WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
சிரியாவில் பணயத்தில் இருப்பது என்ன?
Chris Marsden
1 March 2012
use
this version to print | Send
feedback
அமெரிக்காவும் மற்ற முக்கியச் சக்திகளும் சிரியாவில் கொண்டிருக்கும் உண்மையான
நோக்கங்களையும் விருப்பங்களையும் சர்வதேச ஊடகங்கள் மறைக்கும் சதியில்தான்
ஈடுபட்டுள்ளன.
பஷிர்
அல்-அசாத்தின் ஆட்சியை
“மனித
குலத்திற்கு எதிரான குற்றங்கள்”
இழைக்கிறது எனக்கண்டிக்கும் தீர்மானம் ஒன்று ஐ.நா.வில்
நிறைவேற்றப்படுவதற்கான புதிய உந்துதலுடன், செய்தியாளர்கள் உட்பட ஹோம்ஸ் நகரில்
பெருகும் இறப்பு எண்ணிக்கைகள் பற்றியும் முரசுகள் முழங்குகின்றன. இத்தகைய செய்தி
ஊடகங்களின் ஏராளமான தகவல்கள் எதிர்த்தரப்பின் சமூக மற்றும் அரசியல் தன்மை பற்றிய
புறநிலைப் பகுப்பாய்வை ஒதுக்குகின்றன, ஏகாதிபத்திய சக்திகளுடன் அதன்
பிணைப்புக்களையும் பொருட்படுத்துவதில்லை மற்றும் தற்போதைய நெருக்கடியின் வரலாற்று
மூலங்கள் பற்றி ஆராய்வதும் இல்லை. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்
தூண்டிவிட்டுள்ள உள்நாட்டுப் போரினால் விளைந்துள்ள இறப்பு எண்ணிக்கைகள் அனைத்தும்
அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளினால் செய்யப்பட்டவையே எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு
லிபியாவில் நடத்தப்பட்ட குருதிகொட்டி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின்
காட்சிகளைத்தான் இந்த ஒருங்கிணைந்த மக்கள் கருத்தைத் திரிக்கும்,
“மனித
உரிமைகள்”
என்ற பெயரில் இராணுவத்
தலையீட்டிற்கு ஆதரவைத் திரட்டும் பிரச்சாரத்திற்கு முயல்கிறது. உடனடிக் கோரிக்கை
“மனிதாபிமானத்
தாழ்வாரங்களை”
நிறுவி, அவைகள் வளைகுடா நாடுகள், துருக்கி மற்றும் நேட்டோ
ஆகியவற்றால் இராணுவத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும், மற்றும் எதிர்த்தரப்பிற்கு
ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்பதாகும்.
தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களுடைய மனிதாபிமான உள்ளுணர்வுகளை இழிந்த முறையில்
தூண்டி மற்றொரு காலனித்துவ தலையீட்டிற்கு அவர்களின் ஆதரவை இழுக்கும் இந்த
முயற்சிகள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும். சிரியா உறுதி குலைக்கப்படுவது என்பது
அசாத்திற்கு எதிரான வெகுஜன மக்கள் எழுச்சிகளின் விளைவினால் அல்ல. எகிப்தில் வெடித்த
புரட்சிகர இயக்கத்தைப் போல் இல்லாமல், சிரிய எதிர்ப்பிற்கு முக்கிய நகர்ப்புற
மையங்களான டமாஸ்கஸ், அலெப்போ போன்றவற்றில் எந்தவித ஆதரவும் கிடையாது; அங்கு ஒரு
சுன்னி ஆட்சி நிறுவப்படுவது சிரியாவின் சிறுபான்மையினரைத் துன்புறுத்தும் என்றுதான்
அஞ்சப்படுகிறது.
அசாத்தின்
அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எதிர்ப்புக்கள் தொடங்கியவுடன், வாஷிங்டன் பிராந்திய
சக்திகளான சௌதி அரேபியா, கட்டார், துருக்கி ஆகியவற்றுடன் இணைந்து ஒரு வலதுசாரிக்
குறுங்குழுவாத எதிர்த்தரப்பிற்கு ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக
அத்துடன் நெருங்கிப் பழகியது. ஏகாதிபத்திய ஆதரவைக் கொண்டிருக்கும் எதிர்த்தரப்பு,
வலதுசாரி முஸ்லிம்
பிரதர்ஹுட்டின் தொடர்புடைய அடிப்படை இஸ்லாமியவாதிகளின் தலைமையில் உள்ளது. நீண்ட
காலம் CIA
உடன் தொடர்புடைய
முதலாளித்துவ நபர்களுடனும் ஆட்சியில் முன்பு இருந்த சக்திகளுடனும் இணைந்து இவை
சிரிய தேசியக் குழு (SNC)
மற்றும் சுதந்திர சிரிய இராணுவம் ஆகியவற்றில் மேலாதிக்கும்
செலுத்துகின்றன.
