சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Lessons of the Cooper Tire struggle

கூப்பர் டயர் போராட்டத்தின் படிப்பினைகள்

Andre Damon
2 March 2012

use this version to print | Send feedback

திங்களன்று, ஓஹியோவின் ஃபிண்ட்லேவில் உள்ள கூப்பர் டயர் நிறுவனத்தின் 1,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஊதிய வெட்டுகளுக்கான நிறுவனத்தின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வாக்களித்ததை தொடர்ந்து மூன்று மாதக் கதவடைப்பு முடிவுக்கு வந்தது.

இந்தத் தொழிலாளர்கள் கட்டுபடியாகும் ஒரு ஊதியத்திற்கான தங்களது உரிமையைப் பாதுகாப்பதற்காக நவம்பர் முதலாக கூப்பர் டயரை, பெருவணிக அரசியல்வாதிகளை, ஊடகங்களை, தங்களது சொந்த தொழிற்சங்கங்களை எதிர்த்து ஒரு தீரமிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆயினும் வேலைகளை மறுவிகிதாச்சாரம் செய்வதற்கும், ஊதிய விகிதங்களைக் குறைப்பதற்கும், அதிக சம்பளம் வாங்கும் வயதான தொழிலாளர்களை அனுப்பி விட்டு அவர்களிடத்தை மணிக்கு 13 டாலர் ஊதியத்திற்கு வேலை செய்கின்ற இளம் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்புவதற்குமான நிர்வாகத்தின் அதிகாரத்தை விரிவுபடுத்துகின்ற ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கு ஐக்கிய இரும்பாலைத் தொழிலாளர்கள் சங்கத்தினால் (United Steel Workers) இயன்றிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும் முடிவு தொழிலாளர்கள் உறுதியோடு நிற்காததால் ஏற்பட்டது அல்ல. மாறாக, தொழிலாளர்களுக்கு அவர்களது போராட்டங்களை முன்னெடுப்பதற்கு புதிய அமைப்புகளும் ஒரு புதிய மூலோபாயமும் அவசியமாக உள்ளது என்கின்ற உண்மையையே இது சுட்டிக் காட்டுகிறது.

இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்கள் USW ஒரு கூட்டாளியாக இல்லாமல் மாறாக தங்களை தனிமைப்படுத்தவும், விரக்தியடையச் செய்யவும், தோற்கடிக்கவும் முனைகின்ற நிர்வாகத்தின் ஒரு முகவராகவே கண்டனர். 150 மில்லியன் டாலர் வேலைநிறுத்த நிதியைத் தன்னிடத்தே கொண்டிருந்த போதினும், USW தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்த கால நலஉதவிகளை அளிக்க மறுத்து, பலசரக்குகள் வாங்குவதற்கு சில நூறு டாலர் மதிப்புள்ள கூப்பன்களை மட்டும் வழங்கியது.

அர்கான்சாஸில் உள்ள டெக்சார்கானாவில் உள்ள கூப்பர் டயர் தொழிற்சாலையில் 1500 தொழிலாளர்களுடனான ஒரு தனியான ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இருந்து ஃபிண்ட்லே போராட்டத்தை இச்சங்கம் திட்டமிட்டுத் தனிமைப்படுத்திப் பாதுகாத்தது. ஃபிண்ட்லே தொழிலாளர்கள் கதவடைப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் டெக்சார்கானாவில் ஒரு ஒப்பந்தம் நிறைவேறியது.

வெட்டுகளை ஏற்க தொழிற்சங்கங்கள் ஆர்வமுடம் இருப்பது வெறுமனே தொழிற்சங்க நிர்வாகிகளின் துரோகம் மற்றும் பேராசையின் விளைவு மட்டுமல்ல. முதலாளித்துவ அமைப்புமுறையை அவர்கள் நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்வதில் இருந்து தான் அது எழுகிறது.

