்கப்படுவதில் கையெழுத்திட்டனர்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கடுமையான நிதியக் கட்டுப்பாட்டைத்
தக்கவைத்துக் கொள்ள இந்த உடன்பாடு ஈடுபடுத்துகிறது. அவர்கள் ஜேர்மனியில் இருக்கும்
“ஒரு
கடன் தடை”
போன்ற வகையில் அரசியலமைப்பில் கடன் வரம்பு குறித்த விதி ஏற்கவேண்டும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. வரவு-செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை உச்சவரம்பான மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு அதிகம் என்று இருந்தால், ஐரோப்பிய
நீதிமன்றத்தில் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட முடியும். இதையொட்டி தானே
அபராதங்களைச் சுமத்தும் செயற்பாடுகள் தூண்டிவிடப்படும். உடன்பாட்டில் கையெழுத்திடாத
நாடுகள் ஐரோப்பிய உறுதிப்பாட்டுக் கருவியிலிருந்து (European
Stability Mechanism -ESM),
அதாவது நிரந்தர ஐரோப்பிய மீட்பு நிதியில் இருந்து உதவி பெறத் தகுதி
அற்றவையாகப் போய்விடும். இந்நிதியில் இப்பொழுது 500 பில்லியன் யூரோக்கள் இருக்கும்;
ஜூலை மாதம் இது செயல்படத் தொடங்கும்.
நிதிய உடன்பாடு,
அரசாங்கச் செலவுகளைக் குறைக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு
நாடுகளுக்கு அழுத்தங்களை அதிகரிக்கிறது. தேர்தல் முடிவுகள், அரசாங்க மாற்றம்
இவற்றைப் பொருட்படுத்தாமல் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதற்கு அது
உறுதியளிக்கிறது. பாராளுமன்றங்களின் மிக முக்கியமான அதிகாரமான வரவு-செலவுத்
திட்டத்தின் மீது கட்டுப்பாடு என்பதை இது திறமையுடன் களைகிறது; அதேபோல் நிதியக்
கொள்கைகள் மீது எந்த வகைச் செல்வாக்கையும் வாக்காளர்கள் கொள்வதையும்
தடுத்துவிடுகிறது.
ஜேர்மனியச் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் இந்த ஆழ்ந்த ஜனநாயக விரோத
உடன்பாட்டை, அவருடைய முன்முயற்சியால் வந்துள்ளதை
“ஐரோப்பிய
ஒன்றியத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்”என்று
விவரித்தார்.
உடன்பாட்டில் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் 27ல் மொத்தம் 25 நாடுகள்
கையெழுத்திட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான நாடுகளில் தேசியப் பாராளுமன்றங்களில் இது
இசைவு பெற வேண்டும்; அயர்லாந்தில் செயற்பாட்டிற்கு வருமுன் இது பொதுமக்கள்
வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டும். அதற்கு 2013 தொடங்கி ஒரு கால வரம்பு உள்ளது.
பிரித்தானியா மற்றும் செக் அரசாங்கங்கள்தான் கையெழுத்திட மறுத்துவிட்டன; சிக்கன
நடவடிக்கைகளை அவைகள் எதிர்ப்பதால் அல்ல, தங்கள் தேசிய இறைமையில் உடன்பாடு
குறுக்கிடுகிறது என்ற அடிப்படையில்.
நிதிய உடன்பாடு ஐரோப்பிய பொருளாதாரத்தின் நெருக்கடியைத்தான்
தீவிரப்படுத்தும். உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஐரோப்பிய ஆணையம் இந்த ஆண்டும் யூரோப்
பகுதியில் ஆழ்ந்த மந்தநிலை ஏற்படும் என்று கணித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. 17
யூரோ நாடுகளில் 7ல் பொருளாதாரம் சுருக்கம் அடையும், மற்ற 10 நாடுகளில்
பெயரளவிற்குத்தான் வளர்ச்சி அடையும் என்று அறிக்கை கூறியுள்ளது.
இப்பொழுது நெருக்கடி ஐரோப்பாவின் பொருளாதார அளவில் வலிமையான
நாடுகளான நெதர்லாந்து போன்றவற்றையும் அடைந்துவிட்டது; இதன் பொருளாதாரம் ஒரு தீவிர
சரிவைக் கண்டுள்ளது. டச்சு அரசாங்கம் 2012ல் அதன் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை
வரம்பு 3 சதவிகிதத்திற்கு மேல் மிகாமல் இருப்பதற்கு இன்னும் கூடுதலான 15 பில்லியன்
யூரோக்களைச் சேமிக்க வேண்டும். நாட்டின் பெருகிய சமூக, அரசியல் நெருக்கடியின்
விளைவாக அது சரியும் ஆபத்தில் உள்ளது.