சிரியாவிற்கு உபதேசிக்கும் பல செய்தியாளர்களுக்கு மனிதாபிமான அக்கறைகள் ஒன்றும்
எதிர்தரப்பிற்கு மேற்கத்தைய ஆதரவைத் தூண்டிவிடவில்லை என்பது நன்கு தெரியும்.
பெப்ருவரி 26ம் திகதி நியூ யோர்க் டைம்ஸில்,
Steven Erlanger,
சிரியாவில் நடக்கும் மோதல்
“ஏற்கனவே
அப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் இருக்கும் முக்கிய சக்திகளின் பதவிப் போர்
ஆகிவிட்டது”
என்பதை
ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கூறுகிறார்:
“வாஷிங்டன்,
ஐரோப்பா மற்றும் சௌதி அரேபியா மற்றும் வளைகுடாவின் சுன்னிக்களைப் பொறுத்தவரை, திரு
அசாத்தின் விதியைப் போலவே ஈரான் மீதான தாக்குதலுக்கான பாதிப்பும் முக்கியத்துவம்
கொண்டது.”
ஒரு மத்திய
கிழக்கு பற்றிய பிரெஞ்சு வரலாற்றாளர்
Olivier Roy
ஐ எர்லாஞ்சர்
மேற்கோளிட்டுள்ளார். அவர் அப்பட்டமாக எழுதுவது:
“அரபு
வசந்தம் என்று அழைக்கப்படுவதினால், அப்பிராந்தியத்தின் பூகோள மூலோபாயக் கருத்தை
மாற்றக்கூடிய ஒரே நாடு சிரியாதான் எனலாம்.... இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டால், நமக்கு
முற்றிலும் மாறுபட்ட புதிய தரைத் தோற்றத்தை ஏற்பட்டுவிடும்.”
தரைத்
தோற்றத்தை மாற்றுவது என்பதின் பொருள் ஈரானைத் தனிமைப்படுத்துவது என்பதாகும்;
அதுதான் எண்ணெய் வளமுடைய மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவை இணையும் இடத்தில்
உள்ளது; அதை அகற்றுவது என்பது இப்பிராந்தியத்தில் அமெரிக்க மூலோபாயத்தை நிறுவுவதில்
உள்ள தடையை அகற்றுவது என்ற பொருளைத் தரும்.
இந்த
இலக்கைச் சாதிப்பதற்கு அசாத்தை இராணுவத்தின் மூலம் அகற்றும் திட்டங்கள் செய்தி
ஊடகத்திடம் தொடர்ந்து கசியவிடப்பட்டு வருகின்றன. இவைகள் பொதுமக்கள் கருத்துக்களை
அடுத்து என்ன வரப்போகிறது என்பதைப் பற்றி உருவாக்குவதைத் தயாரிக்கின்றன. சௌதி
அரேபிய அரச குடும்பத்துடன் பிணைந்துள்ள
Asharq Al-Awsat
பெயரிடப்படாத அமெரிக்க
இராணுவ ஆதாரம் ஒன்றை மேற்கோளிட்டு, பென்டகன் சிரியா மீது தலையிடத் தயாரித்து
வருகிறது என்றும் இது 1998ல் கொசோவோ மூலோபாயத்தைத் தளம் கொண்டிருக்கும் என்றும்
தகவல் கொடுத்துள்ளது. இது முதலில்
“ஒரு
பாதுகாப்புப் பகுதியை”
துருக்கி எல்லைக்கு
அருகே நிறுவுவதின் மூலம் தொடங்கும்; அதற்குப்பின்
“மனிதாபிமான
உதவி... முதலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அதன்பின் நேட்டோ சக்திகள்
துருக்கியில் இருந்து செயற்படுவது தொடங்கும்.”