தொழிலாளர்கள் மோதுவது ஒரு நிறுவனம் அல்லது ஒரு பெருநிறுவன நிர்வாகியுடன் அல்ல, மாறாக ஒட்டுமொத்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறையுடன் என்பது தான் அவர்கள் முகம் கொடுக்கும் மிகப் பெரிய சவால் ஆகும். ஒவ்வொரு போராட்டமும் ஒரு உலகளாவிய நிகழ்முறையின் உள்ளூர் வடிவம் ஆகும். சாராம்சத்தில் ஃபிண்ட்லேயில் தொழிலாளர்களுக்கு என்ன நடக்கிறதோ அது தான் கிரீஸில் உள்ள தொழிலாளர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. மக்களில் பெரும்பான்மையானோர் வங்கிகளின் உத்தரவுக்கிணங்க வறுமைக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். இதே கோரிக்கைகள் தான் நிறுவனம் மாறி நிறுவனத்தில், நாடு மாறி நாட்டில் நடந்தேறி வருகின்றன.

கூப்பர் டயரில் நடந்திருப்பது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிலாள வர்க்கம் ஆகிய இரண்டு மோதும் சமூக சக்திகளுக்கு இடையிலான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாகும். சமூகத்தைச் சூழ்ந்துள்ள உலகளாவிய நெருக்கடிக்கு இரு தரப்பும் தத்தமது பதிலிறுப்பை உருவாக்குகின்றன. ஆளும் வர்க்கம் வர்க்க உறவுகளை மறுகட்டமைக்க இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது. அதைப் பொறுத்த வரைக்கும், தொழிலாளர்களுக்கு ஒரு வாழத்தகுந்த வருவாயுடன் ஒரு பத்திரமான வேலை என்பது கடந்த கால விஷயம், அப்படி ஒன்று இருந்திருந்தது என்று கூறக் கூடிய அளவுக்கு. தொழிலாளர்கள் மணிக்கு 13 டாலர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அது தான் இன்னும் மலிவான ஊதியங்களை நிர்ணயிப்பதற்கான நிர்ணயக் கோடாக இருக்கும்.

இதற்கு ஏற்பாட்டாளர் வேலையை தொழிற்சங்கங்கள் செய்கின்றன. ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு, இச்சங்கங்களுடன் ஒரு உடன்பாட்டை செய்து கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில் தொழிலாளர்களால் வெல்லப்பட்டிருந்த அத்தனையையும் அழிப்பதில் ஆளும் வர்க்கத்திற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் உதவும் வரை அவர்களது ஊதிப் பெருத்த சம்பளங்களுக்கு பங்கம் வராது. அவர்களுக்கு போராட்டங்கள் பிடிப்பதில்லை, அப்படி அவர்களது விருப்பத்தை மீறி ஒன்று வெடிக்குமானால் - அதாவது ஃபிண்ட்லேயில் கதவடைப்பு செய்து தொழிலாளர்களை நெருக்கடிக்குள் தள்ள பெருநிறுவனம் முடிவெடுத்ததை தொடர்ந்து வெடித்ததைப் போல - அப்போது அவர்கள் பல தசாப்தங்களாய் நடைமுறைப்படுத்தி கைதேர்ந்திருக்கும் ஒரு வழிமுறையை முன்னெடுக்கிறார்கள். அதாவது போராட்டத்தைத் தனிமைப்படுத்தி அதேசமயத்தில், நிறுவனம் முதலாவதாய் விரும்பியிருந்த எல்லாவற்றையும்  திணிப்பதற்கு அதனுடன் சேர்ந்து சதிவேலை செய்வது

தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நேரெதிரான வேலைத்திட்டத்தை தொழிலாளர்கள் கையிலெடுக்க வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கக் கூடிய உழைக்கும் மக்களின் அத்தனை போராட்டங்களையும் முதலாளித்துவ வர்க்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்காக அவர்கள் போராட வேண்டும்.

தொழிற்சாலைகளிலும் வேலையிடங்களிலும் இதன் பொருள் என்னவென்றால், நிர்வாகத்தின் தொழிற்சங்க முகவர்களைத் தூக்கியெறிந்து விட்டு அவர்களிடத்தில், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு தொழிலாளர்கள் தாங்களே ஒழுங்கமைத்துக் கொள்கின்ற சாமானியத் தொழிலாளர் குழுக்களைக் கொண்டுவருவதாகும்.