யூரோப் பகுதியில் வேலையின்மை விகிதம் ஜனவரி மாதம் 10.7 சதவிகிதம்
எனத் தாக்கியது—இது
யூரோ அறிமுகப்படுத்தியதில் இருந்து மிக உயர்ந்த அளவு ஆகும். ஜனவரி மாதம் மட்டும்
185,000 பேர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். ஸ்பெயின் நாட்டில் வேலையின்மை விகிதம்
ஒரு மாதத்திற்குள் 2.4 சதவிகிதம் அதிகரித்தது; இதற்குக் காரணம் சமீபத்தில்
இருத்தப்பட்ட கன்சர்வேடிவ் அரசாங்கம் அறிமுகப்படுத்திய சிக்கன நடவடிக்கைகள்தான்.
வேலையின்மை உத்தியோகபூர்வமாக 23.3 சதவிகிதத்தினரைத் தாக்கியுள்ளது; அதாவது
கிட்டத்தட்ட நான்கு ஸ்பெயின் மக்களில் ஒருவர் வேலையில் இல்லை. இளைஞர்களுக்கான
வேலையின்மை விகிதம் கணிசமாக 50 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது.
நிதிய உடன்பாடு வேலையின்மையை மேலும் உயர்த்தும்—இது
ஒரு சர்வதேச அளவில் இருக்கும். மந்தநிலைமையும் வெகுஜன வேலையின்மையும் ஊதியங்களைக்
குறைக்க, பணிநிலைமைகளை கடுமையாக்க மற்றும் முந்தைய ஆறு தசாப்தங்களில் தொழிலாள
வர்க்கம் பாடுபட்டு வெற்றியடைந்த சமூகநல தேட்டங்களைத் தகர்க்க நெம்புகோலாகப்
பயன்படுகிறது.
இவ்வகையில் பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டில்,
“போட்டித்தன்மை”
குறித்து அதிக பேச்சுக்கள் உள்ளன—இது
வளைந்து கொடுக்கும் தொழிலாளர் நிலைமைகள் மற்றும் பொதுநல வெட்டுக்கள் பற்றி
அலங்காரமாகக் கூறப்படும் சொல்லாகும். ஐரோப்பிய ஒன்றியத் தலைவரான
Herman Van Rompuy
வணிகப் போட்டித்தன்மையை முன்னேற்றுவித்து
“வேலைகளைத்
தோற்றுவிக்க”
குறிப்பான பரிந்துரைகள் கொடுக்கப்படும் என்னும் உறுதிமொழியைக்
கொடுத்துள்ளார்.
இதற்கு முன்மாதிரி கிரேக்கம்தான்; அங்கு அரசாங்கம் மக்களின் பரந்த
பிரிவுகளுடைய வாழ்க்கைத் தரங்களை 50 சதவிகிதம் வரை குறைப்பதற்கு ஏராளமான
பணிநீக்கங்களைப் பொதுத் துறையில் செய்தல், பொது, தனியார் பிரிவு ஊதியங்கள்,
ஓய்வூதியங்கள் ஆகியவற்றை வெட்டுதல், சுகாதார, மற்றும் சமூகநலச் செலவுகளைத்
தீவிரமாகக் குறைத்தல் ஆகியவற்றைச் செயல்படுத்தியது.
முந்தைய உச்சிமாநாடுகளைப் போலன்றி, கிரேக்க நெருக்கடி இந்த
வாரத்தில் குவிப்பாகவில்லை. யூரோக் குழுவின் தலைவரும் ஜேர்மனிய நிதி மந்திரியுமான,
Wolfgang Schäuble
கிரேக்க அரசாங்கத்தை
“முன்னேற்றம்”
கொண்டுவந்துள்ளதற்கு பாராட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச
நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவைகள் முக்கிய சர்வதேச
வங்கிகளுக்காக முகவர் அமைப்புகளாகச் செயல்படுபவை கோரிய அனைத்து நடவடிக்கைகளையும்
இது செயல்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், யூரோப் பகுதியின் நிதி மந்திரிகள் கிரேக்கத்திற்கு
இரண்டாவது நிதியப் பொதியாக 130 பில்லியன் யூரோக்களைக் கொடுக்க ஒப்புக் கொண்டனர்.
ஆனால் இதுவரை இந்நிதியில் இருந்து ஒரு சென்ட் கூட கிரேக்க அரசாங்கத்திற்குச்
செல்லவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தைத் திவால்தன்மையில் தள்ளுவதற்கு நேரத்தை
எதிர்நோக்கியிருக்கிறது என்பதற்கான வலுவான அடையாளங்கள் உள்ளன; இது தொடர் விளைவைத்
தவிர்த்து போதுமான பாதுகாப்பைக் கடன்கொடுத்துள்ள நாடுகளுக்குக் கொடுக்கப்பட்டபின்
செயல்படுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உச்சமாநாட்டிற்கு முன்னதாக நிதி மந்திரிகள்
மீண்டும் கூடி, வங்கிகளுக்கு உரித்தானவை என்று கருதப்படும் நிதியத் தொகுப்பின்
பகுதிகளை வெளியிட்டனர். கிரேக்க அரசாங்கப் பத்திரங்களை வைத்திருக்கும் வங்கிகள் 107
பில்லியன் யூரோக்களைத் தள்ளுபடி செய்வதற்கு இது வங்கிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும்.
(இவை ஏற்கனவே அவற்றால் பெருமளவு செய்யப்பட்டுவிட்டன); அவற்றிற்கு 93 பில்லியன்
யூரோக்கள் நிதியப் பொதி ஒன்று அளிக்கப்படும். இது கிரேக்க அரசாங்கத்தின் மொத்தக்
கடனில் கூடுதலாச் சேர்க்கும்.
On Wednesday evening, the finance ministers awarded €23 billion
to Greek banks and another €35 billion to international financial institutions
as compensation for their losses. A further €35 billion goes to the European
Central Bank as collateral to maintain the liquidity of Greek banks. However,
this money will flow only if at least 75 percent of creditors agree to a
voluntary debt “haircut” by March 8.
புதன் மாலை நிதி மந்திரிகள் கிரேக்க வங்கிகளுக்கு 23 பில்லியன்
யூரோக்களையும், சர்வதேச நிதிய நிறுவனங்களுக்கு 35 பில்லியன் யூரோக்களையும் அவற்றின்
இழப்புக்களுக்கு ஈடாகக் கொடுத்தனர். மற்றொரு 35 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய
மத்திய வங்கிக்கு கிரேக்க வங்கிகளின் நீர்மையைத் தக்க வைக்க உத்தரவாதம்
அளிப்பதற்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பணம் மார்ச் 8ம் தேதியையொட்டி கடன்
கொடுத்தவற்றில் 75 சதவிகிதம் தன்னார்வத்துடன்
“வெட்டப்படுதலுக்கு”
ஒப்புக்கொண்டால்தான் அளிக்கப்படும்.
இப்பிணை எடுப்புப் பொதியின் எஞ்சிய பகுதி நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதிகள் மார்ச் 20ம் திகதிக்குள் கிரேக்கம் கடன்
திருப்பிக் கொடுத்தலில் தவறு செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் உள்ளன; அப்பொழுது 14.5
பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய பத்திரங்களுக்குப் பணம் திருப்பி அளிக்கப்பட
வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வாளர்கள்
கிரேக்க அரசாங்கம் 38 குறிப்பான செலவுக் குறைப்புத் திட்டங்களை
செயல்படுத்திவிட்டனவா என உறுதி செய்தபின்தான் கொடுக்கப்படும்; அரசாங்கம் ஏற்கனவே
இதற்கு உறுதியளித்துள்ளது. இதன் பொருள் எந்த நேரமும் பணம் நிறுத்தி வைக்கப்படலாம்
என்பதாகும்.
உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, டிசம்பர் மாதத்திலிருந்து இரண்டாம்
தடைவையாக, குறைந்த வட்டிக் கடன்களை வங்கிகளுக்கு மடைதிறந்தாற்போல் கொடுத்தது.
ஐரோப்பிய மத்திய வங்கி கொடுக்கும் அரை டிரில்லியனுக்கும் மேலான மூன்றாண்டுகால
கடனுக்கு 1 சதவிகிதம் மட்டும்தான் வட்டி இருக்கும். இது நிதிய உயரடுக்கிற்கு
மகத்தான பரிசு மழை ஆகும்; அது இந்த குறைவூதிய ரொக்கத்தை அரசாங்கப் பத்திரங்களில்
முதலீடு செய்து, நான்கு முதல் ஆறு மடங்கு இலாபங்கள் வருவதை உறுதியாக்கிக் கொள்ளும்.
“மீட்புப்
பொதி”
என்று அழைக்கப்பட்டதைப் போலவே,
“இந்த
நடவடிக்கைகளும் பெரிய வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒருவேளை கிரேக்கம்
கொடுக்க முடியாமல் போனால், வங்கிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது; அதே
நேரத்தில் நிதிய உடன்பாட்டின் விதிகளின்கீழ், செயல்படுத்தப்படும் வெட்டுக்கள்
கண்டத்தை இன்னும் ஆழ்ந்த சரிவில் தள்ளும்.
வங்கிகளின் நிலைமையை வலுப்படுத்துவதற்கு மற்றொரு முடிவும்
உதவியுள்ளது.
The International Derivatives Association (ISDA)
வியாழனன்று கிரேக்க அரசாங்கப் பத்திரங்களுக்கு வெட்டு என்பது ஒரு தவறு எனக்
கருதப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது. இதன் பொருள் கிரேக்க அரசாங்கப்
பத்திரங்கள் கடன் மாற்று முறைகளில்
credit default swaps
(CDS)
பணம் தள்ளுபடி செய்யப்படுவது கிரேக்க அரசாங்கத்தின் மீது பெரும் பணத்தைக்
கொடுக்கும் சுமையை ஏற்படுத்தாது என்பதாகும். இது முக்கிய வோல் ஸ்ட்ரீட்
வங்கிகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில் முக்கியத்துவம் கொண்டது; இல்லாவிடின் அவைகள்
பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடைய
CDS
ஒப்பந்தங்கள் அமெரிக்க வங்கிகள் வெளியிட்டவற்றில் வாங்கியதில்
இருந்து திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும்.
அடுத்த சில வாரங்களில் உண்மையிலேயே கிரேக்கம் திவால் ஆனால், தனியார்
முதலீட்டாளர்கள் அதிக அளவிற்குத் தப்பிவிடுவர். இந்த இழப்புக்கள் அரசாங்கக்
கருவூலங்களால் ஏற்கப்படும்; அவைகள் அவற்றை தொழிலாள வர்க்கத்தின் மீது
சுமத்திவிடும்.
இந்த வழிவகையில் ஐரோப்பிய அரசாங்கங்கள் தொழிற்சங்கங்களின் முழு
ஆதரவையும் நம்பமுடியும்; அவற்றுடன்தான் சிக்கன நடவடிக்கைகளை சுமத்த அவைகள்
ஒத்துழைக்கின்றன.
மக்கள் சீற்றத்திற்கு நடுவே தொழிற்சங்கங்கள் காணும் எதிர்ப்பிற்கு
அரசியல் மறைப்பு தரும் வகையில் ஐரோப்பிய தொழிற்சங்க கூட்டமைப்பு (ETUC)
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக உச்சிமாநாட்டிற்கு முன் ஒரு ஐரோப்பிய நடவடிக்கைத்
தினத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்தகைய பரவலான, அதிக மக்கள் பங்கு பெறாத
நடவடிக்கைகள் நிதிய உடன்பாட்டிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்கங்கள்
திரட்டுவதை விரும்பவில்லை என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டின.
ஜேர்மனியில் இந்த எதிர்ப்பானது ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின்
(DGB)
எஜமானர் மைக்கேல் சோமர் மாக்டிபெர்க் இரயில் நிலையத்தில் எடுத்துக் கொண்ட
புகைப்படமும் பிரான்ஸ்-ஜேர்மனி எல்லையில்
Saarbrücken
க்கு அருகே நடந்த ஒரு சிறு அணிவகுப்பின் புகைப்படமும் மட்டுமேதான்
இருந்தன. எதிர்ப்பின் விவரங்களைக் கேட்டறிய முற்பட்ட செய்தியாளர்கள் பெரும்பாலான
தொழிற்சங்கத் தலைமையகங்களுக்கு நடவடிக்கை தினம் நடக்கிறது என்பது பற்றிக் கூட
தெரியவில்லை என்று புலனாயிற்று.
பிரஸ்ஸல்ஸில் தொழிற்சங்க அதிகாரிகள் ஒரு முக்கூட்டு சமூக
உச்சிமாநாடு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களிடம் நேரடியாக ஒரு
பெயரளவு அணிவகுப்பை நடத்தியபின் சிக்கன உடன்பாடு செயற்படுத்தப்படுவதைக் குறித்து
தாங்களும் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்று கோரினர். அதனுடைய வலைத் தளத்தில்
ETUC, “சமூகப்
பங்காளிகள் தொழிற்சந்தை குறித்த அனைத்து முடிவுகளிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும்”
என்று அறிவித்துள்ளது. |