இது
“கொசோவோவோவில்
ஒரு பிரத்தியேகமான வான் ஒதுக்கீட்டுப் பகுதி ஏற்படுத்தப்பட்டது மற்றும் ஈராக்கில்
முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைன் அகற்றப்படுவதற்கு முன் சுமத்தப்பட்டது”
ஆகியவை போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
ஐ.நா.வின்
மனித உரிமைகள் ஆணையமானது
“ஹோம்ஸ்,
தெரா, ஜபடானி இன்னும் பல பகுதிகளுக்கு”
உதவி தருவதற்கு
“மனிதாபிமான
அமைப்புக்களை”
நிறுவும் அழைப்பிற்கு ஒப்புதல் கொடுக்க உள்ளது. அதன் பின் மற்றொரு
வரைவுத் தீர்மானம் ஒன்றை, இப்பகுதிக்குள் செல்வதற்கான தேவை குறித்ததை ஐ.நா.
பாதுகாப்புச் சபைக்கு அளிக்கப்படும்.
இதுவரை
மேற்கத்தைய சக்திகளின் கரங்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பது மாஸ்கோ மற்றும்
பெய்ஜிங் உடைய எதிர்ப்பு மட்டும் அல்ல; சிரிய எதிர்ப்பில் இருக்கும் அறியப்பட்டுள்ள
அல்கெய்டா கூறுபாடுகள் இருப்பது என்னும் சங்கடமும் அல்ல—லிபியாவில்
அத்தகைய சக்திகளுடன் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் இணைந்து
செயல்பட்டன. பிபிசியிடம் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன்
ஒப்புக்கொண்டுள்ளபடி,
“வெளி
தலையீட்டிற்கு எதிர்ப்பானது சிரியாவிற்குள் மட்டும் அல்லாமல் சிரியாவிற்கு
வெளியேயும் இருப்பது”
என்பது ஓர் உண்மை.
தற்பொழுது
எந்த ஒரு அரசியல் சக்தியும்,
போருக்கு கிளின்டன்
மேற்கோளிடும் பொது விரோதம் குறித்து கருத்துக்களைக் கூறவில்லை—வெற்றுத்தன
அரபு ஆட்சிகளோ மற்றும் குறைந்தபட்சம், பல சிறிய, பெரிய போலி இடது கட்சிகளோ,
ஒருகாலத்தில் சோசலிஸ்ட், ஏகாதிபத்திய-எதிர்ப்பாளர்கள் என்று கூறிக் கொண்டவையோ அல்ல.
ஐரோப்பிய
சக்திகளின் தீவிர ஆதரவுடன் அமெரிக்காவால் நடத்தப்படும் தொடர்ச்சியான காலனித்துவ
தீரச்செயல்களில் சிரியா குறித்தது சமீபத்தியது ஆகும். 1991 முதல் வளைகுடாப்போர்,
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தில் இருந்து வெளிப்பட்ட முதலாளித்துவக் கூறுபாடுகளால்
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு நடந்த வேளையிலேயே ஏற்பட்டது. அமெரிக்கா இதை ஒரு
வரலாற்று வாய்ப்பாக பயன்படுத்தி உலகம் முழுவதிலும் வரலாற்றுக் கடிகாரத்தை பின்னே
தள்ளிவைக்க முற்பட்டுள்ளது.
இரண்டாம்
உலகப் போருக்குப் பின் நேரடிக் காலனித்துவ ஆட்சியிலிருந்து பின்வாங்குதல் என்பது
பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் வெளிப்பட்டதை அடுத்து அவசியமாயிற்று;
சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சீரழிவு இருந்தபோதிலும், அவை 1917ம் ஆண்டு அக்டோபர்
புரட்சியில் இருந்து ஊக்கம் பெற்றன.
அங்கெல்லாம்
நிறுவப்பட்ட முதலாளித்துவ ஆட்சிகள், ஏகாதிபத்தியத்திலிருந்து தொழிலாள வர்க்கம்
மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலையை பிரதிநிதித்துவம் செய்யவில்லை.
ஆயினும்கூட தன்
ஆட்சிக்கு இத்தகைய சவால் குறித்து வாஷிங்டன் மனக்காயம் உற்று தன் கட்டுப்பாட்டை,
இரத்தக்களறித் தலையீடுகள், இரகசிய, நேரடிப் போர்கள் மற்றும்
வலதுசாரி இயக்கங்கள், ஆட்சிகளுக்கு ஆகியவற்றிற்கு ஆதரவு என்னும் முறையில் மீண்டும்
நிறுவ முற்பட்டது. ஒரு மிகப் பெரிய சக்தி என்னும் நிலை மாஸ்கோவிற்கு
முடிந்துவிட்டதை அது கண்டது; இதையொட்டி அதற்குத் தன் இராணுவ மேலாண்மை நிலையைப்
பயன்படுத்தத் தடையற்ற சுதந்திரமும் முக்கியமான எண்ணெய் உற்பத்தி செய்யும் மூலோபாயப்
பிராந்தியங்களிலும் தன் மேலாதிக்கத்தை நிறுவ வாய்ப்பு கிடைத்துள்ளது. இதைத்
தொடர்ந்துதான் பொஸ்னியா, கொசோவோ, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில்
தலையீடுகள் ஏற்பட்டுள்ளன.
தற்போதைய நவ
காலனித்துவ ஆதிக்கத்திற்கான புதிய சுற்றுப் போர்கள் பெருமளவில் சமூக ஜனநாயகவாதிகள்,
பசுமைவாதிகள், தாராளவாதிகள், மற்றும் பல போலி சோசலிசக் குழுக்கள் ஆகியவற்றின் பின்
ஆதரவில் வந்திருக்கும் நிலையைக் கொண்டுள்ளன.
இவைகளனைத்தும் தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக வாஷிங்டன், லண்டன்,
பாரிஸ் மற்றும் பேர்லினுடைய அறநெறி உயர்நிலை எனக் காட்டிக் கொள்வதை
எதிரொலிக்கின்றன.
“மனித
உரிமைகள்”,
மற்றும் “ஜனநாயகம்”
என்று ஒவ்வொரு புதிய போருக்கும் ஆதரவு என்பதற்கு கடந்த போரில் நடந்த
குற்றங்களைப் பற்றிய நினைவு மறதி வசதியாகத் தேவைப்படுகிறது. இந்த வாரம் கிளின்டன்
அசாத்தை ஒரு போர்க் குற்றவாளி என்று விவரித்தார். ஆனால் அமெரிக்கா நிகழ்த்தியுள்ள
போர்க் குற்றங்கள், 2004ல் ஈராக்கிய நகரம் பல்லுஜாவைத் தகர்த்தது என்பது அசாத்
செய்யும் எதையும் அற்பமானதாக்கிவிடும் என்பதையும் உலகம் அறியும்.
இது,
அனைத்து வகைத் தாராளவாத தலையீட்டாளர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை; அவர்கள்தான்
ஐ.நா.வின்
“பாதுகாக்கும்
பொறுப்புக் கோட்பாட்டிற்கு”
பேராதரவு கொடுப்பவர்கள்; இது தயாரிப்பில் இருக்கும் எத்தகைய
ஏகாதிபத்தியக் கொள்கை நடவடிக்கையும் நெறிப்படுத்த உதவும். இவர்களுடைய அறநெறிச்
சீற்றம் எப்பொழுதும் தேர்ந்தெடுத்த வகையில் இருக்கும்; தங்கள் செல்வச் செழிப்புடைய
வாழ்க்கை முறையைக் காப்பாற்றும் விருப்பம், நிதியத் தன்னலக்குழுவின் நம்பிக்கைக்கு
உரிய பாதுகாவலர்கள் என்னும் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவது ஆகியவற்றின் மூலமாகும்.
சிரியாவிற்கு எதிரான போர் என்பது ஈரான் மீது இலக்கு கொள்ளுவதற்கு செல்லும்
படியாகத்தான் இருக்கும். இது ஏற்கனவே மத்திய கிழக்கை சுன்னி-ஷியா அச்சின்படி இரு
பிரிவுகளாகச் செய்துவிட்டது. இது விரைவில் ஒரு பிராந்திய மோதலாக நேரடி மோதல் ஒன்றை
அமெரிக்காவிற்கும், சிரியா மற்றும் ஈரானின் மூலோபாய பங்காளிகளான ரஷ்யா-சீனா
ஆகியவற்றிற்கும் இடையே ஏற்படுத்தக்கூடும்.
உலக சோசலிச
வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அவற்றின் பிரிவுகளும்
தொழிலாளர்களையும் இளைஞர்களையும் போர் வெறியர்களுக்கு பின்வரும் பதிலிறுப்பைக்
கொடுக்குமாறு அழைப்பு விடுகின்றன: அதாவது
“சிரியாவின்
மீது கை வைக்காதே !”
சிரிய மக்கள்தான் தங்கள் வருங்காலத்தை நிர்ணயிக்க வேண்டுமே ஒழிய, எண்ணெய் வாசனையை
மூக்குகளில் கொண்டுள்ள கொள்ளைக் கூட்டத்தினர் அல்ல. |