வேலைநிறுத்தங்களும் போர்க்குணமும் அவசியம் என்றபோதிலும் அவை மட்டுமே ஆளும் வர்க்கத்தின் தாக்குதலை எதிர்கொள்வதற்குப் போதுமானதல்ல. இந்த நெருக்கடி, இலாபத்திற்காக தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்புமுறையாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறை என்கிற அதன் வேரில் நிவர்த்தி செய்யப்பட்டாக வேண்டும். முதலாளித்துவத்திற்கான மாற்று சோசலிசம். சோசலிசம் என்றால் பொருளாதாரத்தின் மீதான ஜனநாயகக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலமைந்த உண்மையான சமத்துவம். இராட்சச அளவான பெருநிறுவனங்கள் எல்லாம் தேசியமயமாக்கப்பட்டு அவை தனியார் இலாபத்திற்காய் அல்லாமல் சமூகத் தேவைக்காய் சேவை செய்கின்ற பொருட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களுக்கு சோசலிசம் தான் எதிரி என்று நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு ஆளும் வர்க்கமும் அமெரிக்க ஊடகங்களும் பெரும் ஆற்றலையும் வளங்களையும் செலவு செய்திருக்கின்றன. சோசலிச முன்னோக்கு மீண்டும் பரந்த மக்களைப் பற்றிக் கொண்டு விடுமோ என்கிற அச்சம் அவர்களைப் பீடித்திருக்கிறது என்பது தான் அதன் காரணம். அவர்கள் அஞ்சுவதற்கு நியாயம் இருக்கிறது. சோசலிச முன்னோக்கு தொழிலாள வர்க்கத்தின் அத்தியாவசியமான வரலாற்று நலன்களை வெளிப்படுத்துகிறது என்கின்ற உண்மையில் தான் சோசலிச முன்னோக்கின் சக்தி உதயம் பெறுகிறது

கூப்பர் டயர் கதவடைப்பின் போது இதே கவலையை தொழிற்சங்கங்களும் பிரதிபலித்தன. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் தொழிற்சங்கம் காட்டிய தீர்மானமான உறுதியில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு பெருகும் செல்வாக்கு கொண்டிருந்த பங்கு குறைவானதல்ல. வாக்கெடுப்பு சமயத்தில், சோசலிச சமத்துவக் கட்சியால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வாசிக்க வேண்டாம் என்று அவர்கள் தொழிலாளர்களை எச்சரித்தனர். இது தொழிலாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்க மட்டுமே செய்தது. வெளியிலிருந்து தூண்டி விடுபவர்கள் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உள்ளூர் ஊடகங்கள் கவலைப்பட்டன.

சோசலிசத்துக்கான போராட்டம் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும். ஆளும் வர்க்கத்திற்கு ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என அதன் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இவை ஒன்றாய்ச் சேர்ந்து வேலைவாய்ப்பின்மையை அதிகரித்து இந்தத் தாக்குதலுக்கு முன்னணி வகிக்கின்றன. இது ஒபாமா நிர்வாகத்தின் திட்டமிட்ட கொள்கையாகும். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் United Auto Workers சங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஒபாமா பேசினார். இதில் ஒவ்வொருவரும் வாகனத் துறை தொழிலாளர்களின் மீதான ஒரு வரலாற்றுப் பெரும் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் இலாபங்களை மீட்சி செய்த விடயத்திற்கு ஆரவாரம் செய்தனர்.

தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த அரசியலும் அதன் சொந்தக் கட்சியும் அவசியமாக இருக்கிறது. இந்த முன்னோக்கிற்காக போராடவே சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் அதன் வேட்பாளர்கள் ஜெரி வைட் மற்றும் பிலிஸ் ஸ்கெரெரும் 2012 தேர்தலில் தலையீடு செய்துள்ளனர். இப்பிரச்சாரத்தின் நோக்கம் பணமும் ஊழலும் ஆதிக்கம் செலுத்தும் நடப்பு அரசியல் அமைப்புமுறைக்குள்ளாக வேலை செய்து கொண்டிருப்பதல்ல. மாறாக, அதற்கு எதிரான, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான, ஒரு பரந்த மக்களின் இயக்கத்திற்கு முன்னணி வகிப்பதே ஆகும்.  

கூப்பர் டயரில் உள்ள தொழிலாளர்கள், நாடெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் இதைத் தங்கள் பிரச்சாரமாக எண்ணி இதற்கு ஆதரவளிக்கவும் சோசலிசத்துக்கான போராட்டத்தை கையிலெடுக்கவும் நாங்கள் தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறோம்